அறிவோம் தெளிவோம்
கிறிஸ்துமஸ் முதன்முறையாக் கொண்டாடப்பட்டது. ரோமில் கொண்டாடப்பட்ட இதுவே முதன் முதலில் பதிவுசெய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் விழாவாகும்.
கிறுத்துவின் சரியான பிறந்த நாளுக்கான பதிவுகள் இல்லாத நிலையில், குளிர் காலம் முடிந்து சூரியத் திருப்பம் நடைபெறுவதாக ரோமானியர்கள் கணித்திருந்த டிசம்பர் 25 தேர்ந்தெடுக்கப்பட்டது.சூரியக்கதிர்கள் புவியின் மீது விழும் திசை மாறும் நாள் சூரிய திருப்பம் ( சோல்ஸ்டைஸ்) என்று அழைக்கப்படுகிறது. மாறிக்கொண்டே வந்த சூரியக் கதிர்களின் கோணம், திரும்பும் நாளில், மாறாமல் நிற்பது போலத் தோன்றுவதால் லத்தீனில் சோல்( சோலார்!) என்றால் சூரியன், சிஸ்டியர் என்றால் நகராமல் நிற்றல் என்பதிலிருந்து சோல்ஸ்டைஸ் என்ற பெயர் உருவானது.
கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே டிசம்பர் 25 இல் தோற்கடிக்க முடியாத சூரியன் ( சோல் இன்விக்டஸ்) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்த நாளாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்டி என்ற பண்டிகையைக் கொண்டாடிவந்தனர். நேர்மையின் சூரியன் என்று கிறிஸ்துவ சூரியனுடன் ஒப்பிடும் பல செய்யுள்கள் விவிலியத்தில் காணப்படுவதால், இத்தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கன்னி மரியா தூய ஆவியால் கருவுற்று, இயேசுவுக்கு தாயாவார் என்று தேவதூதர் கேபிரியேல் அவருக்கு அறிவித்த "இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு" மார்ச் 25 இல் கொண்டாடப்படுவதிலிருந்து ஒன்பது மாதங்கள் கழித்து டிசம்பர் 25 வருவதாலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்நாள் சம இரவு (ஈக்வினாக்ஸ்) நாளாக இருப்பதிலிருந்து சூரியனையொட்டிய பண்டைய விழாக்களே, வடிவம் மாறின என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்வதால் இரவும் பகலும் சமமாக இருக்கும் சம இரவு நாள் மார்ச்சிலும், செப்டம்பரிலும் வருகிறது. லத்தீனில் ஏக்வஸ் என்றால் சமம், நாக்ஸ் என்றால் இரவு என்பதிலிருந்து ஈக்வினாக்ஸ் என்ற சொல் உருவானது. யூதர்களின் நம்பிக்கை யின்படி காப்பவரும், விடுதலையளிப்பவருமாக கருதப்படுபவர் மெசையா, இந்த எபிரேய சொல்லுக்கான கிரேக்க மொழி பெயர்ப்பு கிறிஸ்ட்டோஸ் என்பதிலிருந்து, கிறுத்துவின் வழிபாடு ( மாஸ்) என்ற பொருளில், கிறிஸ்ட்டஸ் - மெஸ்லே என்ற பெயர் முதன் முதலில் 1038 இல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்ட்டோஸ் என்பதன் முதல் எழுத்தான கி என்பது கிரேக்க எழுத்தில் ஆங்கில எக்ஸ் வடிவிலிருப்பதால் எக்ஸ் - மஸ் என்று அழைக்கப்பட்டது.
No comments:
Post a Comment