Saturday, 18 June 2022

TN EMIS மின் பதிவேடு பயனர் கையேடு

TN EMIS மின் பதிவேடு பயன்படுத்தும் முறை பற்றிய பயனர் கையேடு வெளியீடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 👇👇 பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும் TN EMIS மின்பதிவேடுகள் PPT 👇👇 பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Wednesday, 15 June 2022

உங்களுக்கு தெரியுமா?

Do you know?* 1. The first Asian woman to become Miss World was Rita Faria. 2. The first Chief Justice of Supreme Court was Justice Harilal J. Kania. 3. The World's First Granite Temple is the Brihadeswara Temple at Tanjavur, Tamil Nadu. 4. The world's first university was established in Takshila in 700 BC. 5. The value of "Pi" was first calculated by the Indian Mathematician Budhayana. 6. Martial Arts were first created in India. 7. The first blood bank was established in 1917. 8. The first country to send human to moon was the USA. 9. First man to win Nobel Prize in Medicine was Emil Adolf Von Behring. 10. India's first Post office was opened in Kolkata. *உங்களுக்குத் தெரியுமா?* 1. உலக அழகி ஆன முதல் ஆசிய பெண்மணி ரீட்டா பரியா ஆவார். 2. உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி நீதியரசர் ஹரிலால். ஜே. கனியா ஆவார். 3. உலகின் முதல் கருங்கல்லால் ஆன கோயில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆகும். 4. உலகில் முதன் முதலில் பல்கலைக்கழகம் கிமு 700 இல் தக்சசீலாவில் நிறுவப்பட்டது. 5. முதன் முதலில் பை மதிப்பை இந்திய கணிதவியலாளர் போதாயனர் கணித்தார். 6. தற்காப்பு கலைகள் முதன் முதலில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. 7. முதன் முதலில் இரத்த வங்கி 1917 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 8. நிலவுக்கு மனிதனை அனுப்பிய முதல் நாடு அமெரிக்கா ஆகும். 9. முதன் முதலில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் ஆவார். 10. இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் கொல்கத்தாவில் திறக்கப்பட்டது. இன்றைய 10 சொற்கள்! *1. Federal (ஃபெடரல்) - கூட்டாட்சி.* கூட்டாட்சி அரசாங்கம் பல புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. The federal government promulgated many new rules. *2. Sovereignty (சாவெரைன்டி) - இறையான்மை.* இந்த தீவுகளின் இறையான்மை சர்ச்சையில் உள்ளது. The sovereignty of these islands is in dispute. *3. Legislature (லெஜிஸ்லேச்சர்) - சட்டமன்றப் பேரவை.* சட்டமன்றப் பேரவை, அணு கழிவுகளை தடைசெய்வதற்கு ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. The legislature passed a law to prohibit the nuclear waste. *4. Union territory (யூனியன் டெரிடரி) - ஒன்றியப் பகுதி.* ஒன்றியப் பகுதியானது ஒரு வகை நிர்வாக பிரிவாகும். A union territory is a type of administrative division. *5. Bicameralism (பைகேமரலிசம்) - ஈரவை முறைமை.* ஒரு சில நாடுகளில், ஈரவை முறைமை நடைமுறையில் உள்ளது. In some countries, bicameralism is in practice. *6. Cabinet (கேபினட்) - மந்திரி சபை.* மந்திரி சபையின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். All members of the cabinet are called for a meeting. *7. Democracy (டெமாக்ரசி) - ஜனநாயகம்.* ஜனநாயகத்தின் கொள்கை என்ன? What are the principles of democracy? *8. Monarchy (மோனார்ச்சி) - முடியாட்சி.* பல நாடுகளில் 20ஆம் நூற்றாண்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்டது. Monarchy in many countries is abolished in the 20th century. *9. Treasury (டிரஸ்சரி) - கருவூலம்.* கருவூலமானது அரசாங்கத்தின் ஒரு பகுதியாகும். The treasury is the part of the government. *10. Suffrage (சப்ரேஜ்) - வாக்குரிமை.* பெண்கள் தங்கள் வாக்குரிமைக்காக போராட வேண்டியிருந்தது. Women had to fight for their suffrage.

Friday, 3 June 2022

இன்றைய தினம்

உலக மிதிவண்டி நாள் - ஜூன் 3: சைக்கிள்…… நிச்சயம் இந்த வார்த்தையை கடக்காமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கியச் சாதனமாக இருந்த இது, இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாகத் தான் மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. காரணம் ஒன்று உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். இரண்டாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறைய சுவாசப் பிரச்சினைகள் உருவாகின்றன. சைக்கிளால் இந்த பாதிப்பைக் குறைக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய். சரி, ஏன் இப்போது சம்பந்தமில்லாமல் சைக்கிளைப் பற்றி இப்படி மானே, தேனே என பேசிக் கொண்டிருக்கிறோம் எனக் கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இன்று ’உலக சைக்கிள் தினம்’. சைக்கிள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களுக்குப் பிறகு நல்லதொரு வடிவம் பெற்றது. மக்கள் பெருமளவில் அதனை போக்குவரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane) என்பவர், 1910ம் இங்கிலாந்தில் ஹெர்குலிஸ் (Hercules) சைக்கிள் கம்பெனியைத் துவக்கினார். படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் சைக்கிளைக் கொண்டு சென்ற பெருமை ஹெர்குலிஸ் நிறுவனத்துக்கே சேரும்.

இன்றைய தினம்

முதன்முதலில் மின்சாரம் அதிக தூரம் எடுத்துச்செல்லப்பட்ட நாள் ஜுன் 3-1889 மின்சாரம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். மின்சாரத்துக்கு முந்தைய உலகம் ஒரு இருட்டு கோட்டை தான். எனினும், மின்சாரம் குறித்து ஒரு சிலர் உணர்ந்திருந்தனர். கிரேக்க நாட்டு புராணங்களில் மின்சார மீன் பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த மீனைத் தொட்டால் ஏற்படும் மின் அதிர்ச்சி பற்றி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே மனிதர்கள் பதிவு செய்துள்ளார்கள். மின்சாரம் பற்றிய விவாதமும் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால்,18,19-ம் நூற்றாண்டுகளில் தான் அதைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. 1831-ல் மைக்கேல் ஃபாரடே மின்சாரத்தை கண்டுபிடித்தார். அவரது விதிகளின் படி தான் இன்றும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கம்பியில் நிகழும் மின்னனுக்களின் ஓட்டத்தால் மின்சாரம் உருவாகிறது. மின்னனுக்களின் ஓட்டமே ( மின்சாரமே ) மின்னலுக்கும் காரணம். மின்சாரம் ஒரு மின்சுருளில் பாய்ந்தால் அந்தச் சுருள் மின்காந்த சக்தியைப் பெறுகிறது. அனல், அணு, நீர் என பல ஆதாரங்களிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தியான மின்சாரத்தைப் பல இடங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்வது தனி அறிவியல். மின்விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஒரு தெருவில் தெருவிளக்குகளை எரியவைத்தும் காட்டினார். பிறகு நீண்ட தூரம் மின்சாரம் எடுத்துச் செல்லப்பட்டது 1889-ம் ஆண்டு இதே நாளில் தான். அமெரிக்காவின் வில்லாமிட்டி அருவியில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓரிகன் என்னுமிடத்தில் போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியவைக்கப்பட்டன. இன்று நாடுகளுக்கு இடையேயும் கண்டங்களுக்கு இடையேயும் மின்சார விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கம்பியில்லாமலும் கைபேசிக்கு மின்னேற்றம் ( சார்ஜ் ) செய்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்புகள் ஒரு புதிய அறிவியல் யுகத்தை முன்னறிவிக்கின்றன.