Monday, 31 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

பழமொழி :

A double charge will break even a cannon

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே. 

2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன். 

பொன்மொழி :

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்.

பொது அறிவு :

1.காமராஜர் எப்போது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்? 

1963ஆம் ஆண்டு. 

2. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ? 

ஆறுகள்.

English words & meanings :

Neo-na-to-lo-gy - study of new born babies. Noun. பிறந்த குழந்தைகள் குறித்த மருத்துவ அறிவியல்.

ஆரோக்ய வாழ்வு :

பொதுவாக இளநீர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அந்த இளநீருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது புதினாவை சேர்த்து கலந்து குடித்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுவதோடு, உடல் நீண்ட நேரம் நீரேற்றத்துடன் இருக்கும்.


NMMS Q :
12 பசுக்கள் ஒரு புல்தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய ______________நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. விடை: 6 நாள்கள். 


விளக்கம்: 12 x 10 = 20 x Y; Y = (12 x 10)/20 = 6 நாள்கள்
இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. 

உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.
இன்றைய செய்திகள்
31.10.22

* தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 குழுக்கள் கண்காணிப்பு.

* உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு: குஜராத் அமைச்சரவை ஒப்புதல்.

* சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

* சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

* உலக ஜூனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

* தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்.

* சர்வதேச ஜூனியர் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது. 

Today's Headlines

* Chennai Metrology Department predicted mild rain in 20 districts of TN
In reflection of bird flu in Kerala 45 teams are formed in Namakkal
* In order to regularise the commercial shopping complexes and shops allotment by Local bodies a guidance team is set under the leader ship of internal affairs Secretary. 
* To execute common civil law Gujrat approved the formation of a team for the purpose. 
* In the capital of Somalia there is an explosion. More than 100 people were killed. 
* The Indians who wanted to work as Engineers in South Arabia should get the approval certificate AICTE implies and stresses this point. 
* In World Cup Junior Badminton TN player qualified for the finals. 
* In National Volleyball league TN women's team won the match. 


* In international Junior hockey match India won by defeated Australian team
 
 







Friday, 28 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2022

   திருக்குறள் :

பால்: அறத்துப்பால்


அதிகாரம்/Chapter: நீத்தார் பெருமை / The Greatness of Ascetics


குறள் 27:

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.


விளக்கம்

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.


பழமொழி :

He that can stay obtains.

பொறுத்தார் பூமி ஆள்வார்.



இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே எ‌ன்றாலு‌ம் மிக அக்கறையுடன் செய்வேன். 

2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.

பொன்மொழி :

உன்னை பேசும் உலக வாயை அடைக்க சொல் தேவை இல்லை உன் உன்னத செயல் தான் வேண்டும்.

பொது அறிவு :

1.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 

1986 . 

2.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்? 

செவ்வாய் கிரகத்தில்.

English words & meanings :

Me-li-to-lo-gy - the study of bees. Noun. The word Melitology comes from the Greek word Melitta means "bee". தேனீக்கள் குறித்த படிப்பு

ஆரோக்ய வாழ்வு :

பண்டிகை முடிந்த மறுநாள்,  எலுமிச்சை மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

NMMS Q :

தனி வட்டி காண உதவும் சூத்திரம்: _______________ 

(p x n x r)÷ 100 ; p = அசல்; n = காலம்; r = வட்டிவீதம்

நீதிக்கதை

ஏழ்மையிலும் நேர்மை

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர். 

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார். 

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார். 

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான். 


பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். 

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. 

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். 

நீதி :

பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.

இன்றைய செய்திகள்

28.10.22

* ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவு: உதவி மருத்துவர் பணிக்கு நவம்பரில் எழுத்து தேர்வு.

* தேசிய ஒற்றுமை தினமான அக்.31-ம் தேதி மாணவர்கள் பங்கேற்புடன் மாரத்தான்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ, யுஜிசி அறிவுறுத்தல்.

* தமிழகத்தில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

* போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் நேற்று ஒரு நாளில் 2,500 பேரிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்.

* உக்ரைனில் போர் தீவிரம் அடைவதால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் - இந்திய தூதரகம் அவசர உத்தரவு.

* காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என நியூசிலாந்து பிரதமர் பாராட்டு.

* சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நகரை சுற்றிய பல இடங்களில் தீவிர பொது முடக்கத்தை சீனா அறிவித்துள்ளது.

* டி20 உலகக்கோப்பை:
சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

* இந்திய ஆண்கள் கிரிக்கெட்  அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு.

* புரோ கபடி: டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி.

Today's Headlines

* Online Application Completion: Written Test in November for Asst.

*  Marathon with student participation on National Unity Day Oct 31: AICTE, UGC instructions to colleges.

*  The Chennai Meteorological Department has informed us that widespread heavy rains are likely to occur in Tamil Nadu on 29th and 30th.

*  In Tamil Nadu, 2.80 lakh people have traveled in special buses run on the occasion of Diwali.  According to the Tamil Nadu Transport Department, a revenue of Rs 9.54 crore has been obtained through this.

*  Traffic Violation: 2,500 people were fined Rs 15 lakh in one day yesterday in Chennai.

 * Indians to evacuate as the war intensifies in Ukraine - Indian Embassy Urgent Order

 * The Prime Minister of New Zealand hailed the role scientists play in monitoring the effects of climate change as incredibly important to our present and our future

the role scientists play in monitoring the effects of climate change as incredibly important to our present and our future.

 * China has announced a strict lockdown in many places around the city as the spread of Corona has increased again in the Chinese city of Wuhan.

*  T20 World Cup:

 India beat the Netherlands by 56 runs in the Super 12 round match.

 * Women's team to be paid at par with Indian men's cricket team: BCCI announcement

 * Pro Kabaddi: Bengal Warriors beat Delhi

 

 



Covai women


Thursday, 27 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடு

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2022

  திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள் : 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.


பொருள்:

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.


பழமொழி :

Good to forgive,best to forget.

மன்னிப்பதை விட மறப்பது நன்று.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே எ‌ன்றாலு‌ம் மிக அக்கறையுடன் செய்வேன். 

2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.

பொன்மொழி :

கடிகாரத்தை நிறுத்தலாம் காலத்தை அல்ல. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்

பொது அறிவு :

1. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையை வந்தடைய எத்தனை மைல்கள் பயணம் செய்கின்றன?

 6,30,04,000 மைல்கள். 

2. D.D.T யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 

டாக்டர் பால்முல்லர்.

English words & meanings :

Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is a infectious disease caused by Mycobacterium leprae. Noun. குஷ்டரோகம் குறித்த படிப்பு

ஆரோக்ய வாழ்வு :

மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும். வேண்டுமானால் இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.




 


NMMS Q :

அன்பு ஒரு தேர்வில் 500க்கு 436 மதிப்பெண்கள் பெற்றார் எனில் அவர் பெற்ற மதிப்பெண்களை சதவீதத்தில் கூறுக: 



விளக்கம் : அன்பு பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் = (436 / 500 ) x 100 = 87.2%


இன்றைய செய்திகள்

27.10.22

* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் அக்டோபர் 29-ல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை; அக்.30-ல் கனமழைக்கு வாய்ப்பு.

* பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை தாண்டியது: வியாபாரிகள் தகவல்.

* கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்.

* கரோனா காலத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

* அடுத்து வரும் சில காலம் பொருளாதார ரீதியில் கடினமான காலம் - உலக நாடுகளுக்கு சவுதி எச்சரிக்கை.

* ஐசிசி டி20 தரவரிசை: மீண்டும் டாப்-10க்குள் நுழைந்த கோலி.

* உலக பேட்மிண்டன் தரவரிசை: 3 ஆண்டுகளுக்கு பின் டாப்-5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் பிவி சிந்து.


* சுல்தான் ஆப் ஜோகர் ஹாக்கி கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்.


Today's Headlines


* The Madras High Court has ordered the Tamil Nadu School Education Department to issue a new notification so that only those who have passed the Teacher Eligibility Test can participate in the counseling for graduate teachers.

 * Northeast Monsoon begins in Tamil Nadu on October 29;  Chance of heavy rain on Oct 30.

* Firecracker sales cross Rs 200 crore: Traders report.

* Artist's Integrated Agricultural Development Program;  Reservations can be made to benefit from fallow land package: Minister MRK to farmers  Panneerselvam request.

* The US has praised India for its role in producing vaccines during the Corona period.

 *The next few days will be tough economically - Saudi warns the world.

*  ICC T20 Rankings: Kohli returns to top-10.

* Badminton World Rankings: PV Sindhu re-enters top-5 after 3 years.

* Sultan of Johor Hockey Cup: Team India beat Japan.

 

Covaiwomen




Wednesday, 26 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.

பொருள்:

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

பழமொழி :

Good counsel has no price.

நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது


இரண்டொழுக்க பண்புகள் :

1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே எ‌ன்றாலு‌ம் மிக அக்கறையுடன் செய்வேன். 

2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.

பொன்மொழி :

துன்பத்தில் விழுந்து எழுபவன் வாழ்க்கையின் எல்லை வரை இன்பம் காண்பான்.

பொது அறிவு :

1. முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் எது? 

சிலப்பதிகாரம். 

2. பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது? 

கேரளா

English words & meanings :

Kinesiology - a study of human movement. Noun. மனித உடல் இயக்கத்தை குறித்த அறிவியல்

ஆரோக்ய வாழ்வு :

பண்டிகை காலம் முடிந்த பின்னர் உடலை சுத்தம் செய்ய வேண்டியது என்பது தற்போதைய காலத்தில் மிகவும் முக்கியம். அதற்கு ஆரஞ்சு மற்றும் கேரட் பெரிதும் உதவி புரியும். உங்கள் வீட்டில் ஆரஞ்சு, கேரட் இரண்டுமே இருந்தால், இரண்டையும் சாறு எடுத்து ஒன்றாக கலந்து குடியுங்கள். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் சிறப்பாக வெளியேற்றப்படும்

 


சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்து மாலையை எடுத்து சென்றனர். 


சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் பெருமூச்சு விட்டன.


இன்றைய செய்திகள்

26.10.22


  இந்தியாவில் அகமதாபாத், ஜெய்ப்பூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.

  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

 நாளை முதல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு.

  சென்னையில் பட்டாசு வெடிப்பினால் காற்று மாசு 345 லில் இருந்து 786 ஆக அதிகரிப்பு.

 பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக். பல்வேறு தலைவர்கள் வாழ்த்து.

 டி20 உலகக்கோப்பை இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.


Today's Headlines


  A partial solar eclipse was seen in India's cities including Ahmedabad, Jaipur, and Chennai.

   Meteorological Department has announced that it will rain in 8 districts in Tamil Nadu and the rain will last for 4 days.

   From tomorrow, Notice that penalties will be collected from those violating the rules as per the amended Motor Vehicle Act.

   Air pollution increased from 345 to 786 due to a firecracker explosion in Chennai.

  Rishi Sunak of Indian origin was sworn in as the Prime Minister of Britain.  Greeted by leaders.

   Australia beat   Sri Lanka by 7 wickets in T20 World Cup.


 

 



Covai women ICT


Friday, 21 October 2022

இன்றைய தினம்

 ஆல்பிரெட் நோபல் பிறந்த தின சிறப்பு பகிர்வு!


அறிவியலாளர், நோபல் பரிசு நிறுவனருமான ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் அக்டோபர் 21; 1833

 


ஆல்பிரெட் நோபலினின் தந்தை இம்மானுவேல் புகழ் பெற்ற பொறியியலாளர். ஸ்டோக்ஹோம் நகரத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர் வறுமையின் காரணமாக ரஷ்யா நோக்கி நகர்ந்தார். அங்கே போர் நடக்கும் சமயங்களில் உபயோகப்படுத்தும் வகையில் கன்பவுடரைப் பயன்படுத்தினார். ஆனாலும் போர் முடிந்தபின் வறுமையின் பிடிக்கு தள்ளப்பட்டார்; 

அவரின் பிள்ளையான ஆல்பிரெட் நோபலோ கவிதை, இலக்கியம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.

மகனின் ஆர்வத்தை அதிர்ந்த தந்தை ஏற்கனவே வேதி பொறியியல் படித்திருந்த மகனை பாரிஸில் புகழ் பெற்ற ஒரு வேதியியல் நிபுணரிடம் அனுப்பினார்; 

அங்கேதான் நைட்ரோ க்ளிசரனை பார்த்தார்; அது வெடிமருந்து பவுடரை மாதிரி பலமடங்கு ஆற்றல் மிகுந்து இருந்தது, எனினும் அது கொஞ்சம் அழுத்தம், வெப்பம் மாற்றங்களில் கூடவெடித்து விடும் தன்மை கொண்டிருந்தது.

அதை எல்லாரும் பயன்படுத்தும் வகையில் மாற்றும் ஆய்வில் ஈடுபட்டார் மனிதர். இதில் தன் தம்பியையே ஒரு வெடிவிபத்தில் இழந்தார். 

அப்பொழுது 'மரணத்தின் வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்!' என்று பிரெஞ்சு இதழ்கள் தலைப்பு செய்தி வாசிக்க அதிர்ந்தார் அவர். 

ஆல்பிரெட் நோபல் ஸ்டா க்ஹோமில் ஆய்வு செய்ய அரசு தடை விதித்தது.

இறுதியில் அவர்கள் நாட்டில் கிடைக்கும் கேய்சல்கர் எனும் களிமண்ணை கலந்து டைனமைட்டை உருவாக்கினார், அது மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள், பாலங்கள் கட்டப் பயன்பட்டது. 

ஆனால் அதையே போரில் பயன்படுத்தி பல உயிர்களைக் குடிக்க ஆரம்பித்தன ராணுவம், உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு அவர் நாற்பத்தி மூன்று வயதிலேயே நொந்து போய் முடங்கிப்போனார் .

ஆல்பிரட் நோபல் உதவியாக பெர்த்தா என்கிற பெண் செயலராக வந்தது அவர் வாழ்வில் பெரிய மாற்றம். அவரின் பாவத்துக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் பெர்த்தா. உங்கள் ஆயுதங்களை கீழே போடுங்கள் என ஒரு நூலையும் எழுதினார். 

பின் நோபலை விட்டு பிரிந்து திருமணம் செய்துகொண்டு அவர் வெளியேறிவிட்டாலும் அவரின் தாக்கத்தில் நோபல் தனிமையில் தன்னால் ஏற்பட்ட அழிவிற்கு பிராயசித்தம் தேட யோசித்ததன் விளைவு அவரின் உயிலில் கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள அவரின் சொத்தில் இருந்து வரும் வட்டியில் வருடாவருடம் அமைதி அறிவியல் உலக முன்னேற்றம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு தருபவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என அவர் அறிவித்து விட்டு போனதன் விளைவாக உண்டானதே நோபல் பரிசு.

இலக்கியம், இயற்பியல், வேதியியல் மருத்துவம் . உலக அமைதி பொருளாதாரம் ஆகியத்துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.10.2022

 திருக்குறள் :

பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: நீத்தார் பெருமை


குறள் : 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு


பொருள் :

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்


பழமொழி :

Caution is the parent of safety


முன்னெச்சரிக்கையே பாதுகாப்பிற்கு பிதா.



இரண்டொழுக்க பண்புகள் :

1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன்.

 2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.

பொன்மொழி :

அழுகையை ரசிப்பவர்கள் தான் ஆனந்தமாய் சிரிக்க முடியும்.

பொது அறிவு :

1. டி என் ஏ (D.N.A )என்பது யாது? 

டியாக்சிரிபோ நீயூக்ளியோ ஆசிட்

. 2. உலக போலியோ நோய் ஒழிப்பு தினம் எப்போது? 

ஏப்ரல் 7.

English words & meanings :

Jarina - a short South American palm tree. Noun. குட்டையான தென் அமெரிக்க பனை மரம். பெயர்ச் சொல்.

ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

NMMS Q :

நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிறைவிகிதம் - விடை : 1 : 8



அக்டோபர் 21


ஆல்ஃபிரட் நோபெல் அவ்ர்களின் பிறந்தநாள்


 


ஆல்ஃபிரட் நோபெல் ( Alfred Bernhard Nobel (உதவி·தகவல்)(பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 திசம்பர் 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

நீதிக்கதை


ஆந்தைக் கூட்டம்


ஒரு காட்டில் சிரஞ்சீவி எனும் காகம் நெடுநாட்களாக ஆந்தைக் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு திட்டம் தீட்டியது. அத்திட்டத்தின்படி சிரஞ்சீவி என்ற காகம் ஒவ்வொரு நாளும் ஒரு சுள்ளி என, நாள்தோறும் சுள்ளிகளை எடுத்து வந்து ஒரு குகையின் வாயிலில் நிறைத்து கொண்டே வந்தது. சிரஞ்சீவியின் நடத்தையில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை. பகற்பொழுதில் கண்பார்வையற்ற ஆந்தைக் கூட்டம் குகைக்குள் அடைந்து, தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் தக்க தருணம் என்று நினைத்த சிரஞ்சீவி அந்தக் குகையைவிட்டு வெளியேறியது. 


தன்னுடைய காகராஜனைச் சந்தித்த சிரஞ்சீவி, ராஜா! உடனடியாக, எல்லாக் காகங்களையும் அழைத்து, அவர்களிடம் ஆளுக்கொரு எரியும் கொள்ளியைக் கொடுங்கள். ஆந்தையின் குகை வாசலில் நான் குவித்து வைத்துள்ள சுள்ளிக்குவியலில் வைத்து விடட்டும். உடனே, குகையின் வாசல் தீப்பற்றி எரியும். ஆந்தைக் கூட்டம் அனைத்தும் அந்தத் தீயில் வெந்து அழியும் என்றது சிரஞ்சீவி. 


சிரஞ்சீவியின் திட்டப்படி, காகராஜா தன் காகக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு எரியும் கொள்ளியுடன் ஆந்தைக் குகையை அடைந்தது. அங்கு சிரஞ்சீவி குவித்துவைத்துள்ள சுள்ளிகளில் தீயை மூட்டியது. நெருப்பும் புகையும் குகைக்குள் மண்டியதில் ஆந்தைகள் அனைத்தும் அழிந்தன. 


ஆந்தைக் கூட்டம் அழிந்த பின்னர், காகராஜா தன்னுடைய பழைய ஆலமரத்தில் வழக்கம்போலத் தன்னுடைய அரசாட்சியை நடத்தி வந்தது. பின் காக ராஜன் சிரஞ்சீவியை அரசவைக்கு அழைத்து, நீ எப்படி ஆந்தைக் கூட்டத்தை நம்பவைத்து ஏமாற்றினாய் என்று எங்களுக்கு விளக்கிக் கூறு என்று கேட்டது. 


நெருப்பு தன் வலிமையால் காட்டையே அழிக்கவல்லது. மரங்கள் தன் வேர்களை நிலத்தில் ஊன்றி இருந்தாலும், மிருதுவான தன்மை கொண்ட தண்ணீர்ரும் காற்றும் மரங்களை வேரோடுப் பிடுங்கிச் சாய்த்து விடுகின்றனவே அது போலத்தான் நானும் செய்தேன் என்றது சிரஞ்சீவி. 


நீதி :

எதிரியை அழிக்க தகுந்த நேரம் வரும் வரை காத்திருந்து புத்தியால் அழிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

21.10.22


*பசுமை தமிழகம் திட்டம்: 2.50 கோடி மரக்கன்றுகளை இந்த மழைக் காலத்திலேயே நட அறிவுறுத்தல்.


*ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


*கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது: அகர்வால் மருத்துவமனை அறிவுறுத்தல்.


*எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடங்கியது: சிறப்பு பிரிவில் 65 பேருக்கு கல்லூரி ஒதுக்கீடு.


*இந்தியாவில் ‘ஏகே 203’ துப்பாக்கிகள் தயாரிப்பை விரைவில் தொடங்க ரஷ்யா திட்டம்.


*பணவீக்கத்தால் வாழ்க்கை செலவு அதிகரிப்பு: பிரிட்டனில் ஒரு நாள் உணவை தவிர்க்கும் லட்சக்கணக்கான மக்கள்.


* டி20 உலகக் கோப்பை: வெளியேறியது நமிபியா- சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து முன்னேற்றம்.


* உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.


* 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த போட்டி: முதன்முறையாக 3 பதக்கங்கள் வென்று இந்திய வீரர்கள் சாதனை.


Today's Headlines


* Green Tamil Nadu Scheme: Instructions to plant 2.50 crore saplings this monsoon.


* The Tamil Nadu government has ordered to increase in the upper age limit for the appointment of teachers.

* Don't burst crackers while wearing contact lenses: Agarwal Hospital advises.

* MBBS, BDS Counseling Begins: College Allotment for 65 Candidates in Special Category

 * Russia plans to start production of 'AK 203' rifles in India soon.

 * Cost of living rises due to inflation: Millions skip a day's meal in Britain

 * T20 World Cup: Namibia exit, Netherlands advance to Super 12 round

 * Indian team won the gold medal in the World Shooting Championship.

 *  Under-23 WorldWrestling Championship: Indian athletes won 3 medals for the first time

 

 



Covai women


Monday, 17 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2022

    திருக்குறள் :

பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது


பொருள்:

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.


பழமொழி :

A useful trade is a mine of gold

கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன். 

2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.

பொன்மொழி :

உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்! தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான் - சிம்மன்ஸ்

பொது அறிவு :

1. பூகம்பத்தின் அதிர்வு வேகத்தை அளக்கும் கருவி எது ? 

சீஸ்மோ கிராஃப்.

 2. ரேடியட்டர் என்பது என்ன? 

குளிர்விக்கும் கருவி.

English words & meanings :

flu-id - a substance that has no definite shape and is able to flow. Noun. The paint is more fluid than tube colors. பாய்மம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காய் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது.

கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, கொத்தரவரங்காய் சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன.



 


ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு இறந்துபோனது. 


நீதி :

தனக்கு தகாத காரியங்களை செய்தல் ஆகாது!


இன்றைய செய்திகள்

17.10.22


* போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் எச்சரிக்கை.

* காவிரி டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழு ஆய்வு.

* தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


* தமிழக மின் கட்டண உயர்வு 1-D விதியால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் அதிகம் பாதிக்க வாய்ப்பு.

* வணிகச் சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோவின் ‘எல்விஎம் 3’ ராக்கெட் : 36 செயற்கைக்கோள்களுடன் 23-ல் விண்ணில் பாய்கிறது.

* அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பணவீக்கப் பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

* துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த தீ விபத்தில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

* டி20 உலகக் கோப்பை: அனல் பறந்த போட்டியில் நெதர்லாந்து அணி திரில் வெற்றி.

* இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியின் 7-வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

* ஜூனியர் கால்பந்து லீக் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.


Today's Headlines


* Severe action will be taken against fake doctors, warned the Tamil Nadu Medical Council Chairman

* In Cauvery Delta District's paddy Procurement, the moisture in paddy is inspected by the Central Government team.

* Tamilnadu Metrology Department predicted and warned that there may be heavy rains in some districts of TN.

* Due to the rise in Electric charges as per the 1-D rule middle class and the poor will be affected more.

* The ISRO *LVM 3* rocket set its foot in the commercial. It is ready to be launched on 23rd with 36 Satellites.

* The economic condition of the US is strong. Money inflation is a global problem - US president Joe Paiden.

* In a fire accident at a mine in Turkey 40 persons were killed and many got injured.

T20 World Cup: in the tough tournament Netherlands won the match.

* Indian grandmaster Arjun Erikai defeated World Champion Magnus Carlson in CMS Rapid online match.

* Today in Chennai Junior Football team starts.

 

 



Covai women ICT_


Sunday, 16 October 2022

*NMMS பயிற்சி* *MAT - பகுதி

  *NMMS பயிற்சி* *MAT - பகுதி*

*ஒரு நிமிட கற்றல்(shorts)*

*35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நன்னாளில் பயிற்சியைத் தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள

*1.எண் தொடர்வரிசை*
https://youtube.com/shorts/yYGQ7ED_WIE?feature=share

*2.எழுத்து தொடர்வரிசை*
https://youtube.com/shorts/WCw6FIuAMNg?feature=share

*3.ஒப்புமை எண்கள்*
https://youtube.com/shorts/H7N-FXPzjT4?feature=share

*4.ஒப்புமை எழுத்துக்கள்*
https://youtube.com/shorts/-Lbkh7Aeiyw?feature=share

*5.ஒப்புமை வார்த்தைகள்*
https://youtube.com/shorts/VuKHF1_Kzic?feature=share

*6.மாறுபட்ட எண்*
https://youtube.com/shorts/kcgL-9fR2gY?feature=share

*7.மாறுபட்ட வார்த்தை*
https://youtube.com/shorts/UmoSevaFGRs?feature=share

*8.படத்தில் விடுபட்ட எண்*
https://youtube.com/shorts/4ME4JaxsKkE?feature=share

*9.எண்,எழுத்து குறியிடுதல்*
https://youtube.com/shorts/y9DvTiIuIzg?feature=share

*10.படத்திலுள்ள வடிவங்களின் எண்ணிக்கை*
https://youtube.com/shorts/4iUDBfMw-w4?feature=share

*11.வென் படங்கள்*
https://youtube.com/shorts/9Gumw4_z3Iw?feature=share

  *12.வார்த்தைக்குள் அமையாத வார்த்தை*
https://youtube.com/shorts/vB9oUu4Da1s?feature=share

*13.வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை*
https://youtube.com/shorts/WKzD20g71wE?feature=share

*14.செருகப்பட்ட படங்கள்*
https://youtube.com/shorts/TD8mvUyhkJw?feature=share

*15.படத்தில் விடுபட்ட எழுத்து*
https://youtube.com/shorts/cbgbYlf4wgU?feature=share

*16.படத்தில் விடுபட்ட எண்*
https://youtube.com/shorts/4ME4JaxsKkE?feature=share

*17.எண்ணியல் சார்ந்த கணக்குகள்*
https://youtube.com/shorts/Cn8L2jN5W74?feature=share

*18.எண்கள் , குறிகள்*
https://youtube.com/shorts/9Y1oFG4g63s?feature=share

*19.ஆங்கில அகர வரிசை*
https://youtube.com/shorts/fmVTRCDcpb4?feature=share

*20.சூழ்நிலை கணக்குகள்*
https://youtube.com/shorts/jRKkjlgEYp0?feature=share

*21.வயது கணக்கு*
https://youtube.com/shorts/mAx2W1qU568?feature=share

*22 .இருக்கை அமர்வு கணக்கு*
https://youtube.com/shorts/q0UKDVInr6M?feature=share

*23 .உறவுமுறை கணக்குகள்*
https://youtube.com/shorts/i4ahmAd_53Q?feature=share

*24.வார்த்தைகளை பொருள் பட வரிசைப்படுத்துதல்*
https://youtube.com/shorts/CXHm6MeL6h4?feature=share

*25.பகடை கணக்குகள்*
https://youtube.com/shorts/6dbJ6uTPkcw?feature=share

*26.திசை சார்ந்த கணக்குகள்*
https://youtube.com/shorts/O8aG2YjhnJg?feature=share

*27.காலம் சார்ந்த கணக்குகள்*
https://youtube.com/shorts/LWEjNDSD-xM?feature=share

*28.புதிர் கணக்குகள்*
https://youtube.com/shorts/rLoVosafF3s?feature=share

*29.வரிசையில் தரம் காணல்*
https://youtube.com/shorts/8QI4AnCSkfA?feature=share

*30.பட தொடர்வரிசை*
https://youtube.com/shorts/qYQGtJzuvjg?feature=share

*31.ஒப்புமை படங்கள்*
https://youtube.com/shorts/NchEg40aFq0?feature=share

*32.மாறுபட்ட படங்கள்*
https://youtube.com/shorts/9r7AJ3TQ2e4?feature=share

*33.தண்ணீர் பிம்பம்*
https://youtube.com/shorts/_QPT04KDqj8?feature=share

*34.மறைந்திருக்கும் படங்கள்*
https://youtube.com/shorts/RFK4VlKscoM?feature=share 

 *35.படத்தினை முழுமை செய்யும் படம்*

https://youtu.be/Ie1MPba8RW4

*முழுமையான விளக்கம் அடங்கிய தொகுப்பு*
https://youtube.com/playlist?list=PLvRjZHP7oDHQ0vajfbrPmsE_gaqr2OTkU

*தொடர் பயிற்சி வெற்றிக்கு வழி*
https://tamstirupattursiva.blogspot.com/2022/10/nmms-mat-online-model-exam.html 

சிவா தமின் Tpt.

Friday, 14 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்14.10.2022

 திருக்குறள் :

"பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்

பொருள்:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்."

பழமொழி

"Nothing is impossible to a willing mind. 

 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு." 

இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.


பொன்மொழி :

தனி நபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால், அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது - பகத்சிங்

பொது அறிவு :

1. பலூனை கண்டுபிடித்தவர் யார்?

 ஜேக்கஸ் ஜோசப் மாண்ட்கோல்பையர்.


அமைச்சர் அறிவிப்பு.

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ.6,600 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் மூன்றாம் உலகப் போர் மூளுவது உறுதி என்று ரஷ்ய அதிகாரி எச்சரித்துள்ளார்.

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: 8-வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.

ஐநாக்ஸ் திரையரங்குகளில் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு - ஒப்பந்தம் கையெழுத்து.

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

Today's news

Crackers restriction on Diwali: Chennai Police important announcement.

 No compromise on academic qualification in appointment of college professors: High Court orders.

 National Medical Commission orders to start MBBS classes on November 15.

 Food Minister Chakrapani has said that the warehouses are ready to store 11 lakh tonnes of paddy so that it is not affected by monsoon rains.

 Maiden Pharma Stops Cough Medicine Production - Haryana Health Minister Notification

 The Union Cabinet yesterday approved the allocation of Rs 6,600 crore for development projects in the North Eastern states.

 A Russian official has warned that if Ukraine joins NATO, World War III is certain to break out.

 Women's Asia Cup Cricket: Team India enters the final for the 8th time.

 T20 World Cup Cricket Matches Live Broadcast at INOX Cinemas - Signing of Agreement.

 Tamil Nadu team registered their first victory in the Syed Mushtaq Ali Cup cricket tournament.



Covaiwomen


Thursday, 13 October 2022

6EngT2U1 - Sports Stars I

6EngT2U1 - Sports Stars I Find the name of sports and games - Find the words

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: வான் சிறப்பு


குறள் : 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


பொருள்:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.


பழமொழி :

Quality is more important than quantity.

அளவைவிட தரமே அதிமுக்கியம்.



இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா

பொது அறிவு :

1. இந்தியாவில் விமான தொழிற்சாலை எங்கு உள்ளது? 

பெங்களூரில் உள்ளது.

 2.இந்தியாவில் தோல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 

உத்திரபிரதேசம்.

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வைட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகும், ஒருவேளை கேரட் சாப்பிடுவது உங்கள் தினசரி ஊட்டச்சத்து மதிப்பில் 184% வழங்குகிறது. U.S. உணவு மற்றும் மருந்து நிர்வாகம், பெரியவர்கள் மற்றும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 900 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ பரிந்துரைக்கிறது. ஒரு முழு பச்சைக் கேரட்டில் FDA பரிந்துரையைப் பூர்த்தி செய்ய போதுமான வைட்டமின் A உள்ளது.




 




NMMS Q 74 :

விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 5, 4, 9, 13, 22, _________ 



விடை : 35. விளக்கம்: 5+4 = 9; 4+9 = 13; 9+ 13 = 22; 13 + 22= 35;


நீதிக்கதை

சொந்த இடம்


அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது. 


ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது. 


அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது. 


ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது. 


அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது. 


அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன. 


அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது. 


ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.


இன்றைய செய்திகள்

13.10.22


* மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைகிறது ‘கடவூர் தேவாங்கு சரணாலயம்’ - தமிழக அரசு அறிவிக்கை.


* தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


* மாதவரத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்காக சுரங்க கட்டுமானப் பணிகள் தீவிரம்: 52 அடி ஆழம், 492 அடி நீளத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது.


* ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு.


* பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.


* சர்வதேச அணுசக்தி முகமையில் சீன தீர்மானத்தை முறியடித்த இந்தியா - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.


* தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.


* தேசிய விளையாட்டில் டிரையத்லான் அணிகள் பிரிவில் தமிழகம் தங்கம் வென்றது.


* செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி குஜராத்தில் நடைபெற்று வந்த தேசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.



Today's Headlines


* The Madras High Court has ordered the Tamil Nadu government to respond in a case seeking to provide free laptops to differently-abled students.


*  'Kadavur Devangu Sanctuary' to be India's first Devangu Sanctuary - Tamil Nadu Govt.


*  MBBS graduates can apply for 1,021 Assistant Doctor vacancies in government hospitals in Tamil Nadu, Medical Staff Selection Board has announced.


 * The intensity of tunnel construction work for metro rail operation at Madhavaram: 52 feet deep, 492 feet long railway station.


 * Diwali Bonus for Railway Employees: Central Government Notification


*  A spaceship sent by NASA has successfully deflected an asteroid that was coming to hit the Earth and created a historic record.


 * India overturned China's resolution at the International Atomic Energy Agency - Union External Affairs Minister Jaishankar Information.


*  A Chennai school girl won 3 bronze medals in the national gymnastics competition.


*  Tamil Nadu won gold in the triathlon team category in the national games.


* The national sports competition which started on September 29 in Gujarat ended yesterday.

 

 



Covai women



Wednesday, 12 October 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2022

  திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

அதிகாரம் : வான் சிறப்பு. 

குறள் 12.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

பொருள் :

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்களுக்கு இந்த உணவாகவும் பயன்படுவது மழையே.

பழமொழி :

நீங்கள் வெளியே செல்லும் வரை ஒருபோதும் துடுப்பை வீச வேண்டாம்

கரையை அடையும் முன் துடுப்பை எறியாதே.

இரண்டொழுக்க பண்புகள்:

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன். 

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.

பொது அறிவு :

1. இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர் எது ? 

நெல் . 

2.இந்தியாவில் எந்த ஆண்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது ? 

1953 ஆம் ஆண்டு.

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

கேட்டனேஷன் - ஒரே தனிமங்களின் அணுக்களை பிணைத்து ஒரு சங்கிலியை உருவாக்குதல். கார்பன் அணுக்கள் கேட்டனேஷன் உருவாக்க முனைகின்றன. சங்கிலியாக்கம். சங்கிலி இணைப்பு

ஆரோக்ய வாழ்வு :

கேரட் வேர் காய்கறிகளை சார்ந்ததாகும், அவை எண்டோடாக்சின்கள், பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்ரோஜனுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் தனித்துவமான இழைகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நாட்களுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால், உயர் எண்டோடாக்சின்கள், உயர் கார்டிசோல் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லலாம். உடலில் உள்ள எண்டோடாக்சின்களை நச்சு நீக்க இது ஒரு சிறந்த வழியாகும்.



 


நீதிக்கதை

குகையுடன் பேசிய நரி

ஒரு காட்டில் கிரகிரன் என்ற சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் இரை தேடிக் காட்டின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்தும் அதற்கு ஒரு சிறிய இரைகூடக் கிடைக்கவில்லை. வழியில் ஒரு பெரிய குகையினைக் கண்டது. உடனே, சிங்கத்திற்கு ஒரு யோசனை பேசாமல் நாம் இந்தக் குகைக்குள் ஒளிந்து கொண்டால், இந்த குகையில் இருக்கும் விலங்குகள் இரை தேடிவிட்டு மீண்டும் இங்கேதானே வரும். அப்படி வரும் விலங்குகளை பிடித்து விடலாம் என்று நினைத்து அந்த குகைக்குள் சென்று படுத்துக் கொண்டது. 


அந்தக் குகையில் அவிபுச்சன் என்கிற ஒரு புத்திசாலியான நரி வசித்து வந்தது. தன் குகைக்குத் திரும்பி வந்து தன் குகைக்குள் நுழைய முனைந்தபோது குகையின் வாசலில் சிங்கத்தின் காலடித் தடங்கள் இருப்பதனைப் பார்த்து குகைக்குச் சிங்கம் ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. ஆனால் நரிக்கு ஒரு சந்தேகம்?. சிங்கம் உள்ளே இருக்கிறதா? அல்லது சென்று விட்டதா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக குகைக்கு வெளியே நின்று கொண்ட நரி, ஏய், குகையே! ஏய், குகையே! என்று அழைத்தது. சிங்கம் எழுந்தது. வெளியே ஒரு நரி இருப்பதனை அறிந்து கொண்டது. அது யாரிடம் பேசுகிறது என்று கவனித்தது. 


நரி, மீண்டும், ஏய், குகையே ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்றது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த நரி குகையிடம் பேசுகிறது? என்று யோசித்தது. நரி, குகையே என் மீது ஏதும் கோபமா? நீ தினமும் என்னிடம் பேசுவாயே? இன்று ஏன் என்னுடன் பேசாமல் அமைதியாக இருக்கிறாய்? என்று கேட்டது. அப்போதுதான் சிங்கத்திற்குப் புரிந்தது. அடடா! இந்தக் குகை தினமும் நரியுடன் பேசக்கூடியது போலும். ஆனால், இன்று ஏனோ இது பேசவில்லை என்று நினைத்தது. நரி, ஏய், குகையே! நீ பேசிய பிறகுதானே நான் உன்னுள் நுழைவேன். இன்று நீ பேசாமல் இருந்தால் நான் எப்படி உன்னுள் நுழைவேன்? என்றது. 


சிங்கம் பதறிப் போனது. அடடா! குகை பேசினால்தான் நரி குகைக்குள் வருமாமே! நரி குகைக்குள் வராவிட்டால் நமக்கு இரை கிடைக்காதே! என்று நினைத்த சிங்கம் குகைபோலப் பேசினால், அந்த நரி குகைக்குள் வந்துவிடும். நாமும் அதை அடித்துச் சாப்பிட்டு விடலாம்! என்று நினைத்து, ஏ நரியே! நான் வேறு சிந்தனையில் இருந்ததால் உன்னிடம் பேசவில்லை. தவறாக நினைக்காதே. வா உள்ளே! என்று குகை பேசுவது போல பேசி குரல் எழுப்பியது. அவ்வளவுதான், குகைக்குள் இருந்து சிங்கத்தின் குரல் வெளிவந்ததும் சுதாரித்துக் கொண்ட நரி, தப்பித்தோம் பிழைத்தோம் எனத் தலைதெறிக்க ஓடிப் போனது. 


நீதி:

எதனையும் செய்வதற்கு முன்பு ஆலோசித்துச் செய்யவேண்டும்.

இன்றைய செய்திகள்

12.10.22

*அதிக மழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்கப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

* வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தவிர்க்க கூட்டுறவுத் துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 * 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திற்கு புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையமும், 25 நகர்ப்புற சுகாதார மையமும் அமைக்க அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடைபெற்றது.

* ஃபிஃபா யு-17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் அஸ்டம் ஓரானின் குடும்பத்திற்கு ஜார்க்கண்ட் அரசு, டிவியும் இன்வெட்டரும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அந்தக் குடும்பமும் கிராமத்தினரும் முதல் முறையாக தங்கள் வீட்டுப் பெண் ஆடுகளத்தில் விளையாடுவதைப் பார்க்கிறார்கள்.

* பூமியில் இருந்து விண்ணில் 7,100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கண் கவரும் குமிழ் மூடிய நெபுலா புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.

* ஐ.நா. பொதுச் சபை அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது உக்ரைன்.

* தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

* 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்திய தாய்லாந்து அணி.

இன்றைய தலைப்புச் செய்திகள்

* கனமழை பெய்தாலும் மின் விநியோகம் பாதிக்கப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.

*வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்கள் சேதமடைவதை தவிர்க்க கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளுக்கு 17 அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  * 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது என அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 *இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பிரதமர் நரேந்திர மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 280 இடங்களில் தேசிய தொழிற்பயிற்சி மேளா நேற்று நடந்தது.

* FIFA U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய கேப்டன் அஸ்தம் ஓரனின் குடும்பத்திற்கு ஜார்கண்ட் அரசு டிவி மற்றும் இன்வெர்ட்டர் வழங்கியுள்ளது. இதன் மூலம், தங்கள் மகள் முதல் முறையாக மைதானத்தில் விளையாடுவதை குடும்பத்தினரும், கிராம மக்களும் நேரில் பார்த்து வருகின்றனர்.

 * பூமியில் இருந்து 7,100 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்ணைக் கவரும் குமிழியால் மூடப்பட்ட நெபுலாவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

* ஐநா பொதுச் சபையின் அவசர கூட்டத்தில், ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று விமர்சித்து உக்ரைன் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

* தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகம் பதக்க பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளது.

 * 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் மகளிர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது.

* மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்து அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

 

 த



கோவை பெண்கள்