Monday, 27 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல்


 அதிகாரம்: ஒழுக்கம் உடைமை


குறள் : 133

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.


பொருள்:

ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும் ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்


பழமொழி :

A wild goose never laid a tame egg


புலிக்குப் பிறந்தது பூனையாகாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.

பொது அறிவு :

1. வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

 பெரியார்.

 2. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன? 

 நரேந்திரர்.

English words & meanings :

balsam - a type of flowering plant. noun. balsam blooms in varieties of colour. காசித் தும்பை. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் சிறந்த புத்துணர்வைக் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். பிற்பகலில் வேலைக்கு இடையே சிறிது நேரம் தூங்குவது மூளை செயல்பாட்டுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நாம் ஒவ்வொருவருக்கும் மூளை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். உடலின் மிக முக்கிய உறுப்பு மூளை. அது உங்களின் செயல்களையும் அதனது எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, உங்களின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளை தான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முக்கியமான மூளையை புத்துணர்ச்சி பெற வைப்பது நமது தூக்கம் தான்.

நீதிக்கதை

டில்லி அரசரை வென்ற கதை

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவரை நேரில் காண விரும்பினார். அவரது திறமையையும் சோதிக்க விரும்பினார். எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார். 

கிருஷ்ண தேவராயரும் தெனாலிராமனை அழைத்து இதோ பார் ராமா! இங்கே உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் அந்த பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால், நானும் உனக்குப் பரிசு தருவேன். உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்குத் தண்டனை நிச்சயம் தெரிகிறதா! என்று எச்சரித்து அனுப்பினார். 


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றார். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காததைக் கண்டு திகைத்தார்... யாரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்பே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தார். இந்தச் சூழ்ச்சியை எப்படியும் முறியடிப்பேன், என முடிவு செய்து கொண்டார். மறுநாள் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். பாபர் நினைத்தார், ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே, அவனுக்கு சரியான தோல்வி என மகிழ்ந்தார். 


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்றார். பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்றார். 


நான் நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன். இதை அவர் மிகவும் சிரமப்பட்டுக் கூறினார். ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? என்று சிரித்தார். 


அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன். ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி. உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். அரசே!  எல்லோருக்கும் மரத்தில் பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே! பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. 


ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், அரசே! இந்த மாங்கனிகள் பழுத்தப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது என்றார். 


நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர். என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர். 


சற்று நிற்க முடியுமா அரசே? என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்துவிட்டு தெனாலிராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம், நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும். 


தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம் என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார். 


வெற்றியுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர். 


நீதி :

மன உறுதியுடன் எந்த காரியத்தைச் செய்தாலும் நிச்சயம் அது நமக்கு வெற்றியைத் தரும்.

இன்றைய செய்திகள்

27.02. 2023


* தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், டான்சீட் திட்டத்தின் மூலம் மானிய நிதி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* சரியும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்: பில்லூர் திட்டத்தில் கூடுதல் குடிநீர் எடுத்து விநியோகிக்கும் கோவை மாநகராட்சி.

* சென்னை: தமிழகத்தில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* இந்திய கல்வி முறையை வலுப்படுத்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.

* தென்சீன கடல் பகுதியில் சர்ச்சை நிலவும் சூழலில் இந்தோனேஷியா சென்றது இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் சிந்துகேசரி.

* உலக வங்கி தலைவராக இந்தியர்  அஜய் பங்கா   நியமனம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

* பிரான்சில் நடந்த நோய்சியல் ஓபன் சதுரங்க போட்டி: ஈரோடு கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன்.


* சர்வதேச ஜூனியர் பெண்கள் ஹாக்கி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஆட்டம் 'டிரா'.

* துபாய் ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா 'சாம்பியன்'.


Today's Headlines


* Government of Tamil Nadu has announced that the startups can apply for grant funds through Tanseed scheme.

* Collapsing Siruvani Dam Water Level: Coimbatore to take and distribute additional drinking water in Pillur project.

* Chennai: Chance of light rain in delta and south coastal districts of Tamil Nadu on 27th and 28th: Chennai Meteorological Department informs.

 * More allocation in budget to strengthen Indian education system - PM Narendra Modi proud.

 * India's submersible ship INS Sindhukesari went to Indonesia amid the ongoing dispute in the South China Sea.

 * Appointment of Indian Ajay Panka as President of World Bank - Announcement by US President Joe Biden.

* National Open Chess Tournament in France: Erode Grand Master Inian Champion.

 * International Junior Women's Hockey: India-South Africa makes Draw.

 * Dubai Open Tennis: Czech Republic's Krejcikova got 'Champion'



 



Covai women


Wednesday, 22 February 2023

மக்களின் புரட்சி 2

மக்களின் புரட்சி 1NMMS QUIZ

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 2

வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 1

ஐரோப்பிதர்களின் வருகை 1

சாலைப்பாதுகாப்பு

இயற்கை_இடர்கள்_-_பேரிடர்_மேலாண்மை_நடவடிக்கைகளைப்_புரிந்து_கொள்ளல்-1

நிலவரைபடத்தைக்கற்றறிதல்

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசிவகத் தத்துவங்கள்-1

தமிழ்நாட்டில் கலையும் கட்டிடக்கலையும் 2NMMS QUIZ

தமிழ்நாட்டில் கலையும் கட்டிடக்கலையும் 1 NMMS QUIZ

டெல்லி சுல்தானியம் 3 NMMS QUIZ

டெல்லி சுல்தானியம் 2NMMS QUIZ

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 3 NMMS QUIZ

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 2NMMS QUIZ

Tuesday, 21 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.02.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 



இயல்:இல்லறவியல் 



அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் எண் : 129

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.



பொருள்:

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது


பழமொழி :

A man is known by the company he keeps.

நண்பர்களை வைத்தே நம்மை எடை போடுவர்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.

பொது அறிவு :

1. நமது அரசு சின்னத்தில் உள்ள வாசகம் என்ன?

 வாய்மையே வெல்லும். 

 2. பிரமிடுகளின் பிறப்பிடம் எது? 

 எகிப்து.

English words & meanings :

fast ant - instant

ஆரோக்ய வாழ்வு :

பதப்படுத்தப்படாத உணவு

குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருப்பதால் அவற்றை உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

NMMS Q

கரோலஸ் லின்னேயஸின் வகைப்பாட்டு முறை எவ்வாறு அறியப்படுகிறது.


விடை :செயற்கை வகைப்பாட்டு முறை



பிப்ரவரி 21


பன்னாட்டுத் தாய்மொழி நாள்


 



பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1]

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 அன்று பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது

நீதிக்கதை

மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.


விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 


நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.

இன்றைய செய்திகள்

21.02.2023


* விற்பனை அதிகரிப்பால் தினமும் 60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் வசதி: உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆவின் திட்டம்.

* சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்ட 1470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


* சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவற்றால் சேதமடைந்த 1,860 கி.மீ. நீள சாலைகளை ரூ.1,171 கோடியில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

* நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்.

* மீண்டும் பணிக்கு வருகிறது போர்க் கப்பல் விக்ரமாதித்யா.

* உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் திடீர் பயணம்: ரஷ்யாவுக்கு பகிரங்க மிரட்டல்.

* எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

* டிஎன்பிஎல் வீரர்களுக்கான ஏலம்: மகாபலிபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும்.

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணி 'சாம்பியன்'.

* உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் வருண் தோமர் வெண்கல பதக்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளார்.


Today's Headlines


* 60 lakh liter milk processing facility per day due to increase in sales: Aain plans to upgrade infrastructure.

* 1470 illegal sewerage connections that discharge sewage into rainwater drains in Chennai Municipal Corporation areas have been disconnected.

 * 1,860 km damaged due to rainwater drainage project, underground sewerage project in Chennai city.  The municipal administration is taking steps to repair long roads at a cost of Rs.1,171 crore.

 * Tamil Nadu government filed a fresh petition in Supreme Court seeking exemption from NEET examination.

 * Warship Vikramaditya returns to duty.

 * US President Biden's surprise visit to Ukraine: a public threat to Russia.

 * South Korea says North Korea has conducted a missile test in the Sea of Japan amid protests.

* TNPL Players Auction to be held for 2 days at Mahabalipuram.

 * Ranji Cup Cricket: Saurashtra Team won the Championship.

*  India's Varun Tomar has added pride by winning the bronze medal in the Shooting World Cup.

 




Covai women 



Monday, 20 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் எண் : 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்.


பொருள்:

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்


பழமொழி :

A stitch in time saves nine.

விரிசலைச் சரி செய்து விட்டால் உடைவது தப்பும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.

பொது அறிவு :

1. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 

1961. 

2. தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர்? 

234 பேர்

English words & meanings :

ant that is important - significant

ஆரோக்ய வாழ்வு :

சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

NMMS Q

குளோரெல்லாவில் நிறைந்து காணப்படுவது__________ 



விடை: புரதம் & வைட்டமின்கள்



 






பிப்ரவரி 20


உலக நீதி நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.[1

நீதிக்கதை

தூக்கணாங்குருவி


ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,


குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 


வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.


பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

20.02.2023


* அப்துல் கலாம் திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர் தயாரித்த 150 செயற்கைக் கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

* ஐக்கிய அரபு அமீரகம் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனை துருக்கியில் பூமியதிர்ச்சி பாதிக்க பட்டவர்களுக்காக திறந்துளளது.

* தந்தைக்கு கல்லீரலின் ஒரு பாகத்தை தானம் செய்த 17 வயது மகள்..தடைக்கற்களை மீறி சரித்திரம் படைத்த சிறுமி..!

* சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை எடுத்து சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் 20 ரன்கள் எடுத்த விராட் கோலி இந்த புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Today's Headlines

 * 150 satellites made by students under the Abdul Kalam project were successfully launched yesterday.

 * UAE opens 200-bed hospital for earthquake victims in Turkey

 * A 17-year-old daughter who donated a part of her liver to her father..a girl who broke barriers and created hiAustrali

 * Virat Kohli has broken Sachin Tendulkar's record by scoring 25,000 runs in the fastest international matches.  Virat Kohli made this new record by scoring 20 runs in the 3rd Test against Australia

 * In the second Test against Australia, the Indian team won by 6 wickets.

 



Covai women 


Thursday, 16 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.02.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல்

 அதிகாரம்: அடக்கம் உடைமை..

குறள் : 126
ஒருமையுள் அமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

பொருள்:
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்

பழமொழி :

வீரன்
அடிபணிய மாட்டான் வீழ்ந்தாலும் அவனால் விழ முடியாது.

இரண்டொழுக்க பண்புகள்:

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனெனில் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாய் ஏற்று பாவிக்கிற மனிதன் முறையான கல்வியைப் பெற்றிருப்பான். 

பொது அறிவு :

1. மேட்டூர் அணை எந்த ஆண்டு கட்டப்பட்டது ?

 1934 ஆம் ஆண்டு . 2. ஆதி காவியம் என்றழைக்கப்படுவது எது? சிலப்பதிகாரம்.

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

சிறந்த எறும்பு - சிறந்த (சிறந்த)

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பழம்: வைட்டமின் ஈ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளமான தன்மையையும் ஈரப்பதத்தையும் பாதுகாக்க உதவுகிறது. வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடம் விட்டு கழுவலாம்.

தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.

என்எம்எம்எஸ் கே

வலை பின்னல் நரம்பமைவு கொண்ட தாவர இலைகள்
விதை: இரு விதையிலை தாவரங்கள்

பிப்ரவரி 16





தாதாசாகெப் பால்கே  ( தாதாசாகேப் பால்கே ) என்று அழைக்கப்படும்  துண்டிராஜ் கோவிந்த் பால்கே  ( துண்டிராஜ் கோவிந்த் பால்கே ஏப்ரல் 30 1870  -  பிப்ரவரி 16 1944 இந்திய திரைப்படத்துறையின்  தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படி தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்தில் இருந்து மொத்தம் 18 பேர் நடிகர்களாக நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

அவரது நினைவாக  தாதாசாகெப் பால்கே விருது  நிறுவப்பட்டது

நீதிக்கதை

மனித மனத்தின் ஆசை

இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.

அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.

குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.

ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.

இன்றைய செய்திகள்

16.02.2023

* தமிழகத்தில் சென்னை, நெல்லை உட்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.

* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க பிப்ரவரி 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

* சீனாவை ஒட்டிய எல்லை பாதுகாப்புக்கு கூடுதலாக 7 பட்டாலியன்களை பணியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

* நாடு முழுவதும் 2 லட்சம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்களை வாங்க அர்ஜென்டினா, எகிப்து ஆர்வம்.

* நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியது. இதனை அரசு நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

* 2026-ம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்ஸிகள் பயன்பாட்டுக்கு வரும் - ஐக்கிய அரபு அமீரக பிரதமர் அறிவிப்பு.

* ஐசிசி தரவரிசை: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முதல் இடம் பிடித்த இந்திய அணி.

* ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி - முதல் சுற்றில் கஜகஸ்தானை வீழ்த்தியது இந்தியா.

* சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி.

Today's Headlines

* NIA officers raided many places in Tamil Nadu including Chennai and Nellai.

 * Extension of deadline till February 28 to link Aadhaar number with electricity connection number.

 * Union Cabinet has approved deployment of 7 additional battalions for border security along the China.

 * Union Cabinet approves setting up of 2 lakh Primary Agriculture Credit Unions across the country.

 * Argentina and Egypt are interested in buying Tejas fighter jets from India.

 * A powerful earthquake had hit New Zealand.  The earthquake measured 6.1 on the Richter scale.  This has been confirmed by the Government Earthquake Research Center.

 * Flying taxis to be in use in Dubai by 2026 - UAE PM announces.

 * ICC Rankings:  Indian team ranked top in all forms of cricket.

 * Asian Badminton Mixed Teams Championship - India beats Kazakhstan in first round

 * Chennai Open Challenger Tennis: Indian player Sumit Nagal won in the first round.
 
 

Covai women


 

Thursday, 9 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் எண்: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.


பொருள்:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்


பழமொழி :

Measure is treasure. 

அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை.



இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

காலம் மிகவும் நம்மை கவனிக்கத்தக்கது.இன்பமும் துன்பமும் முன் காலத்தின் பயனின்று கிடைப்பதுவே._____ ஸ்ரீ ராமர் 

பொது அறிவு :

1. கல் உப்பின் வேதியல் பெயர் என்ன ?

 சோடியம் குளோரைடு. 

 2. காற்றில் உள்ள ஈரப்பதத்தை அளவிடும் கருவி எது ? 

 ஹைக்ரோ மீட்டர்

English words & meanings :

ant that feels bad for his mistakes- Repentant

ஆரோக்ய வாழ்வு :

தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.



 






NMMS Q

தாவரவியல் பூங்காக்களில் தாவரங்களை வகைப்படுத்த எம் முறை பயன்படுத்தப்படுகிறது



விடை :மரபு வகைப்பாட்டு முறை

நீதிக்கதை

இரண்டு அணில்கள்


இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.


அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.


இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.


அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.


அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

இன்றைய செய்திகள்

09.02.2023


* “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* ஆவின் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

* செயல்பாடுகள், சிகிச்சை அளிப்பதில் தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதலிடம்: சேலம் மருத்துவமனைக்கு 2-ம் இடம், கோவைக்கு 3-ம் இடம்.


* சென்னை, கோவை, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 63 மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பு: மத்திய அரசு தகவல்.

* கடந்த 6 ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் இந்திய-அமெரிக்க மாணவி நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து 2-வது முறையாக இடம் பிடித்துள்ளார்.

* எஸ்-400 ஏவுகணையின் 3-வதுதொகுப்பு, இந்தியாவுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர்டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

*தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் தொடங்கியது.

* ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் தேர்வு.


Today's Headlines


* Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that the higher education enrollment of women has increased by 27 percent compared to last year due to the new women's program PUDHUMAI PENTHITTAM

 * Tamil Nadu Government has decided to fill the vacant posts of Avin through TNPSC.

 * Chennai Rajiv Gandhi Government General Hospital ranks first in Tamil Nadu in terms of operations and treatment: 2nd to Salem Hospital and 3rd to Coimbatore.

* Organizat of 63 Software Technology Parks across the country including Chennai, Coimbatore, and Puducherry said by Central Govt.

 * According to the central government, 30 lakh Indian students have gone abroad for higher education in the last 6 years.

 * Indian-American student Natasha Periyanayagam has been ranked in the list of smartest students in the world for the 2nd time.

 * Russia's ambassador to India, Denis Alibov, has said that the 3rd batch of S-400 missiles will be delivered to India soon.

 * National Junior Table Tennis Tournament started in Chennai.

* Indian player Subman Gill was shortlisted for *The Best Player of the Month* award for January.

 




Covai women



Wednesday, 8 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.


பொருள்:

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை


பழமொழி :

அடக்கம் இல்லாத அழகு இழிவானது.

பணிவில்லாத அழகு பாராட்டுப் பெறாது.



இரண்டொழுக்க பண்புகள்:

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் அனைத்தையும் சாதிக்கலாம்.

பொது அறிவு :

1. சென்னையின் முதல் பெண் மேயர் யார் ? 

தாரா செரியன்.

 2. முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கலம் எது? 

ஆரியபட்ட.

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

ஒரு பெருமை எறும்பு - ஆணவம்

ஆரோக்ய வாழ்வு :

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

என்எம்எம்எஸ் கே

சர்வேஷ் புகைப்படத்தில் உள்ள நபரை காணவில்லை, " இவள் என் தந்தையின் மனைவியின் ஒரே மகனின் மகள்" எனக் கூறினார் எனில் சர்வேஷிற்கு புகைப்படத்தில் உள்ளவர் என்ன உறவு? 



விடை: மகள்



பிப்ரவரி 08


சாகிர் உசேன் அவர்களின் பிறந்த நாள்


 



சாகிர் உசேன் (ஜாகிர் ஹுசைன், 8 பெப்ரவரி 1897 - 3 மே 1969) இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.



கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954 இல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கி சிறப்பித்தன.

நீதிக்கதை

அதிர்ஷ்டக்கதவு எப்போது திறக்கும்?


தன் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவருக்கு வெயிலால் நாக்கு வந்தது. வழியில் ஒரு கிணற்றில் இளைஞன். ஒருவன் கிணற்றில் தண்ணீர் இரைத்து பாத்தியிலுள்ள செடிகளுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான். முதியவர் அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தார்.


தாகம் தீர்த்த மகிழ்ச்சியில் முதியவர் தம்பி, எங்கும் வறட்சி நிலவுகிறதே, ஆனால் உன் தோட்டத்து கிணற்றில் மட்டும் தண்ணீர் நன்றாக ஊறுகிறது. அதிர்ஷ்டம் உன் பக்கம் இருப்பதால் தான் இது சாத்தியமாக இருக்கிறது என்றார். ஐயா, உழைப்பின் தன்மையை அதிர்ஷ்டம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள். 


அத்தனையும் என் உழைப்பு. அவ்வப்போது என் கிணற்றை தூர்வாரி பராமரிப்பு செய்ததால் இந்த வறட்சியிலும் என் கிணறு வற்றவில்லை. விடாமுயற்சியுடன் பாடுபட்டதால் தான் இந்த கட்டாந்தரை கூட பூஞ்சோலையாக மாறியுள்ளது. உழைப்பு என்னும் விலை கொடுத்தால் மட்டுமே அதிர்ஷ்டக்கதவு திறக்கும் என்றான். முதியவரும் இளைஞனை தட்டிக்கொடுத்து புறப்பட்டார்.

[07/02, 6:06 pm] அம்மு: தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

இன்றைய செய்திகள்

08.02.2023


* கரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத முடியாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

* நோய்களை துல்லியமாக கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம்.

* வசதிகள் இல்லை என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

* இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தகுதித் தேர்வு தொடக்கம்: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11 வரை நடக்கிறது.


* தொற்று நோய்களை எதிர்த்து போராட எஸ்சிஓ அமைப்பு நாடுகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு.


* இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

* துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்து எச்சரித்த டச்சு ஆராய்ச்சியாளர்.

* பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது: அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் 24 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

* இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி: சென்னையில் 15, 18-ந் தேதிகளில் நடக்கிறது.


இன்றைய தலைப்புச் செய்திகள்


*கொரோனா தொற்று காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முடியாத தேர்வர்களுக்கு வயது வரம்பை ஒரே முறை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


 * நோய்களை துல்லியமாக கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அப்பல்லோ மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகள் இல்லை எனக் கூறி டாக்டர்கள் பணி செய்ய மறுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு.

 * கான்ஸ்டபிள் இரண்டாம் நிலைக்கான உடல் தகுதித் தகுதித் தேர்வு தொடக்கம்: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும்.

 * தொற்று நோய்களை எதிர்த்துப் போராட எஸ்சிஓ நாடுகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு.

 * இந்திய கடற்படையின் இலகுரக போர் விமானமான தேஜாஸ், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

 * துருக்கி, சிரியா பூகம்பம்: 3 நாட்களுக்கு முன்பே கணித்து எச்சரித்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்.

 *பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா அளித்து வரும் உதவி பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல இந்தியா உதவி செய்து வருவதாகவும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃப்ராட் சுனெல் தெரிவித்தார்.

 *Sports competitions for Chief Minister's Cup have started across Tamil Nadu: Competitions will be held till the 24th for everyone to participate.

* India-Nepal women's international football match: It will be held in Chennai on the 15th and 18th.

 

 



Covai women 


Tuesday, 7 February 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.02.2023

  திருக்குறள் :

அதிகாரம்:ஊழ்


திருக்குறள்:374


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.


விளக்கம்:


உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.


பழமொழி :

Beauty comes not by forcing. 

அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 

2. என் பேச்சு வெள்ளி தட்டில் வைக்கப் பட்ட பொன் பழம் போல மதிப்பிற்குரியதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன் 

பொன்மொழி :

மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.

பொது அறிவு :

1. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது? 

 மூன்று ஆண்டுகள் . 

 2.பாரதியார் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர் என்ன?

 ஷெல்லிதாசன்.

English words & meanings :

A very little ant - infant (குழந்தை)

ஆரோக்ய வாழ்வு :

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.


          தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

NMMS Q

சீமா சச்சினின் சகோதரி. சச்சினும் ராகுலும் சகோதரர்கள் மற்றும் ராகுல் கமலாவின் மகன் ஆவார். கமலாவிற்கு சீமாவிடம் உள்ள தொடர்பு என்ன? 



 விடை: மகள் 



பிப்ரவரி 07


தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்


 




தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

குட்டி குரங்கின் செயல்


மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர். குட்டிக் குரங்கு புஜ்ஜி. மலைமீது பல குரங்குகள் கூட்டங்கூட்டமாக வசித்து வந்தன. அந்தக் கூட்டத்தில் புஜ்ஜி என்ற சிறிய குரங்கும் இருந்தது. அது மிகவும் புத்திசாலி. சரியாக பள்ளிக்கூட உணவு நேரத்தில் மலையை விட்டுக் கீழே இறங்கி வரும். 


மாணவர்கள் தருகின்ற உணவைச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். தாகம் தீர்த்துக் கொள்ள மாணவர்கள் குடிக்கும் குடிநீர்க் குழாயில், மாணவர்களைப் போலவே குழாயைத் திறந்து குடித்துவிட்டு, மீண்டும் குழாயைச் சரியாக மூடிவிட்டுச் செல்லும். இது அன்றாடம் நடக்கின்ற நிகழ்வு. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கம் போல புஜ்ஜி, மாணவர்கள் இல்லாததைக் கண்டு ஏமாந்து போகும். வெறும் நீரை மட்டும் குடித்துவிட்டு மலையேறும்.


முதலில் குரங்குக் குட்டியைக் கண்டு மாணவர்கள் அச்சம் கொண்டனர். நாளடைவில் அதன்மீது அன்பு செலுத்த ஆரம்பித்துவிட்டனர். பின்னர், அதற்குத் தாங்கள் உண்ணும் உணவிலிருந்து கொஞ்சம் கொடுத்து மகிழ்ந்தனர். ஒருநாள் வழக்கம்போல, உணவு இடைவேளைக்குச் சரியாக வந்த புஜ்ஜி, உணவுக்காகக் காத்திருந்தது. சில மாணவர்கள் மரத்தடியில் உண்டு கொண்டிருந்தனர். அவர்களின் அருகே குரங்குக் குட்டி வந்ததும் தங்களின் உணவில் கொஞ்சம் கொடுத்தனர்.


அதனை உண்டு முடித்தது. சிந்திய பருக்கைகளை, குரங்குக் குட்டியோடு, அணில் பிள்ளையும் உண்டு மகிழ்ந்தது. புஜ்ஜிக்குத் தாகம் எடுத்தது. அது குழாய் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தது. அங்கே பல மாணவர்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் உள்ளே புகுந்த புஜ்ஜி திடுக்கிட்டது. குடிநீர்க் குழாய் உடைந்து, ஆறுபோல பெருக்கெடுத்து சீறிப் பாய்ந்தது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தபடி நின்றிருந்தனர்.


புஜ்ஜி அங்கும் இங்கும் சென்று எதையோ தேடிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கையில் அகப்பட்ட துணி, கயிறு போன்றவற்றைக் கொண்டு வந்தது. கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை விலக்கிவிட்டு, குழாயிலிருந்து பாய்ந்து கொண்டிருந்த நீரை ஒரு கையால் அடைத்து மறுகையால் துணியைச் சுற்ற ஆரம்பித்தது. பலமுறை தோல்வியே கிடைத்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தது புஜ்ஜி. இதனைக் கண்ட சில மாணவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தனர். குட்டிக் குரங்கோடு சேர்ந்து குழாயைத் துணியால் அடைத்து, கயிற்றால் கட்டினர். தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டது குட்டிக் குரங்கு புஜ்ஜி.

இன்றைய செய்திகள்

07.02.2023


* சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


* ஹெக்டேருக்கு ரூ.20,000: பருவம் தவறிய கனமழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகுப்பு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

* எஸ்எஸ்எல்வி-டி2 சிறியரக ராக்கெட்டை பிப்ரவரி 10-ல் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

* சீனா உள்ளிட்ட வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

* துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: தோண்டத் தோண்ட சடலங்கள்; உயிரிழப்பு 1500-ஐ தாண்டியது.

* சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரருக்கு வெண்கலப்பதக்கம்.

* பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'.

Today's Headlines

* The President has ordered the appointment of five additional judges to the Madras High Court.

 * Rs 20,000 per hectare: Relief package for farmers affected by unseasonal heavy rains - Chief Minister Stalin orders.

*  The Department of Primary Education has directed to send recommendations regarding opening and upgradation of new primary schools.

 * ISRO plans to launch SSLV-T2 small rocket on February 10.

*  Ban on 138 gambling apps of foreign countries including China: Central government action.

 * Earthquake hits Turkey, Syria: Bodies unearthed;  The death toll exceeded 1,500.

* International Wrestling Championships: Bronze medal for Indian athlete.

 * Women's South Asian Football: India-Bangladesh made Draw. 

 




Covai women