Tuesday, 29 August 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2023

    

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.


விளக்கம்:


பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.



பழமொழி :

எப்போதும் இல்லாததை விட பின்னர் சிறந்தது


காலம் தாழ்த்தினாலும் கருமத்தை முடிப்பது நல்லது



இரண்டொழுக்க பண்புகள்:

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

நான் மெதுவாக நடப்பவன் தான்


ஆனால் ஒருபோதும் நடப்பதை நிறுத்தப்போவது இல்லை


– ஆப்ரஹாம் லிங்கன்

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது எது?




விடை: திருப்பூர்


2. தமிழ்நாட்டின் புனித பூமி என்று அழைக்கப்படுவது எது?

விடை: ராமநாதபுரம்

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 an·ti·par·a·sit·ic - ஒட்டுண்ணிகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை அழித்தல் அல்லது தடுப்பது. பெயரடை. ஒட்டுண்ணியை அழிக்கும் எதிர்உயிரி. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: கொழுப்பின் அளவைப் பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதன் மூலமும் நமது இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ஆகஸ்ட்29

தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்

தியான் சந்த் (தயான் சந்த், இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

நீதிக்கதை

கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்வது விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன். இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயந்து தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாது. அதை யாராலும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்க முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார்.

நீதி:

கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம.

இன்றைய செய்திகள்

29.08. 2023


*இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் -அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ!

*கனமழைக்கு வாய்ப்புள்ள ஐந்து மாவட்டங்களை எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம்.

*நான் மாநிலகு அதிகாரிகள் இன்று ஆலோசனை. காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தல்.

*6 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டு பொது வினாத்தாள் முறை அமல்.


*நான்கு வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது டிராகன் விண்கலம் - நாசா தகவல்.

*19ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

*மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் - தேசிய சாதனை படைத்த இந்திய வீராங்கனை - பாரு சவுத்ரி.

இன்றைய தலைப்புச் செய்திகள்

* இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் - அடுத்த அதிரடிக்கு இஸ்ரோ தயார்!

 *ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

 *இன்று நான்கு மாநில அதிகாரிகள் ஆலோசனை. காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 * 6 முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் பொது வினாத்தாள் முறை அமல்படுத்தப்படும்.

 *டிராகன் விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது - நாசா.

 *19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக ஈட்டி எறிந்து 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

 *பெண்களுக்கான ஸ்டீபிள்சேஸ் - இந்திய தடகள வீராங்கனை - பாரு சவுத்ரி தேசிய சாதனை படைத்தவர்.

 



கோவை பெண்கள் 


Monday, 28 August 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2023

 

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :247


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


விளக்கம்:


பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.



பழமொழி :

Better go to bed sleepless than rise in debt


கடனில்லா சோறு கால் வயிறு போதும்



இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

. 2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்


இன்று கடினமாக உள்ளது


நாளை மோசமாக இருக்கும்


ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.


– ஜாக் மா

பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: சிவகாசி


2. காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: கோவை


English words & meanings :

 wad(n)- soft fibrous material used for padding, packing etc. தக்கை. xebec (n) - a three masted arab ship மூன்று பாய்மரங்களுடைய அரேபிய கப்பல்

ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன.

நீதிக்கதை

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த  பட்டத்து

ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது" என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல்

மொத்த நீரையும் குடித்து

முடித்துவிட்டான் மன்னன்.

"பிரமாதம்... உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு,

ராணி"இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி ... நான் மொத்த

நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்"அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடித்தவள், ஒரு வாய் குடித்ததும்.... "சே... சே... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?" என்று கூறி அந்த நீரை துப்பி விடுகிறாள்.

"தேவி... நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது

தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, சிப்பியின் உள்ளிருக்கும் முத்தை அறியாமல்

முத்துக்களை  தவறவிடுவது போன்றதாகும்.  இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும். 

இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு 'நன்றி'கூறுங்கள்.

இன்றைய செய்திகள்

28.08. 2023

*சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டது-  இஸ்ரோ தலைவர் விளக்கம்.

*நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்.

*தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.

*13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.


*ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு.

*உலக பேட்மிண்டன் போட்டி : அரையிறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கல பதக்கம் வென்றார்.

Today's Headlines


* Chandrayaan-3 Landing Site Named Shivashakti - ISRO Chief Explains

* Vikram Lander to continuously monitor moon's temperature - ISRO info.

* Chief Minister M K Stalin congratulates the teachers of Tamil Nadu who won the National Good Teacher Award.

* Chance of heavy rain in 13 districts today - Information from Meteorological Department.

*Asian Games Indian Women's Football Team Announcement

*World Badminton Tournament: Pranai loses in semi-final - wins bronze medal.

 



Covai wome


Saturday, 26 August 2023

7th Assesment quiz English

7th Assessment quiz

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

Friday, 25 August 2023

7 th Assesment Quiz

 

7th Assessment quiz

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage: