Sunday, 25 December 2022

இன்றைய தினம்

 டிசம்பர் 25  ஐசக் நியூட்டன் பிறந்த நாள்




 நாள். ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727) ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.

நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

No comments:

Post a Comment