Tuesday, 26 May 2020

தினம் ஒரு சிந்தனை

*இன்றைய சிந்தனை *

...........................................
*‘’சிரிப்பே மருந்து..''*
.................................

பொதுவாக மக்கள் அனைவரும் சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர்...

பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்...

மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர்...

சில மக்கள் காலையில் சிறப்பு சிரிப்பு வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இந்த வகுப்புகளில் அனைவரும் வெவ்வேறு விதங்களில், சத்தமாக சிரிக்கின்றனர்...

நன்றாக சிரிப்பதால் நீண்ட ஆயுள் வாழலாம். இவ்வாறு கூறுவதற்கு பல காரணங்களும், உண்மைகளும் இருக்கின்றன...

சிரிப்பதால் மனம் இளைப்பாறும். பொதுவாக சிரிப்பு அல்லது நகைச்சுவை, நமது மனதை நிம்மதியாக வைப்பதற்கு உதவும்...

மன அழுத்தம்,
மன வேதனை,
வலி போன்றவற்றிற்கு சிரிப்பு நல்ல மருந்து.. மன உளைச்சல் மற்றும் கோபம் போன்றவற்றை கட்டுபடுத்த, சிரிப்பு உதவுகிறது...

நாம் மன உளைச்சலுக்கு உள்ளான நேரங்களில், நகைச்சுவை திரைப்படங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் காண வேண்டும்...

சிரிப்பு அமைதியைத் தருகிறது, நாம் கோபம் அல்லது வெறுப்பு ஏற்படும் காலங்களில், சிரித்து விடுவது நல்லது. சிரிப்பு மன உளைச்சலைக் குறைத்து, நல்ல உணர்வுகளை உடலிலும், மனதிலும் நிரப்புகிறது...

சிரிப்பினால் உடல் அளவிலும், மனதளவிலும், உணர்வு ரீதியாகவும் நமக்கு ஏற்படும் நிலைப்பாட்டை உணர்த்துகிறது...

சிரிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது...

ஆம் நண்பர்களே...!

*சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது...*

*மனம் ஆரோக்கியம அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது ...*

*சிரிப்பெனும் மருந்தை நாம் தினம் தினம் அருந்துவோம்...*


Monday, 25 May 2020

இன்று



மருத்துவ துறையில் உடல் வெப்பநிலையை கண்டறியும் பாரன்ஹீட் தெர்மாமீட்டரைக் கண்டறிந்த *டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்* அவர்கள் பிறந்த தினம் மே-24.

பன்னெடுங்காலமாகவே வெப்பநிலையில் வேறுபாடுகள் நிலவுவதை மனிதர்கள் ஆராய்ந்து வந்தாரகள்.

பனிக்கட்டி குளிர்ச்சியாக இருப்பதற்கும், சுடு நீர் வெப்பமாக இருப்பதற்கும், மனிதனுக்கு காய்ச்சல் ஏற்படும் போது உடல் வெப்ப நிலை அதிகரிப்பதை கண்டறிவதற்கு பல ஆராய்ச்சிகள் நடைபெற்ற தருணத்தில்,

*1686 ஆம் ஆண்டு மே-24  ல் பிறந்த டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்* என்பவரால் 1709 ஆம் ஆண்டு மெல்லிய கண்ணாடி குழாயில் பாதரசம் பயன்படுத்தி, அதில் அளவுகளை டிகிரியில் குறித்து பாதரசம் ஏற்ற இறக்கத்தை வைத்து முதன் முதலாக அவர் தயாரித்த வெப்பநிலை மானியை இன்று *அவர் பெயராலேயே பாரன்ஹீட் தெர்மோமீட்டர் என்று அழைக்கிறோம்*.

D.G.பாரன்ஹீட் தண்ணீரின் உறைநிலையை 32 டிகிரி என்றும், கொதிநிலையை 212 டிகிரி கணக்கிட்டு பயன்படுத்தினார்.
வெப்பநிலையை அளவிடுவதில் ஒரு சீரான தரவுகளை இவரது முயற்ச்சியால் எட்டப்பட்டது.

மருத்துவ துறையில் இவர் கண்டுபிடிப்பு பல கோடி உயிர்களை இன்றளவும் காப்பதற்கு காரணமாக விளங்கி வருகிறது என்றால் அது மிகைஅல்ல உண்மை.




Saturday, 23 May 2020

இன்று

உயிரியலாளரும், மருத்துவருமான கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) பிறந்த தினம் - மே 23:

ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் (1707) பிறந்தார். தந்தை பாதிரியார், தாவரவியலாளர். மகனுக்கு சிறந்த கல்வி புகட்டுவதையே தன் நோக்கமாகக் கொண்டிருந்தார். லத்தீன் மொழி, தாவரவியல், மதக் கல்வி ஆகியவற்றை தந்தையிடமே கற்றார்.

தாவரங்கள் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு தாவரங்களை வளர்த்தார். பல புதிய தாவரங்களை தேடிக் கண்டறிந்தார். இவரது ஆர்வத்தை அறிந்த தந்தை, வீட்டிலேயே ஒரு ஆசிரியரை அமர்த்தி பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.

பள்ளியில் 10 வயதில் சேர்ந்தார். தாவர ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார். இவரது திறமையை உணர்ந்த ஆசிரியர் ஒருவர், மருத்துவம் படிக்குமாறு ஆலோசனை கூறினார். அதை ஏற்று தனிப்பட்ட முறையில் உடலியல், தாவரவியல் பயில தந்தை ஏற்பாடு செய்தார். லுண்ட், உப்சாலா பல்கலைக்கழகங்களில் பயின்றார்.

படிப்பை முடித்து உப்சாலா பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். இவரது விரிவுரைகள் மிகவும் பிரபலமடைந்தன. தாவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதத்தை மேம்படுத்துவது குறித்து கட்டுரைகள் எழுதினார். இதையடுத்து, தாவர ஆராய்ச்சியில் ஈடுபட இவருக்கு நிதி கிடைத்தது.

நீண்ட பயணம் மேற்கொண்டவர், தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார். இந்தப் பயணத்தின்போது 100 புது வகை தாவரங்களைக் கண்டறிந்தார்.

‘ஃப்ளோரோ லேப்போனிகா’ என்ற நூலை எழுதினார். விலங்குகள், தாவரங்களுக்கு இரு-பகுதி பெயரிடும் முறையைத் தொடங்கி வைத்தார். நெதர்லாந்தில் உள்ள ஆர்தர்ஜிக் பல்கலைக்கழகத்தில் மலேரியா மற்றும் அதன் காரணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி சமர்ப்பித்து, மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

இவரது ‘சிஸ்டம் ஆஃப் நேச்சர்’ நூல் 1737-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தாவரங்கள் பெயரிடுதல் மற்றும் வகைப்படுத்துதல் குறித்த உத்திகளை மேம்படுத்திய வண்ணம் இருந்தார். இங்கிலாந்து, பிரான்ஸ் சென்று, நிறைய மாதிரிகளை சேகரித்ததோடு அங்குள்ள அறிவியலாளர்களை சந்தித்தார்.

ஸ்வீடன் திரும்பி, ஸ்டாக்ஹோமில் மருத்துவராக பணிபுரிந்தார். ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி உருவாக உதவி செய்து, முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். உப்சாலா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக 1741-ல் பொறுப்பேற்றார். 1750-ல் பல்கலைக்கழக தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இயற்கை அறிவியல் களத்தில் ‘மாஸ்டர் பீஸ்’ எனக் குறிப்பிடப்பட்ட, 1,200 பக்கங்கள் கொண்ட ‘பிளான்ட் ஸ்பீசிஸ்’ நூலை 2 தொகுதிகளாக 1753-ல் வெளியிட்டார். அப்போது கண்டறியப்பட்டிருந்த அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்துக்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார். தாவரங்கள் மட்டுமல்லாது விலங்கு, பறவை, மீன், உள்ளிட்ட ஏறக்குறைய 13 ஆயிரம் உயிரினங்களுக்குப் பெயரிட்டார்.

ஸ்வீடன் மன்னர் இவருக்கு 1761-ல் சர் பட்டம் வழங்கினார். தற்கால சூழலியலின் (Ecology) முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவரும், நவீன அறிவியல் வகைப்பாட்டியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான கார்ல் லின்னேயஸ் 71-வது வயதில் (1778) மறைந்தார்.

Thursday, 21 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை....*  ( 21 .05 .2020)

*மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு*

*ஆனால்.....*

*#வண்டிக்காரன் உயிரில்லாத வண்டியை....*
*அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..*
*எந்த இடம் செல்ல வேண்டும்...*
*என்பதை தீர்மானித்து, வண்டியை செலுத்துவான்.*

*#எவ்வளவு_தூரம்...*
*#எவ்வளவு_நேரம்...*
*#எவ்வளவு_பாரம்...*

*அனைத்தையும் தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே!அறிவிருந்தும்.....*
*சுமப்பது தானாக இருந்தாலும் மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது...*

*அதுபோல....*

*உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா,* *உயிர் என்ற மாட்டுடன் பூட்டி*
*இறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்....*

*#அவனே_தீர்மானிப்பவன்*
*#அவன்_இயக்குவான்..*
*#மனிதன்_இயங்குகிறான்..*

*#எவ்வளவு_காலம்..*
*#எவ்வளவு_நேரம்..*
*#எவ்வளவு_பாரம்..*

*#தீர்மானிப்பது_இறைவனே*

*இதுதான் நமக்காக இறைவன் போட்டிருக்கும் டிசைன்..!*
*இதுதான் இறைவன் நமக்கு தந்திருக்கும் அசைன்மென்ட்..!*
*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*
*இதை உணராதவனுக்கு அமைதி இல்லை.*

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே!.*

Tuesday, 19 May 2020

அறிவோம் தெளிவோம்

விந்தையான மீன்-
 இந்த மீனின் தலைப்பகுதி ஒளி ஊடுருவிய அமைப்பில் (Transparent head) உள்ளது. தலையினுள் உள்ள பகுதிகள் தெரியும் வகையில் உள்ளது. இதன் பெயர் பேரல் கண் மீன் (Barrel eye fish) எனவும் ஸ்பூக் மீன் (Spook fish) எனவும் அழைக்கப்படுகிறது

தினம் ஒரு சிந்தனை




இன்றைய சிந்தனை..( 19.05.2020)
...........................................

‘’ சோதனைகளை கடந்தால்தான்’’..
....................................

பலவித சோதனைகளை கடந்தால்தான் சாதனையை அடைய முடியும்.

சோதனைகளில் சோர்வடையாமல், விரக்தி அடையாமல், தோல்வியில் மனம் உடைந்து போகாமல் சாதனைகள் புரிய முயற்சி செய்ய வேண்டும்.

சாதனை புரிபவர்களுக்கு நம்முடைய செயல்களை பிறர்க்கு நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறர்க்கு உணர்த்தவேண்டும்.

அது மட்டும் அல்ல., சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயல்கள் ஆகின்றனவா? என்பதை அறிந்தபின் செயலாற்ற வேண்டும். சாதனை புரிய இதுவும் ஒரு வழியாகும்.

நீண்ட தூரம் ஓடி வந்தால்தான் உயரம் தாண்ட முடியும் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம்.

படிக்கும் நூல்கள் மூலம், சந்திக்கும் மனிதர்கள் மூலம் சாதனை புரிய வழி இருக்கிறதா? என்று பார்ப்பது ஒவ்வொரவரின் கடமை.

வாழ்வில் வரும் சோதனைகளில் இருந்து மீள ஒருவர் வழி தேடினார்..அவர் ஒரு அறிஞரை சந்தித்து கேட்டார்.

அதற்கு அவர் குதிரைப் பந்தயத்திற்கு செல்லுங்கள்..ஆனால் பணம் கட்டாதீர்கள்.. பந்தயம் மட்டும் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
.
மாலை திரும்பியதும் அதற்கு அவர் விளக்கம் சொன்னார்..

’’பந்தயக் குதிரைக்கு நான் ஏன் ஓடுகின்றோம் என்று தெரியாது.ஆனால் முதுகில் அடி விழும்போதெல்லாம் இன்னும் வேகமாக ஓடுகிறது..இலக்கை சென்று சேர்கிறது..

குதிரைக்கே இந்த புரிந்தால் இருந்தால், குறிக்கோள் கொண்ட மனிதனுக்கு இருக்க வேண்டாமா? என்றார்.

’’சோதனைகளில்தான் சாதனை’’ என்பதை இப்படி விளக்கினார் அந்த அறிஞர்..

ஆம்.,நண்பர்களே..

சாதனை புரிவதற்கு முன் வரும் சோதனைகளை பயிற்சியாக ஏற்றுக் கொண்டால்தான் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும்..

எனவே இதை மனதில் கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்

Monday, 18 May 2020

பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.





பல வகை துறைகள் அறிவியல் பெயர்கள்.



https://drive.google.com/file/d/1OI_rv9XKJ69MtcnDC7BpObmF-szKdR2e/view?usp=drivesdk

இன்று

பெர்ட்ரண்டு ரஸ்ஸல்..!

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல்சில் இறந்தார்.

ரசல் 1900களின் தொடக்கத்தில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராகக் கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வுத் தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் கோட்லோப் பிரேக் என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை தருக்கத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" எனக் கருதப்படுகிறது. இந்த இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம் முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வணிகத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தார். அணுகுண்டு கைவிடுதலையை ஆதரித்தார், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தார்.

ரசலுக்கு, அவரின் பலவகைப்பட்ட எழுத்துகளினால், "மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும்" 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1949 ல் ”நான் நாத்திகனா, இறை ஐயம் கொண்டவனா” என்ற உரையில்,
நான் “தத்துவ அளவில் அல்லது தத்துவ அவையினர் முன்னிலையில் பேசுவதானால், என்னை இறை ஐயம் கொண்டவன் என வருணிக்க வேண்டும். ஏனெனில் ஆணித்தரமாக கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுிப்படுத்துவதற்கு நிரூபணங்கள் இல்லை. அதே சமயம் சாதாரண மனிதனுக்கு என் எண்ணத்தை சொல்வதானால், என்னை நாத்திகன என வருணிக்க வேண்டும்" என்று கூறினார்.

பால்ய பருவத்தில் ரசல் நிரந்தர உண்மைகளுக்காக ஏங்கினார், அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான “சுதந்திர மனிதனின் துதி”, என்பதில் இயற்கைக்கு புறம்பான, அமானுஷ்ய நம்பிக்கைகளை வெறுத்தாலும், நான் வாழ்க்கையின் ஆழ்ந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொண்டுள்ளதாக ஒத்துக் கொண்டார்.

 ”நான் ஏன் கிருஸ்துவன் இல்லை” என்பது பற்றி 6 மார்ச் 1927 ல் பாட்டர்சீ நகர மாளிகையில், தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண்டன் கிளையில் உரையாற்றினர், ஒரு வருடம் கழித்து அது துண்டுப்பிரசுரமாக வெளிவந்தது. அதில் கடவுள் நம்பிக்கையின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையியல் பற்றியும் பேசுகிறார். அவருடைய முடிவு,

”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டது என நினைக்கிறேன். அது ஒரு பகுதி நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய பீதி, மற்றொரு பகுதி நம் பக்கத்தில் ஒரு அண்ணன் இருந்து நம் துக்கங்களிலும் வாழ்க்கை கஷ்டகாலங்களிலும், சச்சரவுகளிலும் ஆதரவு கொடுப்பதாக ஒரு உணர்வு.......

ஒரு நல்ல உலகம், அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மீது பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் வேண்டவில்லை”

 ரசல் அவர்களின்
 (Bertrand Arthur William Russell),
பிறந்த நாள் இன்று
(மே 18,1872)

Sunday, 17 May 2020

இன்று

தடுப்பூசிகளின் தந்தை பிறந்த தினம்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து
கண்டுபிடித்த எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) பிறந்த
தினம் இன்று (மே 17).

இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் (1749) பிறந்தார். தந்தை மதச் சடங்குகள் செய்பவர்.14-வது வயதில் டேனியல் லட்லாவ் என்ற அறுவை சிகிச்சை
நிபுணரிடம் சேர்ந்து 7 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி
பெற்றார். மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக
மாறினார். கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் கண்டவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கருத்தில் ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் 1765-ல் ஒரு கட்டுரை எழுதி லண்டன்மருத்துவக் கழகத்துக்கு
அனுப்பினார். அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. பெரியம்மைக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தே தீருவது என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி
மேற்கொண்டார். 1792-ல் செயின்ட் ஆண்ட்ரூஸ்
பல்கலைக்கழகத்தில் மருத்துவப்ப ட்டம் பெற்றார். இயற்கையைஅதிகம் நேசித்தார்.

குயில்களின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு
மேற்கொண்டு பல  கட்டுரைகளை வெளியிட்டார்.
1796-ல் கவ் பாக்ஸ் நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து ஒரு சிறுவனுக்கு செலுத்தினார்.

சிறுவனும்நோயால்தாக்கப்பட்டான். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால்தாக்கப்பட்டவர் உடலில் இருந்துகிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில்
செலுத்தினார். ஆனால், அந்தசிறுவனை பெரியம்மை
தாக்கவில்லை.தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட
சோதனை வெற்றியடைந்தது.

கவ் பாக்ஸ் (cow pox) கிருமிகளைமென்மைப்படுத்தி ஊசிமூலம்ஒருவரது உடலில்செலுத்தினால் அவரை
பெரியம்மை தாக்காது என்பதை திட்டவட்டமாக
நிரூபித்தார்.ஆராய்ச்சி முடிவுகளை 1778-ல் வெளியிட்டார்.இயற்கையையும்மனிதகுலத்தையும்
அளவுகடந்து நேசித்த இவர்தனது இந்த அரிய
கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல்
இலவசமாக வழங்கினார்.

அம்மை குத்துதல் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள்
எழுதினார். ஏழை,எளியவர்களுக்கு இலவசமாக
அம்மை ஊசி குத்தினார்.தினமும் இவரது அறைக்கு
முன்பு சுமார் 300 பேர் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசிபோட்டுக்கொண்டனர். ஜென்னரை கவுரவித்துபிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ல் 10 ஆயிரம் பவுண்டுகள்வழங்கியது. 4 ஆண்டுகளுக்குப்
பிறகு மேலும் 20 ஆயிரம்பவுண்டுகளை வழங்கியது.
அந்தத் தொகையை கொண்டு 1808-ல் தேசிய தடுப்பூசிக் கழகத்தை நிறுவினார்.

Saturday, 16 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை.( 16.05.2020)

……………………………………………..........

"சோம்பலை விரட்டுவோம்.."

.......................................................

நம் முன் பரந்து கிடக்கும் வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறச் செய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என எண்ணி மூலையில் முடங்கிப்போய் விடுகினறோம்...

சோம்பேறியை அழைத்து “என்னப்பா, படித்து விட்டாயே! இப்பொழுது  என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால் சும்மாதான் இருக்கிறேன்” என்பான்...

“சும்மா” என்ற வார்த்தை தமிழ் இல்லை. சோம்பேறிகள் தோற்றுவித்த மொழி  இது, அவர்களுக்கு மட்டுமே சொந்தம்...

உற்சாகமுடையவர்கள் இவ் வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்...

சோம்பேறித்தனத்திற்கு சிலர் வறுமையைக் காரணம் காட்டுவார்கள்...

அப்படி காரணம் காட்டுபவர்களும் சிந்திக்கத் தெரியாத சோம்பேறிகளே...!

சோம்பல்தான் சுறுசுறுப்பின் எதிரி !, சோம்பல் மிக்கவர்கள் படுக்கையை விட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள்...

சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்...

இவர்கள் சிரங்குகளை சொறிந்து புண்களை உண்டாக்குபவர்கள்.

வாழ்வின் பாதையில் முள்வேலியாய் நிற்பது சோம்பலே.,முதலில் சோம்பலை விரட்டுங்கள்...

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்...

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்...

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித்தாவி ஏறியது...

அதைப் பார்த்த ஒரு மனிதன், "மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்...

அதற்கு அந்தப் பறவை,

"மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது...

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது...

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு,

அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு...
மரத்திலும், மண்ணிலும்,நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான்,..

"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்...

''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''...

சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ!

ஆம் நண்பர்களே...!

*ஒருவன் அடையும் முன்னேற்றத்தை கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல்தான். சோம்பலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது...*

*எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்...*


புதிய பாடத்திட்ட நூல்கள்



முதல் பருவம்

6th Std New syllabus Tamil  and English
https://drive.google.com/open?id=1KrBoZi2qhDjZvW8bwNR-OwFL49-OhIUb
6th Std New syllabus Maths T.M
https://drive.google.com/open?id=16uu4lf1RLsIjBtyzF6T1xGQZuxTXbr1S

6th Std New syllabus Maths E.M
https://drive.google.com/open?id=1llUgg6xSyR2odU-RYtw7bti4FkTuWxFU
6th Std New syllabus Science and SocialT.M
https://drive.google.com/open?id=1tkwca7waa02RnWun8dvnM2EheyRRSZ
dn
6th Std New syllabus Science and Social E.Mhttps://drive.google.com/open?id=1tkwca7waa02RnWun8dvnM2EheyRRSZdn

7th Std New syllabus Tamil 
https://drive.google.com/open?id=1FYxuqgcu-KcfgX9OJOqlXg1yiRPrLV0z
7th Std New syllabus English
https://drive.google.com/file/d/1iN7Ske4LCE2wOEfs79ts0hSreTNLsje7/view
7th Std New syllabus Maths T.M
https://drive.google.com/open?id=1elNshjSee-xs0H8RXW87SQFJBPgiSTJl

7th Std New syllabus Maths T.M
https://drive.google.com/open?id=1L1h7hsRnaZVFryPY_ETPghaamOP42h4g
7th Std New syllabus Maths E.M
https://drive.google.com/open?id=1L1h7hsRnaZVFryPY_ETPghaamOP42h4g
7th Std New syllabus Science and SocialT.M
https://drive.google.com/open?id=1F6pUI5nFUndbvN9x20sdo8M1zYWmPIXM
7th Std New syllabus Science and SocialE.M
https://drive.google.com/open?id=1ve5j3jas7Osp7d5PiA1VPZdTlI6w3sUs

8th Std New syllabus Tamil  Full book
https://drive.google.com/open?id=1EC3CzKn9V7GYEdD9lddPNiYj92Vs-kzm

8th Std New syllabus English Full book

https://drive.google.com/open?id=106MBx-AmszXAAXx1qCxNkdtI7B_9iVJA
8th Std New syllabus Science and SocialT.M
https://drive.google.com/open?id=19gUmC-VpC7558e28jhzkEGgauTHA4YbA
8th Std New syllabus Science and SocialE.M
https://drive.google.com/open?id=1qilE7hhNKhb4QTYVA6ofb6MqIzca1Vu4
8th Std New syllabus Maths E.M
https://drive.google.com/open?id=1oCEKL6U0x_EQ1E7riu-yIditCJ3jpTx9
8th Std New syllabus Maths T.M
https://drive.google.com/open?id=1kP0WaiQRvnf_xQyDHFlAnRIFUmimueqm

Friday, 15 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை..( 15.05.2020)


...........................................................


''சுயநலம் தவிர்ப்போம்''

...............................................

'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே
அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்...

சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல...

சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்துத் தவிப்பார்கள்...

இன்று பெரும்பாலானவர்கள் அதிகப் படியான
மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்...

சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியைப் பற்றி பொறாமைபட்டுக் கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்...

எவ்வளவு தான் வேண்டப்பட்டவர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும்,ஏன் அண்ணன்,தம்பியாக இருந்தாலும் கூட, அவர்கள் நம்மை விட ஒருபடி மேலே போய் விடக் கூடாது என்பதில் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்” என்பது தான்...

இந்த எண்ணம் உங்களிடமும் இருந்தால் நீங்கள் சுயநலத்திற்கும், பொறாமைக்கும் ஆட்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்...

பாராட்டு என்பது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.அப்படிக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. மற்றவருக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் சுயநலக்காரர்கள் கவனமாக இருப்பார்கள்...

பேராசை, தம்மை உயர்த்த வேண்டும், குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் போன்ற எண்ணம் கொண்டவர்கள் பெரும்பாலும் சுயநலப் போக்கு உள்ளவர்கள்...

இந்த மனநிலை அவர்களை மன இறுக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். ‘எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்’ என்ற நல்ல எண்ணத்தை, சுயநலம் மறைத்து விடுகிறது...

நம் மனதின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்படும் போது நாம் மற்றவர் பார்வைக்கு அசிங்கமாக தெரிவோம். ன..

இந்த சுயநலத்தின் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியைக் கொன்று விடும். இப்படித் தான் பொறாமை உணர்வு வந்து விட்டால், அதனை பல காலம் அமுக்கி வைக்க முடியாது...

எப்படியாவது அது வெடித்துச் சிதறி வெளியே வந்து கடுமையான பின் விளைவுகளை உருவாக்கி விடும்...

மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்று நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்...

சொல்லப் போனால், இந்த உலகமே இப்போது சுயநலத்தில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது...

இன்றைய நாளில் தனக்கு எது கிடைத்தாலும், அதனால் எனக்கு என்ன ஆதாயம் ?அதை வைத்துக் கொண்டு எப்படியாவது உலகத்துப் பணத்தை எல்லாம் சுருட்டித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியுமா? என்று ''சுயநலம்'' கொண்டு பலர் அலைவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்...

ஆம் நண்பர்களே...!

*இன்றைக்கும் எந்தவித சுயநலமும் இல்லாமல் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால் தான், இந்த சமூகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.*

*அன்னதானம்,இரத்ததானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டே இருக்கிறது. சுயநலம் தவிர்ப்போம்.. பொதுநலம் கொண்டு மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்...!*