Friday, 31 March 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.03.2023

      திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண்: 166

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉ மின்றிக் கெடும்.



பொருள்:

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.


பழமொழி :

First impression is the best impression



முதல் அபிப்பிராயமே சிறந்த அபிப்பிராயம்.



இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

பல செயல்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்காது. ஆனால் செயலின்றி மகிழ்ச்சியில்லை.

பொது அறிவு :

1. உலகில் அதிகமாக காணப்படும் உயிரின வகை எது? 

 பூச்சிகள்.

 2. மின் தீயை அணைக்கப் பயன்படுவது எது? 

 கார்பன் டெட்ரா குளோரைடு.

English words & meanings :

 mantis - an insect looks like as it is praying, noun. மான்டிஸ். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

ஒரு வேகவைத்த முட்டையில் இருந்து 0.6 மைக்ரோகிராம் அளவுக்கு வைட்டமின் பிி12 கிடைக்கும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் தான் வைட்டமின் பி12 இருக்கிறது என்பதால் முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதோடு வைட்டமின்களும் புரதச்சத்தும் சேர்த்து கிடைக்கும். அதனால் தினசரி உணவில் வேகவைத்த முட்டையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணினி யுகம்

Shift + Ins - Paste the selected item. Home - Takes the user to the start of the current line





மார்ச் 31


ஜெசி" ஓவென்ஸ்  


 



ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.


ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.

நீதிக்கதை

கதை :

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிட வேண்டும் என்று ஆசை, தங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது. 

ஆண்முதலை  என்ன செய்வதென்று யோசித்தது. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது. 

நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கும் விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது. 

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது.  குரங்கிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. 

சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே மரத்தில் இருப்பதாக கூறியது. 

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்லப்பார்கிறாயா? என்று சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது. 

நீதி :

நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

இன்றைய செய்திகள்

31.03. 2023


* 3,414 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களுக்காக ரூ.1031.32 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* நலிந்த நிலையில் உள்ள சென்னையை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஓய்வூதிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

* தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் ‘டெலி மெடிசின்’ மூலம் உயர் மருத்துவ சேவை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்.


* உக்ரைன், சீனாவில் இருந்து கரோனாவால் திரும்பிய இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல்.

* உளவு பார்த்ததாக கூறி அமெரிக்க பத்திரிகையாளரை கைது செய்த ரஷ்யா.

*  பிரான்ஸில் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்ந்தும் அதிபர் மக்ரோனின் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

* 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா, ரைபகினா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Rs 1031.32 crore fund for cash benefits of 3,414 retired transport employees: Chief Minister Stalin orders.


 * The District Collector has announced that former athletes from Chennai who are in a debilitating condition can apply for pension assistance.


*  Higher Medical Service through 'Tele Medicine' in Underprivileged Villages of Tamil Nadu: Director of Public Health Information.

 * Chance of rain in Tamil Nadu for 4 days: Chennai Meteorological Department information.

 * Final year medical students who returned from Ukraine, China due to Corona are allowed to take the exam: Central Government's reply in the Supreme Court.

 * Russia Arrests American Journalist for Spying

 * Violence broke out in France against President Macron's reform plan to raise the retirement age from 62 to 64.

*  The 16th IPL will feature 10 teams.  The cricket matches will start at 7.30 pm tonight.

* Spain Masters Badminton: Indian player P.V.  Sindh advances to 2nd round.

 * Miami Open Tennis: Jessica Pegula, Rybakina advance to semifinals

 



Covai women 


Monday, 27 March 2023

Do you know?

 


*🤔 Do you know?*

1. Dogs has 42 teeth.

2. Grapes explode when we put them in the microwave.

3. Giraffes can live moredays without water than camel.

4. Before the invention of eraser, breadcrumbs were used to erase mistakes. 

5. In china, the penalty of killing a Panda is death.

6. Hypnotism is banned in Denmark.

7. Natural pearls melt in Vinegar. 

8. Sea turtles can stay underwater for up to 4 - 7 hours.

9. The streets in Japan does not have any names.

10. Camel milk doesnot curdle.

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

1. நாய்களுக்கு 42 பற்கள் உள்ளன. 

2. நாம் மைக்ரோவேவில் திராட்சையை வைத்தால் அது வெடிக்கும். 

3. ஒட்டகத்தை விட ஒட்டகச்சிவிங்கிகளால் தண்ணீர் இல்லாமல் அதிகநாள் இருக்க முடியும். 

4. அழிப்பான் கண்டுபிடிப்பதற்கு முன், ரொட்டிதுணுக்கு தவறுகளை அழிக்க பயன்படுத்தப்பட்டன. 

5. சீனாவில் பாண்டாவை கொலை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். 

6. டென்மார்க்கில் அறிதுயில் நிலைக்கு தடை உள்ளது. 

7. இயற்கை முத்து வினிகரில் உருகிவிடும். 

8. கடல் ஆமைகளால் நீருக்கடியில் 4 - 7 மணி நேரம் வரை இருக்க முடியும். 

9. ஜப்பானில் தெருக்களுக்கு பெயர்கள் கிடையாது. 

10. ஒட்டகப் பால் உறையாது.


Thursday, 23 March 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - - 23.03.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண் : 161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பு.


பொருள்:

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்


பழமொழி :

He that serves well need not ask for his wages

ஊக்கத்தோடு உழைத்தால் ஆக்கம் தேடிவரும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.

பொது அறிவு :

1. சிவப்பு வெள்ளை கலந்த நிறம் உடைய வியர்வையை வெளியிடும் விலங்கு எது?

 காண்டாமிருகம் .

 2.யானைக்கு நுகரும் நரம்புகள் எங்கு அமைந்துள்ளன?

வாய்.

English words & meanings :

 jangle - to make noise like metal hitting metal. verb. The baby smiles if you jangle your keys.. கணகணவென்ற ஒலி எழுப்பு. வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

பழங்களின் ராஜாவான மாம்பழம் ஒரு கோடைக்கால பழமாகும். இது சுவையான பழம் மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சத்தான பழமும் கூட. இப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்தாகும். மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பல நோய்களை எதிர்த்து பாதுகாப்பளிக்கின்றன.

கணினி யுகம்


F4


Display the address bar list in File Explorer.


F5


Refresh the active window.





மார்ச் 23


உலக வானிலை நாள் (World Meteorological Day);






உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.


பகத் சிங்,  சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார், 


 

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்




பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907[1] – மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.[4].

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.[6] பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.

நீதிக்கதை

கடவுளின் சிறப்பு

கதை :

ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார். 

ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார். 

ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான். 

விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார். 

இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின. 

நீதி :

அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.

இன்றைய செய்திகள்

23.03. 2023


* ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

* ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும் ஒன்வெப் நிறுவனத்தின் 36 இணைய சேவை செயற்கைக்கோள்கள்  26-ம் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


* ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட பழமையான 308 ஒலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 25,543 ஏடுகள் உள்ளன.

* டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

* காலநிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

* இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை  கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது.

* சென்னையில் 25-ந் தேதி பெண்களுக்கான தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மனிஷா கால்இறுதிக்கு தகுதி.


Today's Headlines


* The Online Gambling Prohibition Bill is to be tabled again in the Assembly today.

 * 36 internet service satellites of OneWeb will be launched by GSLV Mark-3 rocket on 26th at 9 am.

 * In the Rameswaram Ramanatha Swamy temple, 308 ancient paim script written in Tamil, Granth, Telugu and Devanagari languages have been found.  It has 25,543 scripts.


* It has been reported that the earthquake was felt in the northern states of India including Delhi, UP, Punjab, Haryana and Kashmir.

* The United Nations has warned that there is a risk of a global water crisis due to climate change and a growing culture of consumption.

 * This year the ICC Cricket World Cup will be held in India.

 * The Women's Athletics League Championship will be held in Chennai on 25th.

* India's Manisha Qualifies for Quarter Finals in Women's World Boxing Championship.

 



Covai women 


Wednesday, 22 March 2023

உலக நீர் நாள்

 மார்ச் 22-ந் தேதி உலக நீர்  நாள்  கொண்டாடப்பட்டு வருகிறது.

நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.1993ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை.மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்க, அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்

Monday, 20 March 2023

 

அன்றாட வாழ்வில் வேதியியல்

Please fill the above data!
coin 0

Name : senthilkumar

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண்: 159

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்.


பொருள்:

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.


பழமொழி :

Brevity is the soul of wit


சுருங்கக் கூறலே அறிவின் ஆன்மா. 


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.

பொது அறிவு :

1. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?

 கோலாலம்பூர் (மலேசியா ). 

 2. யூதர்களின் புனித நூல் எது? 

 டோராஹ்.

English words & meanings :

Illustrates - to give examples in order to understand easier. verb. எடுத்துக் காட்டுகள் உடன் உள்ள எளிய விளக்கங்கள். வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான பழம். இதில் ஏராளமான ஊட்டச்ச்ததுக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. கூடுதலாக, தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது கோடையில் உடல் வறட்சியடைவதைத் தடுக்கும்.

கணினி யுகம்

Ctrl + X


Cut the selected item.


Ctrl + C (or Ctrl + Insert)


Copy the selected item.





மார்ச் 13


உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

 

நீதிக்கதை

கதை :

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. 


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது. 


சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள். 


ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரண தண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. 


அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. 


முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். 


இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர். 


சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான். 


இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான். 


நீதி :

ஒருவர் செய்த உதவியை எப்பொழுதும் மறக்க கூடாது.

இன்றைய செய்திகள்

* 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

* மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பெரியகட்டளை கிராமத்தில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் கால வட்டெழுத்துடைய கற்செக்கு கண்டறியப்பட்டுள்ளது.

* ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்குற்றங்களைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 4 நாள் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.

* எல்லையில் சீன அச்சுறுத்தல் நீடிக்கிறது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.


* தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.

* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு ஆகியோர் வெற்றி.

* உலக ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்.

* இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ரைபகினா, சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Finance Minister PDR Palanivel Thiagarajan is scheduled to present the financial statement for the financial year 2023-24 in the Legislative Assembly today at 10 am.

 * An early Pandyan era stone inscription dating back to the 9th century has been found in Periyakatlai village near Beraiyur in Madurai district.

 * A sniffer unit has been started in Hosur Forest Reserve to prevent forest crimes.

 * Tamil Nadu rains for 4 days - Meteorological Department Information.

*  Chinese threat persists at border - External Affairs Minister Jaishankar comments.

*  So far 13 people have been died in a powerful earthquake in the South American country of Ecuador.

 * Indian players Nitu Kanghas, Preeti, Manju won in the women's world boxing.

 * Indian team has moved up to 4th place in the world hockey rankings.


 * Indian Wells Tennis: Rybakina, Sabalenka advance to finals

 

 



Sunday, 19 March 2023

ஒளியியல் 7th std Quiz 2

ஒளியியல் 7th std Quiz 2

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage: