Sunday, 29 August 2021

இன்றைய தினம்

 மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்த தினம் - ஆகஸ்டு 29, 1831:


மைக்கேல் பரடே பிரிட்டனை சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவுயாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே. 


பாதியிலேயே பள்ளிப்படிப்பைவிட்ட ஃபாரடே தனது விஞ்ஞான ஆர்வத்தாலும், சுய முயற்சியாலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திச் சாதனை புரிந்தார். மின்னியலில் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அவரது ஆய்வுகள், அவற்றைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் பலன்களை இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.. இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

Saturday, 28 August 2021

Assignment 2

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 1 ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை - ALL -SUBJECTS- T/M & E/M 27.08.2021

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 1 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

 

தமிழ் & ஆங்கிலம்-  இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம் & EVS -T/M-   இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

கணிதம் & EVS -E/M-   இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 2 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

தமிழ் & ஆங்கிலம்-  இங்கே கிளிக் செய்யவும்

 

 

EVS & கணிதங்கள் T/M -   இங்கே கிளிக் செய்யவும்

 

 

EVS & கணிதங்கள் E/M -   இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 3 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

 

தமிழ் & ஆங்கிலம் -  இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

கணிதம், அறிவியல், சமூக -T/M-  இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

கணிதம், அறிவியல், சமூகம் - இ/எம்-  இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 4 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

தமிழ் & ஆங்கிலம்-  இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம், அறிவியல், சமூகம் - T/M -  இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம், அறிவியல், சமூகம் - இ/எம்-  இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 5 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

தமிழ் & ஆங்கிலம் -  இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம், அறிவியல், சமூகம் - T/M -  இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம், அறிவியல், சமூகம் - இ/எம் - இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 6 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

தமிழ்- இங்கே கிளிக் செய்யவும்

 

ஆங்கிலம் - இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம் டி/எம் -  இங்கே கிளிக் செய்யவும்

 

கணிதம் E/M -  இங்கே கிளிக் செய்யவும்

 

அறிவியல் T/M - இங்கே கிளிக் செய்யவும்

 

அறிவியல் E/M - இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

சமூக T/M - இங்கே கிளிக் செய்யவும்

 

சமூக E/M - இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு - 7 ஆம் வகுப்பு - ALL -SUBJECTS- T/M & E/M

 

தமிழ்- இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஆங்கிலம் - இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

கணிதம் டி/எம் -  இங்கே கிளிக் செய்யவும்

 

கணிதம் E/M -  இங்கே கிளிக் செய்யவும்

 

 

அறிவியல் T/M - இங்கே கிளிக் செய்யவும்

 

அறிவியல் E/M - இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

சமூக T/M - இங்கே கிளிக் செய்யவும்

 

சமூக E/M - இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஜூலை மாத ஒப்படைப்பு -8-ஆம் வகுப்பு-ALL-SUBJECTS- T/M & E/M

 

 

தமிழ்- இங்கே கிளிக் செய்யவும்

 

 

ஆங்கிலம் - இங்கே கிளிக் செய்யவும்

 

 

கணிதம் டி/எம் -  இங்கே கிளிக் செய்யவும்

 

கணிதம் E/M -  இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

அறிவியல் T/M - இங்கே கிளிக் செய்யவும்

 

அறிவியல் E/M - இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

சமூக T/M - இங்கே கிளிக் செய்யவும்

 

சமூக E/M - இங்கே கிளிக் செய்யவும்

 

 

Friday, 20 August 2021

இன்றைய தினம்

20-08-2021


*உலக கொசு தினம்* ஆகஸ்ட் - 20

*World Mosquito Day* August -20, 

மனிதனின் பரம்பரை எதிரிகளான கொசுக்களின் பிடியில் விடுபட்டு விழிப்புணர்வு பெறும் நாளான ஆகஸ்ட் 20 ஐ ஆண்டுதோறும் பிரிட்டன் மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கொசுக்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 


சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள்: விடுத்தார். 



Wednesday, 18 August 2021

அறிவோம் தெளிவோம்

அறிந்துகொள்வோம்

    மெரிக்காவின் மொண்ட்டானா மாநிலத்தில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தால், மலைப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது ஏற்பட்டு, சுமார் 10 கி.மீ.நீளத்துக்கு,190 அடி ஆழத்திற்கு நிரந்தரமாக (நிலநடுக்க ஏரி என்றே பெயரிடப்பட்ட) ஓர் ஏரி உருவானது. 7.3 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால், 7,600 அடி உயர மலையில் கிட்டத்தட்ட பாதி உடைந்து,135 கோடி கன அடி(8கோடி டன்) அளவுக்குப் பாறைகள், மண் ஆகியவை சரிந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. இந்த நிலச்சரிவினால் கார்களைத் தூக்கி வீசுமளவுக்கு மிக அதிவேகத்தில் காற்றும் உருவானது. இப்பகுதி சுற்றுலாப் பயணிகள் கூடாரம் அமைத்து தங்கும் மலைப்பகுதி என்பதால், 28 பேர் பலியானதுடன், ஏராளமான விடுதிகள் அழிந்தன.

      மேடிசன் ஆற்றினையொட்டியுள்ள ஹெப்ஜென் ஏரியில் சுனாமி போன்று அலைகள் எழுந்ததுடன், ஏரியையொட்டிய ஹெப்ஜென் அணையிலும் விரிசல்கள் ஏற்பட்டன. நிலச்சரிவு மேடிசன் ஆற்றின் நீர்ப்பாதையை முழுமையாக அடைத்ததால் இவ்வளவு பெரிய ஏரியும் ஒரு மாதத்திற்குள்ளாக நிரம்பியதுடன், ஏரியிலிருந்து நீர் வெளியேற வழியில்லாததால், வந்து கொண்டேயிருக்கும் நீரால் ஏரி சேதமுற்று மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

   அமெரிக்க ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் ஏராளமாகக் குவிக்கப்பட்டு, நீர் வழிந்தோடுவதற்கான வழி, மிக விரைவாக அமைக்கப்பட்டது. இதனால், இன்று வரை, இந்த ஏரி பாதுகாப்பாக உள்ளது.  

      இதைப் போன்று,                                                           நிலநடுக்கத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் நிலச்சரிவினால் ஏற்படுபவை, நிலச்சரிவு நீர்த்தேக்கங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஸ்னோடானியா தேசியப் பூங்காவிலுள்ள நீர்த்தேக்கம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலச்சரிவினால் உருவானதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாஜிக்ஸ்தானிலுள்ள உசோய் நீர்த்தேக்கம் 1911-ல் ஒரு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏற்பட்டது. 1860 அடி உயரமுள்ள இதுதான் உலகின் மிக உயரமான நீர்த்தேக்கமாகும்.

    மனிதனால் கட்டப்பட்ட வற்றில் மிக உயரமான அணையே, சீனாவிலுள்ள 1001 அடி உயர ஜின்பிங் 1 அணைதான். 


வரலாற்றில் இன்று


 

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந் து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது.*🌹💫 

இந்த செய்தி இந்திய மக்களை

நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. அவருடைய மரணம் மர்மமாகவே இன்னும்கூட தொடர்கிறது

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-ல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. 

அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார் 

சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்து கொண்ட நேதாஜி அவர்கள், இந்திய மக்களின் நெஞ்சில் இன்றளவும் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.



Friday, 13 August 2021

இன்றைய தினம்

 



ஆகஸ்ட் 13, 



வரலாற்றில் இன்று.


சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம் இன்று.


உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. 


இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது.


இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. 


அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. 


இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. 


ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.


இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். 


இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.


தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்த தினம் ஆகஸ்ட் 13ஆம் நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய தினம்


        13 ஆகஸ்ட் 1889

நாணயம் போட்டு பேசும் தொலைபேசிக்கு வில்லியம் கிரே என்ற அமெரிக்கர் காப்புரிமை பெற்றார். இவர் உருவாக்கிய பேசி முடித்தபின் நாணயம் போடவேண்டிய தொலைபேசி, கனெக்டிகட்டில் ஹார்ட் ஃபோர்ட் வங்கியில் அமைக்கப்பட்டது. மொபைல் போன்களின் வரவால் தற்போது இவை மறைந்துவந்தாலும் நாணயம் போட்டு இயங்கும் எந்திரங்கள் உலகெங்கும் ஏராளமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, நாணயம் போட்டு விளையாடும் வீடியோ கேம்கள் மிகப் புகழ்பெற்றவை.

     நாணயம் போட்டு பெறும் சேவை என்பது உண்மையில் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. ரோமப் பேரரசின் மாநிலமாக இருந்த எகிப்தில், அலெக்சாண்ட்ரியாவின் நாயகன் என்பவர் உருவாக்கிய எந்திரம், தேவாலயத்தின் புனித நீரை வழங்கப் பயன்படுத்தப்பட்டன. நாணயம் போட்டதும் புனித நீருள்ள குடுவை சாய்ந்து புனித நீரைத் தரும் நாணயத்தின் எடையளவுக்கு புனித நீர் வெளியேறியதும் நாணயம் உள்ளே விழுந்ததும் குடுவை நிமிர்ந்துவிடும்! 1615-ல்  புகையிலை விற்கும் எந்திரமும், 1822-ல் செய்தித்தாள் விற்கும் எந்திரமும் உருவாக்கப்பட்டன.

    1867-ல் சிமியோன் டென்ஹாம் என்ற ஆங்கிலேயர் உருவாக்கிய அஞ்சல் தலை விற்கும் எந்திரமே முதல் முழுமையான தானியங்கி விற்கும் எந்திரமாகும். சிகரெட், ஆணுறை, நொறுக்குத்தீனிகள், நுழைவுச்சீட்டுகள் முதலானவற்றை விற்கும் எந்திரங்கள் மட்டுமன்றி, சில்லறை வழங்கவும் எந்திரங்கள் உள்ளன. சுடச்சுட, பிரெஞ்சு ஃப்ரை, பீட்சா ஆகியவற்றை செய்து தரும் எந்திரங்கள் கூட உள்ளன. 1950-70 காலகட்டத்தில் ஆயுள் காப்பீடு வழங்கும் எந்திரங்கள் கூட இருந்தன. விமான நிலையங்களில் அமைக்கப்பட்ட இந்த எந்திரங்களில், அப்பயணத்திற்கு  காப்பீடு பெறலாம்.

   உலகிலேயே மிக அதிகமாக ஜப்பானில் 23 மனிதர்களுக்கு ஓர் எந்திரம் என்ற வீதத்தில், சுமார் 55லட்சம் விற்கும் எந்திரங்கள் உள்ளன. தற்காலத்திய விற்கும் எந்திரங்கள், கேமரா, பிற உணர்விகள் ஆகியவற்றின் மூலம் வாங்குபவர்கள், சூழ்நிலை உள்ளிட்டவற்றை கணித்து நுகர்வோர் நிர்வாகத்திற்கு உதவுகின்றன. நாணயம் போட்டு பேசும் தொலைபேசிகள் மறைந்தாலும், விற்கும் எந்திரங்கள் பிற துறைகளில் வளர்ந்தே வருகின்றன.


Monday, 9 August 2021

6th tamil worksheet


6 வது தமிழ்

இன்றைய தினம்


இன்ற்சிய தினம்

       09-08-1896

 பறக்கும் மனிதன் என்றழைக்கப்பட்ட ஓட்டோ லிலியன்த்தால் என்ற ஜெர்மானியர், மிதவை வானூர்தி (க்ளைடர்) கட்டுப்பாட்டை இழந்ததில் சுமார் 30 அடி உயரத்திலிருந்து விழுந்து, கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மறுநாள் ஆகஸ்ட் 10ல் உயிரிழந்தார். விமானம் உருவாக்கப்படுவதற்கு முன், காற்றை விட எடை மிகுந்த அதாவது வெப்பக் காற்று பலூன் அல்லாத பறக்கும் கருவியில், மிக அதிக முறை, வெற்றிகரமாகப் பறந்தவர் லிலியன்த்தால்தான். இரண்டாயிரத்தும் அதிகமான முறை ஏராளமான மாறுபட்ட க்ளைடர்களை உருவாக்கிப் பறந்துள்ள இவர், காற்றைவிட எடை மிகுந்த பறக்கும் கருவியை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களில் முக்கியமான ஒருவராக குறிப்பிடப்படுகிறார். பறத்தல் முயற்சிகளுக்காகவே, பெர்லினுக்கு அருகில், தானே உருவாக்கிய ஒரு சிறிய செயற்கை மலையிலிருந்து தான் லிலியன்த்தால் பறக்கும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

     பறவைகளின் (குறிப்பாக ஸ்டோர்க் என்னும் பெரிய நாரை- இது சுமார் 8 கிலோ எடை கொண்டது) பறத்தல் குறித்து ஏராளமான ஆய்வுகளை மேற் கொண்ட லிலியன்த்தால், துருவ வளைவு என்னும் கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி, அவற்றின் இறக்கைகளின் காற்றியிக்கவியல் குறித்த விளக்கங்களை உருவாக்கினார். விமானத்தை உருவாக்குவதற்கு தொடக்கத்தில் இந்தத் தகவல்களைப் பயன்படுத்திய ரைட் சகோதரர்கள், பின்னர் காற்றுப் பாதை (விண்ட் டன்னல்) முறைக்கு மாறினாலும், இன்றைய நவீன க்ளைடர்களின் உருவாக்கத்தில் லிலியன்த்தாலின் ஆய்வு முடிவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. தொங்கு க்ளைடரை (ஹேங் க்ளைடர்) இயக்குபவர்கள் பிடித்துக் கொள்ள லிலியன்த்தால் 1894-ல் உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்த அமைப்பே, தற்போது தொங்கும் க்ளைடர்களில் பயன்படுத்தப்படுகிறது.

   இறக்கை அசைத்து பறப்பவை, இரட்டை அடுக்கு, ஒற்றை அடுக்கு  நிலையான இறக்கை கொண்டவை என்று ஏராளமான க்ளைடர்களை வடிவமைத்துப் பறந்த லிலியன்த்தால் தான், தற்போதைய நவீன தொங்கு க்ளைடர்களில் பயன்படுத்தப்படும், பறப்பவரின் உடல் அசைவு மூலம் புவியீர்ப்பு விசையை கட்டுப்படுத்திப் பறக்கும் முறையை உருவாக்கினார்.

   பறத்தலின் தந்தை என்று புகழப்பட்ட லிலியன்த்தாலின் பறக்கும் படங்களை உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. 1909-ல் ஜெர்மனியில் ரைட் சகோதரர்கள் தங்கள் விமானத்தைப் பறக்கச் செய்து காட்டியபோது, லிலியன்த்தால் மனைவியை அழைத்து கவுரவப்படுத்தினர்.


Saturday, 7 August 2021

இன்றைய தினம்

 

   07 ஆகஸ்ட் 1858

----------------------------------------

"ஆஸ்திரேலியா விதிகள் கால்பந்து" போட்டி முதன்முறையாக விளையாடப்பட்டது. வழக்கமான கால்பந்து விளையாட்டில், செவ்வக வடிவ மைதானத்தில், பந்தைக் காலால் உதைப்பது மட்டுமே அனுமதிக்கப்படுகிற நிலையில், இவ்விளையாட்டில் நீள்வட்ட மைதானத்தில், பந்தை காலால் உதைத்தோ, கைகளால் தட்டியோ விளையாடலாம். பந்தைக் கையால் வீசுவது தவறு என்றாலும், உதைக்கப்பட்ட பந்தை கையால் பிடிப்பதும் சில விதிகளுக்குட்பட்டு  அனுமதிக்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிக மாறுபட்ட முறைகளில் விளையாடப்படும் விளையாட்டு கால்பந்து தான்.

   கி.மு.2-3ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சீன ராணுவ நூல்களில் காணப்படும் குஜூ என்ற கால்பந்து விளையாட்டு பற்றிய குறிப்பே, இவ்விளையாட்டு பற்றிய மிகப் பழமையான அறிவியல் ஆதாரமாக ஃபிஃபா குறிப்பிடுகிறது. பண்டைய கிரேக்கம், ரோம், ஜப்பான் என்று உலகின் பல்வேறு பகுதிகளிலும், காலால் பந்தை உதைத்து விளையாடும் விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 

      உதைக்கப்பட்ட பந்து நாவிதரிடம் மழித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து அவர் இறந்ததாக, கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம அரசியல் தலைவர் சிசெரோ குறிப்பிட்டுள்ளார். இடைக்காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியடைந்த கால்பந்து விளையாட்டு, தற்போது உலகம் முழுவதும் விளையாடக்கூடியதும், ஃபிஃபா அமைப்பால் கட்டுப்படுத்தப் படுவதுமான  "அசோசியேசன் கால்பந்து" (சில நாடுகளில் இதன் பெயர் சாக்கர்!), அமெரிக்கக் கால்பந்து, கனடியக் கால்பந்து ஆகியவற்றை உள்ளடக்கிய "க்ரிடிரோன் கால்பந்து", ஆஸ்திரேலியா விதிகள் கால்பந்து, இங்கிலாந்து ரக்பி பள்ளி என்பதில் தொடங்கப்பட்ட ரக்பி கால்பந்து, கெய்லிக் கால்பந்து ஆகிய முக்கிய பிரிவுகளின் கீழ், ஏராளமான மாறுபட்ட வகைகளில், மாறுபட்ட வீரர்கள் எண்ணிக்கை, மைதானங்கள் உட்பட மாறுபட்ட விதிகளுடன் விளையாடப்படுகிறது.

      அசோசியேசன் கால்பந்தில் கோள வடிவப் பந்தும், ரக்பியில் நீள்வட்டப் பந்தும், ஆஸ்திரேலியா கால்பந்தில் முனையுடன் கூடிய நீள்வட்டப் பந்தும் பயன்படுத்தப்படுகிறது. தொடக்க காலத்தில், விலங்குகளின், குறிப்பாகப் பன்றியின், சிறுநீர்ப்பை தான் (பிளாடர்) காற்றடைத்து, பந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இவை சேதமுறுவதை தடுக்க தோலாலான உறைகள் பின்னாளில் சேர்க்கப்பட்டன.

    தற்போது உள்ள ஐங்கோண அல்லது அறுகோண துண்டுகளாலான மேலுறை 1970 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.


Tuesday, 3 August 2021

அறிவியல் நிகழ்வுகள்

 நினைவு கொள்ளும் அறிவியல் அறிஞர்கள் & அறிவியல் நிகழ்வுகள்

     03 ஆகஸ்ட் 2021

√√√√√√√√√√√√√√√√√√√√√ இன்று தர்ப்பூசணி தினம்

***************************1875- அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவர் இராபர்ட் எர்னஸ்ட் ஹவுஸ் என்பவர் பிறந்தார். குற்றவியல் துறையில் உண்மையைக் கண்டுபிடிக்க உண்மை சீரம் எனப்படும் கோபாலமைன் ஹைட்ரோ புரோமைடைப் பயன்படுத்தியவர். 1924-ல் இம்மருந்து உண்மையைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டது.

****************************1851- ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த இயற்பியலறிஞர் ஜார்ஜ் பிரான்சிஸ் பிட்ஜெரால்ட் என்பவர் பிறந்தார். இயங்கும் திசையில் இயங்கும் பொருள்கள் சுருங்குகின்றன என்ற கோட்பாட்டை லாரண்ட்சுடன் சேர்ந்து கண்டறிந்தால் இதற்கு லாரண்ட்ஸ்- பிட்ஜெரால்ட் சுருக்கம் என்று பெயரிடப்பட்டது. இக்கோட்பாடு ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பு தத்துவத்திற்கு வழிவகுத்தது.

****************************1770- கில்லௌம் பிராங்காயிஸ் ரூயெல்லே இறந்தார். உப்புக்களைப் பற்றிய அறிமுகம் செய்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர். அமிலம் காரம் இரண்டையும் சேர்த்தால் உப்பு உருவாகிறது என்பதையும் அவற்றில் அமிலத்தன்மையுள்ள உப்புக்கள், காரத் தன்மையுள்ள உப்புக்கள், நடுநிலைத்தன்மை யுடைய  உப்புக்கள் உருவாவதையும் விளக்கினார்.

****************************

Monday, 2 August 2021

இன்றைய தினம்

 தொலைபேசியை கண்டு பிடித்த அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல் நினைவு தினம் - ஆகஸ்ட் 2:


அலெக்சாண்டர் பெல் ஸ்காட்லாந்தில் எடின்பேர்க்கில் 1847 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பிறந்தார். கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது.


எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்த பெல் பத்து வயதானபோது அவருக்குப் பள்ளி செல்ல நாட்ட மில்லாமல் போனதால் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தை செலவு செய்தார். 


1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். 


1877 இல் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டு பிடித்தார் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். 


தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வு மையம் (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.


பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் போட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற எண்ணற்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். 


காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சிக்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார். 


தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி பெல் காலமானார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப் பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.