Saturday, 26 February 2022

இன்றைய 10 சொற்கள்!


இன்றைய 10 சொற்கள்!

1. Abnormal (அப்னார்மல்) - அசாதாரணமாக. 

இந்த அளவு எடை குறைப்பு உங்கள் வயதிற்கு அசாதாரணமாக உள்ளது.

This amount of weight loss is abnormal for your age.


2. Ache (ஏக்) - வலி.

முழங்கால் வலியினால் என்னால் இரவு நன்றாக தூங்க முடியவில்லை.

I couldn′t sleep well in the night because of knee ache.


3. Allergy (அலர்ஜி) - ஒவ்வாமை. 

உங்கள் மகனுக்கு சூரிய வெளிச்ச ஒவ்வாமை உள்ளது.

Your son has sunlight allergy. 


4. Amnesia (அம்னிஸியா) - ஞாபக மறதி நோய் 

எனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதால் என்னால் அந்த விபத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.

I couldn′t remember that accident because I had amnesia.


5. Anemic (அனிமிக்) - இரத்த சோகை.

எனக்கு இரத்த சோகை உள்ளதால் ஆற்றல் குறைவாக உள்ளது. 

I have low energy because I have anemic.


6. Bacteria (பேக்டிரியா) - நுண்ணுயிரி. 

நுண்ணுயிரி பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவது அவசியம்.

It is important to wash hands often to prevent the spread of bacteria.


7. Blood count (ப்லட் கவுன்ட்) - இரத்த அணுக்களின் எண்ணிக்கை.

உங்கள் இரத்த அணுக்களின் எண்ணிக்கை மீண்டும் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

Your blood count came back to normal control.


8. Critical condition (கிரிட்டிகல் கன்டிஷன்) - ஆபத்தான நிலை.

அவள் ஆபத்தான நிலையில் இருப்பதால், நீங்கள் இப்போது அவளை பார்க்க முடியாது.

She′s in critical condition, so you can′t see her right now. 

9. Diabetes (டையபிடிஸ்) - நீரிழிவு நோய்.

நீரிழிவு நோய் உள்ள மக்கள் தொடர்ந்து தங்களது இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

People who have diabetes constantly check their blood sugar levels.


10. Diagnosis (டைக்னோஸிஸ்) - நோயறிதல். 

மருத்துவர் நோயாளியிடம் நோயறிதலைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும்.

The doctor must share about the diagnosis with the patient

இன்றைய தினம்

 வானியலாளரும், நாவலாசிரியருமான நிகோலஸ் கமீல் ஃப்ளமேரியன் (Nicolas Camille Flammarion) பிறந்த தினம் - பிப்ரவரி 26: 


பிரான்ஸின் வால்டிமாஸ் பகுதியில் (1842) பிறந்தார். பள்ளியில் சிறந்த மாணவனாகப் போற்றப்பட்டார். சிறு வயதிலேயே வானியலில் நாட்டம் பிறந்தது. பழைய தொலைநோக்கியை வாங்கி வந்து வானத்தை ஆராயத் தொடங்கிவிட்டார்.


* ஆங்கிலம் மற்றும் பாரம்பரிய மொழிகள் கற்றார். கூடவே பாலிடெக்னிக் கல்வியும் பயின்றார். 16 வயதில் பாரீஸின் வானியல் ஆய்வுக்கூடத்தில் மாணவராகச் சேர்ந்தார். அதற்கு முன்பாகவே ‘தி காஸ்மோகானி ஆஃப் தி யுனிவர்ஸ்’ என்ற நூலை எழுதியிருந்தார்.


* வானிலை ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தவர், ‘ஜுவிஸி-சுர்-ஆர்க்’ என்ற இடத்தில் வானிலை ஆய்வுக்கூடம் அமைத்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நெப்டியூன், ஜூபிடர் கோள்களின் நிலாக்களுக்கு ‘டிரைடன்’, ‘அமெல்த்தியா’ என்று முதன்முதலாகப் பெயரிட்டார். இது வெகு காலம் கழித்தே அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.


* ‘காஸ்மோஸ்’ அறிவியல் இதழ் நிறுவனத்தில் சேர்ந்தார். பிறகு, இகோலோ டர்காட் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் வானியல் கழகத்தின் முதல் தலைவராகவும் செயல்பட்டார். இந்த அமைப்பு சார்பாக ‘பிரான்ஸ் வானியல் சங்க இதழ்’ வெளியிடப்பட்டது. கிரகங்கள், நட்சத்திரங்கள், நிலவு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.


* உளவியலில் நாட்டம் கொண்டிருந்தவர் அதுகுறித்தும் ஆராய்ந்தார். இவரது ‘ஃப்ளமேரியன் என்கிரேவிங்’ என்ற முதல் கட்டுரை ‘எல் அட்மாஸ்பியர்’ இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல கட்டுரைகள், புனைகதைகள் எழுதினார். வானியல் தொடர்பான கண்டுபிடிப்புகள், தகவல்களுக்காக பிரத்யேகமாக ஒரு இதழை வெளியிட்டார்.


* வானியல் ஆராய்ச்சித் துறையை பெரிதும் பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானது. வானியல், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், உளவியல் தொடர்பான நூல்கள், கட்டுரைகள் என ஏறக்குறைய 50 வெவ்வேறு விஷயங்கள் குறித்து எழுதியுள்ளார். அறிவியல் புனைகதை முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்பட்டார்.


* இவரது நூல்கள் வர்த்தகரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவை உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தனது படைப்புகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். இவரது ‘தி எண்ட் ஆஃப் தி வேர்ல்டு’ நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.


* ஆவிகளோடு உரையாடுதல், நினைவு மனம், நினைவிலி மனதின் செயல்பாடுகள், மரணத்துக்குப் பிந்தைய உலக வாழ்க்கை குறித்த நம்பிக்கை போன்றவை குறித்தும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதினார். நுண்ணுணர்வு (டெலிபதி) மூலம் சில அசாதாரணமான விஷயங்களை விளக்க முடியும் என்று கூறியுள்ளார்.


* தனது கண்டுபிடிப்புகள், கருத்துகள் பற்றி உரையாற்றியும், எழுதியும் வந்தார். மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார். ‘உண்மையை நோக்கிய தேடலில் அறிவியல் வழிமுறையில் மட்டுமே முன்னேற்றம் காண முடியும். விருப்பு வெறுப்பற்ற பகுப்பாய்வில் சமய நம்பிக்கைகளைப் புகுத்தக்கூடாது’ என்று கூறினார்.


* ஃப்ளமேரியன் நிலாக் குழிப்பள்ளம் மற்றும் பல குறுங்கோள்கள் இவரது பெயரால் குறிப்பிடப்படுகின்றன. ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் எதுபற்றியாவது ஆராய்ச்சி செய்துகொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த நிகோலஸ் கமீல்  ஃப்ளமேரியன் 83-வது வயதில் (1925) மறைந்தார்.

இன்றைய சிந்தனை


 இன்றைய சிந்தனை..

................................................

'' கவலையின்மையே பலத்தைத் தரும்.

...............................

இந்த உலகில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக்கவலை,

மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான்.


அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர்.


வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. 


அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களைப் படுகுழியில் தள்ளி விடும்.


கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் அமர்ந்து வீதி உலாச் சென்றார். 


ஒரு வீதியில் செல்லும் போது, ​​எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.


அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.


“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜிக்கு பதில் அளித்தான். 


மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.


இளைஞனின் அம்மாவிடம்,


“அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான்.


இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். 


'சம்பாதித்து வந்தால் தான் உப்பு போடுவேன்' என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவன் ஆகி விடுவான். என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.


சில நாட்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். 


யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. 


அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளி விட்டது.


“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான் இளைஞன் அதனால் பலமிழந்தான். 


கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் 'நன்றாகப் புரிந்தது' என்றார்.


ஆம்.,நண்பர்களே..,


மனது சரியாக சிந்திக்கத் தொடங்கினால் மனக்கவலை, சோர்வு' பொறுமையின்மை ஏற்பட வாய்ப்பு இல்லை. 

கவலையால் உடல், உங்கள் நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்து விடுகிறது..


வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமானால் மனிதன் கவலையை ஒழிக்க வேண்டும்.

    

      

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.22

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.22

 திருக்குறள் :

பால் : பொருட்பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம்:தீ நட்பு 

குறள் எண்:815.

செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. 

பொருள்:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி :

What is one man's meal is another man's poison.


பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

வெற்றி எனும் உயரத்தை
அடைய ஏணியாக
இருக்கும் ஆயுதம் தான்
தன்னம்பிக்கை அதை
எப்போதும் வளர்த்துக் கொள்.....சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை? 

22 மொழிகள். 

2. 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? 

4 நிமிடம்.

English words & meanings :

Astonished - surprised, மிகுந்த ஆச்சர்யம், 

narrate - tell, சொல்லுதல்

ஆரோக்ய வாழ்வு :

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.





நீதிக்கதை


உருவத்தை பார்த்து பழகாதே

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...

ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

26.02.22

✅ தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்.


✅ புதுச்சேரியில் மார்ச் 19-ம் தேதி காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


✅ நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்.

✅ ரஷ்யாவின் தாக்குதலால் விமான போக்குவரத்து நிறுத்தம் - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.

✅ உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

✅ 'மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 மணி நேரமாக தஞ்சம்... எங்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும்' - உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்.

✅  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றியது வங்கதேசம்.

✅ காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு.

இன்றைய தலைப்புச் செய்திகள்

✅ தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்.

 ✅  காவல்துறை அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு புதுச்சேரியில் மார்ச் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


✅ சந்திரயான்-2 விண்கலம் நாசாவின் செயற்கைக்கோளால் பிடிக்கப்படாத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைக் கண்டறிகிறது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தகவல்

 ✅  ரஷ்ய தாக்குதலால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது - இப்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.

 ✅  உக்ரைன் தலைநகர் கீவின் வடக்கே ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்யா கூறியுள்ளது.

 ✅  '30 மணி நேரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம்... பிரதமர் மோடி எங்களை மீட்க வேண்டும்' - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள்.

✅ 2nd ODI against Afghanistan: Bangladesh won the series.

 ✅ India's Mirabai Janu qualifies for Commonwealth Games

Covaiict

Friday, 25 February 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.22

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 814

குறள்:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின்
தனித் தலை

பொருள்:
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பி ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.

பழமொழி :

இரண்டு வார்த்தைகளை விட ஒரு நேரத்தில் ஒரு வார்த்தை சிறந்தது.


வேலை அறிந்து பேசு,நாளை அறிந்து பயணம் மேற்கோள்.

இரண்டொழுக்க பண்புகள்:

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

சிறந்த குறிக்கோளை
அடைவதற்காக மனிதனால்
செய்யப்படும் முயற்சியே
பிற்காலத்தில் மற்றவர்களால்
படிக்கப்படும்
வரலாறாக மாறுகிறது...பரமஹம்சர்


பொது அறிவு :

1. நோபல் பரிசு வழங்கும் நாடு எது? 

ஸ்வீடன். 

2. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்? 

ரபீந்திரநாத் தாகூர்.

English words & meanings :

Gorgeous - very beautiful, மிகவும் அழகான, 

Spotless - very clean, சிறிதும் அழுக்கற்ற தூய்மை இடம்

ஆரோக்ய வாழ்வு :

பப்பாளியில் வைட்டமின் சி, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள். அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவை சரியாகும். அனீமியா என்னும் ரத்தசோகையை தீர்த்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அல்சர், கண்ணெரிச்சல் குணமாக உதவுகிறது. குழந்தைகள் அடிக்கடி பப்பாளி சாப்பிடுவதால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாக இருக்கும்.



நீதிக்கதை


இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. 

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது. 

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். 

நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

இன்றைய செய்திகள்

25.02.22

◆உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிக்கையாளர் நலவாரியம்' அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

◆"ரஷ்யா - உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்" என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

◆போர் பதற்றம் நிலவும் உக்ரைனில் இருந்து 240 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

◆உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் உள்ளன.

◆நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி; இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று அசத்தல்.

◆சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

இன்றைய தலைப்புச் செய்திகள்


◆ உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களுக்கு உதவ, தொடர்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 ◆   பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக அரசு 'பத்திரிக்கையாளர் நல வாரியம்' அமைத்துள்ளது.

◆  "Russia-Ukraine conflict could become a major issue"  India has expressed concern at the Security Council meeting.

 ◆ 240 Indian students return home from war-torn Ukraine

 ◆ Many countries and international organizations have condemned Russia's attack on Ukraine.  Most countries are opposed to Russia's military action.

  ◆ Last ODI against New Zealand; the Indian women's team wins

  ◆ Nandini advanced to the semifinals of the International Boxing Championships to secure the first medal for India.
 

Covaiict

இன்றைய தினம்

 உயிரி வேதியியலாளர் போபஸ் லெவினி (Phoebus Levene) பிறந்த நாள் - பிப்ரவரி 25:

* லிதுவேனியாவின் சகர் பகுதியில் யூதக் குடும்பத்தில் (1869) பிறந்தார். தந்தை ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நடத்திவந்தார். குடும்பம் விரைவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் குடியேறியது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்தார். இம்பீரியல் மிலிட்டரி மருத்துவ அகாடமியில் மருத்துவம் பயின்றார்.


* மாணவப் பருவத்தின்போது, கரிம வேதியியல் பேராசிரியரின் ஆய்வுக்கூடத்தில் அவருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததால் உயிரி வேதியியலில் ஆர்வம் பிறந்தது. அப்போது, ரஷ்யாவில் யூத எதிர்ப்பு அதிகரித்ததாலும், பல இடங்களில் இனப்படுகொலை நடந்ததாலும், இவரது குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர்.


* பிறகு, மருத்துவப் படிப்பை முடிப்பதற்காக ரஷ்யா சென்றவர், பட்டம் பெற்றதும் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். நியூயார்க் நகரில் மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கினார். ஓய்வுநேரத்தில், உயிரி வேதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சர்க்கரைகளின் வேதியியல் கட்டமைப்பு குறித்து ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டார்.


* நியூயார்க் மாநில மருத்துவமனையின் நோயியல் அமைப்பில் இணை ஆய்வாளராக நியமனம் பெற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டதால் பணியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஆல்பிரெட் கொஸல், எமில் ஃபிஷர் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற வேதியியலாளர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.


* நன்றாக உடல்நலம் தேறியவர், மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ராக்ஃபெல்லர் நிறுவனத்தில் உயிரி வேதியியல் ஆய்வுக்கூடத் தலைவராக 1905-ல் நியமிக்கப்பட்டார். இறுதிவரை அங்கு பணியாற்றினார். நியூக்ளிக் அமிலம் குறித்த தனது பெரும்பாலான ஆய்வுகளை இங்குதான் இவர் மேற்கொண்டார்.


* டிஎன்ஏ-வின் கூறுகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டார். அனைத்து உயிரினங்களிலும் அடிப்படையான வேதிப்பொருளான ரைபோஸை 1909-ல் கண்டறிந்தார். டி.என்ஏ ஆர்என்ஏ இடையிலான வேறுபாடுகளை விளக்கினார். இவைதான் உயிரினத்தை தக்கவைக்கும் முதன்மைக் கூறுகள் என்பதையும் கண்டறிந்தார்.


 நியூக்ளிக் அமிலங்களின் அமைப்பு, செயல்முறை பற்றி ஆய்வு மேற்கொண்டார். டிஎன்ஏ கூறுகளைக் கண்டறிந்ததோடு, இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதையும் எடுத்துக் கூறினார். இவற்றை ‘நியூக்ளியோடைடு’ என்று குறிப்பிட்டார். இவற்றை தனியே பிரித்தெடுத்தார்.


* டிஎன்ஏ கட்டமைப்பு குறித்த இவரது கூற்று பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டாலும், டிஎன்ஏவின் கட்டமைப்பு குறித்து தீர்மானிக்க இவரது கூற்றுதான் அடிப்படையாக இருந்தது. நியூக்ளிக் அமிலங்கள் குறித்த ஆராய்ச்சிகளால் புகழ்பெற்றார். உயிரி வேதியியல் கட்டமைப்புகள் குறித்த தனது ஆராய்ச்சிகள் தொடர்பாக 700-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.


* அறிவியல் தவிர கலைப்பொருட்களிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது வீடு முழுவதும் கலைப்பொருட்கள், ஓவியங்கள் நிறைந்திருந்தன. வீட்டிலேயே ஏராளமான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். ரஷ்யன், ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிய மொழிகளை அறிந்திருந்தார்.


அனுபவம், அறிவு நிறைந்த இவர் மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பாளர். இதனால் சகாக்கள், நண்பர்களால் மிகவும் நேசிக்கப் பட்டார். மாணவர்கள் விரும்பும் ஆசிரியராகப் புகழ்பெற்றார். நியூக்ளிக் அமிலங்கள் குறித்த ஆராய்ச்சிகளின் முன்னோடி எனப் போற்றப்படும் போபஸ் லெவினி 71-வது வயதில் (1940) மறைந்தார்.

நம் உடலைப்பற்றி அறிவோம்..


நம் உடலைப்பற்றி அறிவோம்...

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். 

மரணத்திற்கு பிறகும் கூட மனிதனின் நகத்திற்கு ஒன்றுமே ஆகாது....

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்...

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தப் பிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள் :-


1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.

3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை (Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

4. மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

5. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச் சிறிய செல் ஆணின் விந்தாகும்.

6. நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தைச் சுற்றி வந்து விடலாம்.

தசை :-

1. கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.

2. மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கால்கள் :-

1. காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளைக் கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளைக் கொண்டிருக்கும்.

2. கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

3. மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள் :-

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளைப் பிரித்தெரியும் சக்தியுண்டு.

மூளை :-

1. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

2. நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்கிறது.

3. நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

இறப்பு :-

மனிதன் உயிரிழந்தப் பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்

மூளை- 10 நிமிடங்கள்

கால்கள்- 4 மணிநேரம்

தசைகள்- 5 நாட்கள்

இதயம்- சில நிமிடங்கள் √

 

Saturday, 5 February 2022

இன்றைய தினம்

 வரலாற்றில் இன்று - பிப்ரவரி 5 - 1909 - பிளாஸ்டிக் என்றழைக்கப்படும் நெகிழி கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாள்:

"பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். 


அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும். அதற்கு முன்னரே பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தயாரிக்கும் முயற்சியில் பலர்ஈடுபட்டிருந்தாலும் பெல்ஜிய ரசாயன விஞ்ஞானி லியோ பெகலேந்த் என்பவர்தான் வர்த்தகப் பயன்பாட்டுக்குரிய வகையில் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தார்.

காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் பெரும்பாலானவை நெகிழிப் பொருள்கள் தான். பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.

நெகிழியின் மக்காத தன்மையால் வீணாக எறியப்படும் நெகிழிப் பொருட்களால் சுற்றுப்புற சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே நெகிழியின் பயன்பாடு கேள்விக்குரியதாகிவிட்டது. அதன் பயன்பாட்டை குறைக்கவேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்கள் அனைவரிடமும் தோன்றியுள்ளது

Friday, 4 February 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.02.22

திருக்குறள் :

பால்:பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: படைச்செருக்கு

குறள் எண்: 774
குறள்:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

பொருள்:
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்ற புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும். 

2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.


பொன்மொழி :

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது. ____காமராசர்

பொது அறிவு :

1. சமீபத்தில் எங்கு நெகிழி பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது? 

மங்களூரு. 

2. தமிழ்நாட்டில் எங்கு நெகிழி பூங்கா அமைந்துள்ளது? 

திருவள்ளூர் மாவட்டம் - வோயல்லூர்.

English words & meanings :


Incident. நிகழ்ச்சி
Remember நினைவுபடுத்துதல்
Convenient. வசதியான
Platform. நடைபாதை
Involve. ஈடுபாடு

ஆரோக்ய வாழ்வு :

நாவல் பழத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும். வைட்டமின் பி1,பி2,பி5 ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரையை தடுக்கும் அருமருந்து.

கணினி யுகம் :

Ctrl + O - Open file. 

Ctrl + Shift + p - Open project

பிப்ரவரி 4

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்


வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


உலகப் புற்றுநோய் நாள்




உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்[1

நீதிக்கதை


ஒருவர் தினமும் கோவிலுக்கு தியானம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார். அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் தாமதமானது. அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி, அப்படி என்ன தான் தியானத்திலே இருக்கு? இன்று இவ்வளவு தாமதமாக வீட்டிற்கு திரும்பி வருகிறீர்களே. தினமும் அங்கு சென்றுவிட்டு வருகிறீர்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அங்கு சென்றுவிட்டு வருவது நன்றாகவே இருக்கிறது என்றார். கோபமடைந்த மனைவி, முதலில் வீட்டில இருக்கின்ற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு வாங்க என்றாள். 

அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார். மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது. உடனே மனைவி, தினமும் தாமதமா வர்றீங்க. கேட்டால் தியானத்திற்குச் சென்றேன் என்று சொல்றீங்க. என்ன சொன்னார்கள் என்று கேட்டால் ஒன்றும் தெரியலைன்னு சொல்றீங்க. நீங்க தியானம் கேட்கப்போறதன் பயன் இதோ இந்த சல்லடையில் ஊற்றிய தண்ணீரைப் போலத்தான் எதற்கும் பயன்படாது என்று கூறினாள்.

நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேண்டுமானால் நிரப்ப முடியாமல் போகலாம். ஆனால், அழுக்காக இருந்த சல்லடை இப்பொழுது பார் நன்றாக சுத்தமாகி விட்டது. அதுபோல, தியானத்தில் சொல்கிற விஷயம் வேண்டுமானால் எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனால் என்னுடைய மனதில் இருக்கிற அழுக்கையெல்லாம் படிப்படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது என்று சொன்னார். 

நீதி :
உபதேசம் கேட்பதால் உள்ளம் தூய்மையடையும்.

இன்றைய செய்திகள்

04.02.22

★நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார், ஆளுநர் ஆர்.என்.ரவி.

★சென்னை புத்தகக் காட்சியை இம்மாதம் 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

★எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.


★வரும் ஆகஸ்ட்டில் சந்திரயான்- 3 -ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

★தடுப்பூசி செலுத்தாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு: ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

★19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

★தென்அமெரிக்க கண்டத்துக்கான உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே அணிகள் வெற்றி பெற்றன.

Today's Headlines

 ★ The bill passed in the Tamil Nadu Legislative Assembly seeking exemption from NEET examination has been sent back to the Government of Tamil Nadu by Governor RN Ravi .

 ★ The Government of Tamil Nadu has given permission to hold the Chennai Book Fair from the 16th of this month to the 6th of March.

 ★ General section consultation for MBBS, BDS courses started online.  Details of places reserved for students will be released on the 15th.


 ★ Union Minister of State for Science and Technology Dr. Jitendra Singh has said that Chandrayaan-3 is scheduled to be launched in August.

 ★ Dismissal if not vaccinated: US warns soldiers.

 ★ India defeated Australia by 96 runs in the semi-finals of the Under-19 World Cup to reach the final.

 ★ Brazil, Argentina and Uruguay won the World Cup qualifiers for the South American continent.
 
 
thanks to
Covai  ICT