1922- இன்சுலின் முதன் முறையாக ஒரு மனித நோயாளிக்கு செலுகடைப்பிடிக்கப்படுகிறது.டொராண்டோ பொது மருத்துவமனையில் ஒரு 14 வயது ( ஆம்! 14 வயது தான்!!) நீரிழிவு ( சர்க்கரை) நோயாளிக்கு செலுத்தப்பட்டது. அக்காலத்திலேயே, இளவயதில் நீரிழிவு இருந்துள்ளது என்பதுடன், கி.மு.1500 இலேயே எகிப்தில் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அதே காலத்திய இந்திய மருத்துவர்களும் மதுமேகம் என்ற பெயரில் இந்நோயைக் குறிப்பிட்டுள்ளனர்.கி.மு 500-400 களில், சுஷ்ருதா, சாரகா ஆகிய இந்திய மருத்துவர்கள், இருவகை நீரிழிவு உள்ளதைக் கண்டுபிடித்ததுடன், முதல் வகை இளமையோடும், இரண்டாம் வகை உடல் பருமனோடும் தொடர்புடையது என்றும் பதிவு செய்துள்ளனர்.
டயாபடீஸ் என்ற சொல் முதன்முறையாக கி.மு. 250-ல் கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நீண்ட வரலாறு இருந்தாலும், இந்த நோய்க்கான காரணத்தை அறிய முடியாமல் மருத்துவ உலகம் தவித்தது. 1889-ல் ஆஸ்கார் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வோன் மெட்ரிக் ஆகியோர், நலமாக இருந்த ஒரு நாயின் உடலிலிருந்து கணையத்தை அகற்றிய போது, அதற்கு நீரிழிவு உண்டானதைக் கண்டறிந்தனர். 1910-ல் எட்வர்ட் ஆல்பர்ட், நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட வேதிமத்தின் பற்றாக்குறையுடனா இருப்பதை கண்டறிந்து அதற்கு இன்சுலின் என்று பெயர் சூட்டினார்.
1921-ல் ஃப்ரடெரிக் பேண்ட்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் மின்கோவ்ஸ்கியின் சோதனையை தலைகீழாகச் செய்து, அதாவது கணையத்தின் சுரப்பை நாய்க்குச் செலுத்தி நீரிழிவு கட்டுப்படுவதைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஜேம்ஸ் காலிப் உதவியுடன் மாடுகளின் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றி பெற்றனர். அதன்பிறகு, மேற்குறிப்பிட்ட அந்த நோயாளி இந்நோயால் எப்படியும் இறந்து விடுவார் என்ற நிலையில் தான் இந்த முயற்சியை மேற்கொண்டு, அவரது உயிரையும் காப்பாற்றினார்.
நீரிழிவுக்கு முதன்முறையாக ஒரு நம்பகமான சிகிச்சை உருவானது. பேண்ட்டிங் பிறந்த நவம்பர் 14 உலக நீரிழிவு நோய் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது
No comments:
Post a Comment