Sunday, 30 August 2020

 ரூதர்ஃபோர்டு

💥 நோபல் பரிசு பெற்ற அணு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நியூசிலாந்தில் பிறந்தார்.


💥 இவர் யுரேனிய கதிர்வீச்சில் எக்ஸ் கதிர் இல்லாமல் 2 வித்தியாசமான கதிர்கள் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு ஆல்பா,  பீட்டா கதிர்கள் என பெயரிட்டார். காமா கதிர்களையும் கண்டறிந்தார். இவர் மின்காந்த அலைகளைக் கண்டறியும் கருவி உட்பட பல கருவிகளை உருவாக்கியுள்ளார்.


💥 இவர் வாயுக்களில் உள்ள அயனிகளின் தன்மை குறித்து தாம்சனுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.


💥 கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவருக்கு 1908ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு 1914ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.


💥 அணுக்கரு பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் தான் அணுக் கட்டமைப்பு குறித்த இன்றைய கோட்பாடுகள் அனைத்திற்கும் அடித்தளமாக விளங்குகின்றன. 'அணுக்கரு இயற்பியலின் தந்தை" என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

புதிய பார்வை

 

 புதிய பார்வை


நின்று 

நிதானித்து 

யோசிக்க 

மக்களுக்கு

நேரமில்லை. 


எல்லோரும் 

ஓடிக்கொண்டே

இருக்கிறார்கள்.


எங்கே 

ஓடுகிறோம் 

என்பதை அவர்கள் 

அறிந்திருக்கவில்லை. 


ஏன் 

ஓடுகிறோம் 

என்பதும் 

அவர்களுக்கு

தெரியாது. 


மற்றவர்கள் 

ஓடுவதை

பார்த்து

இவர்களும் 

ஓடுகிறார்கள்.


பதவி 

வேட்டையை 

மேற்கொண்டு 

ஓடுகிறார்கள். 


பணத்தை

துரத்தியபடி 

ஓடுகிறார்கள். 


மற்றவர்களுக்கு 

தேவையானவை 

எல்லாம் 

தங்களுக்கும் 

தேவை என்று...

 

ஒருவரை

ஒருவர் 

முட்டிகொண்டு

ஓடுகிறார்கள்.


தனி

தன்மையை

இழந்து...


' கார்பன் '

பிரதிகள் போல் 

செயல்படுகிறார்கள்.


இப்படி 

ஓடுவதன் 

பெயர் வாழ்க்கை 

இல்லை.


இந்த 

இடைவிடாத 

பரபரப்பு...


ஒருவகையான 

நோய் மட்டுமே 

ஆகும்.


- ஓஷோ -


பணமோ

பதவியோ

சொத்தோ

மட்டுமே...


நம் 

வாழ்க்கையில்

முக்கியம்

இல்லை.


அதையும்

தாண்டி

ஒன்றுள்ளது. 


அது...


அது...


எந்த 

நிலையிலும்

நம் மனதை நாம்

மகிழ்ச்சியாக

வைத்து 

கொள்வதுதான்.


' போதும் 

  எனும் மனமே 

  பொன் செய்யும் 

  மருந்து '


என்னும்

முதுமொழிக்கு ஏற்ப...


நம்

மனதை

நாம் பழக்க

படுத்தி கொண்டால்...


இனி

எல்லாம் சுகமே.


வாங்க...


முயற்சிகள்

செய்யலாம்.



Saturday, 29 August 2020

 

Phonic drill for young learners/late bloomers

 

இசைஞானி இளையராஜாவின் வரிகளுடன் இசை கோர்த்து கல்வி தொலைக்காட்சி பாடல்

அறிவோம் தெளிவோம்

 *மோட்டார் சைக்கிளில் உள்ள சக்கரங்களில் ஆரைக் கம்பிகள் (spokes) இருப்பதும் ஸ்கூட்டர் சக்கரங்களில் அவை இல்லாமல் இருப்பதும் ஏன் ?*


மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றின் சக்கரங்களில் ஒன்றில் ஆரைக்கம்பிகள் இருப்பதற்கும் மற்றவற்றில் அவை இல்லாமல் இருப்பதற்கும் பெரிய அறிவியல் காரணம் ஏதுமில்லை.


 மோட்டார் சைக்கிளின் சக்கரங்கள், ஸ்கூட்டர் சக்கரங்களை விட அளவில் அதாவது விட்டத்தில் பெரியவை; எனவே மோட்டார் சைக்கிளின் சக்கரங்களைக் கம்பிகளின்றி திண்ணிய (solid) பொருளாக அமைத்தால் எடை மிகுதியாகி அவற்றை விரைந்து செலுத்துவதற்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும். மாறாக ஸ்கூட்டர் சக்கரங்கள் சிறியவை; எனவே முழுமையான திண்ம நிலையிலும் அவற்றின் எடை மிகுதியாவதில்லை. அதே நேரத்தில் கம்பிகளுடன் கூடிய சக்கரங்கள் விபத்து அல்லது வேறு காரணங்களால் எளிதில் தமது சீரான வட்ட வடிவத்தை இழந்து விடும் வாய்ப்பு உண்டு.


 எனவே எடை மிகுதி என்ற ஒரு குறையைத் தவிர்த்துப் பார்த்தால் கம்பிகளின்றி ஒரே திண்மத் தன்மையுடன் கூடிய சக்கரங்களைப் பயன் படுத்துவது சிறந்தது எனலாம். 


தற்போது பந்தைய மோட்டார் சைக்கிள்களில் கார்பன் இழைக்கலவையுடன் கூடிய பொருளைக் கொண்டு செய்யப்பட்ட, எடை குறைந்த, ஆரைக்கம்பிகளற்ற, திண்மமான பெரிய சக்கரங்களைப் பயன் படுத்துவதைக் காணலாம்.

    -

      

இன்றைய சிந்தனை

 

*-இன்றைய சிந்தனை.*.
(29.08.20..)             .                                                                     *பொய் பேசி சாதித்த செயல்களில் வெற்றி நிலைப்பது இல்லை*

உண்மையின் மூலம் கிடைக்கும் வெற்றி தள்ளிப் போனாலும் அவைகள் நிரந்தரமானவை.

பொய் பேசும் போது அதற்கான தண்டனையும் அப்போதே, அதுவும் அவர்களாலே விதிக்கப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

அத்தகைய மிகப் பெரிய தண்டனை அவர்கள் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை என்பதே..
*ஆம்..நண்பர்களே.*-
*பொய் நீண்ட காலம் வாழ்ந்ததும் இல்லை. உண்மை எந்த காலத்திலும் வீழ்ந்ததும் இல்லை.*

Friday, 28 August 2020

அறிவோம் தெளிவோம்

 பனிக்கரடி



பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம். இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான  வினோத  வழக்கம் ஒன்று உள்ளது.

பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வருவதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என அழைக்கிறோம்.

குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல் படுத்திருப்பது என்று நான்கு மாதங் களைக் கழித்து, இளைத்துப் போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்.

 பனிக் கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருக்கும்.     R.S.K.  curie-yasity

புதிய பார்வை

  புதிய பார்வை  


எந்த ஒரு 

செயலையும் 

தொடங்கலாமா

தொடரலாமா

என்பதில்...


சிந்தனை

நீளமாக

இருக்கலாம்.


ஆனால்

ஒரு முடிவு

எடுத்த பின்னர்...


முயன்று

முன்னேற

முயற்சிகள்

செய்பவர்கள்...


வெற்றி

பெறுகிறார்கள்.


அதில்

மகிழ்ச்சியும்

அடைகிறார்கள்.


'  பாதை

   வகுத்தபின்பு

   பயந்தென்ன

   லாபம்...


   அதில்

   பயணம்

   தொடங்கி விடு

   மறைந்திடும்

   பாவம் '


வாங்க...


நமக்கான

பாதையை

காணலாம்.


பயணத்தை

தொடங்கலாம்.


வெற்றியை

ருசிக்கலாம்.


வாழ்க்கையை

ரசிக்கலாம்.



Thursday, 27 August 2020


 அந்துவான் இலவாசியே..!


அந்துவான் இலவாசியே 

(Antoine-Laurent de Lavoisier)

  ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர்;


தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் இலவாசியே முக்கியமான ஒருவராவார்.


வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; கந்தகம் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்


ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வளிமங்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர். 


மனிதனும் விலங்குகளும் தாங்கள் மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியே கண்டறிந்து கூறினார். 


பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரான்சியப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.


லாவோசியர் பிறந்தநாள் இன்று

(26 ஆகஸ்ட், 1743)



 சுழற்சியலைவியைக் கண்டறிந்ததற்காக நோபல் பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ


லாரன்சு மறைந்த தினம் - ஆகஸ்ட் 27:


யுரேனிய ஐசோடோப்பை  பிரித்தெடுக்கும் முறையைக் கண்டறிந்ததற்காகவும், அறியப்படுகிறார்.


தெற்கு டகோடா பல்கலைக்கழகம் மற்றும் மினசோட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டதாரியான லாரன்ஸ் 1925 ஆம் ஆண்டு யேலில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். 


1928 ஆம் ஆண்டில் அவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். ஒருநாள் மாலையில் லாரன்ஸ் நூலகத்தில் அதிக வேக துகள்களை உற்பத்தி செய்யும் ஒரு முடுக்கியின் வரைபடத்தை கண்டார். 


அந்த வரைபடத்தால் கவரப்பட்டு ஆராயும் போது இரண்டு மின்காந்த புலங்களுக்கிடையே வட்டப்பாதையில் முடுக்கப்படும் கலன் பற்றிய யோசனை வந்தது. இந்த யோசனையின் வெளிப்பாடு தான் சைக்ளோட்ரானாக அமைந்திருந்தது.


லாரன்ஸ் பெரிய மற்றும் அதிக விலையுயர்ந்த சைக்ளோடான்களை தொடர்ச்சியாக உருவாக்கினார். 1936 ஆம் ஆண்டு அவரது கதிர்வீச்சு ஆய்வுக்கூடம் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ துறையாக ஆனது. லாரன்ஸ் அதன் இயக்குநராக இருந்தார். 


இயற்பியலுக்காக சைக்ளோட்ரோனைப் பயன்படுத்துவதோடு கூடுதலாக ரேடியோ ஐசோடோப்களின் மருத்துவ பயன்களை ஆய்வு செய்வதில் லாரன்ஸ் ஆர்வம் காட்டினார். இரண்டாம் உலகப் போரின் போது, லாரன்ஸ் தனது கதிர்வீச்சு ஆய்வகத்தில் மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கினார். 


கலூட்ரான் என்ற இயந்திரத்தை இதற்காக பயன்படுத்தினார். டென்னெஸியில் உள்ள ஒக் ரிட்ஜ் ல் மிகப் பெரிய மின்காந்தத்தை பயன்படுத்தி ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் ஆலையை உருவாக்கினார். இது Y-12 என அழைக்கப்பட்டது. 


திறனற்றதாக அது இருந்தாலும் வேலை செய்தது.

போருக்குப் பின்னர், லாரன்ஸ் அரசு ஆதரவோடு பெரிய அறிவியல் திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். அதிக அளவு செலவு செய்து மிகப்பெரிய இயந்திரங்களை உருவாக்குவதற்கு “பெரிய அறிவியல்” என்ற திட்டத்தை தொடங்கி பிரசாரம் செய்தார். 


கலிபோர்னியாவின் லிவர்மரில் அமைந்த இரண்டாம் அணு ஆயுத ஆய்வகத்திற்கு எட்வர்ட் டெல்லர் பிரச்சாரத்தை வலுவாக ஆதரித்தார். அவருடைய இறப்புக்குப் பிறகு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆட்சியாளர்கள் லாரன்ஸ் லிவர்மோர் நேஷனல் லேபாரட்டரி மற்றும் லோரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்திற்கு அவருடைய பெயரையே வைத்து அவரை கவுரவித்தது. 


1961 ஆம் ஆண்டில் பெர்க்லீயில் கண்டுபிடித்த 103 வது தனிமத்திற்கு லென்டூரியம் என்று பெயரிடப்பட்டது அவருக்கு கிடைத்த மிக்ப் பெரிய கெளரவம்.


Ernest Orlando Lawrence (August 8, 1901 – August 27, 1958) was a pioneering American nuclear scientist and winner of the Nobel Prize in Physics in 1939 for his invention of the cyclotron. He is known for his work on uranium-isotope separation for the Manhattan Project, as well as for founding the Lawrence Berkeley National Laboratory and the Lawrence Livermore National Laboratory.


A graduate of the University of South Dakota and University of Minnesota, Lawrence obtained a PhD in physics at Yale in 1925. In 1928, he was hired as an associate professor of physics at the University of California, becoming the youngest full professor there two years later. In its library one evening, Lawrence was intrigued by a diagram of an accelerator that produced high-energy particles. He contemplated how it could be made compact, and came up with an idea for a circular accelerating chamber between the poles of an electromagnet. The result was the first cyclotron.


Lawrence went on to build a series of ever larger and more expensive cyclotrons. His Radiation Laboratory became an official department of the University of California in 1936, with Lawrence as its director. In addition to the use of the cyclotron for physics, Lawrence also supported its use in research into medical uses of radioisotopes. During World War II, Lawrence developed electromagnetic isotope separation at the Radiation Laboratory. It used devices known as calutrons, a hybrid of the standard laboratory mass spectrometer and cyclotron. A huge electromagnetic separation plant was built at Oak Ridge, Tennessee, which came to be called Y-12. The process was inefficient, but it worked.


After the war, Lawrence campaigned extensively for government sponsorship of large scientific programs, and was a forceful advocate of "Big Science", with its requirements for big machines and big money. Lawrence strongly backed Edward Teller's campaign for a second nuclear weapons laboratory, which Lawrence located in Livermore, California. After his death, the Regents of the University of California renamed the Lawrence Livermore National Laboratory and Lawrence Berkeley National Laboratory after him. Chemical element number 103 was named lawrencium in his honor after its discovery at Berkeley in 1961.