Wednesday, 31 January 2024
Monday, 29 January 2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள்:343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய அனைத்தும் ஒருங்கு.
விளக்கம்:
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
பழமொழி :
கோப்பைக்கும் உதடுக்கும் இடையில் பல சறுக்கல்கள்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
இரண்டொழுக்க பண்புகள் :1
1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.
2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்கிறேன் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டு அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.
பொன்மொழி :
ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். அம்பேத்கர்
பொது அறிவு :
1. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?
விடை: நார்வே
2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?
விடை: ஆறு கால்கள்
ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:
அமைதி - அமைதி. அமைதி
மிகவும் - மிகவும் (தேர்வு மிகவும் கடினமானது). முற்றிலும்.
ஆரோக்ய வாழ்வு :
அகத்தி கீரை: சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் இருப்பதாகக் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஆகியவையும் உள்ளன.
நீதிக்கதை
தற்பெருமை வேண்டாம்
காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.
அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.
சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.
ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.
சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.
"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரித்தார்
"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே
இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.
அந்த சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்று முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.
சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.
சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.
நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.
இன்றைய செய்திகள்
29.01.2024
*பீகாரின் முதல் மந்திரியாக நிதீஷ்குமார் பதவி ஏற்றார். அவர் ஒன்பதாவது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.
*தமிழகத்தில் 30ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்- வானிலை ஆய்வு மையம் தகவல்.
*உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான 'ஐ கான் ஆப் தெ சீஸ்' தனது முதல் பயணத்தை தொடர்ந்தது. இதில் 20 தளங்கள் ஈபில் டவர் கோபுரத்தை விட உயரம் கொண்டது.
*இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அபார வெற்றி.
*கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு பளுதூக்குதல்:
களரிப்பட்டு பந்தயத்தில் தமிழக வீரர் சுர்ஜித்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
Today's Headlines
*Nitish Kumar took office as the Chief Minister of Bihar. He assumes the post of Chief Minister for the ninth time.
*Dry weather will prevail in Tamil Nadu till 30th - Meteorological Department's information.
*The world's largest luxury cruise ship 'Icon of the Seas' continued its maiden voyage. 20 stories, taller than the Eiffel Tower; it is a very modernized luxury cruise.
*England won the first Test match against India.
*Khelo Indian Youth Sports Promotion:
Tamil Nadu's Surjith won the silver medal in the Kalaripattu race.
கோவை பெண்கள்
Tuesday, 23 January 2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:340
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
விளக்கம்:
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.
பழமொழி :
Make hay while the sun shines
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
இரண்டொழுக்க பண்புகள் :1
1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.
2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்
பொன்மொழி :
கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலட்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது . பகத்சிங்.
பொது அறிவு :
1. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?
விடை: டைட்டோனி பறவை
2.இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது?
விடை: ஜார்கண்ட்
English words & meanings :
Waltzing - to dance a waltz. சுழற்சி நடனமாடுகிற.
Weeded - to remove weeds, களை எடுக்கப் பட்ட.
ஆரோக்ய வாழ்வு :
மணத்தக்காளி : மணத்தக்காளிக் கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.
ஜனவரி 23
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா
நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!
நீதிக்கதை
பகைவனுக்கு அருள்வாய்
ஒரு கழுகைப் பிடித்த ஒரு வேடன் அதன் இறகுகளை வெட்டி விட்டுக் கூண்டில் பிற பறவைகளுடன் அடைத்து வளர்த்து வந்தான். அதனால் அந்தக் கழுகு மிக வருந்திக் கொண்டிருந்தது.
அடுத்த வீட்டுக்காரன் அந்தக் கழுகை விலை கொடுத்து வாங்கினான். அவன் இறகுகளை வெட்டாமல் வளர விட்டான். அதனால் அது பறக்க முடிந்தது.
அப்படிப் பறந்து சென்ற அந்தக் கழுகு ஒரு முயலின் மீது பாய்ந்து அதைத் தன்னை வளர்ப்பவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து ஒரு நரி, "நீ அதை இந்த ஆளுக்குக் கொடுப்பதால் உனக்கு ஒரு புண்ணியமும் இல்லை. நீ இதை, முதலில் உன்னைப் பிடித்து இறகுகளை வெட்டினானே, அந்த ஆளுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவன் உன் மேல் கோபப்படாமல் இருப்பான். இல்லையென்றால் மீண்டும் அவன் உன்னைப் பிடித்து இரண்டாவது முறையாக உன்
இறகுகளை வெட்டி விடுவான்" என்றது.
நீதி : நமக்கு நல்லது செய்த நண்பர்களுக்குத் திரும்ப நல்லது செய்து நட்பை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் நமது பகைவர்களுக்கு நல்லது செய்து அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் கவனம் காட்ட வேண்டும்.
இன்றைய செய்திகள்
23.01.2024
*27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம். கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை.
*தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு.
*உத்திரபிரதேசம் பட்டாசு கடையில் தீ விபத்து; இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.
*அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இதில் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகி ராஜ் வடிவமைத்த ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.
*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல்.
Today's Headlines
*New scheme to modernize 27 thousand government schools. Government planned to take steps to improve the quality of teaching.
*Tamil Nadu Assembly will meet next month likely to make new announcements in budget
*Fire incident at firecracker shop in Uttar Pradesh; Two boys died
*Kumbabhishekam of Ram Temple in Ayodhya was celebrated yesterday with much fanfare, in which the Rama's statue designed by Arun Yogi Raj from Karnataka was selected.
*Virat Kohli ruled out of two Test matches against England.
Covai women