Sunday, 24 March 2024

 LOK SABHA ELECTION TRAINING MODULES 2024

நாடாளுமன்ற தேர்தல் பணி பயிற்சி 2024

இந்த பதிவில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணி செய்யவுள்ள அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் விதமாக தேவையான கையேடு , வீடியோக்கள் லிங்க் , பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம். 

குறிப்பு : தங்கள் ZONAL OFFICERS OFFICIAL TRAINING வழிகாட்டுதல்படி வாக்குச்சாவடி அமைப்பது , தேர்தல்பணி செய்ய வேண்டும்... 

CLICK HERE PROCEEDING OFFICER GUIDE PDF

CLICK HERE ELECTION FILLED FORMS MODEL

CLICK HERE MOCK POLL FILLED FORMS MODEL

CLICK HERE ELECTION DUTY TRAINING VIDEOS


( ELECTION DUTY TRAINING VIDEOS PDF ல் BLUE COLOR LINK கிளிக் செய்தால் வீடியோக்கள் YOUTUBEல் PLAY ஆகும்.) 


Wednesday, 20 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2024

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல் :ஊழியல்

அதிகாரம் :ஊழ்

குறள்:380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

விளக்கம்:

இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?

பழமொழி :

Put your own shoulder to the wheel.


தன கையே தனக்கு உதவி.


இரண்டொழுக்க பண்புகள் :

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்


பொன்மொழி :

சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பல மனங்களின் கூட்டிணைப்பால் உருவானது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

பொது அறிவு : 

1. இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?

விடை: சத்யமேவ ஜெயதே 

2. சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை: தெலுங்கானா

English words & meanings :

Vague - unclear;தெளிவற்ற. 

vicious - deliberately 

violent;தீய.

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை : காசினி கீரையானது ஜீரண கோளாறு,பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணபடுத்தும் தன்மை கொண்டது. உடலில் எந்த இடத்தில் வீக்கம் எற்பட்டிருந்தலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. காசினி; கீரை சிறுநீரகத்தை சுத்திகரித்து நன்கு செயல்பட வைக்கும்.

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

நீதிக்கதை

 ஒரு கிராமத்தில் சேவல் ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அது காலையில் தன் குரலில் கூவி எல்லாரையும் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தது.  அப்போது ஒரு நரி மரத்தின் அருகில் வந்து அந்த சேவல் இடம், “ஹலோ, நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டது. 

சேவல் குனிந்து கீழே பார்த்தபோது அந்த நரி மரத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சேவல் நினைத்தது, “நான் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும் இவன் தந்திரமான நரி என்னுடைய நண்பர்கள் பலரையும் கொன்று சாப்பிட்டுள்ளான். எனவே நான் தான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணியது. 

சேவல் அந்த நரியை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் அந்த நரி சேவலிடம் மீண்டும் பேச முயற்சித்தது. நரி சேவலிடம் சொன்னது, “நான் உனக்கு நல்ல விஷயம் ஒன்றை சொல்ல தான் வந்துள்ளேன். நம் காட்டில் ராஜாவாகிய சிங்கம் ஒரு புது கட்டளை பிறப்பித்துள்ளது”. 

நரி சொன்னதை அந்த சேவல் நம்பவில்லை ஆனாலும் அது என்னவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அப்போது சேவல் நரியிடம், “சரி மகராஜா என்ன கட்டளை தான் பிறப்பித்துள்ளார்? ” என்று கேட்டது. அதற்கு நரி சொன்னது, “இந்த காட்டில் உள்ள நாம் அனைவரும் ஒன்றாக நண்பர்களாக பழக வேண்டும். எந்த ஒரு சண்டையும் வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும்”. இதுதான் சிங்கராஜாவின் கட்டளை என்றது அந்த நரி. 

அதற்கு சேவல், “அப்படியா இது உண்மையா” என்று கேட்டது. நரியும், “ஆமாம் உண்மைதான்” என்றது. அதுமட்டுமல்ல  சிங்கராஜா இன்று நமக்காக அவருடைய குகை அருகில் உணவு ஏற்பாடு செய்துள்ளார். எனவே நாம் சேர்ந்து சென்று நம் உணவை அருந்திவிட்டு வரலாம்,என்றது நரி. 

அப்போது அங்கே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது .அந்த சத்தம் கேட்டதும் நரியின்  முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அதைப்பார்த்த சேவலுக்கு நரிக்கு நாய்கள் என்றால் பயம் என்று புரிந்தது. நாய்கள் எப்போதும் நரியை பார்த்தால் விரட்டி கொண்டே இருக்கும். அதனால் நரிக்கு நாய் என்றால் பயம். 

நரி சேவலிடம் சொன்னது, “நண்பா நீ மரத்தின் கிளையில் தானே இருக்கிறாய் அருகில் ஏதாவது நாய் தென்படுகிறதா?” என்று கேட்டது. சேவல் சுத்திமுத்தி பார்த்தது அங்கே எந்த நாயும் இல்லை. ஆனால் நரிக்கு ஒரு பயம் காட்ட வேண்டும் என்று எண்ணிய சேவல், “ஒரு கூட்டமாக நாய்கள் இங்கேதான் ஓடி வந்து கொண்டிருக்கின்றன” என்றது. 

அதைக்கேட்ட நரியோ அப்படியா, “அப்போது நான் இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை” என்று பயத்தில் ஓட ஆரம்பித்துவிட்டது. நரி மிகவும் வேகமாக பயந்து ரொம்ப தூரம் ஓடி விட்டது. அப்போது சேவல் நரி ஓடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது. 

நீதி : அடுத்தவருக்கு தீமை நினைத்தால் அது நமக்கே தீமையாக வந்து முடியும்.

இன்றைய செய்திகள்

*தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

*85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க 20ஆம் தேதி வீடு வீடாக படிவம் வழங்கப்படும்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.

*தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா ஏற்பு; ஜார்கண்ட் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு.

*திருவனந்தபுரம் மெயில் ரயில் நேரம் ஜூலை 15ஆம் தேதி முதல் மாற்றம்.

*ஐபிஎல் கிரிக்கெட்டை நேரடியாக காண மதுரையில் மெகா திரை அமைப்பு ஒளிபரப்பு; அனைவருக்கும் அனுமதி இலவசம்.

Today's Headlines

*Chances of rain  in Tamil Nadu till 23rd.

 *Forms will be distributed door to door on 20th for people above 85 years of age to vote –  Tamil Nadu Chief Electoral Officer.

 *Tamilisai Soundarrajan resignation is Accepted;  Additional charge given to the Governor of Jharkhand.

 *Thiruvananthapuram Mail Train running Time Changed from 15th July.

 *Mega screen system broadcasting in Madurai to watch live IPL cricket;  Admission is free for all.

 



Covai women


Monday, 18 March 2024

7 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் - பாடவாரியாக

 NMMS தேர்வுக்கு தேவைப்படும் வினாத்தாள் மற்றும் விடை (7 ஆம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் - பாடவாரியாக)


7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 1: அளவீட்டியல் 

வினாத்தாள் pdf 

👇

வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 1: அளவீட்டியல் 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 2: விசையும் இயக்கமும் 

வினாத்தாள்   pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 2: விசையும் இயக்கமும் 

விடை    pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 3: நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 

வினாத்தாள்   pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 3: நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் 

விடை    pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 4: அணு அமைப்பு 

வினாத்தாள்    pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 4: அணு அமைப்பு 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 5: தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

வினாத்தாள் pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 5: தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 6: உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சித் தொடர்பியல் 

வினாத்தாள் pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் 

முதல் பருவம் 

தேர்வு 6: உடல் நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சித் தொடர்பியல் 

விடை  pdf 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2023


திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல் :ஊழியல்

அதிகாரம் :ஊழ்

குறள்:378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின்.

விளக்கம்:

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

பழமொழி :

பயிற்சி மனிதனை பரிபூரணமாக்குகிறது


சித்திரமும் கைப்பழக்கம்


இரண்டொழுக்க பண்புகள்:

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.


2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி :

மனிதர்களால் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். --வில்லியம் ஜேம்ஸ்

பொது அறிவு : 

1.இசைக்கருவிகளின் இராணி என்றழைக்கப்படும் இசைக்கருவி எது? 

வயலின். 


2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?



விடை: ஆறு கால்கள் 

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 உறுதியான - உறுதியான; உறுதியான.

 அற்பமான - ஒரு சிறிய மதிப்பு அல்லது முக்கியத்துவம்; அற்பமானது.

ஆரோக்ய வாழ்வு : 

காசினி கீரை : சினிக்கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி உள்ளதால் மிகுந்த சத்துகளின் கீரையாக திகழ்கிறது.

நீதிக்கதை

 நிலையாமை

தோன்றும் பொருள்கள் அழியுந்தன்மை

"ஒரு செல்வன் தான் தன் காலத்தில் தேடிய செல்வங்களை அறம் செய்யலாம்" என்று சம்பாதித்தவற்றைப் பொன்னாக மாற்றி அவற்றை உருண்டையாகச்செய்து பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஒருநாள் திடீர் என்று நாக்கு இழுத்து மேல் கிளம்பியது, அந்நேரத்தில் பேசமுடியாமையால் கையை வளைத்து "உருண்டை பொன் இருக்கிறது, எடுத்துவாருங்கள்"அறம் செய்யவேண்டும்" என்று அருகில் இருந்த உறவினர்களிடம் காட்டினான். இவ்வுண்மையறிந்த அவன் மனைவி, புளி உருண்டை வேண்டும் என்கிறார். , 'நல்லறிவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்மம் செய்யாது இருந்தோமே' என்று வருந்தி இறந்தார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.

இன்றைய செய்திகள்


*அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ஆம் தேதி மாற்றம்.

*மேற்கு மாம்பலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்கு மாதம் பத்தாயிரம் செலவழிப்பதாக மக்கள் வேதனை.


*மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை வருமான வரித்துறை ஏற்பாடு.

*கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 மின்சார ரயில்கள் ரத்தானதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

*ஐ.பி.எல்.முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதல்..... இன்று ஆன்லைனில் டிக்கெட் விற்பனை.

*மியாமி ஓபன் டென்னிஸ்: நம்பர் ஒன் வீரர் ஜோகோ விச் விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்


*அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

 *மேற்கு மாம்பலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

 *லோக்சபா தேர்தலையொட்டி வருமான வரித்துறை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை ஏற்பாடு செய்துள்ளது.

 * கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 *முதல் போட்டியில் CSK-RCB மோதுகிறது.....இன்று ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்கப்பட்டது.

 *மியாமி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீரர் ஜோகோ விச் விலகினார்.

 



கோவை பெண்கள் 


Monday, 11 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.03.2024

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல் :ஊழியல்

அதிகாரம் :ஊழ்


குறள்:373


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.


விளக்கம்:


கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.


பழமொழி :

Penny wise,pound foolish


கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது


இரண்டொழுக்க பண்புகள் :

 1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.”___ இறையன்பு இஆப.


பொது அறிவு : 

1. மூன்று இதயங்களை கொண்ட உயிரினம் எது? 

ஆக்டோபஸ். 

2. உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு எது? 

நார்வே.

English words & meanings :

 Hit the books - to study very hard, கடினமாக படித்தல் 

hit the nail - says exactly or correctly, மிக சரியாக கூறுவது

ஆரோக்ய வாழ்வு : 

குப்பை மேனி கீரை :குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

நீதிக்கதை

 கொடுப்பதில்தான் சந்தோஷம்

ஒருவர் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குச் சென்றார். வீட்டிற்காக சில பொருள்களை வாங்க வேண்டுமென்று வந்தார். அவர் ஒரு கடையில், ஒரு பொருளை வாங்குவதற்காக, பணப்பையை எடுக்க நினைத்த போது, பணப்பையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தும் பணப்பை கிடைக்கவில்லை. ஆகையால் எதுவும் வாங்காமலே வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

பணத்தை இழந்த வருத்தம் அவருக்கு இருந்தது. வெகுநேரம் அதைப்பற்றியே நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். நாளடைவில் அந் நிகழ்ச்சியை அவர் மறந்து போனார். ஆனாலும்

வெளியில் செல்லும் போது, எடுத்துக் கொண்டு

போகும் பணத்தில் கவனமாக இருக்கலானார்.

மற்றொருநாள் நூறு ரூபாயை பையில் வைத்துக்

கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார்.

வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள்

வாங்கினார். ஐம்பது ரூபாய் மீதம் இருந்தது.

குழந்தைகளுக்காக இனிப்பு வகை ஏதாவது

வாங்கலாம் என்று எண்ணினார். இனிப்பகத்தை

நோக்கிச் செல்லும்போது ஒரு பெண்மணி கையில்

பிள்ளையைப் பிடித்தபடி வந்தாள்.

"ஐயா, என் ஒரே மகன் இவன். பள்ளியில் படிக்கிறான். புத்தகம் வாங்க வேண்டும். கையிலோ காசில்லை. நீங்கள் கொடுத்து உதவினால் புண்ணியம் உண்டு” என்று கெஞ்சினாள்.

படிக்கும் பிள்ளைக்கு புத்தகம் வாங்கப் பணம் கொடுப்பது நல்ல செயல்தானே என்று எண்ணியவர் தம்மிடம் இருந்த ஐம்பது ரூபாயை அந்தப் பெண்மணிக்கு அளித்து விட்டார். வீடு நோக்கி வந்து கொண்டிருந்த அவருடைய மனத்தில் சந்தோஷம் பொங்கியது. தம்மால் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்ததே என்ற சந்தோஷம்.

வீட்டிற்கு வந்ததும். தம்முடைய சந்தோஷத்தை வீட்டில் உள்ளவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பணப்பை தொலைந்து போன போது இழந்ததும் ஐம்பது ரூபாய்தான். இப்போது கொடுத்ததும் ஐம்பது ரூபாய்தான். ஆனால் தொலைந்து போன போது இழந்த வருத்தம், இப்போது இல்லை.

"எதுவும் தாமாகவே சென்று விட்டால் அதனால் துன்பமே ஏற்படுகிறது. நாமே அறிந்து அதனைக் கொடுக்கும் பொழுதோ அதனால் சந்தோஷமே ஏற்படுகிறது."

என்ற நீதியை புரிந்துகொண்டார்.

இன்றைய செய்திகள்

*புதிய இந்திய தேர்தல் ஆணையர் குறித்து மார்ச் 15-ல் ஆலோசனை.

*ஜி பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள்; வருமான வரித்துறை.

*வருகிற செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் இருந்து தினமும் பெங்களூரு புறப்படும்- 2வது வந்தே பாரத் ரயில்.

*பிரெஞ்ச் ஓபன் பேட்மிட்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக்- சிராக் ஜோடி.

*ஐபிஎல் 2024 தொடர் கொல்கத்தா அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அதிரடி வீரர் சேர்ப்பு.

Today's Headlines : 

 *Consultation regarding new Election Commissioner of India will be held on March 15.

 *Special committees to prevent payments to voters through GPay, Phone Pay;  Income Tax Department.

 *From next Tuesday, 2nd Vande Bharat train will depart from Chennai to Bengaluru daily.

 *French Open Badminton: India's star pairing of Sathvik-Chirag advanced to the finals.

 *England action player to replace Jason Roy in IPL 2024 Kolkata team.

 



Covai women 


Friday, 8 March 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.03.2024

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம் : வாழ்க்கை துணைநலம்

குறள்:373

தற்காத்துத் தற்கண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


விளக்கம்:

தன்னை காத்து தான் கொண்டவர்களை பாதுகாத்து தகுதிக்கு உதாரணமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.



பழமொழி :

 பெண் இன்றிப் பெருமையும் இல்லை :

கண் இன்றிக் காட்சியும் இல்லை .

பெண் இல்லாமல் பெருமை இல்லை:

 கண்கள் இல்லாமல் பார்வை இல்லை.

இரண்டொழுக்க பண்புகள்:

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.


2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.


பொன்மொழி :

கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களைக் கண்டு, அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள். – மலாலா

பொது அறிவு : 

1. இந்த ஆண்டிற்கான உலக மகளிர் நாள் கருப்பொருள் _________


விடை: பெண்களில் முதலீடு; முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துதல்


2. மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

விடை: திருமதி பி. கீதா ஜீவன்

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 Women empowerment - பெண்கள் மேம்பாடு

ஆரோக்ய வாழ்வு : 

புதினா கீரை : புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்ளிட்ட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது.

மார்ச் 08

அனைத்துலக பெண்கள் நாள்


 


அனைத்துலக பெண்கள் நாள் (சர்வதேச மகளிர் தினம்) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டு கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

நீதிக்கதை

 இடுக்கண் களையும் நட்பு


அரசகுமாரனும் அவனுடைய உயிர் நண்பனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்கள். வெகுநேரம் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் அரச குமாரன் மிகவும் களைப்படைந்தான்.

"நண்பா, எனக்கு தூக்கம் வருகிறது. இம் மரத்தடியில் படுத்துத் தூங்குகிறேன்" என்றான் அரசகுமாரன். அரசகுமாரன் தூங்கும் போது நண்பன் அருகில் அமர்ந்து காவல் காத்தான். சிறிது நேரத்தில் அங்கே பெரியதொரு நாகப்பாம்பு வந்தது. 'புஸ்,புஸ்' என்று ஓசையிட்டபடியே அருகில் வந்தது. நண்பன் இடையிலிருந்து வாழை ஓங்கினான்

உடனே நாகப்பாம்பு பேசியது. "இந்த குமாரன் போன ஜென்மத்தில் என்னுடைய எதிரியாக இருந்தான். ஆகவே அவனுடைய ரத்தத்தைக் குடித்தால்தான் என் மனம் ஆறும்" என்றது.

நண்பன், அரசகுமாரனின் உயிரைக் காக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தான். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"பாம்பே! அரசகுமாரனின் ரத்தம்தானே உனக்கு வேண்டும்? தந்தால் அதைக் குடித்துவிட்டு நீ போய் விடுவாயா?" என்று நண்பன் கேட்டதும் நாகப் பாம்பு அதற்கு சம்மதம் தெரிவித்தது.

உடனே, நண்பன் அரசகுமாரனின் கையில் தன்னுடைய வாளினால் காயம் ஏற்படுத்தினான். அருகில் இருந்த இலைகளைக் கொண்டு கிண்ணம் போல தயார் செய்தான். அந்தக் கிண்ணத்தில் அரசகுமாரனின் கையிலிருந்து கசிந்த ரத்தத்தை நிரப்பினான். அவன் அவ்வாறு செய்யும் போது அரசகுமாரன் லோசாகக் கண் விழித்துப் பார்த்துவிட்டு, உடனே மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான்.

இலையால் ஆன கிண்ணம் நிறைய ரத்தம் சேர்ந்ததும் நண்பன், நாகப்பாம்புக்கு முன்னால் வைத்தான். பாம்பு ரத்தத்தைக் குடித்துவிட்டு, நண்பனுக்கு வாக்களித்தது போல அங்கிருந்து சென்று விட்டது.

நண்பன் மகிழ்ச்சியடைந்தவனாக, காட்டில் இருந்த பச்சிலைகளைக் கசக்கி சாறு பிழிந்து அரசகுமாரனின் கையில் ஏற்பட்ட காயத்தின் மீது தடவினான். சிறிது நேரத்தில் அரசகுமாரன் கண் விழித்தான் .

பிறகு இருவரும் காட்டில் பயணத்தைத் தொடர்ந்தனர். நண்பன், அரசகுமாரன் நடந்த விஷயத்தைப் பற்றித் தன்னிடம் எதுவும் கேட்கவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருந்தான்.

காட்டிலிருந்து அரண்மனைக்கு வந்து இரு தினங்கள் ஆன பிறகும் அரசகுமாரன் எதுவும் கேட்கவில்லையே என்று நண்பன் எண்ணினான்.

பிறகு நண்பனே, அரசகுமாரனிடம் கேட்டு

விட்டான். "அரசகுமாரா! அந்த காட்டில் நீ தூங்கும் வேளையில் உன் கையில் நான் காயம் ஏற்படுத்தினேன் அதை நீயும் பார்த்தாய், அதைப் பற்றி எதுவுமே என்னிடம் கேட்கவில்லையே" என்றான் நண்பன்.

"நண்பா! என் மீது நீ வைத்திருக்கும் அன்பும் நம்முடைய நட்பும் நான் அறியாததா? நீ எது செய்தாலும் என் நன்மைக்காகவே செய்வாய் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் நான் இதுபற்றி உன்னிடம் கேட்கவில்லை" என்றான் அரச குமாரன்.


"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

இன்றைய செய்திகள்

08.03.2024


*இந்தியாவில் கல்வியை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கிறார்கள்- அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்.

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் நீட் பயிற்சி.

*சென்னை: திறப்பு விழாவிற்கு தயாராகும் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம்.

*அவ்வையார் சிலைக்கு இன்று அமைச்சர்கள் மாலை அணிவிக்கிறார்கள்- தமிழக அரசு ஏற்பாடு.

*ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

*கல்வியை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கு இந்தியா அதிகம் செலவழிக்கிறது - ஆய்வுக்குப் பிறகு அதிர்ச்சித் தகவல்.


 * மார்ச் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி.

 *சென்னை: யானைகவுனி ரயில்வே மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயாராகிறது.

 *அவ்வையார் சிலைக்கு அமைச்சர்கள் இன்று மாலை அணிவிப்பார்கள் - தமிழக அரசு.

 *ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


 



கோவை பெண்கள்


Tuesday, 5 March 2024

Multiples of 4

*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்*

 *பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்*


*நாள்:-05-03-2024*

*கிழமை:- செவ்வாய்க்கிழமை*


*திருக்குறள்:*

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

*குறள்:370*

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

விளக்கம்:

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

*பழமொழி :*

One good turn deserves another.

உப்பிட்ட வரை உள்ளளவும் நினை.

*இரண்டொழுக்க பண்புகள் :*

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்...

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.

*பொன்மொழி :*

நேரத்தை வீணாக

தள்ளிப்போடாதே..

தாமதங்கள் அபாயகரமான

முடிவை தரக் கூடியவை

*பொது அறிவு :*

1. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?

விடை: கால்சியம் பாஸ்பேட்

2. பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகை பாறையை சார்ந்தது?

விடை: தீப்பாறை 

*English words & meanings :*

 Multilingual - using more than one language பலமொழிப்புலமை

Moans(v)- grieves புலம்பல்

*ஆரோக்ய வாழ்வு :*


புதினா கீரை: பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

*நீதிக்கதை*

 புற்றும் பாம்பும்

இரண்டு பேர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவரும் பேசிக் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அடர்ந்த புதர்களும் பாம்புப் புற்றுகளும் இருந்தன.

"அதோ பாம்புப் புற்று தெரிகிறது. நாம் அதைச் சுற்றிக் கொண்டு சற்று தள்ளியே போகலாம், வா" என்று ஒருவன் கூறினான்.

ஆனால் மற்றவனோ, "அது பாம்புப் புற்றுதான். ஆனால் பாம்பு இருக்கிறதா, இல்லையா என்றே தெரியாது. நாம் எதற்காக பயந்து சுற்றிக்

கொண்டு போக வேண்டும். வா,வா,புற்றின்

அருகிலேயே செல்லலாம்" என்றான்.

முதலில் கூறியவனோ, "நான் சுற்றிக் கொண்டு தான் போகப் போகிறேன்" என்று உறுதியாகக் கூறினான். அவ்வாறே பாம்புப் புற்று இருக்கும் இடத்துக்கு சற்று தொலைவாகவே சென்றான். மற்றொருவனோ, "சுத்த பயந்தாங்கொள்ளியாக இருக்கிறாயே" என்று கூறி நகைத்துவிட்டு பாம்புப் புற்றுக்கு அருகிலேயே சென்றான். அப்போது அவனுடைய காலடி பட்டு புற்று மண் சரிந்தது. மண் சரிந்து புற்று வாயில் விழுந்ததும், புற்றுக் குள்ளிருந்த நாகப்பாம்பு சீறிக் கொண்டு வெளியில் வந்தது.

புற்றை மிதித்தவன் பாம்பைக் கண்டதும் அரண்டு போனான். "பாம்பு, பாம்பு" என்று அலறியபடியே, தன்னுடன் வந்த நண்பனை நோக்கி விரைந்து ஓடினான்.

மூச்சிரைக்க ஓடி வந்தவனுக்கு நண்பன் குடிக்க தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்தான்.

"நண்பா, நீ முன்யோசனையுடன் கூறியதை ஏற்றுக் கொள்ளாமல், நான் நடந்து கொண்டேன். என்னை மன்னித்துக் கொள்" என்றான்.

"புற்று என்றால் பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். அதுபோல்தான் பெரியவர்கள் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று கூறுவதும். அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கும். பெரியவர்கள் சொல்வதை நாம் மதித்து நடந்தால் அதனால் நமக்கு நல்லதே விளையும்” என்றான் நண்பன்.

"சரியாகச் சொன்னாய்" என்று ஆமோதித் தான் இவன் "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது இது போன்ற சம்பவங்களைப் பிரதிபலிப்பதுதான் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.


*இன்றைய செய்திகள்

*போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் 6 ஆம்  தேதி பேச்சுவார்த்தை.

*கலைஞர் அருங்காட்சியகத்தில் இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி.

*பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம்- தமிழ்நாட்டை பின்பற்றும் டெல்லி.

*'நீங்கள் நலமா' புதிய திட்டம்  6 ஆம் தேதி தொடக்கம் - முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு.

*ரஞ்சித் கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை.

*சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக களம் இறங்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

*Today's Headlines*

*Negotiations with transport unions on 6th.

 * Public is allowed to visit the Kalaingar  museum from today.

 *Scheme to provide ₹1000 per month to women- Delhi is  following Tamil Nadu.

 * 'Neengal nalama' new program launched on 6th - CM M K Stalin's announcement.

 *Ranjith Cup Cricket: Mumbai beat Tamil Nadu and reached the final.

 *Fans are waiting for Mahendra Singh Dhoni to become the captain of Chennai Super Kings.



Covai women