Thursday, 23 September 2021

இன்றைய தினம்


         23-09-1846

(கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன்)

 சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோளான நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தவர்களாக ஜோகன் காலே, ஊர்பெய்ன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

    இக்கோள் தொலைநோக்கி வழியாக இல்லாமல், கணித ரீதியான கணக்கீடுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 1781-ல் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ் கோலின் சுற்றுப் பாதையில் இருந்த தடுமாற்றங்களுக்கு, அதனருகில் இருக்கும் ஒரு பெரிய வான் பொருளின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம், 1843-ல் தான் படிப்பை முடித்த ஆங்கிலேயரான ஜான் கூச் ஆடம்ஸ் கணித்து, 1845-46m காலகட்டத்தில் அப்பகுதியில் வேறொரு கோள் இருப்பதற்கான சாத்தியத்தைக் கண்டறிந்தார். ஆனால், அவர் அனுபவமில்லாத இளையவர் என்பதால், அவரது கணிப்புகளின்படித் தேட கேம்பிரிட்ஜ் வானியல் மையம் முக்கியத்துவம் தரவில்லை.

   இதே காலகட்டத்தில், இவருக்கு தொடர்புலாமல் ஊர்பெய்ன் லெ வெர்ரியர் என்ற பிரெஞ்சு வானியலாளர், இதையொத்த கணிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பெர்லின் ஆய்வு மையத்தில் ஜோகன் காலே என்ற ஜெர்மானியர் 1843- செப்டம்பர் 23 இரவு நெப்டியூன் கோலை கண்டுபிடித்தார். வேடிக்கை என்பது, கேம்பிரிட்ஜ் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெம்ஸ் சால்லிஸ், ஆடம்சின் கணிப்புகளின்படித் தேடியபோது, ​​ஆகஸ்ட் 4, 12 ஆகிய தேதிகளில் இருமுறை இக்கோலை காண நேர்ந்தாலும், இது புதிய கோல் என்ற அவரால் உணர முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் முன்னால், 1612 டிசம்பர் 28,1613 ஜனவரி 27 ஆகிய தேதிகளில் கலிலியோ இந்த இடத்தில் ஒரு பொருளைக் கண்டதைப் பதிவு செய்துள்ளார். ஆனால், அவரது சிறிய தொலைநோக்கியால், இது ஒரு கோல் என்று உணர முடியாததால், இதை ஒரு நட்சத்திரம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நீல நிறக் கோளான இதற்கு நெப்ட்யூன் என்ற ரோமானிய கடற் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.

** "**************************

(மனதின் ஆழத்தை அளந்தவர்)

----------------------------------------- "பனிப்பாறை போன்றது மனம், ஏழில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேலே மிதக்கும் "எனும் சுவராசியமான ஒப்புமையால் மனதின் ஆழத்தை விளக்கியவர் சிக்மண்ட் பிராய்ட். ஆஸ்திரியாவைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான இவர் தான் முதல்முதலில் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் மனம்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்தார்.

  இயல்பாக இருக்கும் ஒருவர் திடீரென விசித்திரமாக நடந்து கொள்ளக் காரணம் பேய், பிசாசு போன்ற அமானுஷ்யச் சக்திகள் அல்ல; ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகளே என விளக்கினார். "இட்", "ஈகோ", "சூப்பர் ஈகோ" எனும் மூன்று அடுக்குகள் உள்ளன. மற்ற உடல் உறுப்புகள் போல இவற்றுக்கு உருவம் இல்லை. ஆனால், இவைதான் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.

    விழிப்பு நிலை போலவே தூக்கத்திலும் மனம் மிக உற்சாகமாக செயல்படும். அப்போது ஆழ்மனதில் அடக்கி வைத்திருந்த விஷயங்களைக் கிளறி எடுக்கும். அப்படிப்பட்ட உள் மனதின் வெளிப்பாடுகளே கனவு என "கனவுகளின் விளக்கம் "என்ற புத்தகத்தில் எடுத்துரைத்தார். நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் தனது 83-வது வயதில் 1939 செப்டம்பர் 23-ல் மரணமடைந்தார்.

Saturday, 18 September 2021

இன்றைய தினம்

 எளிமையான அகராதியை உருவாக்கிய ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson) பிறந்த தினம் - செப்டம்பர் 18:


இங்கிலாந்தின் ஸ்டாபோர்டுஷயர் கவுன்ட்டிக்கு உட்பட்ட லிச்ஃபீல்டு நகரில் (1709) பிறந்தார். தந்தை புத்தக வியாபாரி. 3 வயதில் வீட்டில் அம்மாவிடம் பாடம் கற்றார். பிறகு, உள்ளூர் பள்ளியில் கல்வியைத் தொடங்கினார்.


சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். அப்பாவின் கடைக்குச் சென்று புத்தகம் பைண்டிங் செய்ய உதவுவார். கூடவே, அங்குள்ள நூல்களைப் படித்து அறிவை விசாலப்படுத்திக் கொண்டார். கவிதைகளும்விதைகளும் எழுத ஆரம்பித்தார்.


லத்தீன் மொழியில் சிறந்து விளங்கிய இவரிடம், ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப்பின் ‘மெஸையா’ நூலை மொழிபெயர்க்குமாறு கூறினார் ஆசிரியர். பகலில் பாதியும் மீதியை அடுத்த நாள் காலையிலும் எழுதி முடித்துவிட்டாராம்.


பெரும்பாலான நேரத்தை எழுதுவதிலும் வாசிப்பதிலும் செலவிட்டார். ஆக்ஸ்ஃபோர்டு பெம்ப்ரோக் கல்லூரியில் சேர்ந்தவர், வறுமையால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘தி ஜென்டில்மேன்ஸ்’ இதழில் அரசியல், பொருளாதாரம், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகள், கதைகள் எழுதத் தொடங்கினார்.


ஆங்கிலத்தில் பல அகராதிகள் இருந்தாலும் ஆழமான, எளிமையான அகராதி இல்லை என்ற குறை இருந்தது. ஒரு நல்ல ஆங்கில அகராதி உருவாக்க வேண்டும் என்று இவரிடம் சில பதிப்பாளர்கள் கேட்டனர். ஒப்புக்கொண்ட இவர் உடனே அதற்கான வேலையில் இறங்கினார்.


அது சற்று சவாலாகத்தான் இருந்தது. வறுமையுடன் போராடிக்கொண்டே இப்பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து கதை, கட்டுரைகளும் எழுதிவந்தார். 5 பவுண்ட் கடனை திருப்பிச் செலுத்தாததால் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மனைவியும் இறந்தார்.


இதையெல்லாம் மீறி அகராதி பணியை விடாமல் மேற்கொண்டார். 8 ஆண்டுகளாக தனி நபராக நின்று, கடுமையாக உழைத்து ஆங்கில அகராதியை எழுதி முடித்தார். 1755-ல் 2 தொகுதிகளாக வந்தது. இது இவருக்கு உலகம் முழுவதும் புகழைப் பெற்றுத் தந்தது.


ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இவருக்கு எம்.ஏ. பட்டமும் பின்னர் டாக்டர் பட்டமும் வழங்கியது. ட்ரினிட்டி கல்லூரி டாக்டர் பட்டம் வழங்கியது. பல பிரபல இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்தன. இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதினார். இவரது பல நூல்கள் பிரெஞ்ச், டச்சு, ஜெர்மன், இத்தாலி, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.


கவிதையை அலங்கார வார்த்தைகளுடன் எழுதுவதைவிட, எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதுவதே முக்கியம் என்று வலியுறுத்தினார். பொருளாதார ரீதியான போராட்டம் இருந்தபோதிலும் தன்னைவிட ஏழ்மை நிலையில் இருந்த நண்பர்களை ஆதரித்து வந்தார். இவரைப் பற்றி நண்பர் பாஸ்வெல் எழுதிய ‘லைஃப் ஆஃப் ஜான்சன்’ வாழ்க்கை வரலாற்று நூல் பெரும் வரவேற்பை பெற்றது.


இவருக்குப் பின்னர் எளிய வடிவில் பல அகராதிகள் வந்தாலும் இவருடையதுதான் முன்னோடி அகராதியாக கருதப்படுகிறது. கவிஞர், கட்டுரை ஆசிரியர், இலக்கிய விமர்சகர், வாழ்க்கை வரலாறு எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாமுவேல் ஜான்சன் 75-வது வயதில் (1784) மறைந்தார்.

இன்றைய தினம்

 உலக மூங்கில் தினம் - செப்டம்பர் 18:


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 18 தேதி கொண்டாடப்படுகிறது. 


உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான  $ 10 பில்லியன் தொகையில்  சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 


2020 ஆண்டுகளில் இதன் அளவு $26 பில்லியனாக உயரும் எனவும், தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடி எனவும் அது 2019 ஆண்டில் ரூ.36,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும்    இந்திய விவசாயத்துறை  அமைச்சகம் கூறுகிறது. 


மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வதாரம், மற்ற மரங்களைக் காட்டிலும் அதிக கரிமில வாயுவை எடுத்துக் கொண்டு அதிக பிராணவாயுவை வெளியேற்றும் என்கிறோம். 


ஆனால் மூங்கில் வளர்ப்பில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் ?


தமிழ் நாட்டில் சாதாரணமாக காணும் காட்சி.

 வருத்தம் தரும்  அளவிற்குத்தான் உள்ளது. உபயோகம் சுமார் 1500க்கு மேலிருந்தாலும் தமிழகத்தில் மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை. இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண நிலையிலேயே மூங்கில் உபயோகம் உள்ளது. 


மற்ற மாநிலங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது. நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள்  என முன்னேற்றம் உள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில் சுயுதவிகுழுக்கள் செய்யும் பொருட்கள்

 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி. 


வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட பள்ளிகள்

 உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பிற்கான ஒரு செய்தியாகும்.


ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான  ஸ்பெயின் நாட்டின் “மார்டிரிட்” நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர். 


இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை “மூங்கில்”. எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் ?? மத்திய அரசாங்கம் “தேசீய மூங்கில் இயக்கம்”  (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

Friday, 17 September 2021

இன்றைய தினம்

 பெரியார் பிறந்த தினம் - செப்டம்பர் 17:


தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...


* ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!


* பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!


* தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!


* தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!


* வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

* பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!


* தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!


* வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!


* தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

 

* இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக்


கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!


* உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!


* தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!


* இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!


* இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!


* தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!


* தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!


* முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!


* உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!


* 'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!


* அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!


* 'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!


* புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!


* பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!


* நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!


* 95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

Thursday, 16 September 2021

இன்றைய தினம்

 “ உலக ஓசோன் தினம் “ – செப் -16


 ஓசோன் மண்டலம் என்பது வளி மண்டலத்தில் உள்ள  { ஓசோன் – (13) } ஒரு வகை –

காற்றுப் படலம்தான்.  சூரியனில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புற ஊதாக்கதிர்களை பூமியில்

விழாமல் தடுப்பது ஓசோன் அடுக்குதான். 


93-முதல் 99 % புற ஊதாக்கதிர்களை  ஓசோன் படலம் கிரகித்து விடுவதால்தான் நம்மால் இங்கு நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தப் படலத்தில் துளை

விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசு படாமல் தடுப்பதின்

மூலம் ஓசோன் படலம் சேதமைடயாமல் பார்த்துக்கொள்ளலாம்.


 ஒசோன் படலம் தரையில் இருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள காற்று மண்டலத்தில்

காணப்படுகிறது. பிரஞ்சு இயற்பியல் வல்லுனர்கள் சார்லஸ் பேப்ரி, ஹென்றி புய்சன் ஆகியோர்

(1913-இல்) ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்தனர். ‘சிட்னி சேப்மேன்’ என்ற இங்கிலாந்து விஞ்ஞானி

(1930-இல்)இரு அணுநிலை ஆக்சிஜனும், ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன்(03) என்று

கண்டுபிடித்தார். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் தாகுவதால் ஆக்சிஜன் அணுக்களில் ஏற்படும்

மாற்றமே ஓசோனை தோற்றுவிக்கிறது என்றார்.


 மற்றொரு இங்கிலாந்து ஆய்வாளர் டோப்சன்,

ஒசோனின் அடர்த்தியை அளவிடும் ‘ஸ்பெக்ட்ரோபோட்டோ’ மீட்டரை ( டோப்சான் மீட்டர் )

உருவாக்கினார்.

 ஓசோன் மூலகூறும் நிலையற்றதுதான். புற ஊதாக்கதிரின் தாக்குதலால் உருவாகும் –

ஒசோன் அணுக்கள் மீண்டும் அந்த கதிர்கள் தாக்கும்போது அணுநிலை ஆக்சிஜனாகவும், 

ஆக்சிஜனாகவும் பிரிக்கிறது. இது ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி எனப்படுகிறது. ஸ்ட்ரேடோஸ்பியர்

( 50கி.மீ.உயரத்திற்குள்) அடுக்கில் உருவாகும் ஓசோன் படலம் மட்டுமே இந்த சுழற்சிக்கு தப்பி நிலைக்கிறது. 


அதற்கு மேலுள்ள ஒசோன் அணுக்கள் இந்த சுழற்சியால் சிதைந்து விடுவதும்,

மீண்டும் உருவாவதுமாக இருக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியா அடுக்கில் மட்டும் 90 % ஓசோன் படலம்

இருக்கிறது.

 உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, ஏனெனில் செறிவு குறைந்த ஓசோன்

தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களை மிகுதியாக உட்கிரகிக்கிறது. புறஊதாக் கதிர்கள் ( U.V. )

அதன் அலை நீளத்தைச் சார்ந்த யு.வி. ஏ.பி.சி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அலைநீளம்

கொண்டது UVA  ( 400315 நா,மீ ) – UVB  9 315280 நா.மீ ) மற்றும் UVC ( 280 – 100 நா.மீ.) அலை நீளம் கொண்டது.


 சி.புறஊதாக்கதிர்கள் ( UVC ) மனிதர்களுக்கு மிகவும் தீங்கிழைக்கக் கூடியது.

UVB  கதிர்களால் தோல் புற்று நோய் ஏற்படலாம். UVA கதிர் பரபு சார்ந்த பாதிப்புகளை உருவாக்கும்

ஆற்றலுடையது.

 அண்டார்டிக்கில் ஒசோன் ஒட்டை இருப்பது அமெரிக்காவில் 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்-

பட்டது. 1978-ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் குளோரோ –

புளோரோ கார்பன் உள்ள பல பொருட்களை பயன்படுத்த தடை விதித்தன. குளிர்பதனம் மற்றும்

தொழிலாகத் தூய்மை பணிகளில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. ‘ த மோண்ட் ரியல் புரோடோ

க்கால்’ என்ற சர்வதேச உடன்பாட்டின்படி 1987 முதல் CFC உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு

1996-ஆம் ஆண்டு பெருமளவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓசோன் ஒட்டை பெரிதாவது –

தடுக்கப்பட்டுள்ளது.

 ஓசோன் படல ஓட்டை 97 லட்ச சதுர மைல் என்ற கனக்கிலிருந்து தற்போது ( சுமார் 6

ஆண்டுகட்கு முன்பு ) அது 5-வது ஓட்டையாக அண்டார்டிக் பகுதிக்கு மேல் 1 கோடியே 15 லட்ச

சதுர மைல்கள் இருப்பதாக அறியப்படுகிறது.


 ஐ.நா.சபையில் உள்ள 24 நாடுகள் ஒன்ரு கூடி ( 1987-இல்) செப்டம்பர்-16-ஆம் நாளை

ஓசோன் பாதுகாப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை 1995-இல் வெளியிடப்

பட்டது. நம் பங்குக்கு இனி என்ன செய்யப்போகிறோம் ?.

Thursday, 9 September 2021

இன்றைய தினம்

செப்டம்பர் பகுதி 9


குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை பொம்மைகள். அதுவும் புசுபுசுவென இருக்கும் "டெடி பியர்" பொம்மையை விரும்பாத குழந்தைகளே இல்லை. உணவூட்டுவது, மருத்துவம் பார்ப்பது, தூங்கவைப்பது என டெடி பியர்களுடன் விளையாடும் மழழைகள் ஏராளம். டெடி பியரை விரும்பும் பெரியவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

    இன்று செப்டம்பர் 9 அமெரிக்காவில் தேசிய டெடி பியர் தினம். டெடி பியர் பொம்மையின் வயது 100 ஆண்டுகளை கடந்துவிட்டது.

    நீண்ட காலமாக கதைகளில் இடம்பெற்ற கரடிகள், பொம்மை வடிவம் பெற்றது 19-ம் நூற்றாண்டில் தான். ஜெர்மனியைச் சேர்ந்த மார்கரெட் ஸ்டெயிப் எனும் பொம்மை வடிவமைப்பாளர் 1899-ல், 23 விதமான பொம்மைகளுக்கு வடிவமைப்பு செய்யப்பட்டு காப்புரிமை பெற்றுள்ளார்.அதில் நடனமாடும் கரடி மற்றும் கரடி மற்றொரு சிறிய கரடியை கையில் வைத்திருக்கும் பொம்மை போன்ற பொம்மைகள் அடக்கம்.

   நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் என்ற இடத்தில் மோரிஸ் மிக்டாம் என்பவர் தனது பொம்மை கடையில் முதல் டெடி பியர் கரடி பொம்மையை விற்பனைக்கு வைத்திருந்தது வரலாற்றில் பதிவாகி உள்ளது.1902-ல அவர் கரடி பொம்மையை விற்பனை செய்ய தொடங்கி உள்ளார்.

   ஜெர்மனியில் இருந்து 1903-ல் ஸ்டெயிப் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் கரடி பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்து இறங்கின.

    அப்போது கரடி பொம்மைகள் "புருயின்ஸ் "என அழைக்கப்பட்டது. அப்போதைய பருவ இதழ்களிலும் கரடி பொம்மைகள் இந்த பெயரிலேயே விளம்பரங்கள் செய்யப்பட்டது.

   1906-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா பொம்மை தயாரிப்பாளரான இ.ஜே.ஹார்ஸ்மேன் என்பவர் தான் தயாரித்த கரடி பொம்மைகளுக்கு "டெடி பியர்" எனும் பெயர் சூட்டி விளம்பரங்கள் செய்தார். " ஆலிஸ் கார்ட்" என்பவர் எழுதிய மாயாஜால கதைகளில் டெடி பியர் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தது.அதை மையமாக வைத்து அவர் தனது பொம்மைக்கு இந்த பெயர் சூட்டினார்.

     1909-ல் டெடி பியர் பொம்மை கார்ட்டூன் வடிவம் பெற்றது. அமெரிக்காவில் "லிட்டில் ஜானி அண்ட் த டெடி பியர்  " என்ற கார்ட்டூன் காவியம் வெளிவந்தது.

    டைட்டானிக் கப்பல் 1912-ல் கடலில் மூழ்கிய போது ஸ்டெயிப் பொம்மை நிறுவனம் கருப்பு நிறத்தில் டெடி பியர் பொம்மையை வெளியிட்டு துக்கம் அனுசரித்தது.

   லண்டன் நாளிதழில் கரடி பொம்மை பற்றிய காமிக் கதைகள் இடம் பெற தொடங்கியதால் இங்கிலாந்தில் டெடி பியர் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. 

    வால்ட் டிஸ்னி முதன் முதலில் 1924-ல் வண்ண அனிமேஷன் படத்தை உருவாக்கினார். அதில் கதாநாயகர்களே டெடி பியர் கள்தான். " ஆலிஸ் அண்ட் தி திரீ பியர்ஸ்" என்ற கரடி அனிமேஷன் படம் தான் அந்த முதல் அனிமேஷன் படம்.

   கரடி பொம்மைகளில் மிகவும் புகழ்பெற்றது "வின்னி த பூ" பொம்மை தான்.இது 1926-ம் ஆண்டு ஏ.ஏ.மில்னி கதையில் இந்த கரடி பொம்மை உருவம் வெளியாகி இருந்தது.

    1944-ல் அமெரிக்காவில் காட்டுத்தீ விழிப்புணர்வு இயக்கத்துக்காக "ஸ்மோக்கி பியர்" எனும் கரடி பொம்மையை உருவாக்கி விளம்பரங்கள் செய்யப்பட்டது.

   1953-ல் ஸ்டெயிப் உருவாக்கிய கரடி பொம்மையின் 50 ஆண்டு விழா ( கோல்டன் ஜூப்லி) கொண்டாடப்பட்டது. அப்போது "ஜேக்கி பேபி" என்ற பெயரில் கரடிக்குட்டி என்ற புதிய வகை கரடி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

  வென்டி பாஸ்டன் என்பவர் 1954-ல் முதன் முதலாக துவைத்து சுத்தமாக்கி பயன்படுத்தும் கரடி பொம்மையை உருவாக்கி அசத்தினார்.

   1958-ல் மற்றொரு புகழ்பெற்ற கரடி பொம்மை வகையான "பட்டிங்டன் பொம்மை" அறிமுகம் செய்யப்பட்டது. மைக்கேல் மாண்ட் எழுதிய கதைகளில் இடம்பெற்ற இந்த கதாபாத்திரம் பொம்மையாக உருப்பெற்றது.

    வால்ட் டிஸ்னி,1959-ல் "வின்னி த பூ பொம்மையை" முக்கிய மாற்றங்கள் செய்ததுடன் அதைப் பயன்படுத்த சில விதிமுறைகள் வகுத்தார்.

   கலோனியல் பாப் கெண்டர்சன்1962-ல் "டெடி பியர் கிளப்" ஒன்றை தொடங்கினார்.

    " வின்னி த பூ" கதாபாத்திரம் 1975-ல் சினிமா திரைப்படமாக வெளிவந்து வரலாறு படைத்தது.

    லண்டனில் 1985-ல் டெடி பியர் ஏல மையம் கிறிஸ்டி என்பவரால் தொடங்கப்பட்டது. இங்கு டெடி பியர் பொம்மைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது குறிப்பிடதக்கது.

 இங்கிலாந்தில் மைக்கேல் பிரான்ரெத்,1988-ல் டெடி பியர் அருங்காட்சியகம் தொடங்கினார்.

   1989-ல் லண்டனில் முதல் டெடி பியர் திருவிழா கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் 1926-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட "ஸ்டெயிப்" பழைய கரடி பொம்மைகளுக்கான நினைவு திருவிழாவும் நடத்தப்பட்டது.அப்போது பழமையான ஒரு பொம்மை 55 ஆயிரம் பவுண்டுகள் தொகைக்கு ஏலம் போனது.பால் வோல்ப் என்ற அமெரிக்கர், தனது 42-வது திருமண நாளுக்காக இந்த பொம்மையை ஏலத்தில் எடுத்து மனைவி ரோஸ்மேரிக்கு பரிசளித்தார்.

   1994-ல் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்ட டெடி பியர் பொம்மை உலக பிரசித்தி பெற்றது.1904-ல் தயாரிக்கப்பட்ட மிகப்பழமையான ஸ்டெயிப் கரடி பொம்மையை ஜப்பானைச் சார்ந்த யோகினோ செகிகுசி என்பவர் ஒரு லட்சத்து பத்தாயிரம் பவுண்டுகள் ஏலம் எடுத்தார். ஜப்பானில் தான் தொடங்கிய அருங்காட்சியகத்தை பிரபலப்படுத்த இதை ஏலத்தில் எடுத்தார்.