Thursday, 15 June 2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.06.23


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 194


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.


விளக்கம்:


பயனற்ற, பண்பு இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.


பழமொழி :

பென்யூரி அனைத்தையும் கிள்ளுகிறது.


பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள்:

1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன். 


2. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுத கல்வி. நெல்சன் மண்டேலா

பொது அறிவு :

1. சூரியனைச் சுற்றி வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் கிரகம் எது?

நெப்டியூன்


2. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் என்ன?

150 மில்லியன் கிலோமீட்டர்கள் (93 மில்லியன் மைல்கள்)

ஆங்கில வார்த்தைகளும் அர்த்தங்களும்:

 நன்கொடை - தொண்டு அல்லது ஏழை மக்களுக்கு பணம் கொடுங்கள், 



வைப்பு - மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் போடும் தொகை

ஆரோக்ய வாழ்வு :

அசைவ உணவை இரவில் தவிர்ப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது.தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.



ஜூன் 15


உலகக் காற்று நாள் (உலகக் காற்று தினம்) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குபடுத்தி வருகின்றது.. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அறியும் படி செய்யப்படுகிறது.

நீதிக்கதை

அவன் சரியான வால் பையன். பள்ளியில் எப்போதும் சேட்டைகள்தாம். அன்று அவனுக்கு பயமாக இருந்தது. காரணம், ஆசிரியைகளுடன் பெற்றோர் சந்தித்துப் பேசும் தினம் அது. பள்ளிக்கு வரும் அம்மாவிடம் 'மிஸ்' புகார் சொல்லி விட்டால்... பயந்து கொண்டே இருந்தான்.

எல்லா பெற்றோரும் ஆசிரியையுடன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனது தாயாரின் முறை வந்தது.

"பள்ளியில் பையன் எப்படி?" என்று கேட்டாள் தாய்.

"அவனுக்கென்ன சமத்துப் பையன்" என்று மாணவனைப் பார்த்தவாறே சொன்னார் ஆசிரியை.

பையனுக்கு ஆச்சர்யம். தாய்க்கும் ஆச்சரியம்.

“அப்படியா? அவன் ரொம்ப வால் ஆச்சே, நிறைய குறும்பு பண்ணுவானே" என்று விடாமல் கேட்டாள் தாய்.

"அதெல்லாம் சின்னப் பசங்க பண்றதுதானே. மத்தபடி ரொம்ப நல்ல பையன்" என்று, மீண்டும் ஆசிரியை சொன்னார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாணவனின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. தன்னைப் பற்றி நல்லவிதமாக சொன்ன ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்றே தன்னுடைய 'வால்' தனத்தைக் குறைத்துக் கொண்டான்.

இன்றைய செய்திகள்

15.06. 2023


* பிபோர்ஜாய் புயல் - குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம்.

*பிபோர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு 63 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியில் 70 இந்திய நிறுவனங்கள் பங்கேற்பு.

*கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை ஜூன் 18 முதல் கிழக்கு இந்திய பகுதிக்கு பரவும் என அறிவிப்பு.

*தூத்துக்குடியைச் சேர்ந்த ஹர்சன் என்ற சிறுவன் தொடர்ந்து 7.30 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைத்தான்.


இன்றைய தலைப்புச் செய்திகள்


* Piborjoy Cyclone - குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது

 *பிபோர்ஜாய் புயல் காரணமாக 63 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 *70 Indian companies will participate in the exhibition of innovative companies in Paris, the capital of France.

 * It is Announced that the Southwest Monsoon which has started in Kerala will spread to East India from June 18.

 *A boy named Harsan from Thoothukudi set a world record by floating continuously for 7.30 hours






Covai women


No comments:

Post a Comment