Thursday, 29 February 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.02.2024

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்


குறள்:367


அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.


விளக்கம்:


ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.


பழமொழி :

Old is gold


பழமையே சிறந்தது


இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

நல்லது எது கெட்டது

எது என சிந்திக்க தெரியாத

மனிதன் தனக்கு மட்டுமல்ல..

மற்றவர்களுக்கும்

துரோகம் செய்கிறான்.

பொது அறிவு : 

1. நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?


விடை: 16 எலும்புகள்


2. பறம்பு மலையை ஆண்ட மன்னர்?

விடை: பாரி மன்னர்



English words & meanings :

 Jaunt - a journey for pleasure.


Jocular -  playful

ஆரோக்ய வாழ்வு : 

கொடி பசலை கீரை :கொடிப்பசலைக் கீரையைச் சாப்பிட்டால் எப்படிப்பட்ட புண்ணும் ஆறிவிடும். நீர்க்கடுப்பு, மலக்கட்டு போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பிப்ரவரி 29

பெப்ரவரி 29 (February 29) அல்லது லீப் நாள் (leap day) என்பது கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. இந்த நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 4 ஆல் வகுபடும் 2016, 2020, 2024 போன்ற ஆண்டுகளில் மட்டுமே வருகிறது. கிரெகொரியின் நாட்காட்டி உட்பட சூரியனைச் சுற்றிவரும் புவியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான சூரிய நாட்காட்டிகளில் லீப் நாள் உள்ளது. லீப் நாளைக் கொண்டிருக்கும் ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது.


மொரார்ஜி ரன்சோதிசி தேசாய் 


மொரார்ஜி ரன்சோதிசி தேசாய் (29 பிப்ரவரி 1896 - 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வெளியேறி பின்பு காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலையும், பல அதிகார மீறல் செயல்களையும், அவர் அப்போது கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் முதல் எதிர்கட்சியான ஜனதா கட்சியில் பிரதமர் ஆனார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.

நீதிக்கதை

 தவளையின் வெற்றி


ஒரு குரு சீடர்களுடன் உரையாடுவது வழக்கம். கேள்விகளையும் கேட்டு விடைகளை அவர்களிடமே விட்டுவிடுவார். எப்போதும் தனது சீடர்களுக்கு மாலை வெளியில் புத்தியை போற்றும் சிறுகதைகளை சொல்வதை வழக்கமாக் கொண்டார். கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது அவர் சீடர்களிடம், "நான் உங்களிடம் இப்போது ஒரு கதையைக் கூறி, அதற்கான சிந்தனையையும் சொல்வேன். ஆனால் இப்போது நீங்கள், நான் சொல்லும் கதையை புரிந்து கொண்டு, நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்ல வேண்டும். புரிகிறதா?" என்று கூறினார்.

அதற்கு சீடர்களும் "சரி குருவே!" என்று கூறி அவர் கூறப்போகும் கதையை மிகவும் கூர்மையாகக் கேட்கனர். பின் குரு கதையை சொல்ல ஆரம்பித்தார். 

"ஒரு ஊரில் விநோதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று மக்கள் நினைத்து தவளைகளுக்குப் போட்டி வைத்தார்கள். அந்தப் போட்டியில் நிறைய தவளைகள் பங்கு கொண்டன. அது என்ன போட்டி என்று வியப்பாக இருக்கிறதா? சொல்கிறேன். அங்கு ஒரு சிறிய குன்று இருந்தது. அந்த குன்றின் உச்சிக்கு எந்தத் தவளை முதலில் சென்று வெல்கிறது என்பதுதான் அந்தப் போட்டி."

அந்த உச்சியின் உயரத்தைப் பார்த்தவுடன் அங்கு கூடியிருந்தவர்கள் எந்தத் தவளையும் இந்த உச்சியை அடைய முடியாது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அத்தருணத்தில் ஒரு தவளை மட்டும் அவர்கள் பேசுவதை கூர்மையாகப் பார்த்தது.

பின் போட்டி தொடங்கியதும் அனைத்து தவளைகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஒன்றன் மேல் ஒன்றாக முட்டி மோதி ஏறி கடைசியில் வழுக்கி விழுந்தன. ஆனால் ஒரு சில தவளைகள் சற்று நிதானமாக ஓரளவு உயரத்தை அடைந்தன. இருந்தாலும் தங்களால் மேலும் ஏற முடியாமல் கீழே விழுந்து விட்டன. இவ்வாறு இருக்க ஒரு தவளை மட்டும் உயரத்தை பொருட்படுத்தாமல் மேலே ஏறி, ஏறி குன்றின் உச்சியை அடைந்தது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்!

வெற்றி பெற்ற தவளைக்குப் பரிசு கொடுக்கும் நேரம் வந்தது. பரிசைக் கொடுப்பதற்காக அந்த வெற்றி பெற்ற தவளையைப் பார்த்து "உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?" என்று பரிசு கொடுப்பவர் கேட்டார். அந்தத் தவளை

எதுவுமே பேசாமல் இருந்தது. ''சரி இப்பொழுது உங்களை நான் கேள்வி கேட்கிறேன். அந்தத் தவளை ஏன் பேசாமல் இருந்தது?" என்று குரு

சீடர்களை கேட்டார். அனைத்து சீடர்களும் பதில் தெரியாது குழப்பத்தில் இருந்தனர். பின்னர் அவர்கள் "தெரிய வில்லையே!" என்று குருவிடம் கூறினர்.

குருவும் "வேறு எதுவும் இல்லை! அந்தத் தவளைக்குக் காது கேட்காது, மற்றும் வாய் பேச வராது. அதனால்தான் அது எதுவும் பேசவில்லை" என்று கூறினார். மேலும் தொடர்ந்தார். "அது மட்டுமல்லாமல் அந்தத் தவளை வெற்றியென்னும் ஒரே நோக்கத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு போட்டியில் பங்கு கொண்டதால் தான் அதனால் வெற்றி பெற முடிந்தது" என்பதையும் கூறிச் சென்றுவிட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உறுப்புக்கள் செயல்படாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் இருந்தால் நாம் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பது தெரிகிறது.

இன்றைய செய்திகள்

29.02.2024


*மூத்த பத்திரிக்கையாளர் 

வி. என். சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது -மு க ஸ்டாலின் அறிவிப்பு.

* ஓட்டுநர் உரிமம் இனி 

விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை.

* அரசு பள்ளிகளில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கை.

* புற்றுநோயை குணப்படுத்த ரூபாய் 100க்கு மாத்திரை -டாட்டா இன்ஸ்டிட்யூட் சாதனை.


* தூத்துக்குடி குலசையில் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டே போட்டியில் விளையாடி 31 இடங்கள் முன்னேறிய துருவ் ஜுரல்.

Today's Headlines

*Kalainjar Pen Award to Senior Journalist

 V.  N.  Sami    Announcement by CM - M. G. Stalin.

 * Driving license will be 

 Sent by speed post only: Tamil Nadu Transport Department.

 * Admission to government schools will start from 1st March.

 * Pill for Rs 100 to cure cancer - Tata Institute accomplishment.

 * The Rohini rocket was successfully launched from the Tuticorin,  Kulasai rocket launch pad.

 * ICC Test Rankings: Dhruv Jural has moved up 31 places in just two matches.

 



Covai women 


Monday, 26 February 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2024


திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:364

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

விளக்கம்:

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

பழமொழி :

முள் இல்லாத ரோஜாக்கள் இல்லை


முள்ளில்லா ரோஜாக்கள் இல்லை.


இரண்டொழுக்க பண்புகள்:

1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.


2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ ​​மாட்டேன்.


பொன்மொழி :

மற்றவர்கள் மீதான அக்கறை உணர்வு, நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகிறது. இது தான் மனிதனின் அனைத்து மகிழ்ச்சிக்கும் மூலமாகும். --தலாய் லாமா

பொது அறிவு : 

1.சிங்கப்பூரின் பழைய பெயர்?


விடை: டெமாசெக்


2. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?


விடை: அழ.வள்ளியப்பா



ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 gaudy - showy ஆடம்பரமான gallent - stately.துணிச்சலான

ஆரோக்ய வாழ்வு : 

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நீதிக்கதை

 இனிப்பும் கசக்கும்

உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தரின் குருவான சிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு நாள் ஒரு பெரிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறும் கருத்துக்களை அனைவரும் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்து வந்து அவர் முன் நின்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்தப் பெண்மணியைப் பார்த்து." தாயே உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்.

உடனே அந்த அம்மையார் "சுவாமி என் மகன் அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுகிறான். அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.அதனால், தான் அவன் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்று தகுந்த அறிவுரை கூறவேண்டும்.

அவள் மேலும் சொன்னாள். “நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் என் சொல்லைக் கேட்கமாட்டேன் என்கிறான். அடித்துக்கூடப் பார்த்தேன், ஒரு பயனுமில்லை என்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியைப் பார்த்து, "சரி தாயே! நீங்கள் உங்கள் மகனை ஒரு வாரம் என்னிடம் கழித்து அழைத்து வாருங்கள்" என்றார்.

அந்தப் பெண்மணியும் பதில் ஏதும் பேசாது. சுவாமியிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

ஒரு வாரம் கடந்தது. அந்தப் பெண்மணி மீண்டும் தன் மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்க்க வந்தாள்.

 அந்தப் பெண்மணியை அன்புடன் வரவேற்றார். பிறகு அவளது மகனைப் பார்த்து, "தம்பி இனிப்புகள் அதிகம் சாப்பிடுகிறயாமே? அவ்வாறு அதிகம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் அது உன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உன் வயிற்றில் பூச்சிகள் உருவாகும்". என அறிவுரை கூறினார்.

அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை சுவாமியிடம் கேட்டு விடலாம் என்று எண்ணிய அவள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்து "சுவாமி, நான் முதல் நாள், என் மகனை அழைத்து வரும்போது அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்று என் மகனுக்கு அறிவுரை கூறலாமா? ஏன் ஒரு வாரம் பொறுத்து வரச் சொல்லி எளிய அறிவுரை கூறுகிறீர்களா?" என்று கேட்டாள்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே, "தாயே! நீங்கள் உங்கள் மகனை முதல் முறையாக அழைத்து வந்த போது நானே அதிக அளவில் இனிப்பு சாப்பிட்டுபவனாக இருந்தேன். அன்னிலையில் நான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை.

இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அதனால்தான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறினேன்" என்றார்.

அந்தத் தாய் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை புகழ்ந்த படியே சென்றாள். அந்தச் சிறுவனும் அன்று முதல் அதிகமான அளவில் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்? எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் நல்வழியில் நடக்கிறோமா என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாம் தவறான வழியில் நடந்து கொண்டு மற்றவர்களை நல்வழியில் நடக்குமாறு அறிவுரை கூறக்கூடாது. அதில் பயனில்லை. தகுதியுள்ள நல்லவர்கள் யாவரையும் நல்வழிப்படுத்துவர்.

இன்றைய செய்திகள்

26.02.2024


* தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.


*தூத்துக்குடியில் ரூபாய் 16,000 கோடி மின்சார வாகன ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்.

*தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது.

*மலைப்பகுதி மகளிருக்கும் இன்று முதல் இலவச பயணம் அமைச்சர் சிவசங்கர் தகவல்.

*இந்தியாவில் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்த அஸ்வின்.

இன்றைய தலைப்புச் செய்திகள்

*தென் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.

 தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி மதிப்பிலான மின்சார வாகன ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 * நுகர்வோர்கள் தனியாரிடம் இருந்து மின் மீட்டர்களை வாங்க எரிசக்தி வாரியம் அனுமதித்துள்ளது.

 மலையக பெண்களுக்கு இன்று முதல் பயணம் இலவசம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 *இந்தியாவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை படைத்தார்.

 



கோவை பெண்கள்


Tuesday, 20 February 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.02.2024

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:360

காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்.


விளக்கம்:


விருப்பம், வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.

பழமொழி :

ப்ரையரை மொட்டில் நிப்


முளையிலேயே கிள்ளி எறி.


இரண்டொழுக்க பண்புகள்:

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனெனில் தோல்வி வெற்றியின் முதல் படி 



பொன்மொழி :

நேற்றைய மனிதனின் வாழ்க்கை உண்மையும், எளிமையும் கொண்டதாயிருந்தது. இன்றோ சுகங்களையே அதிகம் விரும்பும் கேவலநிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. சுகங்கள் அதிகரிக்கவும் ஒழுக்கங்கள் தேய்ந்து மறையலாயிற்று.

பொது அறிவு : 

1. பின்வருவானவற்றுள் பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?


எறும்புத்திண்ணி 


சிம்பன்ஸி


கடற்பசு 


தேவாங்கு


விடை: எறும்புத்திண்ணி 


2. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

விடை: பச்சோந்தி



ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 வாழ்க்கையின் அலாதியான அனுபவம்; immature.அனுபவம் அற்ற. சரணாகதி - எதிராளியை அல்லது கோரிக்கையை எதிர்ப்பதை நிறுத்தும் செயல்.சரணாகதி.

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை:

இதன் தண்டுகளில் ஏராளமான புரோட்டீனும், மாவுச்சத்தும், மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் அடங்கியுள்ளன. கன்றுக்குட்டி புல்: அதனால்தான், கன்றுக்குட்டிகளுக்கு இந்த கீரை மிகவும் பிடிக்குமாம்.


பிப்ரவரி 20

உலக நீதி நாள்


சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (உலக சமூக நீதி நாள்) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புகள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய சர்வதேச அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நீதிக்கதை

 கைப்பிடியளவு மலையளவு


ஒரு முனிவர் உலகிலுள்ள அனைத்தையும் கற்க வேண்டுமென்று விரும்பினார். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் வேறு எதிலும் மனத்தைச் செலுத்தவில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்வது வரை படித்துக் கொண்டே இருந்தார். படித்ததன் பொருளை அறிந்து கொள்வதும் அதனை மனனம் செய்வதுமாக நாட்கள் சென்றன. வருடங்கள் கழிந்தன. முதுமையடைந்து முனிவர் இறப்பை எய்தினார்.

மறுபிறவி எடுத்த பின்பும் முற்பிறவியில் செய்தது போல படிப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். மேலும் படிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன, முனிவர் தொடர்ந்து கற்பதிலேயே மனதை

செலுத்தி வந்தார். காலம் சென்றது. வயதான பின்பும் முனிவர் கற்பதிலேயே நாட்டம் கொண்டிருந்தார். ஆயினும் கற்று முடித்து விட்டோம் என்ற நிறைவு அவருக்கு ஏற்படவில்லை. நாளடைவில் பிறவியும் முடிந்து மூன்றாவது முறையாக பூவுலகில் பிறந்தார்.

அப்பிறவியிலும் அவருடைய நாட்ட மெல்லாம் கற்பதில் மட்டுமே இருந்தது. பலகாலம் பல்வேறு சாஸ்திரங்களைக் கற்ற பின்பும் இன்று கற்பதற்கு நிறைய மீதி இருப்பதாகவே தோன்றியது.

அப்போது ஒரு நாள் இந்திரன், முனிவர் முன்பு தோன்றினான். "முனிவரே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டான்.

முனிவரின் குடில் முழுவதும் ஏட்டுக் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முனிவர் இந்திரனை வரவேற்று "படித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா என்றார்.

"தெரிகிறது கற்கவேண்டும் என்ற உங்களுடைய தாகம் அடுத்த பிறவியிலும் தொடருமா? என்று இந்திரன் வினவினான்.

"இங்குள்ள ஏடுகள் தவிர இன்னும் ஏதேனும் இருந்தால் அடுத்த பிறவியிலும் என் பணி தொடரும்" என்றார் முனிவர்.

இந்திரன், குடிலுக்கு வெளியில் வருமாறு முனிவரை அழைத்தான். "முனிவரே, இதோ நம் எதிரில் தெரிகிறதே அது என்ன?” என்றான்.

"அதுவா? அது ஒரு மலை" என்றார் முனிவர். அவர்கள் இருந்த இடத்திற்கு எதிரில் பெரியதொரு மலை வானளாவ உயர்ந்து நின்றது.

"சரி, இதோ என் கைப்பிடியில் உள்ளது என்ன?"

"இது கூடவா தெரியாது? கைப்பிடியில் மண் உள்ளது" என்றார் முனிவர்.

"முனிவரே! நீங்கள் இத்தனை பிறவிகளில் கற்றது என் கைப்பிடியிலுள்ள மண் அளவுதான். நீங்கள் கல்லாதது இதோ இந்த மலையளவு.புரிந்ததா? என்று இந்திரன் கூறியதைக் கேட்டதும் முனிவர், "கற்றது கைம்மண் அளவு கல்லாதது மலையளவு" என்று அறிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்


*தமிழக பட்ஜெட் 5 லட்சம் ஏழை குடும்பங்களின் வறுமை ஒழிக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு.

*தமிழக பட்ஜெட்: இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு.


*ஆந்திராவில் பறவை காய்ச்சல்: தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை.

*பள்ளி, கல்லூரி தேர்வுகள் தொடக்கம்: தடையில்லா மின்சாரம் விநியோகிக்க உத்தரவு.

*புரோ ஹாக்கி லீக்:  பெனால்டி சூட் அவுட் முறையில் அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

* உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டி: இந்திய பெண்கள் அணி வெற்றி.

Today's Headlines

5 lakh people's poverty will be eradicated through Tamil Nadu government budget says Minister Thangam Tennarasu.

 *Tamil Nadu Budget: Allocation of Rs 100 crore for "Illam Thedi Kalvi" Scheme.

 *Bird flu in Andhra Pradesh: Measures are taken to prevent it from spreading to Tamil Nadu.

 * School, college exams begins: government ordered to give uninterrupted power distribution .

 *Pro Hockey League: Indian women's team beat USA in penalty shootout.

 * World Table Tennis Championship Group Match: Indian Women win.



Covai women 


Monday, 19 February 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2024l

திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:359

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்.

விளக்கம்:

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.


பழமொழி :

New brroms sweep well


முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி



இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் ரகசியம் தைரியம். --கேரி ஜோன்ஸ்


பொது அறிவு : 

1. பின்வரும் உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?

வௌவால்

மண்புழு 

தேனீ 

எறும்பு 

விடை: மண்புழு

2. மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?

விடை: குக்கு பெர்ரா

English words & meanings : 

Anatomy -  the structure of a living thing. உயிரினங்களுடைய உடல் உறுப்புகளின் அமைப்பியல்;

Amber –

a hard clear yellow-brown substance used for making jewellery.அணிகலன்கள் செய்ய பயன்படும் மஞ்சளும் பழுப்பும் நிறம் உள்ள கடின பொருள்

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை:

களைச்செடி என்று நாம் பிடுங்கி எரியும் செடிகளில் ஒன்றான கானாவாழையே இன்றைய கீரை….ரத்தவிருத்தி, கபநோய்களுக்கு, புண்களுக்கு மற்றும் என்னிலடங்கா நோய்க்கு அருமருந்து இந்த கானாவாழை…இந்த கானாவாழையை நாம் பயன்படுத்தினால் நம் உடல் நோயை கானாததால் இது கானாவாழை என்றழைக்கப்படுகிறது.

நீதிக்கதை

 உபாயம் வென்றது


ஓர் ஊரில் தன்வந்தர் ஒருவர்இருந்தார்.அவரிடம் நிறைய பணம் இருந்தும், யாருக்கும்  ஒரு பைசாகூட  அளிப்பதற்கு அவருக்கு மனம் வருவதில்லை. தனவந்தருக்கு ஒரே ஒரு நண்பர் மட்டுமே இருந்தார். அவர், தனவந்தர் விரும்பியபடி அவருக்கு உடைகள் தைத்துக் கொடுக்கும் தையற்காரர்.™

தையற்காரருக்கு வயது முதிர்ந்தது. நோய்வாய்ப்பட்டு ஒருநாள் இறந்து போனார். தனவந்தருக்கு வயதாகியது. அவரும் படுத்த படுக்கையானார். தானும் ஒருநாள் நண்பரைப் போல இறந்து விடுவோம் என்று எண்ணினார்.

தையற்காரருக்கு பன்னிரெண்டு வயதில் ஒரு பேரன் இருந்தான். அவன் தனவந்தரின் கஞ்சத்

தனத்தைப் பற்றி நன்றாக அறிந்திருந்தான். ஒருநாள் அவன் செல்வந்தரைக் காண வந்தான்.

"ஐயா, நான் உங்கள் நண்பராக இருந்த தையற்காரரின் பேரன்” என்றான் அச்சிறுவன்.

தனவந்தர் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே, "அப்படியா, ரொம்ப சந்தோஷம்" என்றார். பிறகு அவன் வந்த விஷயம் பற்றிக் கேட்டார்.

"ஐயா என் தாத்தா, மிக அருமையாகத் தைப்பார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்

இப்போது இறந்து விட்டார். போகும்போது, ஊசியைக் கொண்டுபோக மறந்து போனார் நீங்கள். வானுலகம் போகும்போது அவருடைய ஊசியை எடுத்துச் சென்று கொடுத்து விடுகிறீர்களா? அப்போதுதான் அவரால் தேவர்களுக்கு உடை தைக்க முடியும்" என்றான்.

"சரி, நீ கொண்டு வா, நான் எடுத்துச் சென்று உன் தாத்தாவிடம் கொடுக்கிறேன்” என்றார் அவர்.

பேரன் சென்று விட்டபின்பு, செல்வந்தர் யோசித்தார். ஊசியை எங்கே வைத்துக் கொண்டு வானுலகுக்குச் செல்வது? சட்டைப்பையில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடம்பை எரிக்கும் போது சட்டை எரிந்து போகுமே! சரி, கையில் வைத்துக் கொண்டு போக முடியுமா? முடியாதே உடம்பை எரிக்கும் போது எலும்புதானே மிஞ்சும்? கையிலும் எடுத்துச் செல்ல முடியாது. இப்படி பலவாறாக யோசித்த பின்புதான் தனவந்தருக்கு, ஊசியை எடுத்துச் செல்ல முடியாது என்ற உண்மை புரிந்தது.

மறுநாள் தையக்காரரின் பேரன், தாத்தாவின் ஊசியை எடுத்துக் கொண்டு தனவந்தரிடம் வந்தான்.

"இந்தாருங்கள், பத்திரமாக இதை தாத்தாவிடம் கொடுத்துவிடுங்கள்" என்றான்.

"குழந்தாய் என்னால் இந்த ஊசியை எடுத்துச் "செல்ல முடியாது" என்றார் செல்வந்தர்.

"ஐயா லக்ஷக்கணக்கான உங்கள் சொத்துக்களை எடுத்துச் செல்லும்போது, இந்தச் சிறிய ஊசியை எடுத்துச் செல்ல முடியாதா," என்று சிறுவன் கேட்டான்.

தனவந்தருக்கு புத்தி தெளிந்தது, கண்கள் திறந்தன. அதற்குப்பிறகு, தாம் உயிருடன் இருக்கும் வரை தமது சொத்துகளை தான தர்மத்திலும் ஏழை எளியவர்க்கு உதவுவதிலும் செலவழித்தார். 

இதுவே உணமையான சொத்து. இந்த தானத்தினால் கிடைக்கும் பலன் இறந்தபின்பும் தம்முடன் வரும் என்பதை அறிந்து மகிழ்ந்தார். தையற்காரரின் பேரனும் அவருடைய மனம் மாறியதை அறிந்து தான் செய்த உபாயம் வென்றது என மகிழ்ந்தான்.

இன்றைய செய்திகள்

19.02.2024


*பட்ஜெட்டில் மாபெரும் ஏழு தமிழ்க்கனவு இடம்பெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

*மூன்று ஆண்டுகளில் 60000 பேருக்கு அரசுப்பணி தமிழக அரசு தகவல்.

*இன்று பட்ஜெட் தாக்கல்; "தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி" என்ற தலைப்பில் லோகோ வெளியிட்டது தமிழக அரசு.

*1865 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல் பெறும் வசதி; தொடங்கி வைத்தார் மு க ஸ்டாலின்.


*உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.

Today's Headlines

* Tamil Nadu government announced that "seven great dreams of Tamil" will be included in the budget.

 *Government jobs for 60000 people in three years Tamil Nadu Government information.

 * Budget presentation today;  The Tamil Nadu government has released a logo titled "Beyond Barriers Towards Development".

 *Facility for obtaining copies of documents which are registered since 1865, was started by C.M.Stalin.

 *World Cricket Test Championship: India moved to second place in the points table.

 



Covai women 


Wednesday, 7 February 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:351

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம்:

 பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.


பழமொழி :

சரியாக இருக்கலாம்


வல்லன் வகுத்ததே சட்டம்.


இரண்டொழுக்க பண்புகள் :1

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ ​​கூடாது.

பொன்மொழி :

ஒரு வார்த்தை நம்மை வாழ்வின் அனைத்து சுமைகளிலிருந்தும் வலிகளிலிருந்து விடுவிக்கிறது: அந்த வார்த்தைதான் அன்பு. --சோ ஃபோக்கில்ஸ்

பொது அறிவு :

1. இந்தியாவில் இரும்புப் பாலம் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

விடை: லக்னோ


2. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 veils (v)- to hide or cover திரை, முகமூடி ; vexation (n)- கவலை அல்லது கோபம் துயரம் (அ) எரிச்சல்

ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : கோவைக்கீரையின் சாறினை காலை, இரவு முறையே 2 ஸ்பூன் குடித்து வர நாள்பட்ட நெஞ்சு சளி, இருமல் ஆகியவை குணமடையும். அதோடு இந்த சாறு நாள்பட்ட புண்களையும் ஆற்ற உதவுகிறது.

பிப்ரவரி 07

தேவநேயப் பாவாணர்அவர்களின் பிறந்தநாள்


தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar; 7 பிப்பிரவரி 1902 – 15 சனவரி 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவரது ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

 இரண்டு ஆட்கள் ஒருவர் ஒருவர் துணையாய்ப் பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு கோடாரி கிடந்தது.

அதை முதலில் பார்த்தவர் "நான் ஒரு கோடாரியைக் கண்டெடுத்தேன்" என்று சொல்லிக் கொண்டு அதை எடுத்தார்.

உடனே மற்றவர், "அப்படிச் சொல்லக்கூடாது, நண்பரே. நான் நீ என்று பிரித்துப் பேசக் கூடாது. 'நாம் கண்டெடுத்தோம்' என்று தான் இனி சொல்ல வேண்டும்" என்றார்.

அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் அந்தக் கோடாரியைத் தொலைத்தவர் எதிரே வந்தார். இவர்களிடம் கோடாரி இருப்பதைக் கண்டு, 'கோடாரியை எடுத்தது யார்?' என அவர் கேட்டார்.

அதற்கு எடுத்தவர், "நாங்கள் எடுத்தோம்" என்றார். உடனே சற்று நேரத்திற்கு முன் அவருக்கு பேசக் கற்றுக் கொடுத்தாரே, மற்றவர், அவர், "தப்பு தப்பு அப்படிச் சொல்லக் கூடாது. கண்டெடுத்தவுடன் நீங்கள் சொன்னீர்கள் பாருங்கள், 'நான் கண்டெடுத்தேன்' என்று அதுதான் சரி. இப்போதும் அதைத் தான் சொல்ல வேண்டும்.


நீதி : தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் ஒருமாதிரியும். இழப்பு கிடைக்கும் என தெரிந்தால் ஒருமாதிரியும் பேசுவது மனித குணம். அது தான் 'எலும்பில்லாத நாக்கு எதையும் பேசும்.

இன்றைய செய்திகள்

*மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு.

* மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் தீ; ஆறு பேர் பலி 60 பேர் காயம்.

* 2026 அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்க இலக்கு.

* மதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பூரணம்மாள் மேலும் ரூபாய் மூன்று கோடிக்கு நிலம் தானமாக வழங்கினார்.

* உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் இசை விழா நடைபெற்றது. இதில் 18 பேருக்கு கலை செம்மல் விருது வழங்கப்பட்டது.

* இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Today's Headlines

The central government decided to fence the entire Myanmar border area.

 * Firecracker factory got fire in Madhya Pradesh;  Six dead and 60 injured.

 * Target to complete AIIMS, Madurai by October 2026.

 * Pooranammal also donated three crore rupees worth of land to Panchayat Union Middle School in Madurai.

 * A music festival was held to celebrate the declaration of Chennai as a City of Music by the World Heritage Organization UNESCO.  In this, 18 people were given the Kalai Semmel Award.

 * The Indian team won the second Test cricket match against the England team.

 



Covai women 


Monday, 5 February 2024

உங்களுக்கு தெரியுமா?

 


*உங்களுக்கு தெரியுமா?*

1. மேற்கு வங்கத்தில் உள்ள மாடுகளுக்கு புகைப்பட அடையாள அட்டை இருக்க வேண்டும். 

2. ஆரஞ்சு மரங்கள் நீண்ட கால விளைச்சலைத் தருகின்றன.

3. ஹம்மிங் பறவை மணிக்கு 54 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியது.

4. ஜீரோ-வாட் பல்பு உண்மையில் 15 வாட்ஸ் எடுக்கும்.

5. இத்தாலியின் தலைநகரம் ரோம்.

6. சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது.

7. தென்னாப்பிரிக்கா மூன்று தலைநகரங்களைக் கொண்டுள்ளது.

8. தயான் சந்த் விருது என்பது இந்திய அரசால் வழங்கப்படும் விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்தியாவின் உயரிய விருதாகும்.

9. மனிதன் பயன்படுத்திய முதல் உலோகம் செம்பு.

10. தமிழ்நாட்டில் திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் உள்ளது.


*உங்களுக்குத் தெரியுமா?*

1. மேற்கு வங்கத்தில் பசுக்களுக்கு புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். 

2. பழ வகைகளில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். 

3. ஓசனிச்சிட்டு மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் பறக்கும். 

4. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் 15 வாட்களை எடுத்துக்கொள்ளும். 

5. இத்தாலியின் தலைநகரம் ரோம். 

6. சர்தார் வல்லபாய் படேல் மைதானம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது. 

7. தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று தலைநகரங்கள் உண்டு. 

8. தியான் சந்த் விருது இந்தியாவில் விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும். 

9. மனிதன் உபயோகித்த முதல் உலோகம் செம்பு. 

10. தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் திருச்செங்கோடு. 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2024

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : துறவு


குறள்:349


பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.


விளக்கம்:


 ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.



பழமொழி :

Mice will pray when the cat is out


பூனை இல்லாத ஊரில் எலி நாட்டமை.


இரண்டொழுக்க பண்புகள் :

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

பொது அறிவு :

1. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?


விடை: ஆந்திரப்பிரதேசம்


2. ஈராக் நாட்டின் தலைநகரம்

விடை: பாக்தாக்

English words & meanings :

 Delicious -highly pleasant to the taste. மிகவும் ருசியான


decorum -keeping the good behaviour and morality. அதிக ஒழுக்கமான

ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : கோடை காலத்தில்  கோவை இலையைக் கஷாயமாகச் செய்து அருந்தினால், உடல் சூடு சமநிலைக்கு வரும். கண்கள் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராமல் தடுக்கும்.

நீதிக்கதை

 மனிதனாய் வாழ வேண்டும்

குருநாதர், தன் சீடனை அழைத்தார். "இந்தத் தெருவில் உள்ள நகை வியாபாரியின் வீட்டில் விருந்திற்கு நம்மையும் அழைத்திருக்கிறார்கள்" எனக் கூறினார்.

சீடனும் "உடனே செல்லுவோம் குருவே" என்றான். அவன் வாயில் எச்சில் ஊறியது.

"கொஞ்சம் பொறு பிள்ளாய், 'முதலில் நீ அங்கு சென்று எத்தனை மனிதர்கள் விருந்தில் கலந்து கொள்கிறார்கள் எனப் பார்த்து வா, பிறகு நாம் விருந்தில் கலந்து கொள்ளலாம்" என்றார் குரு.

"இதோ சென்று பார்த்து வருகிறேன் குருவே'' என்றபடி சீடன் குருகுலத்தை விட்டு வெளியே வந்தான்.

நிதானமாக சிந்தித்துப் பார்த்தான். விருந்தில் கலந்து கொள்ளும் மனிதர்கள் எத்தனை பேர் என்றல்லவா கணக்கெடுத்து வரக் கூறியுள்ளார். இது எதற்காக இருக்கும். ஏன் இப்படி நம்மிடம் கூறியுள்ளார். இதில் ஏதோ. உள் அர்த்தம் இருக்கிறது என சிந்தித்தவாறு சீடன் சென்றான்.

குருநாதர் கூறியதின் காரணமும் அவனுக்கு விளங்கிற்று. விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்லும் போதே, கீழே கிடந்த நீளமான மரக்கட்டை ஒன்றையும் எடுத்துச் சென்றான்

சீடன் இப்பொழுது விருந்தினர் சாப்பிடும் இடத்திற்குச் செல்லவில்லை. விருந்தினா் சாப்பிட்ட பின் அனைவரும் கை கழுவச் செல்லும் இடத்திற்குச் சென்றான்.

அவர்கள் சாப்பிட்டு வரும் வழியில், தான் கொண்டு வந்திருந்த மரக்கட்டையை போட்டு வைத்தான். வருபவர் அனைவரும் அம்மரக்கட்டையில் தடுக்கி விட்டுக் கொண்டனர்.

"இம் மரக்கட்டையை யார் இங்கு போட்டார்கள்" என மனதிற்குள்ளும், சத்தம் போட்டும் திட்டிக் கொண்டே சென்றனர்.

இறுதியாக ஒரு பெரியவர் சாப்பாடு முடித்து வந்தவர், அவரும் அம்மரக்கட்டையில் தட்டிக் கொண்டார். நேரே சென்று கையைக் கழுவிக் கொண்டு வந்தார்.

அம்மரக்கட்டையை எடுத்து அப்புறப்படுத்தி ஒரமாகப் போட்டு விட்டுச் சென்றார். "இனிமேல் இங்கு வருபவர்களாவது இம்மரத்தில் தட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்" என எண்ணி இவ்வேலையைச் செய்து விட்டுப் போனார்.

பெரியவரின் செயலைக் கண்ட சீடன் மகிழ்ந்து, தன் குருவிடம் சென்று, மனித நேயமிக்க ஒரே ஒரு மனிதன் மட்டும் விருந்துக்கு வந்திருந்தார் என்றவன் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

நீதி : தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என எப்பொழுதும் நினைக்கக்கூடாது. தான்பட்ட துயரம் அடுத்தவரும் அனுபவிக்கக் கூடாது என நினைக்கும் மனிதரே. உண்மையில் மனிதராவார்.

இன்றைய செய்திகள்

*நாட்டின் காப்பர் தேவையை பூர்த்தி செய்ய அதிரடியில் அதானி. குஜராத் மாநிலத்தில் அதானி குழுமம் உலகின் மிகப்பெரிய "காப்பர்" உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.

*தமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை.

* லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலாயாவில் நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.

* எழும்பூரில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம்;

இன்று முதல் இடமாற்றம்.

* மேற்கிந்திய  தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா அபார வெற்றி.


Today's Headlines


* Adani in action to meet the copper demand of the country.  The Adani Group is building the world's largest "copper" manufacturing plant in the state of Gujarat.

 *Chief Minister M K Stalin is in Consultation with officials on Tamil Nadu Budget 

 * An earthquake on the Richter scale of 3.8 was recorded in Kargil and Meghalaya in Ladakh.

 * Metro Station's  Parking at Egmore;

 Change of place from today.

 * Australia won the second ODI against the West Indies.

 



Covai women 


Thursday, 1 February 2024