Monday, 31 January 2022

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இன்றைய பாடங்கள்

 

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இன்றைய பாடங்கள் 31.01.2022 ஆறாம்வகுப்பு தமிழ் ஏழாம் வகுப்பு தமிழ்
  எட்டாம் வகுப்பு தமிழ்
   எட்டாம் வகுப்பு கணிதம் எட்டாம் வகுப்பு அறிவியல் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் வகுப்பு 1 வகுப்பு 2 வகுப்பு 3 வகுப்பு 4 வகுப்பு 5

நினைவலைகள்

  நினைவலைகள்

ஜனவரி-31

1915- பெரிய அளவில் வேதியியல் ஆயுதம், முதன் முறையாக முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. பாலிமோவ் சண்டையில் போலந்தில் ரஷ்ய நிலைகளுக்கெதிராக ஜெர்மனியால் வீசப்பட்ட ஸைலைல் ( மெத்தில் பென்சைல் ) ப்ரோமைட், ஆவியாதற்கு பதிலாக, ரஷ்ய குளிருக்கு உறைந்து விட்டதால் செயல்பாடவில்லை.

   உண்மையில் முதல் உலகப் போரிலேயே, அதற்கு முன்பாகச் சிறிய அளவில் வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதுடன், அவற்றின் தொடக்கமும் பண்டைய காலத்திலேயே நிகழ்ந்து விட்டது. கி.மு.590- களில் எதிரிகளின் நீராதாரங்களை, நஞ்சுள்ள ஹெலிபோர் செடியின் வேர்களைப் பயன்படுத்தி ஏதென்சில் கிரேக்கர்கள் நஞ்சாக்கியதே, உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட வேதியியல் ஆயுதமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்பார்ட்டாவினர் ஏதென்ஸின் மீது கந்தகக் கலவையை எரியூட்டி வீசியிருக்கிறார்கள். உணவையும், நீரையும் நஞ்சாக்குவதைப் போர்முறையாக மனுதர்மம் குறிப்பிட்டுள்ளது. சீனாவிலும் நச்சுப் புகைகளை உருவாக்குவதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன.

  கி.பி.3ம் நூற்றாண்டின் ரோம- பாரசீகப் போர்களில் தகர்க்கப்பட்ட சுரங்கப் பாதைகள், வேதிமங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ளவையே மிகப் பழைய வேதியியல் தாக்குதல் எச்சங்களாகும்.போர்க்களத்தில் வேதிமங்களைப் பயன்படுத்தி மூட்டப்படும் தீ, கிரேக்கத் தீ என்று குறிப்பிடுகிறது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், இவ்வாறு தீ பயன்படுத்தப் பட்டிருந்தாலும்,1993-ல் கையெழுத்திடப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் உடன்படிக்கையில், தீயை மூட்டக்கூடிய வெள்ளை பாஸ்பரஸ், நேப்பாம்  ஆகியவற்றுக்கும், உயிரியல் ஆயுதங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

    முதல் உலகப் போரில் முதலில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தியது பிரான்ஸ் தான். அது பயன்படுத்தியது கண்ணீர்ப்புகை வகையிலான வேதிமங்களே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டாலும், 1915 ஏப்ரலில், மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரிழைப்பை விளைவிக்கும் குளோரின் வாயுவை ஜெர்மனி பயன்படுத்தியது. 1899-ன் ஹேக் பிரகடனம்,1907-ன் ஹேக் ஒப்பந்தம் ஆகியவை போர்களில் நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தடை செய்திருந்தாலும், முதல் உலகப் போரில் 50,965 டன் வேதிமங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

   இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தான் அதிக வேதிமங்களைப் பயன்படுத்தியது என்பதும், கொலைக் கூடங்களில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்திய ஹிட்லர், போரில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை. நேப்பாமுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால், வியட்நாமின் மீது மட்டும் 3,80,000 டன் நேப்பாமைக் கொட்டிய அமெரிக்காவே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மிக அதிக வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்திய நாடாக இருக்கும்!


நன்றி R.K.

Thursday, 27 January 2022

இன்றைய சிந்தனை

 * இன்றைய சிந்தனை..( 27.01.2022)*


*"உங்களை உற்சாகப்படுத்துவர்  யார்??..*

சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெலல அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும் போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக் கொள்கிறது.

முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள்,


உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?

இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களைத் தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். 

மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறானவர்களால் வீழ்ந்து இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பைப் போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. காரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். கார் திடீரென்று நின்றது. ஓட்டுனர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தவரை டிரைவர் தட்டி எழுப்பினார், 

“சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கித் தூங்கி வழியறதப் பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக் கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தார். 

மற்ற நண்பரால் தூங்க முடியவில்லை.   ஓட்டுனர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார்...

*ஆம்.,தோழர்களே..,*

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரைப் பொறுத்துத் தான் இருக்கிறது.*

*லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடைய வேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாகத் தேடி நண்பர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதைப் போலவே உங்களைப் பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்*. 

*எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகில் உள்ள அனைவரும் உங்களை விரும்புவார்கள்.* 

*கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்... உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்...✍🏼🌹*

Tuesday, 25 January 2022

கல்வி தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் ஆங்கில பாடங்கள்

 

25.01.2022  செவ்வாய்

எட்டாம் வகுப்பு

ஏழாம் வகுப்பு ஆறாம் வகுப்பு

Sunday, 23 January 2022

8th WORKSHEET


8th அலகு 9 A-1

8th அலகு 8 A-1

8th அணுஅமைப்பு A-1

KALVI தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்கள்


இதுவரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அனைத்து பாடங்களையும் பார்க்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும். 



6வது தமிழ் 

6 வது ஆங்கிலம்

6வது கணிதம்

6வது அறிவியல்

6வது சமூக அறிவியல்

7வது தமிழ்

7 வது ஆங்கிலம்

7வது கணிதம்

7வது அறிவியல்

7வது சமூக அறிவியல்

8ஆம் வகுப்பு தமிழ்
  
8ஆம் வகுப்பு ஆங்கிலம்

8ஆம் வகுப்பு அறிவியல்

8ஆம் வகுப்பு சமூக அறிவியல்

CLASS 2 ENGLISH MATCH GAME


Monday, 17 January 2022

இன்றைய தினம்

 பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த நாள் – 17, ஜனவரி, 1706:


பெஞ்சமின் பிராங்கிளின் ஐக்கிய அமெரிக்காவை (USA) உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். 

அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்.

இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். 

இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர். 


மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். 

அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர். 

வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர்; 'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். 

உலகின் மிகப்பிரபலமான தன்வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்தக் கண்ணாடியையும் (bifocal glasses) மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர்.