Friday, 29 September 2023
Thursday, 28 September 2023
Tuesday, 19 September 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.23
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
விளக்கம்:
தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.
பழமொழி :
Cut your coat according to your cloth
வரவுக்குத் தக்க செலவு செய்
இரண்டொழுக்க பண்புகள் :
1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.
பொன்மொழி :
மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன். தந்தை பெரியார்
பொது அறிவு :
1. உலகிலேயே ஆழமான ஆழி எது?
விடை: மரியானா ஆழி
2.உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?
விடை: ரப்லேசியா அர்னால்டி
English words & meanings :
revitalize -restore strength புத்துயிர் ஊட்டு. aggression -violent behaviour வலுச்சண்டைக்குப் போதல்
ஆரோக்ய வாழ்வு :
கொண்டைக்கடலை:சாதாரணமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டைக் கடலை உள்ளது. அதனால் அதிகப்பட்சமான மக்கள் கொண்டை கடலையை சுவைத்திருப்போம். கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது.
செப்டம்பர் 19
சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்
சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.
நீதிக்கதை
பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான். இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான் . மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.
அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.
இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.
நீதி:
பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
19.09.2023
*விடை பெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் இன்று கோலாகல விழா.
*காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்: பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
*நிபா வைரஸ்: கடந்த இரண்டு நாட்கள் பாசிட்டிவ் இல்லை. கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி.
*திருப்பதி ரூ. 650 கோடியில் ஆறு கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு:
பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை எளிதில் செல்லலாம்.
*கரீபியன் பிரீமியர் லீக்: ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த
சாய்ஹோப்.
*21 ரன்னுக்கு ஆறு விக்கெட் ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த சிராஜ்.
Today's Headlines
*Valediction was given to Parliament Old Building. Grand ceremony will be there in the new building,Today.
*Quarterly Exam Starts Today: Common Single Question Paper System is being implemented again.
* Nipah virus: No positive for last two days. Kerala State Health Minister.
* Reopen of Rs. 650 crore six kilometer long flyover in Tirupathi:
Will have easy access from the bus station to the foothills.
*Caribbean Premier League: Scored 32 runs in one over
Saihope.
* Six wickets in 21 runs , player Siraj who set many records in one match today.
Covai women
Friday, 15 September 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
விளக்கம்:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
பழமொழி :
Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு
இரண்டொழுக்க பண்புகள் :
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.
2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி :
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாம். அறிஞர் அண்ணா
பொது அறிவு :
1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?
விடை: கோயமுத்தூர்
2. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்
விடை: மெலானின்
English words & meanings :
mag·ne·to·sphere - A region surrounding a planet, star etc. Noun. Our solar system has magnetosphere around it. காந்த மண்டலம். பெயர்ச் சொல்.
ஆரோக்ய வாழ்வு :
எள்: எள் அல்லது அதன் மூலம் தயாரிக்கப் படும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
செப்டம்பர் 15
அனைத்துலக சனநாயக நாள்
அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.
நீதிக்கதை
கெட்ட பழக்கங்களை ஆரம்பத்திலே அகற்று
ஒரு பணக்கார தொழிலதிபர் தனது மகனின் கெட்ட பழக்கங்களைக் கண்டு கவலைப்பட்டார். அவர் ஒரு வயதான ஞானியிடம் ஆலோசனை கேட்டார். முதியவர் அந்த மனிதனின் மகனைச் சந்திக்க அவரிடம் அழைத்து வரச் சொன்னார்.அவர்கள் காடுகளுக்குள் நடந்தார்கள், முதியவர் சிறுவனுக்கு ஒரு சிறிய மரக்கன்றைக் காட்டி அதை வெளியே இழுக்கச் சொன்னார். சிறுவன் அதை எளிதாகச் செய்தான், அவர்கள் நடந்தார்கள்.
முதியவர் சிறுவனிடம் ஒரு சிறிய செடியை பிடுங்கச் சொன்னார்.
சிறுவன் அதையும் கொஞ்சம் முயற்சி செய்து செய்தான்.
அவர்கள் நடந்து சென்றபோது, முதியவர் சிறுவனிடம் புதரை வெளியே இழுக்கச் சொன்னார், சிறுவன் அதை செய்தான். அடுத்தது ஒரு சிறிய மரம், அதை வெளியே இழுக்க சிறுவன் மிகவும் போராட வேண்டியிருந்ததுஇறுதியாக, முதியவர் ஒரு பெரிய மரத்தை சிறுவனிடம் காட்டி, அதை வெளியே இழுக்கச் சொன்னார். பலமுறை, வெவ்வேறு வழிகளில் முயற்சித்தும் சிறுவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. முதியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்து “பழக்க வழக்கங்களும் அப்படித்தான்” என்று கூறுனார். கெட்ட பழக்க வழக்கங்களை நாம் ஆரம்பத்திலே அகற்றி விட வேண்டும், அது பெரியதாக வளர்ந்து விட்டால் நம்மால் அகற்றுவது கடினமானது. நீதி: கெட்ட பழக்கங்கள் நம் அமைப்பில் குடியேறியவுடன் அவற்றை அகற்றுவது கடினம். ஆரமத்திலேயே அவற்றை அகற்றுவது நல்லது.
இன்றைய செய்திகள்
15.09.2023
*சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.
* தமிழகத்தில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர் ஆனார்கள். ஸ்ரீரங்க கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி.
* கடனை அடைத்த முப்பது நாட்களில் சொத்து பத்திரம் தராவிட்டால் நடவடிக்கை. வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு.
* தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.
* சூறாவளியாக சுழன்றுடித்த பென் ஸ்டோக்ஸ் - மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.
* உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.
Today's Headlines
*Dharman Shanmugaratnam took office as the ninth President of Singapore.
* Three women became priests for the first time in Tamil Nadu. Trained as Assistant Priests at Sriranga Temple.
* Action will be taken if the property bond is not provided within thirty days of payment of the loan. RBI New Directions for Banks and Financial Institutions
* 30 people in Tamil Nadu have Dengu. Precautionary and preventory measures in full pledge.
* Ben Stokes spins like a whirlwind - England won the third ODI.
* Afghanistan Team Announced for world cup cricket.
Covai women
Wednesday, 13 September 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.09.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
விளக்கம்:
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
பழமொழி :
Contentment is more than a kingdom
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
இரண்டொழுக்க பண்புகள் :
1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.
2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.
பொன்மொழி :
சமூக புரட்சி பணியில்
ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை
துன்பமானது தான். ஆனால்
அவர்களது பெயர் வரலாற்றில்
நிலைத்து நிற்கிறது. அறிஞர் அண்ணா
பொது அறிவு :
1.இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
விடை: ஆரியபட்டா
2. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
விடை: அக்னி
English words & meanings :
knav·er·y - Dishonest or crafty dealing. It is very dangerous to be a friend of a knavery. Noun. வஞ்சகர். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
எள்: செரிமானப் பாதையை பராமரிக்க எள் உதவுகிறது. அதில் அதிக நார்ச்சத்து மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது.
நீதிக்கதை
அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தன ர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும்.
ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று. அப்பொழுது தங்கையின் தலையை பிடித்து இழுத்து அடி அடி என்று பலமாக அடித்து விட்டாள் அக்காள்.
அதை அறிந்த பெற்றோர் அவளைத் திட்டி, ஒரு அறையில் தள்ளி, பூட்டி வைத்தனர், மேலும்,அவளுக்குப் பகல் உணவு அளிக்காமல் பட்டினி போட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. அப்பளம், வடை, பாயசத்துடன் எல்லோரும் வயிறு நிறைய உண்டு மகிழ்ந்தனர்.
அக்காள் பட்டினியாக கிடப்பாளே என்று இரக்கப்பட்டு, பெற்றோருக்குத் தெரியாமல், உணவை எடுத்துச் சென்றாள் தங்கை.
தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி, சாப்பிடச் செய்தாள். தங்கை தன்னிடம் கொண்டிருந்த அன்பையும், தான் அவளிடம் நடந்து கொண்ட மூர்க்கத்தனத்தையும் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர்மல்கியது.
“இனி, உன்னோடு ஒரு போதும் சண்டையிட மாட்டேன், இது உறுதி!” என்றாள் அக்காள்.
ரத்த பாசம் என்பது இதுதான்.
இன்றைய செய்திகள்
13.09.2023
*மழைக் காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை அறிவுரை.
* முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்.
*மேக்சிவிஷன் கண் மருத்துவமனை தமிழ்நாட்டில் 100 கண் சிகிச்சை மையம் அமைக்கிறது முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்.
* சென்னையில் 'மெட்ராஸ் ஐ' மிகவும் வேகமாக பரவுகிறது.12 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த அமைச்சர் உத்தரவு.
*குறைந்த போட்டியில் 10000 ரன்கள் -சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.
*ஆசிய கோப்பை 2023: 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இந்தியா.
Today's Headlines
*Precautionary measures for the safety of students during the rainy season are advised by the School Education Department.
* Chess player Gukesh met and greeted Chief Minister M K Stalin.
*Maxivision Eye Hospital to set up 100 eye treatment centers in Tamil Nadu Signed agreement in presence of Chief Minister.
* 'Madras Eye' is spreading very fast in Chennai. Minister orders to test 12 lakh students.
*10000 runs in the shortest match - Rohit Sharma broke Sachin's record.
*Asia Cup 2023: India lost the match by 213 runs.
Covai women
Monday, 4 September 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2023
இந்திய அறிவியல் கழகம்
Indian Institute of Science (IISC)
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
விளக்கம்:
படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல
பழமொழி :
Brids of same feather flock together
இனம் இனத்தோடு சேரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்
கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்
பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர்
பொது அறிவு :
1 ஈராக் நாட்டின் தலைநகரம்
விடை: பாக்தாக்
2. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?
விடை: பெங்களூர்
English words & meanings :
ideal - உயர்ந்த சிந்தனையுள்ள inoculate- நோய்த்தடுப்பு ஊசி
ஆரோக்ய வாழ்வு :
சோம்பு:சாப்பிட்டதக்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்து வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும்.
நீதிக்கதை
உண்மையே உயர்வு.
மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.
இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார்.
“தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?” என்று கேட்டார்.
“திருடச் செல்கிறேன்” என்றான் அவன்.
“திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? அப்படிச் சொன்னால் சிக்கிக் கொள்ள மாட்டானா” என்று கேட்டார் அரசர்.
“திருடனான என்னிடம் எல்லாத் தீய பழக்கங்களும் இருந்தன. என் தாய் என்னைத் திருத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. சாகும் நிலையில் இருந்த அவர் என்னை அழைத்தார். எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்று என்னிடம் வாக்குறுதி வாங்கினார். அவரின் நினைவாக, அந்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்” என்றான் திருடன்.
“தம்பி! நீ அரண்மனையில் திருட நான் உதவி செய்கிறேன். கிடைப்பதில் பாதிப் பங்கு எனக்கு தர வேண்டும்” என்றார் அரசர்.
திருடனும் ஒப்புக் கொண்டான். அரண்மனைக் கருவூலத்திற்குள் எப்படி நுழைவது என்று சொல்லித் தந்தார் அவர்.
கருவூலத்திற்குள் சென்ற அவன் இரண்டு வைரங்களுடன் வந்தான்.
“கருவூலத்தில் மூன்று வைரங்கள் இருந்தன. மூன்றையும் இழந்தால் அரசர் வருந்துவார். அதனால் ஒன்றை அங்கேயே வைத்துவிட்டு இரண்டை எடுத்து வந்தேன். உம் பங்கிற்கு ஒன்று” என்று ஒரு வைரத்தை அரசரிடம் தந்தான்.
மறுநாள் அரியணையில் வீற்றிருந்தார் அரசர். பரபரப்புடன் அங்கே வந்த அமைச்சர்,அரசே! கருவூலத்தில் இருந்த வைரங்கள் மூன்றும் திருடு போய்விட்டன” என்றார்.
“மூன்று வைரங்களுமா திருடு போய் விட்டன?” என்று கேட்டார் அரசர்.
“ஆம் அரசே” என்றார் அமைச்சர்.
“திருடன் பொய் சொல்லி இருக்க மாட்டான். எஞ்சிய ஒரு வைரத்தை இவர்தான் திருடி இருக்க வேண்டும்” என்று நினைத்தார் அரசர்.
வீரர்களை அழைத்த அவர், “அமைச்சரைச் சோதனை இடுங்கள்” என்று கட்டளை இட்டார்.
வீரர்கள் அவர் இடுப்பில் ஒளித்து வைத்திருந்த வைரத்தை எடுத்தனர்.
“வீரர்களே! இன்ன இடத்தில் இன்ன பெயருடைய இளைஞன் இருப்பான் அவனை அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டார்.
அவர்களும் அவனை அழைத்து வீற்றிருந்தவரைப் பார்த்தான் திருடன். நேற்றிரவு தன்னைச் சந்தித்தவர் அவர் என்பதை அறிந்தான்.
என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ என்று நடுங்கினான்.
“அமைச்சரே! இவன் திருடனாக இருந்தும் உண்மை பேசினான். நேர்மையாக நடந்தும்s கொண்டான். நீர் அமைச்சராக இருந்தும் திருடினீர். பொய் சொன்னீர். அதற்காக உம்மைச் சிறையில் அடைக்கிறேன்.
“இளைஞனே! திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடு உன்னை அமைச்சராக நியமிக்கிறேன்” என்றார் அவர்.
“அரசே! வறுமையில் வாடியதால் திருடினேன். இனி திருட மாட்டேன்” என்றான் திருடன்.
அவனைப் பாராட்டி அந்நாட்டின் அமைச்சராக நியமித்தார் அரசர்.
உண்மையே என்றும் உயர்வு தரும்.
இன்றைய செய்திகள்
04.09.2023
*சென்னையின் பல இடங்களில் கனமழை - மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.
தமிழகம் புதுச்சேரியில் ஆறு நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு.
*வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.
*' ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆய்வு பணி தொடக்கம் விரைவில் அறிக்கை தாக்கல்.
*காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.
* ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ தகவல்.
*ஜிம்பாவே முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழப்பு - பிரபலங்கள் இரங்கல்.
*ஆசிய ஆண்கள் 5 பேர் ஹாக்கி - பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
Today's Headlines
*Heavy rain in many parts of Chennai - City Commissioner Radhakrishnan survey.
Tamil Nadu Puducherry is likely to receive six days of light rain.
* One person died due to swine flu in Vaniyambadi.
* 'One country, one election' survey work to start, report to be submitted soon.
*Karnataka government filed a review petition in the Cauvery Management Authority.
* Aditya L-1 spacecraft successfully lifted into orbit - ISRO informs.
*Zimbabwe Star cricketer Heath Streak passed away - Celebrities mourn.
*Asian 5 men's hockey - India beat Pakistan and won the title.
Covai women
Friday, 1 September 2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : புலால் மறுத்தல்
குறள் :251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
விளக்கம்:
தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.
பழமொழி :
Blood is thicker than water
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.
2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.
பொன்மொழி :
உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்
பொது அறிவு :
1. இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் எது?
விடை: கல்கத்தா பல்கலைக்கழகம்
2. இந்தியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை: 1 லட்சத்து 55 ஆயிரம்
English words & meanings :
Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds.
ஆரோக்ய வாழ்வு :
உளுத்தம் பருப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.
நீதிக்கதை
ஒரு கிராமத்தில் மழை இன்மையால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தண்ணீர் பஞ்சம் போக்க என்ன செய்யலாம் என்று யோசித்து ஊரின் வாலிபர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருக்கும் கிணறுகளை ஆழமாக வெட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் படியே நான்கு குழுவினரும் கிணறுகளை ஆழமாகத் தோண்டினர். எனினும், அவற்றில் நீர் சுரப்பதற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் அனைவரும் களைத்துப் போய் விட்டனர்; நீரைக் காணாது சோர்வும் அடைந்தனர். நேரம் ஆக ஆக அவர்களின் நம்பிக்கை குறையவே, மூன்று குழுவினர் கிணறு தோண்டும் முயற்சியைக் கைவிட்டனர். ஆனால், ஆலன், ஆறுமுகம், முகமது, டேவிட் ஆகிய நால்வரும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர்கள் மனவுறுதியுடன் தொடர்ந்து தோண்டினர். ஊர்மக்களோ"நீர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
மேலே வந்துவிடுங்கள்; என்று வேண்டினர். அவர்கள் நால்வரும் தோண்டிய கிணற்றில் திடீரென்று நீர் ஊற்று தென்பட்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அந்த நால்வருக்கும் மக்கள் நன்றி கூறினர். எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்கக் கூடாது என்ற மன உறுதிதான் வெற்றிக்கு வழிவகுத்தது.
இன்றைய செய்திகள்
01.09. 2023
*நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் - இஸ்ரோவின் புது அப்டேட்.
*இந்திய ரயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெயவர்மா.
* இனி அக்டோபர் "இந்து பாரம்பரிய" மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில் தீர்மானம்.
* செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை அரசாணை வெளியீடு.
*இந்திய அணியின் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு..5 ஆண்டுகளுக்கு அம்பானி கையில்...
* 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது - பாகிஸ்தான் அணி புதிய சாதனை.
Today's Headlines
* Vikram Lander recorded the vibrations of the Moon - ISRO's new update.
*Jayavarma becomes the first woman Chief Executive of Indian Railways.
* October to be observed as "Hindu heritage" month from now on: Resolution in US state.
* Vinayagar Chaturthi Holiday Ordinance on 18th September GO released.
* Broadcasting of Indian team's cricket matches..5 years in Ambani's hands...
* Pakistan beat Nepal by 238 runs - a new record.
Covai wome