பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.22
திருக்குறள் :
பால்: பொருட்பால்,
இயல்: படையியல்,
அதிகாரம்: படைமாட்சி,
குறள் எண் :767:
குறள்:
தர்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
பொருள்:களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.
பழமொழி :
A wild goose never lad a tame egg
புலிக்கு பிறந்தது பூனையாகாது
இரண்டொழுக்க பண்புகள்:
1. மகிழ்ச்சி உங்கள் மனதில் தோன்றும் புன்னகை உங்கள் முகத்தில் எப்போதும் குடியேற வேண்டும்.
2. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும். எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்
பொன்மொழி :
இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.______அன்னை சாரதா தேவி
பொது அறிவு :
1. தேசிய ராணுவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 15.
2. விமானத்தில் உலகை வலம் வந்து சாதனை படைத்த முதல் பெண் யார்?
சாரா ரூதர்ஃபோர்ட் .( பெல்ஜீயத்தை சேர்ந்தவர்)
ஆங்கில வார்த்தைகள் மற்றும் அர்த்தங்கள்:
இருங்கள் - விட்டுவிடாதீர்கள். முயற்சி கை விடாதே.
படகு மிஸ் - இது மிகவும் தாமதமானது. வாய்ப்பை தவற விடுதல்
ஆரோக்ய வாழ்வு :
பூண்டு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காது வலி, வாயு தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, மூல நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம்.
*🗒️ TODAY'S ARTICLE🗒️*
*🧠 Human brain*
The human brain is the central organ of the human nervous system. It controls most of the activities of the body, processing, integrating and coordinating the information it receives from the sense organs and making decisions as to the instructions sent to the rest of the body. The brain is contained in, and protected by, the skull bones of the head.
*🧠 மனித மூளை*
மனித மூளை என்பது மனித நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகும். இது உடலின் பெரும்பாலான செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது, உணர்வு உறுப்புகளிலிருந்து பெறும் தகவல்களை செயலாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் உணர்வு உறுப்புகளிலிருந்து அது பெறும் தகவல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படும் அறிவுறுத்தல்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. மூளை தலையின் மண்டை எலும்புகளுக்குள் உள்ளது மற்றும் பாதுகாக்கப்படுகிறது.
நீதிக்கதை
குரு சொன்ன அறிவுரை
ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது.
மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.
இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.
நீதி :
நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment