Friday, 25 June 2021

இன்றைய தினம்

 உலக நிறமி இழத்தல் தினம் -  ஜூன் 25: 


உடல் தோலின் நிறமி இழந்தால் வெண் புள்ளிகள் தோன்றுகின்றன.  வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 


தோல் நிறமி இழத்தல் என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த குறைபாட்டை சரியாக்கும் மருந்துகள் இதுவரை இல்லை என்பது தான் சோகம்.

Thursday, 24 June 2021

இன்றைய தினம்

 காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் பிறந்த நாள்ஜூன்-24 


விக்டர் ஃப்ரான்ஜ் ஹெஸ் ஆஸ்திரியாவில் ஸ்டைரியா எனும் இடத்தில் 1883-ஆம் ஆண்டு ஜூன்-24 அன்று பிறந்தார். க்ராஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று 1910-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். 1944-ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார். 


1911 – 1913 ஆண்டுகளில் விக்டர், அயனைசிங் கதிர்வீச்சு(Ionizing radiation) பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். இக்கதிர்வீச்சு பூமியிலிருந்து செல்லச்செல்ல அதன் கதிர்வீச்சின் அளவு குறையும் என்று அறிவியலாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் விக்டர், பாராசூட்டின் உதவியோடு கடல் மட்டத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உயரம் வரை பகல் மற்றும் இரவு என்று இருவேளைகளிலும் சென்று எலக்ட்ரோஸ்கோப் கருவியினைக் கொண்டு அயனைசிங் கதிர்வீச்சின் அளவினை பரிசோதனை செய்தார். 


பூமியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை அதன் கதிர் வீச்சு குறைந்திருந்தது. ஆனால் அதன்பிறகு உயரம் செல்லச் செல்ல அயனைசிங் கதிர்வீச்சின் அளவு கூடிக்கொண்டே சென்று ஐந்து கிலோ மீட்டர் உயரத்தில் கதிர்வீச்சின் அளவு இரண்டு மடங்கானது. இக்கண்டுபிடிப்பின் மூலமாக அயனைசிங் கதிர்வீச்சானது பூமியின் வெளிப்புற வளிமண்டலத்தை ஊடுருவும் தன்மை கொண்டது என்பதை உணர்த்தியது. 1925-ஆம் ஆண்டு ராபர்ட் ஆன்ட்ரிவ் மிலிக்கன் என்ற விஞ்ஞானி, விக்டரின் அயனைசிங் கதிர்வீச்சு சோதனையை உறுதி செய்து அக்கதிர்வீச்சுக்கு ”காஸ்மிக் கதிர்வீச்சு” என்று பெயர் சூட்டினார். 


இக்கண்டுபிடிப்பிற்காக விக்டர் மற்றும் அவருடன் இணைந்து பணிசெய்த ராபர்ட்டுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு 1936- ஆம் ஆண்டு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. விக்டரின் காஸ்மிக் கதிர்வீச்சு அணு இயற்பியலில் பல கண்டுபிடிப்புகள் உருவாகக் காரணமாக இருந்தது.

Tuesday, 22 June 2021

இன்றைய தினம்


 உலகப் புகழ் பெற்ற ஜெர்மானியக் கணித அறிஞர் ஹெர்மான் மின்கோவ்ஸ்கி (Hermann Minkowski) பிறந்த தினம் - ஜூன் 22:


ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த போலந்தில் அலெக்சோட்டாஸ் என்ற சிற்றூரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார் (1864). தந்தை, வர்த்தகர். 7 வயதுவரை வீட்டிலேயே கல்வி கற்றார். 1872-ல் குடும்பம் ஜெர்மனியில் குடியேறியது. கல்வியைத் தொடர்வதற்காக பிராடஸ்டென்டாக மதம் மாறினார்.


15-வது வயதில் ஜெர்மனியில் உள்ள அல்பெர்டினா கோனிக்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், கணிதத்தின் இருபடிவ வடிவில் (quadratic forms) ஆர்வம் கொண்டு அதுகுறித்து ஆராய்ந்தார். இங்கு படித்துக் கொண்டிருந்தபோதே 18 வயதில் பிரெஞ்ச் அறிவியல் அகாடமியின் கணிதவியல் பரிசை வென்றவர்.


அப்போது ஒருங்கிணைந்த குணகங்களுடன் (integral coefficients) n மாறிலிகள் உள்ள இருபடி வடிவங்கள் குறித்து 140 பக்கங்கள் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்த கட்டுரையை எழுதினார். இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்பு முடிந்தபின் 1885-ல் முனைவர் பட்டம் பெற்றார்.


மின்னியக்க விசையியல் குறித்து அறிந்து கொள்வதற்காக அதற்கான கருத்தரங்குகளில் பங்கேற்றார். முதலில் பான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் துணைப் பேராசிரியராக உயர்ந்தார்.


கணித இயற்பியலின் ஒரு பகுதியான கச்சிதமான திரவத்தில் (perfect liquid) மூழ்கிய திடப்பொருள்களின் இயக்கம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். கோட்டிங்கன், கோனிக்ஸ்பெர்க் மற்றும் சூரிச் பல்கலைக்கழகங்களில் பொறியியல் மற்றும் கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.


சூரிச்சில் உள்ள பாலிடெக்னிக்கில் ஆசிரியராக இருந்த சமயத்தில் இவரது மாணவர்களில் ஐன்ஸ்டீன், கான்ஸ்டன்டின் கார்தோடோரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருபடிவ வடிவங்களைக் குறித்து ஆராய்ந்தார். எண் கோட்பாட்டுச் சிக்கல்களை வடிவியல் முறைகளைக் கொண்டு தீர்வு காணும் எண்களின் வடிவியல் என்ற கோட்பாட்டைக் கண்டறிந்து வெளியிட்டார்.


கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் 1902-ம் ஆண்டு தலைமைப் பொறுப்பேற்ற இவர், இறுதிவரை அங்கு பணியாற்றினார். கணித எண்களின் வடிவியல் முறையை நிரூபணம் செய்து மேம்படுத்தினார். மேலும் எண் கோட்பாடு, கணித இயற்பியல், சார்பியல் கோட்பாடு உள்ளிட்டவைகளுக்கு கணிதத் தீர்க்க வடிவியல் முறைகளைப் பயன்படுத்தினார்.


இவரது எண்களின் வடிவியல் கோட்பாடுகள், செயல்பாட்டுப் பகுப்பாய்விலும் டைபோண்டின் தோராயத்திலும் (approximation) பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வடிவியல் கோட்பாடு மூலம் எண் கோட்பாட்டுக் கணிதங்களுக்குத் தீர்வுகளை வழங்கினார். தனது ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் அவ்வப்போது கட்டுரைகளாக எழுதி வெளியிட்டு வந்தார்.


இவை அனைத்தும் இவரது நண்பர்களால் தொகுக்கப்பட்டு ‘கலெக்டட் பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. ‘ஸ்பேஸ் அன்ட் டைம்’ என்ற இவரது நூல் மிக முக்கியமான படைப்பாகப் புகழ்பெற்றது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுக்கான கணித அடித்தளத்தை அமைத்தவர்.


நாற்பரிமாண மின்கோவ்ஸ்கி வெளி - நேரம் (Minkowski space) கோட்பாட்டைக் கண்டறிந்தவர். நவீன கணித மேம்பாட்டுக்கு இவரது ஆய்வுகள் பெரிதும் உதவின. குறுகிய வாழ்நாளில் கணித இயற்பியல், சார்பியல் கோட்பாடு உள்ளிட்ட பல்வேறு களங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை வழங்கிய கணிதமேதை ஹெர்மான் மின்கோவ்ஸ்கி 1909-ம் ஆண்டு மறைந்தார்.

அறிவோம் தெளிவொம்

 🍑 *ஆயிரத்தை ஏன் K என்கிறோம்?*


இணையதள பயன்பாட்டிலும் தற்போது பொதுவெளி பயன்பாட்டிலும் கூட 2000 என்பது 2K என எழுதும் பழக்கம் வந்துவிட்டது. 

மில்லியனுக்கு M என்றும் பில்லியனுக்கு B என்றும் எழுதும் நாம் 

ஆயிரத்துக்கு T (Thousand) என எழுதாமல் ஏன் K என எழுதுகிறோம் ?

ஆங்கில நியூமரல்ஸ் எனும் எண்ணியல் முறைகளில் கிரேக்க முறைகளை தான் சில இடங்களில் உபயோகிக்கின்றார்கள்

உதாரணமாக I, II ... IV, V,VI,....IX,X,XI.... இப்படி... அதே முறையை பின்பற்றி 'Chilioi' (Kilioi by Pronunciation)  என்ற ஆயிரத்துக்கான சொல்லை உச்சரிப்பு நெறிப்படி கிலியோய் என உபயோகிக்கின்றனர். 

அதை தான் இரண்டாயிரம் என எழுதுவது விடவும் 2000 என எண்ணியில் விதிப்படி எழுதுவதை விடவும் 2k என சிம்பிளாக எழுதுகிறார்கள். 

T எழுத்தை உபயோகித்தால் அது பதின்மத்தை (Tens)  குறிக்க தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் அந்த எழுத்து உபயோகிக்கவில்லை.

கிரேக்கத்தில் Kilometres, Kilogram என்ற அந்த கிலோ  என்பது அளவைக்கு குறியிட உதவும் ஒரு Prefix (முன்னீடு/முன் ஒட்டு)  ஆகும்.

Sunday, 20 June 2021

இன்றைய தினம்


20-06-2021

*உயிர் வேதியியலின் தந்தை* என்று அழைக்கப்படுபவரும், வைட்டமீன்கள் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற  அறிஞர்  *ப்ரெட்ரிக் கௌலேண்ட்  ஹாப்கின்ஸ்* (Frederic Gowland Hopkins)  பிறந்த தினம் - சூன் 20:


இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் (1861) பிறந்தார். *சிட்டி ஆஃப் லண்டன்*  பள்ளியில் பயின்றார். அங்கு படிக்கப் பிடிக்காமல், தனியார் பள்ளியில் பயின்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கைஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அறிவியல், மருத்துவம் பயின்றார்.


அதே கல்லூரியில் உடலியல், நச்சுத்தன்மையியல் துறை ஆசிரியராகப் பணியாற்றினார். பட்டாம்பூச்சி இறக்கைகளின் நிறமியல் தன்மைகள் குறித்து ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டார். உடல் அமிலங்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.


*கேம்பிரிட்ஜ் சோதனைக்கூட நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, உடலிய லின் ரசாயன அம்சங்கள் குறித்து ஆராய 1898-ல் அங்கு சென்றார். அங்கு உயிரி வேதியியல் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்*.


ட்ரினிட்டி கல்லூரியில் ஃபெல்லோவாகவும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உயிரி வேதியியல் என்ற புதிய துறை அப்போதுதான் உருவானது. இதனால், அத்துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமை பெற்றார்.


செல்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். சிக்கலான வளர்சிதை மாற்ற ஆக்சிஜனேற்றம், குறைப்பு செயல்பாடுகள், எதிர்வினைகள் மூலம் செல்கள் எவ்வாறு ஆற்றலைப் பெறுகின்றன என்பதை ஆராய்ந்தார்.


லாக்டிக் அமிலம் - தசைச் சுருக்கம் இடையே உள்ள தொடர்பு குறித்து, விஞ்ஞானி வால்டர் மார்லே ஃப்ளெட்சருடன் இணைந்து ஆராய்ந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் தசைகளில் லாக்டிக் அமிலம் சேர்ந்துவிடுகிறது என்பதை இவர்கள் எடுத்துக் கூறியது உயிரி வேதியியல் துறையின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.


விலங்குகள் உயிர் வாழவும், வளர்ச்சிக்கும் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, கனிமங்கள், தண்ணீர் மட்டுமல்லாது, வேறு சில முக்கியப் பொருட்களும் அவசியம் எனக் கண்டறிந்தார். அவற்றுக்கு *‘துணைபுரியும் உணவுக் காரணிகள்’* எனப் பெயரிட் டார். இவையே பின்னர் ‘வைட்டமின்கள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.


வைட்டமின்களின் ஊட்டச்சத்து மதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்தார். அது, முதல் உலகப்போர் நடந்த நேரம். அப்போது உணவுப் பொருள் பற்றாக்குறை நிலவியதாலும், உணவுப் பொருட்களை பங்கிட்டுக் கொடுக்கும் நிலை இருந்ததாலும், இவரது இந்த ஆராய்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.


எந்த உணவுப்பொருளில் எவ்வளவு சத்து உள்ளது என்பதைக் கண்டறிந்து கூறினார். கோ-என்சைம் சேர்மங்களைக் கண்டறிந்து, அவற்றின் குணங்களை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். வைட்டமின் கண்டுபிடிப்புக்காக கிறிஸ்டியன் எய்க்மேனுடன் இணைந்து 1929-ல் இவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இதுதவிர, ராயல் சொசைட்டியின் ராயல் மெடல், காப்ளே மெடல், சர் பட்டம், இங்கிலாந்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட பல பதக்கங்கள், கவுரவங்களைப் பெற்றார். மனிதகுலத்துக்கு மிகவும் பயனுள்ள ஆராய்ச்சிகளை இறுதிவரை மேற்கொண்ட ஃப்ரெட்ரிக் கவுலேண்ட் ஹாப்கின்ஸ் 86-வது வயதில் (1947) மறைந்தார்.



Saturday, 19 June 2021

அறிவோம் தெளிவோம்


 #எரிமலை 

எரிமலைகள் எப்படி உண்டாகின்றன?

மலை உச்சியில் ஒரு பெரிய துவாரம் வழியாக நெருப்பும் புகையும் சாம்பலும் தொடர்ந்து வெளி வந்தால் அதை எரிமலை என்கிறோம்.

பூமிக்கு அடியில் பொங்கி எழும் ஒரு வகை எழுச்சியினால் இது போன்ற எரிமலைகள் உண்டாகின்றன. எரிமலை ஒரு முறை நெருப்பைக் கக்கத் தொடங்கினால் அதிலிருந்து 'லாவா" எனப்படும் உருகிய தீக்குழம்பு தொடர்ந்து வெளிவரும். எரிமலைகள் எவ்வாறு உருகுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

நிலத்தின் அடியில் கீழே செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது. 30 கி.மீ.க்கு அடியில் உள்ள வெப்பம் பாறைகளைக் கூட உருக்கும் வல்லமை வாய்ந்தது. நிலத்தின் அடியில் உள்ள பாறைகள் உருகும் போது அவை விரிவடைகின்றன.

திரவ உருவமான இப்பாறைகளை 'மாக்னா" என்கிறார்கள். மாக்னாவிலிருந்து உண்டாகும் அளவிடுவதற்கு அரிய வெப்பம் நிலத்தைப் பீரிட்டு வெளிவருவதற்காக அலை மோதுகிறது.

பூமியில் எப்பகுதியாவது வலிமை குன்றியிருந்தால் அப்பகுதி பிளந்து அதிலிருந்து வெப்ப வாயுக்களும் திரவ வடிவான பாறைகளும் பாறைத் துண்டுகளும் வெளிக் கிளம்புகின்றன. இதைத் தான் எரிமலை வெடிக்கிறது என்கிறோம்.

உள்ளுக்குள்ளே உருகிய பொருட்கள் அனைத்தும் வெளிவரும் வரையில் தீயும் புகையும் தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கின்றன.

இந்த லாவா வெளிவருவது நின்று விட்டால் அதனை 'இறந்த எரிமலை" என்கிறார்கள். தற்போது உலகில் 450 எரிமலைகள் உள்ளன. மிக உயரமான எரிமலை அர்ஜென்டினா நாட்டில் உள்ளது.

இன்றைய தினம்


19-06-2021


*நவீன கால்குலேட்டரின் தந்தை பிளெய்ஸ் பாஸ்கல்* (Blaise Pascal)  பிறந்த தினம் - சூன் 19: 



கணிதவியலாளர், இயற்பியலாளர் மாற்றும் தத்துவஞானி என்று உலகில் தலை சிறந்தவராக போற்றப் படுபவருமான பிளெய்ஸ் பாஸ்கல் பிரான்ஸின் கிளர்மான்ட் நகரில் (1623) பிறந்தார். 


3 வயதில் தாயை இழந்தார். வரி வசூல் அதிகாரியான தந்தை, கணிதத்திலும் அறிவியலிலும் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்ட தன் மகனுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தந்தார். பாரம்பரிய மொழிகளையும் கற்பித்தார். 


அறிவுக்கூர்மை மிக்க சிறுவன் பாஸ்கலுக்கு கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம். வடிவியல் 

குறித்த நூல்களைப் படித்து தானாகவே வடிவியலைக் கற்றுத் தேர்ந்தார். முக்கோணங்கள் குறித்து 

பல விதிகளை உருவாக்கினார். பல கணித நூல்களை வாங்கிக் கொடுத்து மகனை உற்சாகப்படுத்தினார் தந்தை. 


பிற்காலத்தில் பிரான்ஸ் அறிவியல் அகாடமியாக மாறிய ஃபாதர் மெர்ஸீன் விவாதக் கழகத்தில் 14-வது வயதில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தன் கட்டுரைகளைத் தொகுத்து *‘தி ஜெனரேஷன் ஆஃப் கோனிக் செக்சன்ஸ்’* என்ற தனது முதல் ஆராய்ச்சி நூலை 1639-ல் வெளியிட்டார். 


வடிவியலில் பெரிய சாதனையான கூம்புவெட்டுகள் பற்றி 16-வது வயதில் நீண்ட கட்டுரை எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம் ‘பாஸ்கல் தேற்றம்’ என்று தற்போதும் 

பயன்படுத்தப் படுகிறது. 


1642-ல் தந்தைக்கு அலுவலக கணக்கு போடுவதில் உதவுவதற்காக, 3 ஆண்டுகள் கடுமையாக முயன்று கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கி அவருக்கு பரிசாகத் தந்தார். முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். இதற்காக அவர் 50 வேறுபட்ட மாதிரிகளை உருவாக்கி, இறுதியில் வெற்றி கண்டார். அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 20 கூட்டல் இயந்திரங்களை உருவாக்கினார். 


திடப் பொருட்களின் கன அளவு, வட்ட வடிவப் பொருட்களின் பண்புகள், அவற்றின் பயன்பாடுகள் பற்றி கட்டுரைகள் எழுதினார். நவீன பொருளாதாரம், சமூக அறிவியல் வளர்ச்சியை கணிக்க நிகழ்தகவு கோட்பாட்டை உருவாக்கினார். 


எண்கணித முக்கோணங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். நீரின் குணங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். நீரின் அழுத்தம் மற்றும் வெற்றிடப் பண்புகளை நிரூபித்தார். 1653-ல் நீரின் அழுத்த விதியைக் கண்டறிந்து, வெளியிட்டார். இது ‘#பாஸ்கல்_விதி’ எனப்படுகிறது. 


வாயு மற்றும் திரவவியலைக் குறிக்கும் பாய்ம இயக்கவியலில் அழுத்தம் பற்றிய இவரது விதி உலகப் புகழ்பெற்றது. இவரது இந்த விதியை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான கருவிகள் உருவாக்கப்பட்டன. இவர் கண்டறிந்த கணித சாதனங்கள் வணிக ரீதியாகவும் தயாரித்து விற்கப்பட்டன. *அழுத்தம்* *பாஸ்கல்*’ என்ற அலகால் குறிக்கப்படுகிறது. 


ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவர். 1654-ல் ஏற்பட்ட ஆன்மிக அனுபவத்தை தொடர்ந்து விஞ்ஞானம், கணித ஆய்வுகளை விட்டு, தத்துவம், மத விஷயங்களில் கவனம் செலுத்தினார். அதுபற்றியும் பல கட்டுரைகள் எழுதினார். 


சிறு வயதுமுதலே அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர், நீண்ட காலமாகவே நோய் வாய்ப்பட்டிருந்தார். எதையும் விடா முயற்சியுடன் செய்து முடிக்கும் உறுதியும் நெஞ்சுரமும் படைத்த பிளைஸ் பாஸ்கல் 39-வது வயதில் (1662) மறைந்தார்.



Wednesday, 16 June 2021

இன்றைய தினம்

 நோபல் தனித்துப் பெற்ற முதல் பெண்மணி பார்பரா மெக்லின்டாக் பிறந்த தினம் - ஜூன் 16:

 

1923ல் பார்பரா செல்லியல் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து பயின்று முதுகலைப்பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். 1931ல் தேசிய ஆராய்ச்சிக்கழகத்தின் கல்வி உதவித்தொகை பெற்று இரண்டு ஆண்டுகள் கார்னல் பல்கலைகழகம், மிசோரி பல்கலைகழகம், கலிபோர்னியா தொழில் நுட்ப மையம் ஆகியவற்றில் மரபியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1936ல் மிசோரி பல்கலைகழகத்தின் மரபியல் துறையின் உறுப்பினரானார். ஆனால் பெண் என்ற பாகுபாடு காரணமாக அவருக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளா; 1941ல் அங்கிருந்து விலகினார்.


தொடர்ந்து மரபியல் ஆய்வில் ஈடுபட்ட பார்பரா 1951ல் தனது மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். 'குரோமொசோம்களில் உள்ள மரபணுக்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றிக் கொள்கின்றன' என்றும் கண்டுபிடித்துக் கூறினார். இதைக் 'குதிக்கும் மரபணுக்கள்' என்று வர்ணித்தார். அதோடு மரபணுக்கள் தங்களைத் தாங்களே பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளும் என்பதையும் நிருபித்தார். அவரிடம் பாகுபாடு காட்டிய பல்வேறு ஆய்வாளர்களும் அவரைத் தேடி வந்து பாராட்டினர். மரபியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றழைக்கப்பட்டது.


அமெரிக்க மரபியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய அறிவியல் அமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்ட மூன்றாவது பெண்மணி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.


மரபியலில் அவர் கண்டுபிடிப்புகளுக்கு 1983ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.




வியப்பூட்டும் அறிவியல்

(விண்வெளி பெண் வாலண்டினா 16-6-63)


விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் பெண்ணான வாலண்டினா தெரஸ்கோவாவை வோஸ்டாக்-6 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். 2 நாட்கள் 22 மணிநேரம், 50 நிமிடங்கள் விண்வெளியிலிருந்த  வாலண்டினா,48 முறை புவியைச் சுற்றி வந்தார். அதுவரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் மேற்கொண்டிருந்த மொத்த விண்வெளிப் பயண நேரத்தைவிட இது அதிகம். இன்று வரை தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஒரே பெண் வாலண்டினாதான். விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ராணுவம் சாராத முதல் மனிதருமான வாலண்டினா. விண்வெளி வீரராவதற்காக, விமானப் படையில் கவுரவ உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். நெசவுத் தொழிற்சாலை ஊழியராக இருந்து, விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பித்து,400 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாலண்டினா.

   இப்பயணத்தின் போது வாலண்டினா எடுத்த படங்களே வளிமண்டலத்தில் உள்ள தூசுப்படல அடுக்குகளை அடையாளம் காண பின்னாளில் உதவின. ஏற்கனவே விண்வெளிப் பயணம் மேற்கொண்டவரான ஆண்ட்ரியான் நிக்கோலாயேவ் என்பவரை 1963-ல்  வாலண்டினா திருமணம் செய்து கொண்டார்.1964-ல் இவர்களுக்குப் பிறந்த குழந்தையே, தாய்- தந்தை இருவரையும் விண்வெளி வீரர்களாகக்கொண்ட முதல் குழந்தையாகும். வாலண்டினா ரஷ்ய பாராளுமன்ற (டூமா) உறுப்பினராகவுமிருந்துள்ளார்.

   விண்வெளிக்கு முதல் பெண்ணை மட்டுமன்றி, முதல் மனிதரை அனுப்பியதும் சோவியத் ஒன்றியம் தான். 1957-ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1ஐ அனுப்பியதுடன், விண்ணிலிருந்து முதலில் சமிக்ஞை பெற்ற நாடாகவும் சோவியத் மாறியது. ஸ்புட்னிக்-2ல் லைக்கா என்ற நாயை அனுப்பி, விண்வெளிக்கு உயிரினத்தை அனுப்பிய முதல் நாடாகியது. சோவியத்தின் லூனா-2தான் நிலவினை அடைந்த முதல் விண்கலம். லூனா-3தான் நிலவின் எதிர்ப்பகுதியை படமெடுத்த முதல் விண்கலம். 1960-ல் ஸ்ட்ரெல்க்கா, பெல்க்கா என்ற இரு நாய்களை விண்வெளிக்கு இட்டுச் சென்று பாதுகாப்பாக புவிக்குக் கொண்டு வந்தது ஸ்புட்னிக்-5. ஸ்ட்ரெல்க்காவின் குட்டிகளில் ஒன்று ஜாக்குலின் கென்னடிக்குப் பரிசளிக்கப்பட்டது.  1961 ஏப்ரலில் முதல் மனிதராக யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியது உட்பட, விண்வெளி ஆய்வில் சோவியத்தின் முன்னேறிய நிலையே நிலவுக்கு மனிதனை அனுப்புவதாக அமெரிக்காவை அறிவிக்கச்செய்தது.


Tuesday, 15 June 2021

இன்றைய தினம்

 


காற்றுக்குத்தான்
எத்தனைப் பெயர்கள்...!

தெற்கிலிருந்து வீசுவது...
தென்றல் காற்று,

வடக்கிலிருந்து வீசுவது...
வாடைக் காற்று,

கிழக்கிலிருந்து வீசுவது...
கொண்டல் காற்று,

மேற்கிலிருந்து வீசுவது...
மேலைக் காற்று,

6 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-மென்காற்று,

6-11 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-இளந்தென்றல்,

12-19 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-தென்றல்,

20-29 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-புழுதிக்காற்று,

30-39 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-ஆடிக்காற்று,

100 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-கடுங்காற்று,

101 -120 கி.மீ வேகத்தில்
வீசும் காற்று-புயற்காற்று,

120 கி.மீ மேல் வேகமாக வீசும்
காற்று-சூறாவளிக் காற்று.

*சூன்-15:*
*உலக காற்று தினம்.*

இன்றைய தினம்

 உலக முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வு தினம் - ஜூன் 15:


World Elder Abuse Awareness Day - 

முதியோர் வன்கொடுமை ஆய்வு குறித்து, 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' அமைப்பின், ஆய்வறிக்கை கூறுவதாவது 1947ல் நாடு முழுவதும், 23 சதவீதமாக இருந்த முதியோருக்கு எதிரான கொடுமைகள், தற்போது, 50 சதவீதமாக அதிகரித்து விட்டது. டில்லியில், 22 சதவீதம் என  குறைவாகவும், பெங்களூருவில் 75 சதவீதம் என  அதிகமாகவும் கொடுமைகள் நடக்கின்றன. 


சென்னையில் 53 சதவீதமாக உள்ளது.

சென்னையில், மருமகள்களால் 37 சதவீதமும், மகன்களால், 56 சதவீதமும் கொடுமைகள் நடத்தப்பட்டு வந்ததாக பதிவுகள் இருந்தன. தற்போது, மகன்களைக் காட்டிலும், மருமகள்கள் மிஞ்சிவிட்டனர். மருமகள்களால் ஏற்படும் கொடுமை, 53 சதவீதமாக உயர்ந்ததோடு, மகன்களால் ஏற்படும் கொடுமைகள், 38 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவ்வாய்வறிக்கை கூறுகிறது. 


உலகமெங்கிலும் உள்ள வயோதிக மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தான விழிப்புணர்வை உருவாக்குவதே இன்றைய நாளின் குறிக்கோளாகும். 


மாறுவோம் மாற்றுவோம்.

Monday, 14 June 2021

அறிவோம் தெளிவோம்


 *_தெரிந்து கொள்வோம்_* 

சைபீரியாவிலிருக்கும் Verkhoyansk என்ற நகரம் தான் உலகிலேயே அதிக குளிர் நிறைந்த நகரமாகும். இங்கு இருக்கும் Yana ஆறு வருடத்தின் 9 மாதங்கள் உறைந்த நிலையிலேயே இருக்கும். குளிர்காலங்களில் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் மைனஸ் 40 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கிறது. செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஒரு நாளில் 5 மணி நேரம் மட்டுமே சூரிய வெளிச்சம் இருக்கும் இந்த ஊரில் தற்போது 1500 மக்கள் வசிக்கின்றனர். சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.



மேகங்கள் பல வகை..


சுமார் 15 கி.மீ வரை உயரத்தில் காணப்படும் மேகங்கள் பல அடுக்குகளாக இருக்கும்.


காற்றின் தட்பவெப்ப நிலை, காற்று திசை போக்கு மற்றும் சூடான காற்றால் மேகங்கள்

அலைகளாகவும் அடுக்குகளாகவும்

காணப்படுகிறது. கடல் நீர் ஆவியாகி

மேலெழும்பி திவலைகள் வேகமாக மழையாக பெய்யும். 

இந்த நிலை condensation

எனப்படும் 'கியூமோ லோநிம்பஸ்'

மேகம் பாசிடிவ் சார்ஜ் கொண்டிருப்பதால்

இதிலிருந்துதான் இடி, மின்னல் ஏற்படுகிறது.


பூமியிலிருந்து பரவும் வெப்பக்காற்றுகளால்

மேகங்கள் இடம் பெய்கிறது. உச்சியில்

தவழும் ‘சிர்ரஸ்' மேகம் மிக குளிர்ச்சியானது.

இவ்வாறு தட்ப வெப்ப நிலைகளால் மேகங்கள் பல வடிவங்களில் பல அடுக்குகளாக காணப்படுகிறது. பூமியின் மட்டத்தில் கருப்பாகவும் பயங்கர தோற்றத்துடன்

காட்சியளிக்கும் நிம்போ ஸ்டிராடஸ் மேகம் உருவாகிக் காணப்பட்டால் கண்டிப்பாக அதிக மழை வரும்...


இன்றைய தினம்

 உலக குருதிக் கொடையாளர்கள் தினம் - ஜூன் 14:


அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை. அதனால் இதை, ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்களுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. 


இங்குதான் குருதிக் கொடை முக்கியத்துவம் பெறுகிறது. குருதிக் கொடை வழங்கும் ஒவ்வொரு வரும் கதாநாயகன்தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குருதிக் கொடை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குருதிக் கொடை அளிப்போரை கவுரவிக்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் உலக குருதிக் கொடையாளர் தினத்தை அறிவித்து, ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.


இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் “தன்னார்வ ரத்த  தானம் செய்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்” என்பதாகும். தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி  வருகிறது.

Saturday, 12 June 2021

இன்றைய தினம்



சர்வதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் - ஜூன் 12:

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்  முறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.  

குழந்தைத் தொழிலாளர்  முறை காரணமாக   உடல் ரீதியான பாதிப்பு  
உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும் உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு முதலான பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர்

2006 அக்டோபர் 10ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த இந்திய அரசு தடைவிதித்துள்ளது. பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் ஆசிரியர்கள், குழந்தை தொழிலாளர் பிரச்னைகளை பெற்றோருக்கு புரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசு விடுதிகளில் வயது வித்தியாசமின்றி தங்க அனுமதிக்க வேண்டும். ஊக்கத்தொகையும் தர வேண்டும். இவ்வாறு அரசின் அனைத்து துறைகளும், ஒரே சிந்தனையுடன் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க செயல்பட்டால், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறும். இன்றைய நாளில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க சபதம் ஏற்போம்.
 

இன்றைய சிந்தனை



*" இனிய சொற்கள் "..*


மனதில் அழுக்குகளை வைத்துக் கொண்டு வெளியே செய்கின்ற ஒப்பனைகள் வெறும் முகப்பூச்சாக குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.


நம் புன்னகை கூட போலியாக

வெளிவேஷமாக இருப்பதைச் சிறிது நேரத்தில் காட்டிக் கொடுத்து விடும் .


ஆகையால் மனம் சுத்தமாக வேண்டும் என்றால் ஒவொரு புலனும் சுத்தமாக இருக்க வேண்டும் .


கண்களில் இருக்கும் அசுத்தம், காதுகளில் இருக்கும் அசுத்தம் போலவே,

வார்த்தைகளில் இருக்கும் 


அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் நம் எண்ணைங்களை சுத்தமாக்க வேண்டும்.


நாம் நல்லவற்றை சிந்திக்கும் போது,நம் கண்கள் நல்ல ஓவியங்களைப் பார்க்கிறது.


நம் காதுகள் நல்ல வார்த்தைகளைக் கேட்கிறது.அப்போது மனம் தானாகவே சுத்தமாகி விடும்.


இதைத் தான் வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் .


"இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று "என்று கூறுகிறார் .


இனிய சொற்கள் பரந்து இருக்கும் போது,

கடுஞ்சொற்களைக் கையாள்வது, பழுத்தப் பழங்கள் குவிந்து கிடக்கையில்,

காய்களைத் தேடிப் பிடித்து உண்டு,

அதன் பின் அதன் கசப்பை உணர்வது போல இருக்கிறது என்று அருமையாகச் சொல்லுகிறார்.


*ஆம்,நண்பர்களே.,*


*இனிமையான நல்ல பழங்கள் போன்று நாம் பேசும் போது கனிவு மிகுந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்துவோம்....*

Wednesday, 9 June 2021

இன்றைய தினம்

 


பிர்சா முண்டா (Birsa Munda) நினைவு தினம் - ஜூன் 9, 1900: 


 இவர் இந்தியாவில் ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். 


ஆங்கிலேய அரசின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவந்து இந்தியாவை இந்திய மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தினார். 


சோட்டா நாக்பூர் பகுதிகளில் பழங்குடி மக்களை ஒன்று திரட்டினார். 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று அறைகூவல் விடுத்துப் போராடினார். 


தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர் ஆவார்.  


1894 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித்தொகையைத் தள்ளுபடி செய்யுமாறு போராடினார். இதுவே பழங்குடிகளுக்காக இந்தியாவிளேயே நடந்த முதல் போராட்டம் ஆகும். 


1990ஆம் ஆண்டு கொரில்லா வீரர்களின் உதவிகொண்டு போராடிய இவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது. தனது 25ஆவது வயதிலேயே சிறையிலேயே மரணமடைந்தார். 


அவர் வாழ்ந்த 25 ஆண்டுகளில் அவர் செய்த போராட்டங்களை மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள். பழங்குடி தலைவர்களிலேயே இவரின் உருவப்படம் மட்டும் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.


இவரின் பெயரால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சின்த்ரி என்ற இடத்தில் பிர்சா தொழில் நுட்ப மையம் Birsa Institute of Technology Sindri) ஒன்றும், பெருல்லா (Purulia) என்ற இடத்தில் சித்தா கன்கோ பிர்சா பல்கலைக்கழகம் (Sidho Kanho Birsha University) மற்றும் ராஞ்சியில் பிர்சா முன்டா அத்லடிக் வளாகம் (Birsa Munda Athletics Stadium) ஒன்றும் அவரின் நினைவாக அரசு நிறுவியுள்ளது. அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (தர்த்தி அபா) என்றே அழைக்கிறார்கள்.


இன்றைய சிந்தனை

 

இன்றைய சிந்தனை..( 09.06.2021)..*
*.............................................*

*'' சிந்தனை தான்.''..*
........................................

சிந்தனையில் இருந்து தான் அறிவு தோன்றுகிறது. அது பண்பட்ட பல
கேள்விகளை எழுப்பி விடை காண வைக்கும்.

ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாவை எழுப்பி அறிவைப் பயன்படுத்தச் செய்யும்.

சிந்தனை இல்லாவிட்டால் உலகத்தில் இயங்குகின்ற சக்தியே இருக்காது. சிந்தனையின் மூலமே முன்னேற்றம் காண முடியும்.

ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டு இருப்பதும், ஆராய்ந்து கொண்டிருப்பதும் தான் சிந்தனை.

இதன் மூலம் தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனை தான் நமது வாழ்வின் அடிப்படை.. வாழ்வே இதனால் தான் ஆக்கப்பட்டது என்கிறார் புத்தர்.

நாம் அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் மனிதர்களுடைய சிந்தனையிலிருந்து பிறந்தது தான்.

அவர்களுடைய சிந்தனையே செயலாக மாறி
கண்டுபிடிப்புகளாகத் தோன்றின.

நாம் யாராக இருந்தாலும் எந்தத் தொழிலைச் செய்பவர்களாக இருந்தாலும் சிந்தனையை உயர்வாகக் கொண்டிருக்க வேண்டும்.

சிந்தித்துச்
செயல்படுவதின் மூலமே சிறப்பாக வாழ முடியும்.

சிந்தனை மட்டும் இருந்து செயலைச் செய்யாவிட்டால் அதனால் எந்தவிதப் பயனும் ஏற்படாது.

சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய அறிவு நாளுக்கு நாள் பெருகும்.

சிந்தனையே ஆழமான அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.

சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில் கொண்டு வந்து செயலில் காட்டினால் தான் வெற்றி பெற முடியும்.

சிந்தனைப் பெருகும் போது அறிவு வளரும்.

அறிவு தெளிவு பெறும் போது மனநிலையில் வரவேற்கத் தகுந்த பல மாறுதல்களை உண்டு பண்ணும்.

அதன் மூலம் முன்பு செய்ய இயலாத' பல செயல்களைத் திறம்பட முடிக்க முடியும்.

நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச் சிந்தனையும் தானாகவே தோன்றாது.

நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற முடியாமல் போகும்?

*ஆம்.,நண்பர்களே..,*

*ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாலே போதும். அது தானாகவே வெற்றி பெற்று விடும்..*

Monday, 7 June 2021

இன்றையதினம்

 உலக உணவு பாதுகாப்பு நாள் -  ஜூன் 07;


உலகில் உணவு சுகாதாரக் குறைபாட்டால் பல நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.  தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக உள்ளதால் மக்கள் உணவு சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வாருகின்றனர்.   குறிப்பாக உணவு விடுதிகளுக்குச் செல்வது,  வெளி உணவுகளை சாப்பிடுவது போன்றவை பெருமளவில் குறைந்துள்ளது. உலக சுகாதார மையம் வீட்டில் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடுவதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும் பாதுகாப்பற்ற உணவால் 200 வகை நோய்கள் உண்டாகலாம் எனவும் 10க்கு ஒருவர் இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வருடத்துக்கு இவ்வாறு சுமார் 4.2 லட்சம் பேர் மரணம் அடைவதாக அறிவித்துள்ள மையம் உணவு பாதுகாப்புக்காக ஐந்து முக்கிய விதிகளை அறிவித்துள்ளது.

சுத்தமாக இருக்கவும், சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்து வைக்கவும், முழுமையாக வேக வைக்கவும், உணவுப் பொருட்களைச் சரியான வெப்ப நிலையில் வைக்கவும் , பாதுகாப்பான நீர் மற்றும் பொருட்களால் சமைக்கவும்.

Saturday, 5 June 2021

இன்றைய தினம்

 👆 *இன்று உலக சுற்றுச்சூழல் தினம்*


*ஏன் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது?*



இயற்கையை பாதுகாக்க வேண்டும் மற்றும் சுற்றுப்புற சூழலை பேண வேண்டும் என்ற விழிப்புணா்வை உலக மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உயாிய நோக்கத்தோடு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் உலக அளவில் இருக்கும் சுகாதாரம் சாா்ந்த பிரச்சினைகளைப் பற்றி விரிவாக பேசி, அவற்றிற்கான தீா்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உலக சுற்றுச்சூழல் தினம் வழிவகை செய்கிறது.


உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதாகும்.


இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதா்கள், தன்னாா்வ நிறுவனங்கள், பிரபலங்கள், மற்றும் எல்லா மக்கள் சமூகங்கள் ஆகிய அனைவரும் உலக சுற்றுப்புற சூழலை பேணுவதற்கான முழுமையான செயல்பாட்டில் இறங்க வேண்டும் என்று இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. இப்போது இருக்கும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, மிக எளிதாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் விழிப்புணா்வு செய்திகளைப் பரப்ப முடியும்.


*ஜூன் 5 அன்று ஏன் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது?*


முதன் முதலாக 1972 ஆம் ஆண்டு, ஐநாவின் தலைமைச் செயலா், உலக சுற்றுச்சூழல் தினத்தைத் தொடங்கி வைத்தாா். அவா் ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்கோமில் நடந்த மனிதா்களின் சுற்றப்புற சூழல் பற்றிய கருத்தரங்கில் முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தைத் தொடங்கி வைத்தாா்.


1974 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றது. ஒரே ஒரு உலகம் என்ற தலைப்பில், அந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டுகளிலும் உலக சுற்றுச்சூழல் தினம் உலக நாடுகள் முழுவதிலும் மிகவும் விமாிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது.


ஆண்டுகள் உருண்டோடின. இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாடு இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னெடுத்து நடத்த வேண்டும் என்ற புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. ஆகவே உலகை பசுமையாக வைத்திருக்க வேண்டும் மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், 1974 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

5th, 4th, 3rd - New Syllabus Text Books - Download

 5th, 4th, 3rd - New Syllabus Text Books - Download


🧶 *5th - Tamil*

 https://bit.ly/3idDnrG


🧶 *5th- English*

 https://bit.ly/3ioe7yO


🧶 *5th - Maths - T/M*

 https://bit.ly/3ih5YML


🧶 *5th - Maths - E/M*

 https://bit.ly/2S7dRtm


🧶 *5th - Science - T/M*

 https://bit.ly/2SV2oNR


🧶 *5th - Science - E/M*

 https://bit.ly/3wSkiiT


🧶 *5th - Social  - T/M*

 https://bit.ly/2SZZuqP


🧶 *5th - Social  - E/M*

 https://bit.ly/3pkYWIm


✅ *4th - Tamil*

 https://bit.ly/3ihotRm


✅ *4th- English*

 https://bit.ly/3wVsiQ3


✅ *4th - Maths - T/M*

 https://bit.ly/3uQGXL4


✅ *4th - Maths - E/M*

 https://bit.ly/3ihyjCO


✅ *4th - Science - T/M*

 https://bit.ly/34LoyEL


✅ *4th - Science - E/M*

 https://bit.ly/3zc5bmq


✅ *4th - Social  - T/M*

 https://bit.ly/3cjBOop


✅ *4th - Social  - E/M*

 https://bit.ly/3ga3ZqJ


📍 *3nd - Tamil*

 https://bit.ly/3cbsOSh


📍 *3nd- English*

 https://bit.ly/2S6D0Ex


📍 *3nd - Maths - T/M*

 https://bit.ly/3yVARMM


📍 *3nd - Maths - E/M*

 https://bit.ly/2SSpjJl


📍 *3nd - Science - T/M*

 https://bit.ly/3vIfHja


📍 *3nd - Science - E/M*

 https://bit.ly/3cu0lav


📍 *3nd - Social  - T/M*

 https://bit.ly/3vJ2LJz


📍 *3nd - Social  - E/M*

 https://bit.ly/3fItJM1

Friday, 4 June 2021

6th, 7th, 8th - New Syllabus Text Books Download

 

6th, 7th, 8th - New Syllabus Text Books Download

 

*6️th - Tamil*

 https://bit.ly/2SSX6SG

*6️th - English*

 https://bit.ly/3uLh1jV

*6️th  - Maths - T/M*

 https://bit.ly/3cac8dG

*6️th  - Maths - E/M*

 https://bit.ly/3gl7riH

*6️th  - Science - T/M*

 https://bit.ly/3fNaqRT

*6️th  - Science - E/M*

 https://bit.ly/34IJ48Y

*6️th  - Social Science - T/M*

 https://bit.ly/3wUrvis

*6️th  - Social Science - E/M*

 https://bit.ly/2RXv88z

7️th  - Tamil*

 https://bit.ly/3g7YEjF

*7️th - English*

 https://bit.ly/3g3rCkQ

*7️th  - Maths - T/M*

 https://bit.ly/3if9YgK

*7️th  - Maths - E/M*

 https://bit.ly/3uMyiZS

*7️th  - Science - T/M*

 https://bit.ly/3cbdZPC

*7️th  - Science - E/M*

 https://bit.ly/34IRz44

*7️th  - Social Science - T/M*

 https://bit.ly/2RmGYZy

*7️th  - Social Science - E/M*

 https://bit.ly/3wS7Gbp

*8️th  - Tamil*

 https://bit.ly/3paFxKa

*8️th- English*

 https://bit.ly/3fI9tKr

*8️th - Maths - T/M*

 https://bit.ly/3i9QWrY

*8️th - Maths - E/M*

 https://bit.ly/3uDZytv

*8️th - Science - T/M*

 https://bit.ly/3culmSr

*8️th - Science - E/M*

 https://bit.ly/3wPgTkP

*8️th - Social Science - T/M*

 https://bit.ly/2RcBKiM

 

*8️th - Social Science - E/M*

 https://bit.ly/3pevymQ





Thursday, 3 June 2021

இன்றைய பழமொழி

 🍊 **இன்றைய பழமொழி* 🍅


************************************


*_ஆமை புகுந்த வீடு உருப்படாது_* 


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு. ஆமையின் மேல் ஒரு “துரதிருஷ்டசாலி” என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.


ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு இக்கருத்து சரியாகுமா? இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. 


சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்? எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன? வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது.


தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது.


இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும்.


கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:ஆம்பி பூத்த வீடு உருப்படாது.


(ஆம்பி = காளான்)இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான “ஆம்பி பூத்த” என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.


ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

இன்றைய தினம்

 இன்று ’உலக சைக்கிள் தினம்’உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது

ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கியச் சாதனமாக இருந்த இது, இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாகத் தான் மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. காரணம் ஒன்று உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

சைக்கிள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்களுக்குப் பிறகு நல்லதொரு வடிவம் பெற்றது. மக்கள் பெருமளவில் அதனை போக்குவரத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். சர் எட்மண்டு கிரேன் (Sir Edmund Crane) என்பவர், 1910ம் இங்கிலாந்தில் ஹெர்குலிஸ் (Hercules) சைக்கிள் கம்பெனியைத் துவக்கினார். படிப்படியாக எல்லா நாடுகளுக்கும் சைக்கிளைக் கொண்டு சென்ற பெருமை ஹெர்குலிஸ் நிறுவனத்துக்கே சேரும்.

Wednesday, 2 June 2021

அறிவியல் அறிவோம்

 




விமானம் எப்படி பறக்கிறது.. 


இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்


பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்


சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது...


இந்த விடயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது


ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு


A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)


B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் - Thrust


C கீழ்நோக்கி இழுக்கும் எடை - Weight


D பின்னோக்கி இழுக்கும் டிராக் - Drag


ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்


Weight=Lift


Drag=Thrust


த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்


டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்


விமானத்தின் எடை 'லிப்ட்' விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்


விமானத்தின் 'லிப்ட்' விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்


சரி... பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,


அதே போல விமானத்தில் 'டிராக் விசையை கொடுப்பது' காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.


(பலருக்கு ஒரு விடயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)


விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்


பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது


எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்


உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக


விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது


விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்


இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விடயம் உள்ளது


காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)


சரி எப்படி குறைந்த காற்றழுத்தம் இறக்கையின் மேலே உருவாகுது எனப்புரியாதவர்களுக்கு, இந்த படத்தை பார்த்தால் எல்லாம் புரியும்


விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்


அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்


இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?


அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு சுட்டுப்போட்டாலும் வராது :) )


இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது


விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?


அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது


ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது (சந்திரனில் கூட பறப்பதற்கு இறக்கை உபயோகப்படாது)