Monday, 12 October 2020

இன்றைய சிந்தனை

 🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹


இன்றைய சிந்தனை 


(12.10.2020)

…………………………………………….


விட்டுக் கொடுப்போம்...!

..........................................


இக்காலச் சமுதாயம். பொதுவாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும்...


நண்பர்களாக இருந்தாலும் ,கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலொழிய அவ்வாழ்வு சிறப்பாக அமையாது...


எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்...? ஒருவர் மேல் அன்பு பெருகும் போது தான் என்று கூறத் தேவையில்லை...


ஒருவர் மேல் அதிகமான அன்பு கொள்ளும் காரணமாகத் தானே அவர் செய்தது, நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக் கொடுக்கிறோம்...!


அப்படிப்பட்ட அன்புடன் நிலைத்திருக்க நாம் விட்டுக் கொடுத்து வாழ்தல் இன்பம் பயக்கும்.  உறவு பெருகும்..  நன்மை பயக்கும்...


நல்லவை கெட்டவை பரிமாற்றம் நிகழும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது குறித்துத் தெளிவான பார்வை கிடைக்கும்...


இயன்றவரை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப் போவதில்லை. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அன்புடனே விட்டுக் கொடுக்க வேண்டும். பிடிவாதம் கூடாது...


எந்த நிகழ்வுகளையும், சிக்கல்களையும் மென்மையாகக் கையாளுங்கள். சில நேரங்களில் சில வருத்தங்களையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்...


அனைவருக்கும் தெரிந்த கதை தான், வாசியுங்கள்...


அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது...


ஒருநாள் அந்தப் பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்தன...


ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன...


அந்தப் பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தைக் கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன...


முதலாவது ஆடு, "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விட வேண்டும்" என்றது...


இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன...


ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள்

செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன...


இரண்டு ஆடுகளுமே ''விட்டுக் கொடுக்கும்'' எண்ணம் இல்லாததால் அவைகள் தங்கள் பிடிவாதத்தால் மரணித்தன...


ஆம் நண்பர்களே...!


வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார்- மருமகள் உறவிலாகட்டும், கணவன்- மனைவி உறவாகட்டும் இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்தப் பிடிவாத குணமே காரணம்...!


நண்பர்கள் இடையே பிரிவு வருவதும் இந்த எண்ணதினால் தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்தப்  பிடிவாத குணம்...?


விட்டுக் கொடுத்தால் வேதனை இல்லை. வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது. விட்டுக் கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை. அடைவது தான் அதிகம்...!!


விட்டுக் கொடுப்பதால் நம் உறவை வலிமைப் படுத்துகிறோம், நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம். பகைமையை விரட்டுகிறோம். விட்டுக் கொடுத்தலில் விவேகம் உண்டு. வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு...!!!


🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹

 எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி

🚣 கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (gyrocompass) கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.


🚣 இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.


🚣 அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு நியூயார்க்கில் மறைந்தார்.

 உலக ஆர்த்ரிடிஸ் தினம்

👉 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


👉 இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.


👉 நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.

 இந்தியப் பறவையியல் பிதாமகன் டி.சி.ஜெர்டான் பிறந்த தினம் - அக்டோபர் 12:


தாமஸ் கேவர்ஹில் ஜெர்டான் இங்கிலாந்தின் டெர்ஹாம் கவுண்டியில் 1811-ல் அக்டோபர் 12 அன்று பிறந்தார். மருத்துவம் பயின்ற அவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் அறுவைசிகிச்சை மருத்துவராக (துணை சர்ஜன்) இந்தியாவுக்கு 1836-ல் வந்தார்.

சிறு வயதிலிருந்தே பறவைகள் மீதும் தாவரங்கள் மீதும் ஆர்வம் மிகுந்தவர் ஜெர்டான். இந்தியாவுக்கு வந்த பிறகு பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களை (specimen) சேகரிக்க ஆரம்பித்தார். தக்காணப் பீடபூமி பகுதியிலும் கிழக்கு மலைத் தொடரிலும் அவர் பணிபுரிந்தார். 


ஏன் இந்த மாற்றம்?

பறவைகள், தாவரங்கள் மட்டுமன்றிப் பூச்சிகள், ஊர்வன, நீர்நில வாழ்விகள், பாலூட்டிகள் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஆரம்பத்தில் தான் சேகரித்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்களைச் சரியாக அடையாளம் காண்பதற்காக ஸ்காட்லாந்தில் உள்ள பறவையியலாளர் வில்லியம் ஜார்டைனுக்கு, ஜெர்டான் அனுப்பினார். துரதிர்ஷ்டவசமாக அவரிடம் போய்ச்சேர்வதற்கு முன்பாகவே, அந்தப் பதப்படுத்தப்பட்ட பறவைகளைப் பூச்சிகள் அரித்துவிட்டன.


அதற்குப் பிறகு இனி வேறு யாரையும் நம்பிப் பிரயோஜனமில்லை என்று, தான் சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட உயிரினங்களையும், தான் பார்த்ததையும் ஜெர்டான் குறிப்பெடுக்க ஆரம்பித்தார். இப்படியாக, தான் சேகரித்த குறிப்புகளைக்கொண்டு ‘கேட்டலாக் ஆஃப் த பேர்ட்ஸ் ஆஃப் த இண்டியன் பெனின்சுலா’ (1839-1840) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலில் 420 பறவைகள் விவரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னதாக டபிள்யூ.எச். ஸைக்ஸ் என்பவர் 1830-களில் வெளியிட்ட புத்தகத்தைவிட, ஜெர்டான் புத்தகத்தில் விவரிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகம்.


முன்னோடிப் புத்தகம்:

1862-ல் பணி ஓய்வு பெற்று ஜெர்டான் இங்கிலாந்துக்குச் சென்றார். அப்போது இரண்டு தொகுதிகளாக வெளியானதுதான் ‘தி பேர்ட்ஸ் ஆஃப் இந்தியா’ (1862-1864) என்ற புத்தகம். இந்தியாவில் அதற்குப் பிறகு வெளியான பறவைகள் புத்தகத்துக்கெல்லாம் அதுதான் முன்னோடி.


ஜெர்டானின் புத்தகங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு புத்தகம் ‘இல்லஸ்ட்ரேஷன்ஸ் ஆஃப் இந்தியன் ஆர்னிதாலஜி’ 1847-ல் இது வெளியிடப்பட்ட இடம் அன்றைய மதராஸ் (சென்னை) என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 47 வேறுபட்ட பறவைகளின் 50 ஓவியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பறவைகளுள் மூன்று இமயமலைப் பறவைகள், ஒன்று இலங்கையைச் சேர்ந்தது. மற்றவையெல்லாம் இந்தியாவுக்குள் காணப்படும் பறவைகள். இதில் பெரும்பாலான பறவைகள் முதன்முறையாக இடம்பெற்றிருந்தது புத்தகத்தை முக்கியமாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. 


உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).


இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையின்படி பார்த்தால், இந்தப் புத்தகம் பல காலமாகத் தயாரிப்பில் இருந்திருப்பது தெரிகிறது. உள்ளூர் ஓவியர்கள் வரைந்த ஓவியங்களைத் துல்லியத்தின் அடிப்படையில் சரிபார்த்த பிறகு, இந்தப் புத்தகத்தில் ஜெர்டான் சேர்த்திருக்கிறார். அந்த ஓவியங்களுக்கு இணையாக அந்தப் பறவைகளைப் பற்றிய விளக்கங்களையும் ஜெர்டான் எழுதியிருக்கிறார். (இந்தப் புத்தகத்திலிருந்து சில ஓவியங்கள் இங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன.) ஜெர்டானின் மற்றப் புத்தகங்கள்: ‘த கேம்பேர்ட்ஸ் அண்டு வைல்டுஃபௌல் ஆஃப் இந்தியா’ (1864), ‘த மேமல்ஸ் ஆஃப் இந்தியா’ (1867).


அரிய பறவைகளின் அடையாளம்

இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.


இங்கிலாந்தின் நார்வுட்டில் ஜூன் 12 1872-ல் ஜெர்டான் மரணமடைந்தார். இங்கிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் இறந்திருந்தாலும் அவரது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இந்தியாவில் கழிந்திருக்கிறது. தனது ஆர்வத்தாலும் அறிவாலும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெர்டான். அவரால் முதன்முதலாக விளக்கப்பட்ட ஒரு பறவைக்கு அவருடைய நினைவாக ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரை வைத்தார்கள். உலகின் அரிதான பறவைகளுள் ஒன்று அது. 1900-ல் இறுதியாகப் பார்க்கப்பட்ட அந்தப் பறவை அழிந்துபோய்விட்டது என்று கருதப்பட்டு, பிறகு 1986-ல்தான் மறுபடியும் பார்க்கப்பட்டது.


தற்போது ஆந்திராவில் எஞ்சியிருக்கும் அந்தப் பறவைக்கு ‘கலுவிக்கோடி’ என்ற தெலுங்கு பெயர் இருந்தாலும் ‘ஜெர்டான்ஸ் கோர்ஸர்’ என்ற பெயரே இயற்கையியலாளர்கள் மத்தியில் நிலைத்துவிட்டது. அதற்கு டி.சி. ஜெர்டான் மீது உள்ள அன்பும்கூட ஒரு வகையில் காரணம் என்று சொல்லலாம். ஜெர்டானின் நினைவாகப் பெயர் வைக்கப்பட்ட இன்னொரு பறவையான ஜெர்டான்ஸ் பேப்ளரும் (தவிட்டுக்குருவி வகை) ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கப்படாமல், இந்த ஆண்டு மீண்டும் பார்க்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அரியனவற்றின் அடையாளம்தானோ ஜெர்டான்?