Tuesday, 26 July 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண் : 994

குறள்:

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.

பொருள்:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.


பழமொழி :

A crafty fellow never has any peace.

குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 


2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :


இளமைக் காலத்தில்

கல்வியை புறக்கணித்தவன்

எதிர்கால வாழ்வை இழந்தவன்

ஆகிறான்.


பொது அறிவு :


1.விஷக்கொசுக்கள் எங்கே விருத்தியாகின்றன ?


புதர் செடி, சதுப்பு நிலம் . 


2.மாட்டின் வயதை அறிவது எப்படி ?


 பற்களைக் கொண்டு.


English words & meanings :


endosymbiosis - en·do·sym·bi·o·sis - symbiotic association of one living organism living inside another one, noun. உள்ளுறை கூட்டுயிராதல். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :


உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு

NMMS Q 32:


3 மற்றும் 5 ஆகிய எண்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஈரிலக்க எண்களின் எண்ணிக்கை : 


விடை: 4. விளக்கம்: 35 ,53, 33, 55


ஜூலை 26

ஜார்ஜ் பெர்னாட் ஷா 


ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.


நீதிக்கதை


அன்புக்கு அடிமை


ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக்கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.


மறுநாளே, அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து திரும்பி வந்து விட்டாள். மறுநாள் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.


புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப்பெண் மனம் குழம்பிப் போனாள். முனிவர் கூறினார். இனி உனக்கு மூலிகை தேவையில்லை. புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா? என்ன?


முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள். நம் பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக்கூடாது


இன்றைய செய்திகள்


26.07.22


◆இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு உருமாறிய ஒமைக்ரான் தொற்று பாதிப்பு .

◆11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

◆மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

◆இந்தியாவில் ஏழைகளின் கனவு நிறைவேறும்; அதற்கு நானே சாட்சி' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் உரை.

◆கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்.

◆குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்நாவெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.

◆செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததில் சாதனை.

◆ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆஸ்திரேலிய வீரரை ஒப்பந்தம் செய்தது பெங்களூரு அணி.

◆வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் வெற்றி: 34 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய அணி.


Today's Headlines

◆ Tamil Nadu has the highest incidence of Omicron infection in India.

 ◆Bicycles Scheme for 11th Class Students: Launched by Chief Minister Stalin.

◆ More than a thousand people participated in a remarkable run in Chennai to raise awareness of the 44th Chess Olympiad in Mamallapuram.

 ◆The dream of the poor in India will come true;  I am witness to that' - President Draupadi Murmu's first speech.

 ◆California wildfires: Thousands evacuated

 ◆The World Health Organization has declared monkey measles as an international medical emergency.  A Danish pharmaceutical company has produced the first vaccine against this.  It is named Imnavex.

 ◆Chess Olympiad Practice Tournament: Achievement in Webcast Live

 ◆ISL  Football: Bengaluru team signed an Australian player.

◆ Winning against West Indies: Team India breaks 34-year-old record


 

 


Covai women ICT_

Monday, 25 July 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2022

 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண் : 991

குறள்:

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:

யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

பழமொழி :

A bad day never hath a good night.

முதல் கோணல். முற்றும் கோணல்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 


2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்

பொன்மொழி :

கல்வி என்பது

பல மூட்டை நூல்களை

வாசிப்பது இல்லை..

அடக்கம்.. ஒழுங்கு.. அறம்..

மற்றும் நீதி இவற்றின்

முன்மாதிரி ஆகும்.!


பொது அறிவு :

1.மனிதனின் கைவிரல் அடையாளத்தை போன்று இருப்பது எந்த விலங்கில்? 

உராங் உட்டான்.

 2. பனிச்சிறுத்தை எங்கு வசிக்கின்றது? 

இமயமலை பிரதேசத்தில்.

English words & meanings :

Dwarf - a person of unusually short stature, Adjective, சித்திரகுள்ளன். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

பச்சை தங்கம் என்று கூறப்படும் கொத்தமல்லி சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உடல் நலத்திற்கு பல அறிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை கொத்தமல்லி இலை.

NMMS Q 31:


RATION என்ற சொல்லைக் கொண்டு எழுத்துக்களின் வரிசை மாறாமலும் ஓர் எழுத்தை ஒரே முறை பயன்படுத்தி உருவாக்கப்படும் சொற்களின் எண்ணிக்கை : 

விடை: 5. விளக்கம்: RAT, AT, ON ,ION, RATIO

ஜூலை 25

ஜிம் கார்பெட் 


புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.

நீதிக்கதை


புத்திசாலி அம்மா


ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான். 

பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. 


நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள். 


சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன். 


நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். 


இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது. 


நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது. 


இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. 


அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. 


மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். 


புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது. 

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள். 


நீதி :

எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.


இன்றைய செய்திகள்

25.07.22

◆ தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து ஊழியர் ஆர்ப்பாட்டம்.

◆ சேலம் அருகே கொளத்தூரில் மின் வேலியில் சிக்கி  யானை உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை.

◆ டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி: இந்தியாவில் 4 பேருக்கு பாதிப்பு.

◆ 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்.

◆ உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

◆ உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்க உக்ரைன் - ரஷ்யா இடையே ஒப்பந்தம்.

◆ உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

◆ தேசிய சீனியர் கபடி: கால்இறுதியில் தமிழகம்.

◆ 2-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது இங்கிலாந்து.


Today's Headlines

 ◆ Tamilnadu Transport Corporation workers will protest across Tamil Nadu tomorrow.

 ◆ Elephant dies after getting caught in the electric fence at Kolathur near Salem: Forest department officials investigate.

◆ One person was confirmed with monkeypox in Delhi: 4 people were affected in India.

 ◆ 4 crore people have not received even a single dose of the vaccine - the Union government informs Lok Sabha.

 ◆The World Health Organization (WHO) has declared the spread of monkey measles an international public health emergency.

 ◆Agreement between Ukraine - Russia to eliminate the shortage of food products.

◆ India's Neeraj Chopra won the silver medal in the javelin event at the World Athletics Championships.

 ◆National Senior Kabaddi: Tamil Nadu in quarter-finals.

 ◆England bowled out South Africa in the 2nd ODI.


 



Covai women ICT

Thursday, 21 July 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

ehind the mission   

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2022

 திருக்குறள் :

குறள் எண் – 988

பால் – பொருட்பால்

இயல் – குடியியல். இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.


விளக்கம்:

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.



பழமொழி :

It is hard to please all parties.
ஒருவருக்கு சாதகம் என்றால் மற்றொருவருக்கு பாதகம்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 

2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்....ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1.நம் உடலில் உள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது? 

நம் இரண்டு கைகளிலும் உள்ள கட்டை விரல்களை. 

2. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது? 

ஈசல்.


English words & meanings :

be·hold·en - owing gratitude to another, indebted, Adjective:கடமைபடுதல். பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

சோயா சங்க் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோயா துண்டுகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன, இது உடலில் சரியான செரிமானத்திற்கு அவசியம்.

சோயா துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

NMMS Q 29:

வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகைபுரிந்த கடைசி ஐரோப்பிய நாடு எது? 



விடை: பிரான்சு

 

நீதிக்கதை

மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

 

இன்றைய செய்திகள்

21.07.22

 

📍நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு 7 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

📍22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ்.

 

📍டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

📍இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

 

📍வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

📍உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது.

 

📍கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📍இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

Today's Headlines

 

📍Minister M. Subramanian has said that the central government has raised 7 questions regarding the NEET exemption bill.

 

 📍CITU union gives strike notice to transport managements pressing 22 demands.

 

 📍The central government has approved to start procuring short grain paddy in the delta districts from September 1.  The farmers of Delta district have thanked the Tamil Nadu government and the central government for this.

 

 📍Among those who migrated abroad from India, 1.63 lakh people renounced Indian citizenship in 2021.  Of these, 78,000 have acquired US citizenship.

 

 📍The Ministry of Commerce has issued new guidelines for working from home.

 

 📍The list of the world's most powerful passports has been released.  Among these, the Japanese passport is at the top.  The Indian passport is ranked 87th.

 

 📍The date of the Asian Games, postponed due to the spread of Coronavirus, has been announced.

 

 📍South Africa won the first ODI against England by 62 runs.

 



Covai women ICT.

 

Wednesday, 20 July 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2022

   திருக்குறள் :

குறள் 987

பால் – பொருட்பால்

இயல் – குடியியல்
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால். விளக்கம்:

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்


பழமொழி :

A man is known by the company he keeps.

 நம் நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவார்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்

 2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்

-சிசரோ

பொது அறிவு :

1.நமது நாக்கில் சுவை நரம்புகள் எத்தனை? 

3000 . 

2.பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது எது? 

ஆந்தை.

ஆரோக்ய வாழ்வு :

சோயா சங்க் என்னும் மீல் மேக்கரில் காணப்படும் ஐசோ ஃப்ளேவோன்ஸ் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் ஆகியவை ஹாட் ஃப்ளாஷ், மனநிலை மாற்றங்கள் (மூட் ஸ்விங்) போன்ற மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

மனதை அமைதியாகம் புத்துணர்வாகவும் வைத்திருக்கச் செய்கிறது.

NMMS Q 28:

தேங்காயின் தாவரவியல் பெயர் : 

விடை: காக்கஸ் நியூசிபெரா

ஜூலை 20


அனைத்துலக சதுரங்க நாள் 





அனைத்துலக சதுரங்க நாள் (International chess dayபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.[1][2]

1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.[3] 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.


கிரிகோர் யோவான் மெண்டல்  அவர்களின் பிறந்த நாள்




கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.


மார்க்கோனி அவர்களின் நினைவுநாள்




மார்க்கோனிஎனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconiஏப்ரல் 251874 – ஜூலை 201937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர்.

நீதிக்கதை

நரியின் தந்திரம்

ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துவிட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. 

சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. 

சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்தப்படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. 

நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. 

நீதி :
நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

20.07.22

 💫அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.

 💫அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பு: தமிழக பட்டதாரிகள் அதிர்ச்சி.

 💫நீட் விலக்கு குறித்த மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

 💫குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகின. பிரதமர்  மற்றும் மாநில முதல்வர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

 💫 வரலாறு காணாத வெப்ப அலை: போர்ச்சுக்கல், ஸ்பெயினில் 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு.

 💫அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தனர்.

 💫உலக தடகள 100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை பிரேசர் 5-வது முறையாக 'சாம்பியன்'.

 💫உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் மைராஜ் கான் தங்கம் வென்று சாதனை.


Today's Headlines

 💫3.89 lakh students applied for admission in government arts and science colleges.

  💫Govt Polytechnic Lecturer Job;  Out-of-state participation in certificate verification: Tamil Nadu graduates shocked.

 💫 The Central Government has replied that the comments of the Central Health Department regarding NEET exemption have been sent to the Tamil Nadu Government.

  💫The presidential election was held yesterday.  In this, 99.18 percent of votes were recorded.  Prime Minister and State Chief Ministers, MPs, and MLAs have voted in this election.

 💫 Record heatwave: Death toll exceeds 1,000 in Portugal, Spain

 💫 Tamil Nadu NCC students stood 2nd in the medal list in the All India Shooting Competition.

 💫 World Athletics 100m: Jamaican Fraser wins 5th 'Champion'

  💫 Shooting World Cup: India's Mairaj Khan sets a record by winning gold
 


Covai women ICT

Tuesday, 19 July 2022

இன்றைய 10 சொற்கள்!

 இன்றைய 10 சொற்கள்!*


*1. Chop (சாப்) - வெட்டு.*

நான் வெங்காயங்களை வெட்டினேன்.

I chopped onions.

*2. Colander (கோலெண்டர்) - வடிகட்டி.*

தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி வழியாக ஊற்ற வேண்டும்.

Boil the water and then pour through colander.

*3. Crock pot (கிராக்பாட்) - மண் பானை.*

இந்த மண்பானை களிமண்ணிலிருந்து செய்யப்பட்டது.

This crock pot is made from clay.

*4. Dough (டாவ்ப்) - பிசைந்த மாவு.*

இந்த பிசைந்த மாவு ரொட்டி சுடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

This dough is used for baking bread.

*5. Recipe (ரெசிபி) - சமையல் குறிப்பு.*

இது பாரம்பரிய செட்டி நாட்டின் சமையல் குறிப்பாகும்.

It is a traditional chettinad recipe.

*6. Utensils (யுடென்சில்ஸ்) - பாத்திரங்கள்.*

அவள் சமையலறை பாத்திரங்களை கழுவினாள்.

She washed the kitchen utensils. 

*7. Stove (ஸ்டவ்) - அடுப்பு.*

அவன் ஒரு புதிய எரிவாயு அடுப்பை வாங்கினான்.

He bought a new gas stove.

*8. Sink (சின்க்) - நீர்த்தொட்டி.*

சமையலறையில் ஒரு நீர்த்தொட்டி உள்ளது.

There is a sink in a kitchen.

*9. Pestle (பெஸ்டல்) - குழவி.*

நான் ஏலக்காயை குழவியில் நசுக்கினேன்.

I crushed cardamom in pestle.

*10. Skillet (ஸ்கில்லெட்) - வாணலி.*

நான் வாணலியினுள் எண்ணெய்யை ஊற்றினேன்.

I poured off the oil into skillet.