Thursday, 30 April 2020

தினம் ஒரு சொல்



தினம் ஒரு சொல்

ஓரிரு சொல்லில் விளங்க வைக்கக்கூடிய விசயத்தை, ஒருவர், நீட்டி முழங்கி ஏதேதோ புதுப்புது வார்த்தைகளையெல்லாம் சொல்லிக் குழப்புவோரிடம்,

"சுற்றி வளைத்துப் பேசாமல் நேரா விசயத்துக்கு வாய்யா..."   அப்படின்னு சொல்வோம்ல

அந்தமாதிரி சுற்றிவளைத்துப் பேசுவதை  ஆங்கிலத்தில்  Periphrasis என்கின்றனர்.

Instead of saying, "I lost my homework,"
say, "As a matter of fact, the assignment in question is temporarily unavailable due to the secrecy of its location."

தினம் ஒரு சிந்தனை

நேர்மறை எண்ணங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.

ஆயிரக்கணக்கான நத்தைகள்  கூட்டமாக  கடுமையான வெய்யில் பாராது காட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.
எங்கும்  நிழல் இல்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள சிறிதுளி நீர்கூட இல்லை. இருந்தாலும் அந்த நத்தைக் கூட்டம் மெல்ல, மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

வழியில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூட்டமாய்ப் பறந்து வந்தன.  எதிரில் நத்தைகள் கூட்டம்கூட்டமாய் நகர்ந்து வருவதைக் கண்ட  பறவைகளுக்கு ஒரே ஆச்சரியம்! அவை எங்கே செல்கின்றன?....என்பதை அறிய....

பறவைகளின் தலைவன்  நத்தைகளின் தலைவனைப் பார்த்து, "" எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்?...'' என்று கேட்டது.

""தூரத்தில் ஒரு காடு இருப்பதாகக்
 அறிந்தோம்!...அங்கே நீரும், நிழல் தரும் மரங்களும் நிறைய இருப்பதாக அறிந்தோம்!....அங்கே போய் வாழப்போகிறோம்!'' என்றது நத்தைகளின் தலைவன்!

""அடாடா!....நீங்கள் சொல்லும் காட்டிலிருந்துதான் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்!.... கடுமையான வெய்யிலில்!....மரங்களெல்லாம் கருகிவிட்டன!....பிழைப்பதற்கு நாங்கள் வேறு இடம் தேடிப் போய்க்கொண்டிருக்கிறோம்! அங்கே செல்வது பயனில்லை!..'' என்றது பறவைகளின் தலைவன்.

""இருக்கட்டுமே!....நாங்கள் மெல்ல நடந்து அந்தக் காட்டைச் சென்று அடைவதற்கு முன் மழை பெய்துவிடும்!.....காட்டில் மரங்கள் செழித்து வளர்ந்துவிடும்!....மரங்களில் இலை, பூ, காய்கள், பழங்கள் என பசுமை மிகுந்து இருக்கும்!....அங்கு உள்ள  நீர் நிலைகளிலும் நீர் நிறைந்து காணப்படும்!....எங்கள் வாழ்க்கையும் நன்றாக இருக்குமே!'' என்றது நத்தைகளின் தலைவன்!

பறவைகளின் தலைவன் யோசிக்கத் தொடங்கியது!

பின்னொருநாள் அந்தக் காட்டின் வழியே பறந்து போகையில் அவைகள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கவும் செய்தது!

" நேர்மறை எண்ணமும்
நம்பிக்கையும்தான் வாழ்க்கை!  நல்லதே நடக்கும்!' .