Tuesday, 31 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 



இயல்:இல்லறவியல் 



அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.


பொருள்:

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்


பழமொழி :

Failures are stepping stones to success.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி. 

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.

பொன்மொழி :

உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.

பொது அறிவு :

1. புனுகு என்னும் நறுமணம் எந்த விலங்கில் இருந்து எடுக்கப்படுகிறது ?

 புனுகுப் பூனை. 

 2. சங்கின் இரண்டு வகை தெரியுமா?

 வலம்புரி , இடம்புரி.

English words & meanings :

weather - climate. noun. வானிலை. பெயர்ச் சொல். whether - if. expressing a doubt . conjunction. இரண்டில் ஒன்று. இணைப்புச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

சின்ன வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் அழற்சி க்கு எதிராக செயல்படுகிறது.

இதில் குவர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.



 




NMMS Q

பாக்டீரியாவில் புரதச்சேர்க்கை கீழ்கண்ட எந்த வகை ரிபோசோம்களால் நடைபெறும்? 



 a) 70s. b) 80s. c) 90s. d) 85s. 



 விடை: 70s

நீதிக்கதை

ஓநாயும் ஆடும்


ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.


ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.


ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.


ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.


ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது.ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.


இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.


வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.


சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.


ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.

இன்றைய செய்திகள்

31.01.2023


* ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.

* இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.

* சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

* ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுChenna

* உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.


Today's Headlines


* Due to G20 Executive committee Conference , Drones were banned for 3 days in Chennai

 * The Electricity Board has introduced a uniform receipt system to prevent fake receipts from being issued while paying electricity bill online.

 * Weather forecast: Heavy rain likely in 11 districts of Tamil Nadu on February 1.

*  Arunachal Pradesh looks like Switzerland due to snowfall.

 * To overcome the threat of China, construction of a New High Way of length 135 Km has been started in the Ladakh border

* A prize money of Rs 5 crore has been announced for the Indian women's team who won the title of champion in the Junior 20 Over Cricket World Cup.

* Hockey World Cup: Germany win the  World Cup for the 3Rd time after defeating Belgium.

 

 



Covai women 


Monday, 30 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.


பொருள்:

நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்


பழமொழி :

இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.


To say today; tomorrow, indicates refusal.



இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்

பொன்மொழி :

மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.

பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்? 

 தாம்சன். 

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.

English words & meanings :

stair – step. noun. படிக்கட்டு. stare - to look at steadily. verb. உற்று நோக்கு. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

100 கிராம் நறுக்கிய வெங்காயத்தில்

கலோரிகள் - 75

புரதம் - 2.5 கிராம்

கொழுப்பு - 0கிராம்

கார்போஹைட்ரேட்டுகள் - 17 கிராம்

நார்ச்சத்துக்கள் - 3 கிராம்

கால்சியம் - 3%DV

இரும்புச் சத்து - 7%DV

மக்னீசியம் - 5%

பாஸ்பரஸ் - 5% DV

பொட்டாசியம் - 7% Dv

துத்தநாகம் - 4% DV

ஃபோலேட் - 9% DV

இதில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர், போலேட், வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன






NMMS Q

6 இன் வர்க்கத்துடன் எந்த எண்ணின் கனத்தைக் கூட்டினால் 10,000 இன் வர்க்கமூலம் கிடைக்கும்?



 விடை : 4

நீதிக்கதை

ராமன் மற்றும் பேசும் கிளி


யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.

அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.

உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்

இன்றைய செய்திகள்

30.01.2023


* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு.

* பிப்ரவரி 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா  சோதனை செய்துள்ளது.

* நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்.

* உலக கோப்பை ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.


Today's Headlines


* According to the officials, during the bird survey conducted in Pallikaranai marshland, a flying Mallard duck was seen at a height of 14 thousand feet.

 * A team of officials inspected Mamallapuram ahead of the arrival of G20 conference delegates on February 1.

 * Chance of heavy rain in delta districts on February 1: Chennai Meteorological Department information.

* According to the Union Ministry of Health and Family Welfare, a total of 220.4 crore corona vaccine doses have been administered so far under the nationwide vaccination drive.

* India has test-fired an indigenous hypersonic missile that can travel 5 times the speed of sound.

* Floods in New Zealand: 3 dead;  Emergency declared in Auckland city.

* Hockey World Cup: India beat South Africa to finish 9th

 * Australian Open Tennis: Djokovic wins the title.

 

 



Covai women




Sunday, 29 January 2023

சுற்றுலா 3 NMMS QUIZ

சுற்றுலா 2. NMMS QUIZ

7. சுற்றுலா-2, an interactive worksheet by
liveworksheets.com

சுற்றுலா 1NMMS QUIZ

விஜயநகர பாமினி அரசுகள் 3 NMMS QUIZ

விஜய நகர பாமினி அரசுகள் 2 NMMS QUIZ

விஜய நகர பாமினி அரசுகள் 1NMMS QUIZ

Friday, 27 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் எண்: 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.


பொருள்:

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்


பழமொழி :

Don’t measure the worth of a person by their size.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.

பொன்மொழி :

ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால், ஓயாமல் மனதோடு போராட வேண்டும்.

பொது அறிவு :

1. குங்கும பூவில் அதிகமாக காணப்படுவது எது? 

ரிபோபுளோவின். 

 




2. தவளையின் தோல் எத்தனை அடுக்குகளை கொண்டது? 

இரண்டு அடுக்குகள்.

English words & meanings :

rap - a sharp knock. noun. verb. தட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல். wrap- enclose with paper or soft material. verb. noun. சுற்றி கட்டுதல். பெயர்ச் சொல். வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள மற்றொரு சத்து மாங்கனீசு ஆகும். மாங்கனீசு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோயை தடுக்க மொச்சை பயிறு உதவுகிறது. கால்சியம் குறைப்பாட்டை போக்கி எலும்பின் வலிமைக்கு உதவுகிறது.

NMMS Q

200 மற்றும் 300 ஆகிய எண்களின் வர்க்கங்களின் கூடுதலில் உள்ள பூஜ்ஜியங்களின் எண்ணிக்கை---------- 



விடை: 4

நீதிக்கதை

கடவுள் கொடுத்த வரம்


அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.


ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.


அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.


அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.


இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.

இன்றைய செய்திகள்

27.01.2023

* அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறையின் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் (CRZ) அனுமதி அளித்துள்ளது.

* அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 15 லட்சம் ஆண்டுக்கு முந்தைய கல் கருவி படிமம் கண்டெடுப்பு: மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை பேராசிரியர் தகவல்.

* மாநிலக் கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கொள்கைவடிவமைப்பு குழு தலைவர் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.

* இருதரப்பு உறவை பலப்படுத்த உறுதியான நடவடிக்கை: இந்தியா-எகிப்து 5 ஒப்பந்தம் கையெழுத்து.

* உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தமிழ் உள்ளிட்ட 4 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

* மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

* சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Coastal Regulatory Zone (CRZ) has given its go-ahead to the Public Works Department's plan to widen and dredge the Adyar river estuary.

*  Discovery of 15 lakh-year-old stone tools at Varanavasi message by Ariyalur district Professor of Department of Epigraphy, Central University.

* Justice Murugesan, chairman of the policy formulation committee, said that a draft report containing recommendations for the state education policy would be submitted to the Tamil Nadu government by April.

 * A concrete step to strengthen bilateral relations: India-Egypt signed in 5 agreements.

* Chief Justice DY Chandrachud has announced that the Supreme Court judgments will be translated into 4 regional languages including Tamil and uploaded on the court website from August 15.

 *A five-day curfew has been announced in the North Korean capital following the rise in respiratory-related illnesses.

 * Indian player Manika Patra has moved up to the 33rd position in the international table tennis rankings.

* Australian Open tennis: Djokovic, Sabalenka advance to semi-finals


 

 Prepared by



Covai women 


Thursday, 26 January 2023

TNSED SCHOOLS APP ல் CL, ML, EL, RL விண்ணப்பிப்பது எப்படி

 TNSED SCHOOLS APP ல் CL, ML, EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்


1. முதலில் TN emis individual login செய்யவும்

2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்

4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்

5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்

6) பிறகு "compensatory leave" என்ற option வரும். அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது.  ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff), எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்

7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.

8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்

5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்

10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்

15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்

20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.

உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.

9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.

10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!


ஆசிரியர்கள் தங்களது மீதமுள்ள விடுப்பு விவரங்களை (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது




Wednesday, 25 January 2023

ஊடகமும் ஜனநாயகமும் 2

தென்னிந்திய அரசுகள் 2

தென்னிந்திய அரசுகள் 3

வளங்கள் 2 NMMS QUIZ

7. வளங்கள்-2, an interactive worksheet by
liveworksheets.com

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.01.2023

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 111

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.


பொருள்:

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்


பழமொழி :

The bearer knows the burden.

சுமப்பவனுக்கு தெரியும் பாரம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன். 

2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.

பொன்மொழி :

வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது நடத்தையிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயர முடியும்.

பொது அறிவு :

1. இந்தியாவில் முதல்முறையாக பீரங்கியை பயன்படுத்தியவர் யார்? 

 பாபர்.

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 

 சீனா.

English words & meanings :

patience - being willing to wait. noun. பொறுமை. பெயர்ச் சொல்.patients - person treated in a hospital or by a doctor. noun. நோயாளி. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் மக்னீசியம் அதிகளவு உள்ளது. இந்த மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

NMMS Q

ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு_______



விடை: இரு சமபக்க சரிவகம்



ஜனவரி 25


தேசிய வாக்காளர் தினம்


 



இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது

நீதிக்கதை

வேப்பமரமும்... சிறுவனும்


வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.


பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.


வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.


நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.


நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

இன்றைய செய்திகள்

25.01.2023


* குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை வழங்கியது மத்திய அரசு.

* நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரம் கொண்ட டவர் அமைக்கப்பட்டுள்ளது.

* மணிக்கு 160 கி.மீ வேகம் செல்லும் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை.


* நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.


* உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞர் - அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்த மாதம் ஆஜராகிறது.

* 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பெண்கள் அணி அறிவிப்பு - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்.

* உலகக்கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதிக்குள் நுழைந்த சானியா-போபண்ணா ஜோடி.


Today's Headlines


* Chennai has implemented 5 layers of security on the occasion of the Republic Day celebrations.  Also drones flying are banned .

 * Central government has provided full amount of coal to Tamil Nadu.

* For the first time in the country, a 135-feet high tower has been constructed at the Chennai airport at the cost of Rs.10 crore for state-of-the-art information technology facility.


* India's fastest metro train at 160 kmph: RRTS record in test run

* An earthquake occurred in Nepal this afternoon.  It was recorded as 5.8 on the Richter scale.

* World's first artificial intelligence robot lawyer - appearing in US court next month

* ICC Women's ODI Team of the Year 2022 Announced - 3 Indian Women's Places

 * Hockey World Cup: Australia beat Spain to reach semi-finals

* Australian Open Tennis: Sania-Bopanna pair into semi-finals

 

 



Covai women


Tuesday, 24 January 2023

வளங்கள் 1 NMMS QUIZ

தென்னிந்திய அரசுகள் 1

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.01.2023

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால்


அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்


குறள் 110:

என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


பொருள்:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.


பழமொழி :

காலம் எல்லாவற்றையும் குணப்படுத்துகிறது.

காலம் அனைத்திற்கும் தீர்வு காணும்.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.

 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.

பொன்மொழி :

தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்

பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்?

 தாம்சன். 

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

peace - calm. noun. அமைதி. பெயர்ச் சொல். Piece - segment. noun. ஒரு பகுதி அல்லது ஒரு துண்டு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

இந்த மொச்சை பயிறில் உள்ள போலேட் பிறந்த குழந்தைகளின் பிறப்புக் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு 400 எம்.சி.ஜி போலேட் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.


இதுவே கர்ப்ப காலத்தில் 600 எம். சி.ஜி அளவு அதிகரிக்கிறது. கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகெலும்பு முழுமையற்ற வளர்ச்சி, மூளையின் பகுதிகளில் ஏற்படும் முழுமையற்ற வளர்ச்சி போன்ற முக்கிய பிறப்பு குறைப்பாட்டை தடுக்க உதவுகிறது.

NMMS Q

விசையின் விளைவானது__________ , ____________ சார்ந்தது.



விடை: எண்மதிப்பு, பரப்பளவைச் 



ஜனவரி 24


தேசிய பெண் குழந்தை நாள்





 



தேசிய பெண் குழந்தை நாள் (National Girl Child Day) இந்தியாவில் 2009 ஆண்டு முதல் ஜனவரி 24 ஆண்டு தோறும் அன்று கொண்டாடப்படுகிறது.. இந்நாள் கொண்டாடுவதின் மூலம் பாலின சமத்துவம், சமவேலைக்கு சமஊதியம் போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது பெரிதும் உதவும்.[1] மேலும் பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது

நீதிக்கதை

இறைவன் படைப்பு


ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஆமை. நம்மால் ஏற்கனவே வேகமாக போக முடியாது இதில், முதுகில் வேறு பாரமாக ஓடும். முயலைப் பார்த்து பொறாமைப்படுவதில் பயன் இல்லை என்னை இப்படிப் படைத்ததற்காக ஆண்டவனைத்தான் நொந்து கொள்ளவேண்டும் என ஆமை எண்ணியது.


அப்போது அன்று இரை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம், விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது. முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது. ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது.


சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது. ஒவ்வொரு விநாடியும் மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில், விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.


இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையை உபயோகித்து ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம். இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை.

இன்றைய செய்திகள்

24.01.2023


* உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமான வருமான வரம்பும் இல்லாமல் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.

* மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து: பாரத் பயோடெக் நிறுவனம் 26-ம் தேதி அறிமுகம்.

* இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக, கல்வாரி வகை நீர்மூழ்கியின் ஐந்தாவது கப்பலான ஐஎன்எஸ் 'வகிர்'  கடற்படையில் சேர்க்கப்பட்டது.

* சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

* அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.


* மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் போராடி வென்ற சிட்சிபாஸ்.


* பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா.


இன்றைய தலைப்புச் செய்திகள்


*அரசு நடவடிக்கைகள் அனைத்தையும் இந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லாமல் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

* மூக்கு வழியாக கொரோனா தடுப்பு டோஸ்: பாரத் பயோடெக் 26-ம் தேதி அறிமுகம்.

* இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில், கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலின் ஐந்தாவது கப்பலான, ஐஎன்எஸ் 'வாகீர்' சேர்க்கப்பட்டது. 

* More than 13,000 people have been died of corona virus in Chinese hospitals in the last week, the Government declared. 

* US President Biden House: Seizure of key documents.

* State School and Colleges Volleyball Tournament started in Chennai yesterday.

* Australian Open Tennis: Citzipas won the 4th round.

* Women Junior World Cup Cricket: India defeated Sri Lanka.



Covai


Monday, 23 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


பொருள்:

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது


பழமொழி :

Without wisdom,wealth is worthless.

விவேகம் இல்லாச் செல்வம் வீணே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் பேசினாலும் நன்கு ஆராய்ந்து செய்வேன் பேசுவேன்.

 2. எனது பேச்சு அடுத்தவர்களை ஊக்குவிக்கும் படி பேசுவேன்.

பொன்மொழி :

நமது மேலாதிக்க எண்ணங்களின் விளைவுகளையே நமது வாழ்க்கை எப்போதும் பிரதிபலிக்கின்றது.

பொது அறிவு :

1. பறவை முட்டையில் எத்தனை சவ்வுகள் உள்ளன? 

 ஐந்து சவ்வுகள்

2 . உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது? 

கியூபா.

English words & meanings :

pail - bucket, noun. நீர் எடுக்கும் வாளி. பெயர்ச் சொல். pale - light in colour. adjective. வெளிறிய வண்ணம். பெயரடை

ஆரோக்ய வாழ்வு :

கொப்பரை தேங்காய் உடன் கசகசா அரைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து காய்ச்சி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்

NMMS Q

ஓர் இணைகரத்தின் உயரம் 8 சென்டிமீட்டர் மற்றும் அதன் அடிப்பக்கம் உயரத்தை போல் மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவு___________சதுர சென்டிமீ்ட்டர் 



விடை: 192. 



விளக்கம் : b x h= 24 x 8 = 192

ஜனவரி 23


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்




 



 




நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா,

நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!  



நீதிக்கதை

நல்ல நண்பன் வேண்டும்



ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.


விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.


அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.


நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

23.01.2023


* குடியரசு தின விழா பாதுகாப்பு: டெல்லி செல்லும் ரயில்களில் ஜனவரி-26 வரை பார்சல் சேவை நிறுத்தம்.

* வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் நடத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்.

* அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை  இன்று சூட்டுகிறார் பிரதமர் நரேத்திர மோடி.

* சீன எல்லையில் இந்தியா பிரம்மாண்ட போர் பயிற்சி - இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு.


* முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் தங்கள் நாட்டு மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

* இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் குன்லவுட் மற்றும்  பெண்கள் ஒற்றையர் பிரிவில் கொரியா வீராங்கனை அன் சியாங் ஆகியோர் பட்டம் வென்றனர்.

* ஹாக்கி உலகக்கோப்பை: மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.


Today's Headlines


* Republic Day Security: Parcel service suspended on Delhi-bound trains till Jan-26

*  In Eruthu Vidum vizha Vellore District Collector impose new restrictions. 

* 1.14 lakh people are employed through 71 private employment camps in Tamil Nadu: Minister CV Ganesan informs.

 * Prime Minister Narendra Modi today named Paramveer Chakra awardees for 21 unnamed islands in the Andaman and Nicobar Islands.

 * India's massive war drills on Chinese border - Indian aircraft, missile build-up

 * Ukraine says its people are being killed by the West, which hesitates to make decisions.

*  India Open Badminton: Thailand's Kun Laut and Korea's Anh Xiang won the men's singles title.

 * Hockey World Cup: Spain beat Malaysia to reach quarter-finals

 

 



Covai women


Thursday, 19 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.01.2023

    திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 107

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.


பொருள்:

ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.


பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று



இரண்டொழுக்க பண்புகள் :

1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.

பொன்மொழி :

வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.

பொது அறிவு :

1. மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் உள்ளன? 

 12 ஜோடிகள் .

 2.அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுவது எது? 

 கொல்கத்தா.

English words & meanings :

lessen - make smaller. verb. குறைப்பது. வினைச் சொல். lesson - learning materials or things.noun பாடம். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள எல் டோபா பார்கின்சன் நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.


மனச்சோர்வு மற்றும் மனப்பிறழ்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது.

NMMS Q

தனிம வரிசை அட்டவணையில் 118 வது தனிமமாக நவ 28, 2016 இல் சேர்க்கப்பட்ட தனிமம் ___________ 



a) Oganesson b) Tennessine c) Livermorium.


 விடை: Oganesson


ஜனவரி 19


1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் பரவத் தொடங்கியது.



 




நீதிக்கதை

செய்நன்றி மறவேல்


ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.


மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.


அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.


ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.


தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.01.2023


* மத்திய அரசுப் பணிகளில் 2.1% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.


* சென்னையில் 3 கடைகளில் 1500 பொம்மைகள் பறிமுதல்: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாததால் நடவடிக்கை.


* விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


* சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி.


* உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.


* டாடா ஸ்டீல் செஸ் போட்டி: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி.


* 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை.


* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், முர்ரே, ஜாபியர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Only 2.1% of Tamilians have been selected for central government jobs : Minister Udayanidhi Stalin informs.

 * 1500 toys seized from 3 shops in Chennai: Action for lack of ISI stamp

 * Anna University said that the term exam will be conducted on Sunday as well.  Students are dissatisfied with the announcement.

 * Reluctance to identify minorities: Supreme Court disapproves of 6 states and UT governments.

*  16 people, including Minister of Home affairs Denis Monastrisky, died in a helicopter crash in the capital of Ukraine, Kiev.

 * TATA STEEL CHESS MATCH: Pragnananda beats World No. 2 with stunning victory.

 * An Australian woman has run a marathon every day for 150 days, a world record.

 * Australian Open tennis: Djokovic, Murray, Japier advance to 2nd round

 

 



Covai women 


Wednesday, 18 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2023

திருக்குறள் :

பால்: அறத்துப்பால். 


அதிகாரம் - செய்நன்றி அறிதல்.

 குறள் : 106 

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


 விளக்கம்:

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது


பழமொழி :

A sound mind in a sound body


வலுவான உடலில் தெளிவான மனம்


இரண்டொழுக்க பண்புகள் :

1.புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன்.

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. அனைவரையும் நேசிப்பேன்.

பொன்மொழி :

வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற நாள் எது? 

மே 13 ,1952. 

2. இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி யார்? 

மீரா சாகிப் பாத்திமா பீவி.

English words & meanings :

knead -massage. verb. பிசைதல். வினைச் சொல். need -desire. verb. ஆசை. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

தினசரி பயன்படுத்தும் சமையலில் விதவிதமான பயிறு வகைகள் இடம் பெற்றாலும் குளிர் காலங்களில் அதிகமாகக் கிடைப்பது மொச்சைப் பயறு. குறிப்பாக பொங்கல் சமயங்களில் இந்த மொச்சைப்பயறை விதவிதமாக சமைத்து சாப்பிடுவார். நாட்டு காய்கறிகளில் முக்கிய இடம் பிடித்த இதில் ஏராளமான ஊட்டச்ச்த்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்தக் கூடியது.



 




NMMS Q

அறை வெப்பநிலையில் நீர்மமாக காணப்படாதது எது? ________ 



விடை: Cs

நீதிக்கதை

முதலையும்,நண்டும்


ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.


கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.


அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.


செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.

இன்றைய செய்திகள்

18.01.2023


* டிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் சிவில் நீதிபதி தேர்வு அறிவிக்காததால் இளம் வழக்கறிஞர்கள் ஏமாற்றம்.


* தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில் தமிழ் மற்றும் தமிழர் நலனுக்காக தொண்டாற்றிய 10 அறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

* உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் அரசு பிரதிநிதிகள் வேண்டும்: தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு கடிதம்.

* ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையை தொடங்கியது தேர்தல் ஆணையம்.

* சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

* பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கியது வியாகாம் 18.

* இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடக்கம்.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஆண்டி முர்ரே.


Today's Headlines

* Young lawyers disappointed as TNPSC did not announce civil judge exam in 2023 proposed timetable.


* At the Tiruvalluvar Day function held in Chennai yesterday on behalf of the Tamil Development Department, Chief Minister M.K.Stalin honored 10 scholars who have volunteered for the welfare of Tamil and Tamilians.

 * Want government representation in Supreme Court collegium: Central government's letter to Chief Justice.

 * Remote Voting Machine: Election Commission started consultation with political parties.

 * China's population is said to have fallen for the first time in 60 years, and their national birth rate had fallen.

 * Viacom 18 bought the Women's IPL cricket broadcasting license for Rs 951 crore.

* India Open Badminton tournament started yesterday in Delhi.

 * Australian Open Tennis: Andy Murray advances to 2nd round.

 

 



Covai 


Monday, 16 January 2023

NMMS தேர்வு ஆன்லைன் பணித்தாள்கள்

 NMMS தேர்வு ஆன்லைன் பணித்தாள்கள்




Identify the name of the state

நீரியல் சுழற்சி 2

நீரியல் சுழற்சி 1

மக்களின் புரட்சி 5 NMMS QUIZ

மக்களின் புரட்சி 4 NMMS QUIZ

மக்களின் புரட்சி 3NMMS QUIZ

மக்களின் புரட்சி 2 NMMS QUIZ

மக்களின் புரட்சி 1

கிராமசமூகமும் வாழ்க்கைமுறையும் 2

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 1

வளரிளம்பருவமடைதல் 2

வளர்ளம்பருவமடைதல் 1NMMS QUIZ

Friday, 13 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2023

   திருக்குறள் :

பால்: அறத்துப்பால்


அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்


குறள் 103:


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.


குறள் விளக்கம்:


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.


பழமொழி :

A journey of a thousand miles begins with a single step


ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது



இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

எவருக்கும் நீங்களாக போய் அறிவுரை சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.

பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் பெண் உலக அழகி பட்டம் பெற்றவர்? 

 ரீட்டா பிரியா.

 2. இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் யார்?

 ஜெனரல் கே. எம் .கரியப்பா.

 




English words & meanings :

hole - opening. noun. துளை. பெயர்ச் சொல். whole - entire. adjective. பெயரடைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஆளிவிதையை பாலுடன் கலந்து சாப்பிடலாம். இதற்கு, நீங்கள் ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 1 டீஸ்பூன் ஆளி விதை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, இந்த பாலை வடிகட்டிக் குடிக்கலாம். வேண்டுமானால் ஆளி விதை பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலை இரவில் தூங்கும் போது குடிக்கலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

NMMS Q

அண்டம் மற்றும் விண்மீன்களில் காணப்படும் மிக முக்கியமான தனிமங்கள்_________ 


விடை: H, He

நீதிக்கதை

சமாதானம் அவசியம்


காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.


இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.


மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.

இன்றைய செய்திகள்

13.01.2023


* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.17 லட்சம் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.7 கோடி ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

* தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ரூ.4,276 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் கொள்முதல் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.

* 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் வரவுள்ளது.

* இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்.

* 2வது ஒருநாள்கிரிக்கெட் போட்டி: இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா.

* உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இந்தியாவின் சரத்கமல், மணிகா தகுதி.

Today's Headlines

* On the occasion of Pongal, the Tamil Nadu government has announced that 1.17 lakh transport corporation employees will be given an 'achievement incentive' of Rs 7 crore.

* The Chennai Meteorological Center has reported that the Northeast Monsoon has receded over Tamil Nadu, Puduwai and Karaikal.

* Defense Ministry approves procurement of indigenously manufactured missiles worth Rs 4,276 crore

 * After 50,000 years a comet from outside our solar system will come close to Earth and the Sun.


*  Do not use India's AMBRONOL, DOK-1 Max cough medicine: World Health Organization.

*  2nd ODI: India beat Sri Lanka by 4 wickets to win the series.

 * India's Sarathkamal, Manika qualify for World Table Tennis Championship.

 

 



Covai women 


Thursday, 12 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


பொருள்:

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவார்.


பழமொழி :

Don't judge a book by its cover.

 புறத்தோற்றம் கண்டு மயங்காதே

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது

பொது அறிவு :

1. நண்டு தன் ஆயுட்காலத்தில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது ?

18 முறை. 

 2. கண்ணால் பார்க்கக்கூடிய கிரகம் எது ? 

 செவ்வாய்.

English words & meanings :

hear - to listen, verb. கேட்டல். வினைச் சொல். here - at this place. adverb.இங்கே. வினையுரிச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஆளி விதைகள் மற்றும் பால் கலவையானது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் ஆளி விதையை பாலில் கலந்து சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனுடன், நீரிழிவு நோயால் ஏற்படும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.

NMMS Q

IUPAC ன் விரிவாக்கம்_______________ 


விடை: International Union Of Pure And Applied Chemistry



ஜனவரி 12


தேசிய இளைஞர் நாள்



 





சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.



1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

நீதிக்கதை

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்


ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.


அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.


மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.


அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.


அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.


இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.


இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.


விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.


விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.

இன்றைய செய்திகள்

12.01.2023


* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

* பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாளை முதல் 340 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

* இம்மாத இறுதிக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று மத்திய அரசு தகவல்.


* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையும் - சர்வதேச கருத்துக் கணிப்பில் தகவல்.

* ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: கோலி, ரோகித் முன்னேற்றம்.

* சென்னை மண்டல பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.


Today's Headlines


* The Tamil Nadu government has issued an order transferring 21 IPS officers in Tamil Nadu.

* Minister KN Nehru said that the government policy has decided to establish basic infrastructure in the cities near the metropolitan cities.

 * 340 additional special buses will operate from Chennai from tomorrow on the occasion of Pongal festival.

 * The central government informed that the new parliament building will be ready by the end of this month.

* In UNO India will join as a permanent member for the Security Council –Information on international poll. 

 * ICC Men's Cricket Rankings List Released: Goalie, Rohit Progress

* In Chennai Zone in between School teams, the 20 over cricket match was won by BSPP Millenium Team

 

 



Covai women 


Wednesday, 11 January 2023

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் 2

நம்மைச்சுற்றியுள்ள பருப்பொருள்கள் 1

ODD ONE OUT Letters

MAT Decoding

Decoding, an interactive worksheet by NMMSMOHAN
liveworksheets.com

MAT Coding 1

 

Coding, an interactive worksheet by NMMSMOHAN
liveworksheets.com

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.01.2023

 திருக்குறள் :

பால்: பொருட்பால்


இயல்: அரணியல்


அதிகாரம்: நாடு


குறள் எண்: 737


குறள்:

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற் குறுப்பு


பொருள்:

ஊற்றும் மழையும் ஆகிய இருவகை நீர்வளமும்  தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்


பழமொழி :

Don't kick the ladder by which you climb up.

ஏற உதவிய ஏணியை உதைக்காதே

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.1. மூக்கு கொம்பன் என்று எந்த விலங்கை அழைப்பர்? காண்டாமிருகம். 2. ராணுவ தினம் எப்போது? ஜனவரி 15.

பொது அறிவு :

1. மூக்கு கொம்பன் என்று எந்த விலங்கை அழைப்பர்? 

 காண்டாமிருகம். 

 2. ராணுவ தினம் எப்போது? 

 ஜனவரி 15.

English words & meanings :

heal - to cure the sickness. verb. குணப்படுத்து. வினைச் சொல். heel -back of the feet. noun. குதிங்கால். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

ஆளி விதை மற்றும் பால் கலவையானது குடலுக்கு நன்மை பயக்கும். ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. நார்ச்சத்து குடல் உணவை ஜீரணிக்க உதவுகிறது. நார்ச்சத்தை உட்கொள்வதன் மூலம், உணவை ஜீரணிக்க குடல்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை. இது செரிமானத்தை மேம்படுத்தும். செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்குவதற்கு உதவுகிறது.



ஜனவரி 11


திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்


 




திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்

நீதிக்கதை

வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.


சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு யாராவது காப்பாற்றுங்கள் என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.


தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு என்று கோபத்துடன் கேட்டான்.


பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு நான் கீழே வந்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.


இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்? என்றான்.


பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன் என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.


நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.


உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன் என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

இன்றைய செய்திகள்

11.01.2023


* கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* "2023ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் காப்புறுதிக் கட்டணத் தொகை ரூ.1200 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


* தமிழக கடற்கரையோரங்களில் கிடைக்கும் கனிமங்களை சந்தைப்படுத்த ஒப்பந்தம்: முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

* 2021-ம் ஆண்டு அதிக சாலை விபத்துகள் ஏற்பட்ட பெருநகரங்களின் பட்டியிலில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. மேலும், சாலை விபத்துகளில் அதிகமானோர் மரணம் அடைந்த பட்டியலில் சென்னையில் 2-வது இடத்தில் உள்ளது.

* திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை உள்ளே புகுந்த கடல்நீர் - நிபுணர்கள் ஆய்வு.

* ஜோஷிமத் நகரில் ஏற்பட்ட நிலவெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை இடிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கஷ்டப்பட்டு கட்டிய தங்கள் வீட்டை எண்ணி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

* உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.


* இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

* மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.

* போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸ் நியமனம்.

 * ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு.


Today's Headlines


* The Madras High Court has ordered the Dindigul District Collector to seal shops selling plastic bags and water bottles in Kodaikanal.

* "A check of Rs. 1200 crore has been issued to the United India Insurance Company for the insurance premium amount of the Chief Minister's Comprehensive Medical Insurance Scheme for the year 2023," said the Minister of Health and Welfare.

 * Agreement to market minerals which is found along the coastal regions of TN: Signed

 * Chennai tops the list of cities with the highest number of road accidents in 2021.  Also, Chennai ranks 2nd in the list of most road accident deaths.


*  Seawater intrusion up to 350 feet in Sriharikota area of Tirupati district - experts study.

* As the government has taken steps to demolish the buildings affected by the earthquack in Joshimath, people are shedding tears thinking about their hard-built houses.

* Athar Poonawala, Chief Executive Officer of Serum Company, has said that Corona is under control in India better than other countries in the world.

 * Pakistan is in a severe economic crisis and people are suffering due to the steep rise in the prices of essential commodities.

 * A magnitude 7.7 richter earthquake has been reported in Tanimbar, Indonesia.

 * The Malaysian Open Badminton Series started yesterday in Kuala Lumpur.

*  Roberto Martinez appointed as new coach of Portugal football team.

 * England's Harry Brook selected as the Best cricketer  of the Month for December by ICC

 

 



Covai women


Monday, 9 January 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2023

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 



இயல்:இல்லறவியல் 



அதிகாரம்: செய்நன்றி அறிதல்


குறள் : 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


பொருள்:

ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது


பழமொழி :

A light heart lives long.

மகிழ்ச்சியான மனமே நீண்ட காலம் வாழ்கிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்னணு சாதனங்கள் விட மனிதர்கள் முக்கியம். எனவே உற்றாரோடு நல்ல உறவில் இருக்க முயல்வேன்.

2. அனைவரோடும் சிரித்தும் சிந்தித்தும் பேசுவேன்

பொன்மொழி :

உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.

பொது அறிவு :

1. நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த வயதில் நிலாவில் இறங்கினார் ?

 68 வது வயதில் .

 




 2.முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 

 68 பற்கள்.

English words & meanings :

grease - lubricant, noun. வழு வழுப்பான எண்ணெய் பசை பொருள். பெயர்ச் சொல். Greece - a country, noun. ஒரு நாடு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

உடல் பருமன் என்பது இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் பருமன் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களையும் உண்டாக்குகிறது. அதனால்தான் ஒவ்வொருவரும் தங்களின் உடல் பருமனை குறைக்க விரும்புகிறார்கள். உடல் பருமனையும், அதிக எடையையும் நீங்கள் அதிகமாக கொண்டிருந்தால், நீங்கள் ஆளி விதைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். ஆளி விதைகள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக்கொள்வது எடையைக் குறைக்க உதவும். ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது.

NMMS Q

(-5) - (-7) ன் கூட்டல் தலைகீழி _________ 



விடை: 2. a)2. b)-2. c)0



ஜனவரி 09


வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீதிக்கதை

சுத்தம் தேவை


புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.


அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா? என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.


மறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.


அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.


அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.


பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.


அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.


அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.


அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.


சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள்

09.01.2023


* பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


* பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14019 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

* மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

* கோரிக்கையை ஏற்காவிட்டால் குடும்பத்தோடு கோட்டை முற்றுகை: செவிலியர் சங்கத்தினர் பேட்டி.

* இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் வகையிலான ட்ரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.

* இமயமலைப் பகுதியில் நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக உத்தராகண்ட்டின் ஜோஷிமத் நகரம் புதையும் நிலை உருவாகியுள்ளது.

* டுவிட்டரில் அதிரடி மாற்றங்களை அறிவித்த எலான் மஸ்க்.

* சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான கொரோனா பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு.

* தர்மபுரியில் மாநில செஸ் போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

* அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

* ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி.


Today's Headlines


* Minister Anbil Mahes said that after many years, the State Library Committee and the Chennai Municipal Library Commission have formed and issued an ordinance.

 *The Education Department has given approval for the appointment of temporary teachers in 14019 vacant teaching posts by the School Management Committee.

 * Corona Vaccination Proof Mandatory for jallikattu players and bull Owners:- Jallikattu Guidelines Release                             

*  If our demands are not accepted we will begin our seige at Fort. The Nurse association declared

* The Army Research and Development Center (DRDO) has developed drones that can drop bombs on enemy targets in the Himalayan border areas.                           

*  In Himachal Regions due to land crack and slide the Joshimath city of Uttarakhand is in the danger of burrying under.

* Elon Musk announced some drastic changes in Twitter.

*  China eases corona travel restrictions for foreign travelers from today

 * State Chess Tournament at Dharmapuri - 1,000 students participated.

*  Adelaide International Tennis: Djokovic won the title

 * ISL Football: Odisha beat East Bengal

 




Covai women