Friday, 23 September 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2022

 திருக்குறள் :

 

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : தீவினை அச்சம்

குறள் எண் : 201

குறள்: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு.

விளக்கம் : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

பழமொழி :

Pluck not where you never planted. 

பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.

 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.

பொன்மொழி :

பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.

பொது அறிவு :

1.நீரில் கரையும் வாயு எது ?

 அம்மோனியா . 

 2.ஆக்ஸிஜனை கண்டுபிடித்தவர் யார்?

 ஜோசஃப் பிரிஸ்டிலி.

ஆரோக்ய வாழ்வு :

வல்லாரையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது செல்கள் பிறழ்ச்சி அடைந்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடன்கள் உதவுகின்றன. வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்கள் நம்மை தாக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

NMMS Q 67:

Advocate : Law :: Cook : ? a) Cookery b) Kitchen c) Food d) Dishes 



 Answer: Cookery



செப்டம்பர் 23

 

சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள்




சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freudசிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.

நீதிக்கதை

கடமையைச் செய், உயர்வை அடைவாய்



கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். 



அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.



சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். 



துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ, தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன். இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதனால்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்து கொண்டேன். 



இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.



அடக்கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம் போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.



இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக் கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும், தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.



துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை.



என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

 

இன்றைய செய்திகள்

*தமிழகத்தில் 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதி: 6000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்.

* தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது.

* மத்திய அரசின் 'அரசு மின் சந்தை' தளத்தில் அதிக அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், புதிய தொழில்முனைவோர் ஆகியோரை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

* பின் இருக்கை சீட் பெல்ட்டுக்கும் அலாரம் கட்டாயம் வேண்டும் - மத்திய அரசு வரைவு விதிகள் வெளியீடு.

* பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டவில்லை - மத்திய அரசு தகவல்.

* உலகில் தொற்றா நோய்கள் காரணமாக இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்.

* பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி.

* இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

 

Today's Headlines

 

*1267 confirmed cases of H1N1 flu in Tamil Nadu: Health department plans to buy 6000 test kits

 * Online application for admission to MBBS and BDS courses in Tamil Nadu started yesterday.

* The Tamil Nadu Treasury and Accounts Commissioner has said that efforts are being made to connect women self-help groups and new entrepreneurs on the central government's 'Government E-Market' platform.

 *Alarm on rear seat belt should also be mandatory - Central Govt issues draft rules.

 *No Discrimination in Reservation to Economically Weaker Sections - Central Govt.

 *According to the World Health Organization, one person dies every two seconds due to infectious diseases.

 *Russian President Vladimir Putin has warned Western countries that they will not hesitate to launch a nuclear attack to protect Russia, its borders and its people if it threatens Russia's security.

 

 *International squash tournament: 3 Indians advance to semi-finals

* Pan Pacific Open tennis: Spain's Mukuruja qualifies for quarter-finals

* India won the second T20 against England Women by 88 runs.

 

 

 



Covai women 

 

Thursday, 22 September 2022

உங்களுக்கு தெரியுமா?

 Do you know?*

1. Giraffes are the tallest mammals on Earth.

2.  Giraffes only need 5 to 30 minutes of sleep in a 24-hour period! 

3. On average, giraffes are between 16 and 20 ft (4.8 - 6 m) tall.

4. Giraffes have 32 teeth, the same number as humans.

5. Teeth are located at the front of the bottom jaw, but only at the back of the top jaw.

6. Giraffe tongues are long, reaching around 18-20 inches (50 - 53 cm) in length.

7. Over short distances, giraffes can run at speeds up to 35 mph.

8. Giraffes require over 75 pounds of food a day.

9. The World Giraffe Day is on june 21.

10. Giraffes uses tongues to clean its ear.

உங்களுக்குத் தெரியுமா?

1. ஒட்டகச்சிவிங்கிகள் பூமியில் உள்ள உயரமான பாலூட்டி ஆகும். 

2. ஒட்டகச்சிவிங்கிகளுக்கு 24 மணி நேர காலத்தில் 5 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே தூக்கம் தேவை! 

3. சராசரியாக, ஒட்டகச்சிவிங்கிகள் 16 முதல் 20 அடி (4.8 - 6 மீ) உயரம் வரை இருக்கும். 

4. ஒட்டகச்சிவிங்கிகளுக்குஇ மனிதர்களைப் போல 32 பற்கள் உள்ளன. 

5. முன் பகுதியில் பற்கள் கீழ் தாடையில் இருக்கும்இ ஆனால் பின்பகுதியில் மேல் தாடையில் மட்டுமே இருக்கும். 

6. ஒட்டகங்களின் நாவு நீண்டதுஇ 18-20 அங்குலம் (50 - 53 செ.மீ) நீளம் இருக்கும். 

7. குறுகிய தூரத்திற்குஇ ஒட்டகச்சிவிங்கிகள் 35 மைல் வரை வேகமாக ஓட முடியும். 

8. ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு நாளைக்கு 75 பவுண்டுகள் உணவு தேவைப்படுகிறது. 

9. உலக ஒட்டகச்சிவிங்கி தினம் ஜூன் 21 ம் தேதி ஆகும். 

10. ஒட்டகச்சிவிங்கி அதன் காதை சுத்தப்படுத்த நாக்கை பயன்படுத்துகின்றன.

இன்றைய தினம்

 *உலக ரோஜா தினம் இன்று !*



_இன்று உலக ரோஜா தினம்.இது புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று நினைவுகூரப்படுகிறது._

_உலக ரோஜா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 அன்று உலகின் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது._


_அவர்கள் உடலிலும் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.எனவே ஆண்டுதோறும் உலக ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது, இது அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும், இந்தப் போரில் அவர்கள் தனியாக இல்லை என்று கூறுவது இந்த நாளில்._


_இந்த நாளில் கனடா சிறுமி மெலிண்டா ரோஸின் நினைவாக உருவாக்கப்பட்டது.12 வயதாக இருந்தபோது அஸ்கின்ஸ் கட்டியின் அரிய இரத்த புற்றுநோயைக் கண்டறிந்தார். அவள் வாழ இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.ஆனால் அந்த சிறுமி தனது தன்னம்பிக்கையால் ஆறு மாதங்கள் வாழ்ந்தாள்.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.09.2022

திருக்குறள் :

பால்:இன்பத்துப்பால்


இயல்: களவியல்


அதிகாரம்: குறிப்பறிதல்


குறள் : 1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.


பொருள்:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்


பழமொழி :

Good actions carry their warrant with them.

நல்லதை செய்பவர்கள் நல்லதையே பெறுவார்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.

 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.

பொன்மொழி :

நீ தனிமையில் இருக்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் வாழ்வை தீர்மானிக்கும்.

பொது அறிவு :

1.சக்தி தரும் வெப்பத்தின் அலகு என்ன ?

 கலோரி.

 2.ஆல்டிமீட்டர் எதை அளக்கிறது?

 உயரத்தை.

English words & meanings :

scrump·tious - Greatly pleasing to the taste. Adjective. "My mother made a scrumptious chocolate ice-cream". அதி ருசியான உணவு. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிராமி மூலிகையின் தோற்றமே மூளை வடிவத்தில் காணப்படுவது இதன் சிறப்பு. அதனால் நம் மூளையின் செயல்பாட்டிலும் பெரிய பங்காற்றுகிறது.

NMMS Q 65:

Circle: Circumference :: Square : ? a) Angle b) Area c) Diagonal d) Perimeter 

 Answer : Perimeter

செப்டம்பர் 22

மைக்கேல் பரடே  அவர்களின் பிறந்தநாள்

மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 221791 – ஆகஸ்டு 251867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல்மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

நீதிக்கதை

நிம்மதி

என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான் ஒரு அரசன், ஞானியிடம். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.? என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான்.

அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்கோ சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ சென்று தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன் என்றார். 

சரி என்றான் மன்னன். ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா....??? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்...??? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்....??? விழித்தான் அரசன்.

 

ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது என்னுடையது இல்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் என்னுடையதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் என்னுடையதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இன்றைய செய்திகள்

22.09.22

* 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் அமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* சட்டப்பேரவை கூட்டத் தொடரை அக்டோபரில் நடத்த திட்டம் - அலுவல் ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தேதி அறிவிக்கப்படும்.

* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

 

* எங்களிடம் இன்னும் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன - புதினின் பகிரங்க மிரட்டல். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்துகிறார் ரஷ்ய அதிபர் படின்

* முதன் முறையாக மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தை நடத்தும் இந்தியா.

* மாநில பீச் வாலிபால் போட்டி நாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்.

* 2023ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் - ஐசிசி அறிவிப்பு.


Today's Headlines

* The Government of Tamil Nadu has ordered the establishment of India's first Sea Sponge Sanctuary in Tamil Nadu with an area of ​​448 square kilometers.

 * The High Court has ordered a ban on conducting typing tests in Tamil Nadu.

*  The date will be announced after the plan-to-work review meeting to hold the session of the Legislative Assembly in October.

* ISRO will launch 36 satellites of UK's OneWeb on October 22 with GSLV Mark-3 rocket.

* We have more weapons - Putin's public intimidation.

* India to host MotoGP bike race for the first time

* State beach volleyball tournament starts today at Nagapattinam.

 * 2023 World Test Championship Final Venue - ICC Announces





Covai women ICT