Sunday, 30 July 2023

Sat slip test-1, an interactive worksheet by MOHAN S
liveworksheets.com

Saturday, 29 July 2023

6, 7, 8 ஆம் வகுப்புக்கான அறிவியல் வழிகாட்டி மற்றும் ஆய்வுப் பொருட்கள்

 Nmms 6வது அறிவியல் கால 1 - ஆய்வுப் பொருள், கற்றல் முடிவுகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்ய முக்கிய தமிழ் மீடியம் | DEO (தொடக்க) – செய்யார் கல்வி மாவட்டம் – பதிவிறக்கம்

6வது அறிவியல் முழு வழிகாட்டி (காலம் 1,2,3) – தமிழ் மீடியம் | பதிவிறக்க Tamil 

Nmms 7வது அறிவியல் கால 1 - ஆய்வுப் பொருள், கற்றல் முடிவுகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்ய முக்கிய தமிழ் மீடியம் | DEO (தொடக்க) – செய்யார் கல்வி மாவட்டம் – பதிவிறக்கம்

7வது அறிவியல் முழு வழிகாட்டி (காலம் 1,2,3) - தமிழ் மீடியம் | பதிவிறக்க Tamil 

Nmms 8வது அறிவியல் கால 1 – படிப்புப் பொருள், கற்றல் முடிவுகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்ய முக்கிய தமிழ் மீடியம் | DEO (தொடக்க) – செய்யார் கல்வி மாவட்டம் – பதிவிறக்கம்

8வது அறிவியல் முழு வழிகாட்டி- தமிழ் மீடியம் | பதிவிறக்க Tamil


Friday, 28 July 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.


விளக்கம்:


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் கருவூலமாகும்.


பழமொழி :

All things come to those who wait


பொறுத்தவர் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்

பொது அறிவு :

1. முதல் பரம் வீர் சக்ரா யாருக்கு வழங்கப்பட்டது?

விடை: மேஜர் சோம்நாத் சர்மா


2. உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட(14 நாடுகள்)நாடு எது?

விடை: சீனா



English words & meanings :

 vague - uncertain, unclear meaning. தெளிவற்ற.waver - moving here and there without strength. நிலை இன்றி தள்ளாடு

ஆரோக்ய வாழ்வு :

சீரகம் -நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.


ஜூலை 28


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்


உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது

நீதிக்கதை

பல முறை யோசிக்கனும்

நரி ஒன்று தாகத்தால்  தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உடனே வாளி 'விர்'ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது. 'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால் தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?' நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது. “அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது. "நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது."நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய்.! ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.07. 2023


*டொயோட்டாவின் எர்டிகா வெர்ஷன் -  விரைவில் இந்தியா வரும் லோ பட்ஜெட் 7 சீட்டர்.

*பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்- முதல்வர்.

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு 3000 பேர் குவிந்தனர்.

*சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.


*ஜெர்மனி ஹாக்கி தொடர்: இந்திய ஆண்கள் ஜூனியர் அணி அறிவிப்பு.

*பாகிஸ்தானை சேர்ந்த சவுத் ஷக்கிள் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திராத புதிய சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines


*Toyota's Ertiga version,low budget 7-seater coming to India soon.

 * Awarded and cash prizes are given to 3 farmers who excelled in traditional rice production by TN Chief Minister.

 * 3000 students were gathered for medical counseling for the government school students.

 *The price of crude oil continues to decrease in the international market.

 *Germany Hockey Series: Indian Men's Junior Team was Announced

 *Pakistan's South Shackle scored a double century in the first Test and 57 runs in the second Test, setting a new record in the 146-year history of cricket.


Covai women


Thursday, 27 July 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.23

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்.

விளக்கம்:

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

பழமொழி :

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


இரண்டொழுக்க பண்புகள்:

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 

பொது அறிவு :

1. ஹரியானா சூறாவளி' என்று அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் யார்?

விடை: கபில் தேவ்


2. மேன் புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?

விடை: அருந்ததி ராய்

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

fe·lic·i·ta·tion - மற்ற நபர்களின் சாதனைக்கான மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல். மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

சீரகம் -வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வு ஏற்படுகிறது. 


ஜூலை 27


அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்

ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (APJ அப்துல் கலாம், அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், அவர்களும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியிலும் படித்தார்.


கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 2002 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணி) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

நீதிக்கதை 


ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை தொடுவது என்பது தான் இருவரின் பந்தயம்

பறவை ஏறும்பை பார்த்து ஏளனமாக சிரித்துவிட்டு மலையை நோக்கி பறந்தது. வெகு சீக்கிரத்திலேயே பறவை மலையின் உச்சியை தொட்டது.

மலை உச்சிக்கு சென்ற பறவை மேலிருந்து கீழே இருக்கும் எறும்பை தேடியது. அப்போது எறும்பு மலை அடிவாரத்தில் இருந்து பாதி தூரத்தை கூட தொடவில்லை.

ஏறும்பை பார்த்து பறவை கூறியது எனக்கு முதலிலேயே தெரியும் வெற்றி எனக்குதான் என்று.

பறவையிடம் ஒரு சிறு எறும்பு போட்டியிடலாமா? ஏறும்பை பார்த்து கேலி செய்து பறவை நகைத்தது.

வெகு நாட்கள் கழித்து எறும்பின் விடமுற்ச்சியால் ஒரு நாள் எறும்பு அந்த மலையின் உச்சியை சென்றடைந்தது. அப்போது அந்த பக்கமாக மலையை கடந்து சென்ற பறவை மலை உச்சியில் இருக்கும் எறும்பை ஆச்சரியமாக பார்த்தது.

அப்போது பறவையை பார்த்து எறும்பு கூறியது, “வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது. சிலருக்கு வெற்றி சீக்கிரமாகவே கிடைத்துவிடும் சிலருக்கோ தாமதமாகவும் கிடைக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தாலே போதும், வெற்றி ஒரு நாள் எல்லோருக்கும் நிச்சயம்”, என்றது எறும்பு.

இன்றைய செய்திகள்

27.07. 2023


*லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு.

*விடிய விடிய பலத்த மழை - டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.

*சோழன் விரைவு ரயில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நேரம் மாற்றம்.


*கூட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தனித்தீவாக மாறிய உடுமலை வனப்பகுதி.

*ஜப்பான் ஓபன் பேட்மிட்டன்: முதல் சுற்றில் வெற்றி பெற்ற லட்சயாசென்.

*4 ஓவர்...8 ரன்...7 விக்கெட் ....சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மலேசிய வீரர் சையார்சுல் இசாட்.


இன்றைய தலைப்புச் செய்திகள்


*லடாக்கின் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது.

 *Heavy rain at dawn - Orange alert for Delhi: Flooding on roads.

 *Cholan Express train timing change from 14th August.

 * Udumalai forest area which has become a separate island due to increase in water flow in the river.

 *Japan Open Badminton: Lakshyasen wins first round.

 *4 overs...8 runs...7 wickets...Malaysian player Sayarsul Izad has set a new record in international T20 cricket.

 



கோவை பெண்




Tuesday, 25 July 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.23

 

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :223

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள.


விளக்கம்:


தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.



பழமொழி :

All are not saints that go to church


சாம்பல் பூசியவரெல்லாம் சாமியார் அல்ல.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் 

பொது அறிவு :

1. இந்திய தேசிய சின்னத்தின் பொன்மொழி என்ன?

விடை: சத்யமேவ ஜெயதே( வாய்மையே வெல்லும்)


2. இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நிதி அமைச்சர் Anan?

விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


English words & meanings :

 shuttle-a form of transport that travels regularly between two places. NOUN. travel regularly between places. VERB. சிறிது தூரம் சென்று திரும்பும் ரயில் வண்டி. பெயர்ச் சொல். இரு இடங்களுக்கு இடையே ஒழுங்காக பிரயாணம் செய்வது. வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

சீரகம் - இதை வாழைப் பழத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சீரகத்தையும் உப்பையும் மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிற்று வலி சரியாகும்.


ஜூலை 25


ஜிம் கார்பெட் 




புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். குறிப்பிட்ட விலங்கு அடிக்கடி மனிதர்களைக் கொன்று வருகிறது என்பது உறுதிப்பட்டாலொழிய அவ்விலங்கைக் கொல்ல மாட்டார். இந்தியாவின் முதல் தேசியப் பூங்காவான ஹெய்லி தேசியப் பூங்காவையும் ஏற்படுத்துவதில் கார்பெட் பங்காற்றினார். 1957ல் ஹெய்லி தேசியப் பூங்கா கார்பெட் தேசியப் பூங்கா என பெயர் மாற்றப்பெற்றது.

நீதிக்கதை

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார்.

ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது.

தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது.

நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.

“நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங்.

அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம்.

என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன்.

அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

இப்படியாக அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

*விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான்.

லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த

*சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.*

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில்.

அவரது பிள்ளை?

*சர் வின்ஸ்டன் சர்ச்சில்!*

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.

இன்றைய செய்திகள்

25.07. 2023


*ட்விட்டரின் புதிய லோகோ 'X' - எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

*சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- மக்கள் மகிழ்ச்சி.   தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

*சென்னையில் ஜி-20 கூட்டம் தொடங்கியது பிரதமரின் முதன்மை செயலாளர் பங்கேற்பு.

*அடுத்த மாதம் சென்னை வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.

*அப்ரார் அகமது அசத்தல் பந்துவீச்சு - இலங்கை முதல் இன்னிங்சில் 166 ரன்னுக்கு சுAnnounce

*அதிவேகமாக 100 ரன்:  இந்திய அணி புதிய சாதனை. ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்கள் அடித்தார். இஷான் கிஷன் 34 பந்தில் 52 விளாசல்.


Today's Headlines


*Twitter's New Logo 'X' - Elon Musk Officially Announced

 *Heavy rains in Chennai and surrounding areas - people happy.  Chance of heavy rain in 5 districts of Tamil Nadu - Meteorological Center

 * The G-20 meeting started in Chennai with the participation of the Prime Minister's Principal Secretary.

 *President Draupadi Murmu is coming to Chennai next month.

 *Fantastic bowling by Abrar Ahmed - Sri Lanka were bowled out for 166 in the first innings.

 *Fastest 100 runs: New record for Indian team.  Rohit Sharma scored 57 runs off 44 balls.  Ishan Kishan scored 52 off 34 balls.

 



Covai women 


Saturday, 22 July 2023

C7T1 நிலத்தோற்றங்கள்

 

C7T1 நிலத்தோற்றங்கள்

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

Thursday, 20 July 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.07.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :220

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

விளக்கம்:

இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

பழமொழி :

Add fuel to fire

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல

இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள். --வில்லியம் ஷேக்ஸ்பியர்

பொது அறிவு :

1. முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) எது?

விடை: ஐஐடி காரக்பூர்


2. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) தலைமையகம் எங்குள்ளது?

விடை: மும்பை


English words & meanings :

 maid - female servent பணிப்பெண்; newscast - a news report செய்தி அறிக்கை

ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,ஒவ்வொரு மனிதனுக்கும் சாப்பிட்ட மூன்று மணி நேரத்திற்குள் மீண்டும் பசியுணர்வு ஏற்படுவது உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல அறிகுறியாகும். ஒரு சிலருக்கு சில காரணங்களால் பசியின்மை ஏற்பட்டு, சரியாக சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. கருணை கிழங்கு பசியின்மை பிரச்சனையை சுலபத்தில் தீர்க்கும்

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக அதனுடைய எல்லையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அப்போது அதே காட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது கொஞ்சம் பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி பேச ஆரம்பிக்கிறது. அது என்ன எப்போது இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்ததாம்.

அப்போது அங்கு இருந்த ஒரு நரி சொல்லுது. சிங்கம் அதிக பலம் வாய்ந்த ஒரு மிருகம். அதனால தான் சிங்கம் எப்போதும் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்று கூறியது.

அதனை கேட்ட புலி என்ன சிங்கம் பலம் வாய்ந்ததா? ஹ.. சிங்கத்தை விட எடையும், உயரமும், சண்டையிடும் திறனும் என்னிடம் இரண்டு மடங்கு உள்ளது. ஆகவே நான் சிங்கத்தை விட பலம் வாய்ந்தவன் என்று கூறியது.புலி கூறியதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற விலங்குகளும் தங்களின் பலத்தை கூறியது. இதையெல்லாம் கேட்ட குரங்கு சொன்னது எத்தனை பேர் சிங்கத்தை விட பலமானவர்களாக இருந்தாலும். இந்த காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருப்பதற்கு  முக்கிய காரணம். அது எந்த விலங்குகளை கண்டும் பயந்ததே கிடையாது.  அதனால் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது என்று குரங்கு கூறியது.

இருப்பினும் விலங்குகள் அனைத்தும் தனது பலத்தை பயன்படுத்த திட்டமிட்டபடி நரி சிங்கத்திடம் சென்று சிங்க ராஜா காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் உங்களை பார்க்க சேர்ந்து வந்துள்ளன ஏன் என்று தெரியவில்லை வாங்க என்று அழைத்தது.இதனை அறிந்த சிங்கம் நரியை நம்பி விலங்குகளை பார்க்க வருகிறது. அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை எட்டி உதைத்தது, என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள்ளாகவே சிங்கம் சுருண்டு தூரமாக போய் விழுகிறது. அங்கிருந்த காண்டாமிருகம் தனது கொம்பினால் சிங்கத்தை குத்தி தூரமாக வீசுகிறது.  இவ்வாறு ஒவ்வொரு மிருகங்களும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை தாக்கியது.பின் எழுந்து சிங்கம்  ஒவ்வொரு மிருகங்களையும் தாக்க ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையும் வென்றபிறகு ச தனது குகைக்குள் சென்றது.

மறுநாள் காலை விடிந்தது. சிங்கத்துடன் சண்டை போட்ட அனைத்து மிருங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன . சண்டை போட்டதில் சிங்கத்திற்கு அதிக இரத்த காயம் ஏற்பட்டதால் சிங்கம் குகையிலேயே இருந்திருக்கும்  என்று விலங்குகள்  நினைத்தது.அப்பொழுது அந்த சிங்கம்  அதே கம்பீர நடையுடன் எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த  குகையில் இருந்து வெளியே வந்து   அனைத்து விலங்குகளையும் பார்த்து சிங்கம் கர்ஜித்தது. சிங்கம் கர்ஜித்ததை கண்ட அனைத்து மிருகங்களும் பயந்து ஓட்டம் பிடித்தது. இந்த சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருப்பதற்கு முக்கிய காரணம் எதுவென்றால் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற ஒரு நம்பிக்கை மற்றும்  பயம் அப்படிங்கிற ஒரு விஷயம் அதனிடம் இல்லை என்பதால் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருக்கிறது என்று அனைத்து விலங்குகளும் புரிந்து கொள்கின்றன.

இன்றைய செய்திகள்

20.07. 2023

*இரயில்வே பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக மனோஜ் யாதவா நியமனம்.

*டெல்லி யமுனை நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு கீழே குறைந்தது.

*இலங்கை அதிபர் இன்று இந்தியா வருகை.

*சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் கலைஞர் மகளிர் உதவித் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் வீடு வீடாக சென்று விநியோகம்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன். 

*சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது 500 வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

*ஐசிசி தரவரிசை பட்டியல்...முதல் 10 இடத்தில் 7 இந்திய வீரர்கள்... மூன்று பிரிவிலும் இந்தியா ஆதிக்கம்.

Today's Headlines

*Manoj Yadava appointed as the new Director General of Railway Protection Force.

 *Delhi Yamuna river water level drops below danger level.

 *  President of Sri Lanka visits India today

 * Today onwards door to door distribution of token and application for kalaingar women's grant in areas under Chennai Corporation - report by Corporation Commissioner Radhakrishnan.

 *Virat Kohli is now about to play his 500th match in international cricket.

 *ICC ranking list...7 Indian players in top 10...India dominates in all three divisions.

 



Covai women


Wednesday, 19 July 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :219

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

பழமொழி :

ஒரு இளம் கன்றுக்கு பயம் தெரியாது


இளங்கன்று பயமறியாது.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்று அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

ஒரு புத்திசாலி பல சாதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்தவர், ஐயுங்கூட மேலும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். --எட் பார்க்கர்

பொது அறிவு :

1. சர்தார் சரோவர் அணை எந்த நதியில் கட்டப்பட்டுள்ளது?

விடை: நர்மதா நதி


2. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடருக்கு இடையே ஓடும் ஆறுகள் எது?

விடை: நர்மதை நதி


ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 கிவி - சிறகற்ற ஒருவகை பறவை; lad - a boy சிறுவன்

ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை சிலருக்கு ஏற்படுகிறது. கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமாக உள்ளது.

நீதிக்கதை

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட சிறிது நேரம் கழித்து அந்த அலறல் சத்தம் அடங்கிவிட்டது.ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள் விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது,

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. மேலும் இவர்கள் மண்ணை போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.வாழ்க்கை பல இடங்களில் இப்படி தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்டி பார்க்கிறது. ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கொண்டு, அதை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்காக கொள்ளவேண்டும்

இன்றைய செய்திகள்

19.07. 2023


*வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிடம் திறப்பு. பிரதமர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு.

*மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

*வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்த முடிவு.

*இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிற்பங்களை ஒப்படைத்தது அமெரிக்கா.

*இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வம். நான்காவது போட்டி நாளை தொடக்கம்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு.

இன்றைய தலைப்புச் செய்திகள்


*வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா. காணொலி காட்சி மூலம் பிரதமர் திறந்து வைத்தார்.

 * மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க, 4.5 கோடி ரூபாய் ஒதுக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

 *மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 *வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இரு மடங்காக உயர்த்த முடிவு.

 *இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 15 பழங்கால சிற்பங்களை அமெரிக்கா ஒப்படைத்தது.

 *இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது. நான்காவது போட்டி நாளை தொடங்குகிறது.

 *ஆசிய விளையாட்டு: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

 



கோவை பெண்கள்