Tuesday, 25 June 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.06.2024

திருக்குறள்: 


பால்: பொருட்பால்

அதிகாரம்:கல்லாமை

குறள் எண்:401

அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய

நூல் இன்றிக் கோட்டி கொளல்.


பொருள்: அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல்,

சூதாடும் அரங்கு

இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.


பழமொழி :

Humility often gains more than pride.

 அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

பொன்மொழி :

"உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில் இருக்கிறது!"-----மகாத்மா காந்தி

பொது அறிவு : 

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  



விடை: வேளாண்மை     


2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

விடை: ஆந்திரப்பிரதேசம்

English words & meanings :

 circumspect-மிகுந்த கவனத்துடன், 

cautions-எச்சரிக்கை

வேளாண்மையும் வாழ்வும் : 

தேசிய பொருளாதாரத்திற்கு விவசாயம் மிகவும் முக்கியமானது. முதலாவதாக, விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியின் காரணமாக இது ஒரு நாட்டிற்கு அந்நியச் செலாவணியாக செயல்படுகிறது


நீதிக்கதை

 எதற்கும் காலம் உண்டு

 குரங்கு ஒன்று மாமரத்தில் பறித்த பழத்தை சுவைத்தபடி தன்னுடைய இருப்பிடம் வந்தது.

 பழத்தின் கொட்டையை கீழே போட்ட போது யோசனை ஒன்று தோன்றியது.

 தன்னுடைய இருப்பிடத்தில் கொட்டையை மண்ணில் விதைத்து  மரமாக வளரச் செய்தால் மாம்பழங்கள் வந்த பின்பு இஷ்டத்திற்கு சாப்பிடலாமே என்று எண்ணியது. 

 பின்பு மாங்கொட்டையை மண்ணில்  விதைத்து தண்ணீர் விட்டது. குரங்கின் மனம் மாம்பழத்தை பறித்து உண்பதிலேயே இருந்ததே தவிர மரத்தை வளர்ப்பதில் இல்லை.

 தினமும் காலையில் வந்து மண்ணை பறித்து விதையை எடுத்து முளைவிட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு திரும்பவும் மண்ணில் விதைத்து விட்டு தண்ணீர் ஊற்றும்.

 தினமும் இப்படி எடுப்பதும் விதைப்பதுமாக இருந்தால்  விதை எப்படி முளைக்கும்?

 விதை முளை விடவே இல்லை

 ஒரு நாள் காலையில் எடுத்து பார்த்த குரங்கிற்கு கோபம் வந்து அந்த மாங்கொட்டையை காட்டிற்குள் வீசி எறிந்தது.

குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும் அதனுடைய அவசரம் நியாயமானது அல்ல .

 எந்த ஒரு செயலிலும் வெற்றி வேண்டுமானால், முயற்சியுடன் அதற்குரிய காலமும் அவசியம்

இன்றைய செய்திகள்

25.06.2024


* செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழி இலவசப் பயிற்சி: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு.

* நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு.

* மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்: தாமதமானால் அரை நாள் விடுப்பு என எச்சரிக்கை.

* 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

* எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவன  சிப்பினை ஹேக் செய்யலாம்- மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் தகவல்.

* T-20:வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.


* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்கா, உருகுவே அணிகள் வெற்றி.


Today's Headlines


* Free German and Japanese Language Training for Nurses: Tamil Nadu Govt special arrangement.

 * Continued decline in water level: Reduction of water release in Mettur dam to 1,000 cubic feet.

 * Central Government employees must reach office by 9.15 am. It will be considered as half day leave if they are late .

 * First session of 18th Lok Sabha begins yesterday: New MPs sworn in

 * Elon Musk's Neuralink company chip can be hacked - information by the first person with a chip implanted in the brain.

 * T-20: South African captain Aiden Markram says he is happy to advance to the semi-finals after winning against West Indies.

 * Copa America Football Series: USA, Uruguay team won the match.

 



Covai women 


Thursday, 13 June 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

Wednesday, June 12, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.06.2024

திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம் :கல்வி

குறள் எண்:394

உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

பொருள் : மகிழும் படியாகக் கூடிப் பழகி ('இனி இவரை எப்போது காண்போம்'என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

பழமொழி :

Strike the iron while it is hot. 

 காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :

வெற்றி என்பது குறிக்கோள் அன்று;
அது ஒரு பயணமேயாகும்.
பயணம் தொடர்ந்து கொண்டே
இருக்க வேண்டும்.

- இங்கர்சால்

பொது அறிவு : 

1.வடகிழக்கு சபையின் 71வது முழு அமர்வு எங்கு நடைபெற்றது?

விடை: ஷில்லாங்

2. சமீபத்தில் செய்திகளில் பார்த்த பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா, எதனுடன் தொடர்புடையது?

விடை: கூரை சோலார் பேனல்கள்

English words & meanings :

 Complacency - மனநிறைவடைகிற

 Gratification-மனநிறைவு அளி

வேளாண்மையும் வாழ்வும்: 

தொடக்க கால விவசாயம் 11,500 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. விவசாயிகள் அப்போதே பயிரிடத் தொடங்கி உள்ளனர். 

நீதிக்கதை

 துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..


பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் _சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._ உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..
ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..?? என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..

ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..

நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்..

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்..

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்..

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன..

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி..

தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..?? என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?_

இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..

இளைஞன் கேட்டான்.. சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன..?

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,

பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்..
இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?

ஆகாது சாமி..என்றான்..

துறவி  கூறினார்.. உன் கேள்விக்கு இதான் பதில்..

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..

இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,

 அன்று வரை மனிதனை நன்னெறி படுத்த வேண்டும் என்றார்,

இன்றைய செய்திகள்

13.06.2024

* உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணிப்பு!

* தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் வெள்ள பெருக்கின் காரணமாக குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* குவைத் தீ விபத்து தமிழர்கள் உட்பட 49 இந்தியர்கள் உயிரிழப்பு.

* விசேஷமான அடாப்டர் ஒன்றை ஐஐடி-ஜோத்பூர் உருவாக்கியுள்ளது. இந்த அடாப்டர் மூலம் யூசர்கள் தங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை சோலார் பவர் மூலம் சார்ஜ் ஏற்றி கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

*  டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்  25-வது போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

* World Bank predicts that India will remain the world's fastest growing economy for the next 3 years!.

* Tourists have been banned from bathing in Palaruvi, located on the Tamil Nadu-Kerala border, due to floods.

* 40 Indians including Tamil people were ​​killed in Kuwait fire accident.

* A  special adapter has been developed by IIT-Jodhpur.  With this adapter, users are said to be able to charge their electric vehicles with solar power.

* In the  25th match of the ongoing T20 World Cup cricket, India won by 7 wickets against USA.
 



Covai women 


Wednesday, 12 June 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

Tuesday, June 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2024

 


  




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்:கல்வி

குறள் எண்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்: கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

பழமொழி :

Don't measure the worth of a person by their size.

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

1. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?

விடை: வீனஸ் (வெள்ளி)

2. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை

English words & meanings :

 Persistent-விடாபிடியான

Contentment-மனநிறைவு

வேளாண்மையும் வாழ்வும்: 

நிலையான இடத்தில் மனிதன் வாழ ஆரம்பித்த பின் மனித நாகரிகத்தின் எழுச்சியில் வேளாண்மை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஜூன் - 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நீதிக்கதை

 ஆனந்தாவும் புத்தரும் ஒரு வழியில் நடந்து சென்றார்கள். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த

கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்..

 புத்தர் தன் மேல்துண்டால்அதை 

துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார்.

 அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை

பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள்

பலவீனமானவை .இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்..

 அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்."இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள்

பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். 

அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"என்று. 

அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. " எண்ணியது போல் நடக்கநான் என்ன உன் அடிமையா.. ?" என்றார்...


 *_நீதி_* 

நாம் நினைப்பவைகளே நடக்க வேண்டும் என்பது பேராசை தான் .

இன்றைய செய்திகள்

12.06.2024

* ஜூன் 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: 4 நாள் முன்பே கூட்டத் தொடர் தொடக்கம்.

* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.

* நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா நிறுவனம் இல்லை: தமிழக பொறியாளருக்கு எலன் மஸ்க் புகழாரம்.

* ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்.

Today's Headlines

* Tamil Nadu Legislative Assembly meets on June 20: Sessions begin 4 days earlier.

* Education loan through co-operatives increased from Rs 1 lakh to Rs 5 lakh: Tamil Nadu government declared.

 * The Supreme Court has said that there is no bar to start counseling for undergraduate medical education based on NEET results.

 * If it is not  Ashok Ellusamy, there would be no Tesla: Elon Musk praises the Tamil Nadu engineer.

 * Indian tennis player Sumit Nagal qualified for Olympics.



Covai ICT