Tuesday, 29 November 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: மக்கட்பேறு


குறள் : 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்


பொருள்:

ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்


பழமொழி :

Labour conquers everything.

உழைப்பு அனைத்தையும் வெல்லும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

பொது அறிவு :

1. கண்ணீர் சுரப்பிக்குப் பெயர் என்ன ?

 லாச்ரிமல் கிளாண்ட்ஸ். 

2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார்? 

கெப்ளர்.

English words & meanings :

blew - wind moving and creating air current. verb. ஊதுதல். வினைச் சொல். blue - a color. noun. நீல நிறம். பெயர்ச் சொல். both homonyms

ஆரோக்ய வாழ்வு :

அஞ்சீர் என்றும் குறிப்பிடப்படும் அத்திப்பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது நீண்ட நேரம் உங்களை நிறைவாக உணர உதவும். இது 'ஃபிசின்' என்ற நொதியைக் கொண்டுள்ளது, இது உணவை சிறந்த மற்றும் விரைவான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது தொப்பை கொழுப்பை இழக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இதில் தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

NMMS Q

9, 28, 65, ____, 217. 


விடை : 126. 


விளக்கம் : 2 x 2 x 2 =8 + 1 =9; 3 x 3 x 3 = 27 + 1= 28; 4 x 4 x 4 = 64 + 1 = 65; 5 x 5 x 5 = 125 + 1 = 126; 6 x 6 x 6 = 216 + 1 = 217

நீதிக்கதை

பிடிவாதம் கொண்ட சிறுமி


ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள், அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள். 

ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள். 

அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள். 

கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள். 

கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள். 

அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார். 

அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள். 

ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால். 

கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க, அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா. 


நீதி :

வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

29.11.22

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


* சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மஸ்கட், குவைத், புனே விமானங்கள் பெங்களூரு, ஹைராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டன.

* அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு கால அட்டவணை வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

* 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

* லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்.

* அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது.

* ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்.

* இந்திய ஒலிம்பிக் சங்க முதல் பெண் தலைவராக தங்க மங்கை பி.டி. உஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.


* உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.


Today's Headlines


* 'Rainbow Forum' Scheme for Government School Students: Launched by Chief Minister Stalin in Trichy.

 *  Due to heavy fog in Chennai, Muscat, Kuwait and Pune flights were diverted to Bangalore and Hyrabad.

*  Time Table Released for Govt School Teachers Transfer Consultation: The consultation starts from tomorrow.

*  Union Road Transport Minister Nitin Gadkari has also said that vehicles of central and state governments which are in use for more than 15 years will be destroyed from April 2023.

*  Avoid antibiotics for mild fever: ICMR guidance for clinicians.

 * NASA has released the echoes of light rays from a black hole in the universe in the form of sound.

*  FIFA Football: Fury over Morocco win;  Riots in Belgium.

 * Thanga Mangai P.D. is the first woman president of the Indian Olympic Association.  Usha is elected unopposed.


*  World Cup Football: The match between Spain and Germany ended in a draw.

 

 



Covai women 


Monday, 28 November 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2022

   திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 


இயல்: இல்லறவியல் 

அதிகாரம்: மக்கட்பேறு 


குறள்: 69 


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய். 


பொருள்: 

தன்மகன் ' சான்றோன் 'என பிறரால் பாராட்டப்படும் போது அவனை பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட கூடுதலான மகிழ்ச்சியை அந்தத்தாய் அடைவாள்.


பழமொழி :

chew your food well and live a long life.

நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.

 2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. --நெல்சன் மண்டேலா.


பொது அறிவு :

1. வெண்மை புரட்சி எதைக் குறித்து உருவானது? 

பால் வளத்தைப் பெருக்குதல். 

2. நீலப் புரட்சி எதைக் குறித்து உருவானது? 

கடல் வளத்தைப் பெருக்குதல்.

English words & meanings :

buy - purchase. verb. வாங்குவது. வினைச் சொல். by - through. preposition.மூலமாக. முன்னிடை சொல். bye - goodbye. noun. விடை பெறுவது. all homonyms

ஆரோக்ய வாழ்வு :

ஆரஞ்சு வைட்டமின் சி இன் மிகவும் வளமான மூலமாகும். மேலும் இது இயற்கையாகவே கொழுப்பை எரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. வைட்டமின் சி உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக செயல்பட உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கான சிறந்த பழமாக உள்ளது. அவை நீர்ச்சத்து அதிகம் மற்றும் உங்கள் ஒழுங்கற்ற பசி உணர்வை குறைக்க உதவும்.

NMMS Q

மஞ்சு 29 2 1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாள்களை கொண்டாடி இருப்பார்? 


விடை : 9 


விளக்கம்: 1984 முதல் 2020 வரை உள்ள லீப் வருடங்களை கணக்கில் கொண்டு கணக்கிடலாம்.

நீதிக்கதை

பொய்


மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 


ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 


பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 


ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 


நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 


மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 


உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 


கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 


மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 


சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 


அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 

இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 


நீதி :

ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.

இன்றைய செய்திகள்

28.11.22

* கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு  ரசித்தனர்.

* தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு  ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* அறிவியல் மனப்பான்மையை 6 முதல் 8 வரை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் மேம்படுத்த 'வானவில் மன்றம்' : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

* மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன நிரந்தர நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

* ரயில் வேகத்தை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பம்: 2025-ல் அறிமுகம்- இந்திய ரயில்வே நிர்வாகம்   அறிவித்துள்ளது.

* புரோ கபடி லீக்கில் இன்று நடைபெறும் முக்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Today's Headlines


* Kanyakumari is crowded with tourists during the Sabarimala season.  In the morning they gathered on the beach and enjoyed the sunrise.

*  Chennai Meteorological Center has said that light to moderate rain may occur at a few places in Tamil Nadu from today for the next 3 days.

 * Rainbow forum' to develop scientific attitude among students in 6th to 8th government schools: Chief Minister M.K.Stalin inaugurates.

* A permanent footpath for the disabled is coming into use today Developed under the 'Singara Chennai 2.0' project at the Marina.

*  New technology to increase train speed: Introduction by 2025- Indian Railways has announced.

* Tamil Thalaivas will face Gujarat Giants in today's main match of the Pro Kabaddi League.


 



Covai women 


Friday, 25 November 2022

வானவில் மன்ற வீடியோக்கள்

 STEM Physics videos

Click here

STEM chemistry videos

Click here

STEM Maths videos

Click here

STEM Biology videos

Click here


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2022

திருக்குறள் 

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: மக்கட்பேறு

குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.


மு.வரதராசன் விளக்கம்:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.


பழமொழி :

The fearless goes into the assembly.

அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல

பொன்மொழி :

நேரம் தடையின்றிச் செல்கிறது. நாம் தவறு செய்யும் போது, கடிகாரத்தைத் திருப்பி மீண்டும் முயற்சிக்க முடியாது. நம்மால் செய்யக்கூடியது நிகழ்காலத்தை நன்றாகப் பயன்படுத்துவது தான். --தலாய் லாமா



பொது அறிவு :

1. பூகம்பத்தின் அதிர்வு வேகத்தை அளக்கும் கருவி எது? 

செய்ஸ்மோ கிராஃப். 

2. ரேடியேட்டர் என்பது என்ன ? 

குளிர்விக்கும் கருவி.

English words & meanings :

beat - to strike, verb. அடித்தல், வினைச் சொல். beat - to win (the match). verb.தோற்கடித்தல். வினைச் சொல். homonyms

ஆரோக்ய வாழ்வு :

பாதாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அல்லது நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும் ஏற்றது, ஏனெனில் இது கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது தொடர்பான சில ஆய்வுகள் பெருங்குடல் அல்லது குடல் மற்றும் அல்சைமர் போன்ற அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்தும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

NMMS Q

பொருந்தாத ஒன்றை கண்டறியவும் : 



அ) திரிசூல் ஆ) அக்னி இ) ரோகிணி ஈ) ப்ரித்வி 



விடை : ரோகிணி



நவம்பர் 25


பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்


 


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

அன்பின் மதிப்பு


அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். 


அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.


அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். 


அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 


மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். 


அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான். 


நீதி :

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

இன்றைய செய்திகள்

25.11.22

* சென்னை: தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

* உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

* தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை முடிவு செய்துள்ளது.

* தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு அடுத்த கல்விஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

* இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

* சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் கரோனா பாதித்த பகுதிகளில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

* நீண்ட இழுபறிக்குப் பின்னர் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

* பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் ஜோசப்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

* உலக கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த ஸ்பெயின்.. கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி.


Today's Headlines

* Chennai: 14.6 lakh families in Tamil Nadu do not have bank accounts, according to the Registrar of Co-operative Societies.

*  Information Technology Minister Mano Thangaraj has announced that World Cup football matches can be watched for free on government cable TV.

*  Tamil Nadu Department of Environment, Forest and Climate Change has decided to implement the Green Schools Program by selecting 25 schools in Tamil Nadu.

*  Higher Education Minister Ponmudi has said that a new syllabus will be introduced for arts and science degree courses in Tamil Nadu from the next academic year.

 * The Supreme Court has given the Center another six weeks to consult with the state and union territory governments on the issue of granting minority status to Hindus in states with a minority population.

 * 31 thousand people were infected with a corona in one day in China.  In this case, people started protesting against the Chinese government to impose strict restrictions in the Corona-affected areas.

 * Anwar Ibrahim has been elected as the 10th Prime Minister of Malaysia after a long tussle.

*  Joseph's team won the title of 'Champion' in the Inter-University Zonal Kabaddi Tournament.

 * World Cup Football: Spain, who bagged goals.

 

 



Covai women


Thursday, 24 November 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.11.2022

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 



இயல்:இல்லறவியல் 



அதிகாரம்: மக்கட்பேறு


குறள் : 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.


பொருள்:

தம்முடைய பிள்ளைகளின் சிறு கைகளால் பிசையப்பெற்ற உணவு பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.


பழமொழி :

Feed by measure and defy the physician.

அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல

பொன்மொழி :

நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். --லியோனார்டோ டா வின்சி.


பொது அறிவு :

1. புனித நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது? 

ஜெருசலேம் .

 2. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் எது ? 

அரேபியா.

English words & meanings :

be-ar - a large wild animal, கரடி, noun. be-ar- support, கஷ்டத்தை தாங்குதல், மனதைரியம் கூறுதல். verb. வினைச் சொல். both homonyms

ஆரோக்ய வாழ்வு :

அதிக தீவிரம், சோர்வு தரும் வேலை வாய்ப்புகள் உள்ள இளைஞர்கள், நாள் முழுவதும் சுமார் 20 பாதாம் பருப்புக chளை சாப்பிடுவது, வேகவைத்த உணவுகளான கிழங்குகள் அல்லது பிஸ்கட்களுக்கு பதிலாக, அதன் தாது உள்ளடக்கத்தின் உதவியுடன் தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்தை பெற முடியும். எலும்பு அடர்த்தி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் தசை வலிமையை மேம்படுத்த தாதுக்கள் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கும் பாதாம் பெரிய நன்மை பயக்கும்

NMMS Q

மிகத் துல்லியத் தன்மை கொண்ட கடிகாரம் எது? 

\\

விடை : அணுக்கடிகாரம்



நவம்பர் 24



அருந்ததி ராய்  அவர்களின் பிறந்தநாள்




 




சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார்.


இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் (en:Narmada Bachao Andolan) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். 

997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]

2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.


நீதிக்கதை

இட்லியைத் துரத்திய பாட்டி


ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும். இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும். பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லோருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், இட்லிக்கு தருகிற காசு கூட இரண்டாம்பட்சம்தான். அவர்கள் பாராட்டுவது பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். 


ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் வைக்கும்போது ஒரு இட்லி மட்டும் கீழே விழுந்து உருண்டு ஓட ஆரம்பித்தது. ஏய், நில்லு, நில்லு என்று கத்திக்கொண்டு இட்லியைத் துரத்தினார் பாட்டி. அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார். பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார். 


அங்கு, சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா? ஆமா, பார்த்தேன் என்றார் முதல் கடவுள், ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே. அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா. 


நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி. மீண்டும், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் பாட்டி, இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?


ஆமா, பார்த்தேன் என்றார் இரண்டாவது கடவுள். ஆனா, நீ அங்கு போகாதே, அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா. சொல்வதை கேட்காமல் தொடர்ந்து நடந்தார் பாட்டி. 


சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா? என்றார் பாட்டி. ஆமா, பார்த்தேன் என்றார் மூன்றாவது கடவுள். நீ சீக்கிரமா எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ. ஏன்? இதோ, அரக்கி வர்றா. இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார். 


சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, மனுஷ வாசனை அடிக்குதே என்றாள். 


அதெல்லாம் இல்லை நீ கிளம்பு! என்றார் கடவுள். கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது என்றபடி, பாட்டியைப் பார்த்துவிட்டாள். பாட்டியிடம், உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் என்றாள் அரக்கி. என்னோட சமையல்காரியாக வைத்துக்கொள்ள போகிறேன் வா! என்று அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது. 


இந்தச் சின்ன ஆற்றைக் கடப்பதற்குப் படகு எதுக்கு? நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா? அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது என்றாள் அரக்கி. 


சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள். இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும் என்றாள் அரக்கி. சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசி வேண்டும் என்றார். 


இதோ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்து இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம் முழுக்க நிறைஞ்சுடும் என்றாள் அரக்கி. 


பாட்டி ஆச்சரியத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். அந்தப் பாத்திரம் முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள். 


சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன்னுடன் எடுத்துக்கொண்டார். அவர் ஆற்றை கடக்கும் நேரத்தில் அரக்கிகள் வந்துவிட்டனர். பாட்டி பயந்தார். ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அரக்கிகள் சட்டென்று குனிந்து சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது. 


அரக்கிகள் கோபத்தோடு பாட்டியிடம் வந்தனர். பாட்டி ஓடத்தொடங்கினார். சேற்றில் பாட்டியின் கால் சிக்கி தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு வந்தது. அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது. 


சட்டென்று பாட்டி படகில் ஏறி தப்பித்து தன் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது. பாட்டியைப் பார்த்தவர்கள் இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் என்றார்கள். 


இதோ, வந்துட்டேன் என்றார் பாட்டி. இனிமே உங்களுக்கு மட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன் என்றார். தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டு இட்லி சமைத்தார். 


அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். 


நீதி :

உதவும் எண்ணம் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

24.11.22


* 5 மாவட்டங்களில் செயற்கை அருவிகள் உள்ள ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

* பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள 2000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.16 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

* மைசூரு ஆய்வகத்தில் இருந்து முதல்கட்டமாக 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு படிகள் கடந்த வாரம் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

* புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26-ம் தேதி விண்ணில் ஏவப்படும்.

* சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

* 2019-ம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழப்பு - லான்செட் ஆய்வில் தகவல்.

* அமெரிக்காவின் நியூயார்க்கில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

* துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு.


* 2024-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் முறையில் மாற்றம்.

* முதலாவது டிவிசன் ஹாக்கி லீக்: எம்.ஆர்.சி. அணி வெற்றி.

* உலக கோப்பை கால்பந்து: மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'.


Today's Headlines


* HC orders the sealing of resorts with artificial waterfalls in 5 districts

 * Minister M. Subramanian said that 2000 doctors have registered to participate in the International Medical Conference being held on the occasion of the centenary of the Department of Public Health.

* The Tamil Nadu government has issued an order to provide Rs.1000 each to the rain-affected families in the Mayiladuthurai district.  The government has allocated a fund of Rs.16 crore for this purpose.

 * In the first phase, 13,000 Tamil inscription steps were brought to Tamil Nadu from the Mysore laboratory last week.

 * The EOS-06 (Ozonesat-03) Earth observation satellite was designed by the Indian Space Research Organization (ISRO).  The satellite was launched by a PSLV C-54 rocket from the launch pad at Sriharikota on Nov.  It will be found on the 26th.


*  International tourism campaign 'Dramatic India' has been re-launched to promote international tourism.

 * 6.8 lakh people died from 5 types of bacteria in India in 2019 - Lancet study reports.

 * A state of emergency has been declared in New York, USA due to record snowfall.

*  The terrible earthquake in Turkey - 6.1 on the Richter scale.

 * Changes will be applied in the 2024 World Cup cricket format.

 * First Division Hockey League: MRC  Team wins.

 * World Cup Soccer: The match between Morocco-Croatia became a 'Draw'


Monday, 21 November 2022

Logical sequnce

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2022

திருக்குறள் :

பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்: இல்வாழ்க்கை

குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

பழமொழி :

மோசமாக எதுவும் இல்லை, ஆனால் அது மோசமாக இருந்திருக்கலாம்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. 

இரண்டொழுக்க பண்புகள்:

1. நான் பிறருக்கு வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாமல் செய்வேன்.

 2. உதவி பிறரின் வருத்தம் போக்க, பிறர் என்னை புகழ அல்ல

பொன்மொழி :

உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும். --ஸ்டீவ் ஜாப்ஸ்

பொது அறிவு :

1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ? 

 1914 ஆம் ஆண்டு  . 

 2. உலக சமாதான சின்னம் எது ?

 ஒலிவ் மரத்தின் கிளை.

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

சாப்பிட்டேன் -கடந்த காலம், வினை. சாப்பிட்டு விட்டேன். வினைச் சொல். எட்டு - எண் 8. பெயர்ச்சொல் எண் எட்டு. பெயர்ச் சொல்.இரண்டும் homonyms.

ஆரோக்ய வாழ்வு :

ஊட்டச்சத்து நிறைந்த பாதாம் சிற்றுண்டிக்கு ஆரோக்கியமான மாற்று உணவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு முடிவின்படி, தினசரி 56 கிராம் பாதாம் சாப்பிடுவது, பியூட்ரேட்டின் அளவை ஊக்குவித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

என்எம்எம்எஸ் கே

0.04, 0.09, 0.25, 0.49, ________ 

 விடை: 0.121 

 விளக்கம்- பகா எண்களின் தொடர்ச்சி மற்றும் அதன் வர்க்கமாக உள்ளது.

நவம்பர் 21


சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள் 






சர் சந்திரசேகர வெங்கட ராமன் (சந்திரசேகர வெங்கட ராமன்)  ( நவம்பர் 7 1888  -  நவம்பர் 21 1970 ) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல்  இயற்பியல்  துறைக்கான  நோபல் பரிசைப்  பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் போது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும்  அலைநீள மாற்றத்தை  இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு  இராமன் விளைவு  ( ராமன் விளைவு )  என்ற பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்குக் கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

உலகத் தொலைக்காட்சி நாள் 

உலகத் தொலைக்காட்சி நாள்  ( World Television Day ) உலகெங்கும் ஆண்டுதோறும்  நவம்பர் 21  ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 21,  1996 -ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின்  பரிந்துரையின்  பேரில்  ஐக்கிய நாடுகள்  அவை நவம்பர் 21 ஆம் தேதி உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள்  1997 -ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.

இன்றைய செய்திகள்

21.11.22

* பல மின்இணைப்பு வைத்துள்ளவர்கள் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம்: மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.

* சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் சங்கம் அறிவிப்பு.

* தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

* பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்.

* டிசம்பர் 7-ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு.

* 2வது டி20 போட்டி - நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்.

* 32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Today's Headlines

* Multiple Electricity Connection Holders Can Link Same Aadhaar Number: Electricity Authority Explanation

 *சென்னை உட்பட 7 மண்டலங்களில் டிச., 23ல் தர்ணா: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.

 *தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வுகள் வரலாற்றிற்கு புதிய தகவல்களையும், தகவல்களையும் அளிப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

 * பாரதி பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவித்தது: வாரணாசியில் பாரதி நினைவிடம் கட்ட திட்டம்

* பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 * பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் ஐ.நா.

 * 2வது டி20 - நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி இந்தியா வெற்றி.

 * சர்வதேச டி20 கிரிக்கெட்: ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்தவர் சூர்யகுமார் யாதவ்.

 * 32 அணிகளுடன் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது
 


கோவை பெண்கள்