இந்திய தேசிய சின்னம் பற்றிய தகவல்கள்.
தேசியக்கொடி ( அசோகச் சக்கரம் )
நம் பாரத மணித்திரு நாட்டின் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் 24
ஆரங்கள் குறிக்கும் பொருள்கள் என்னென்ன?.
நமது தேசியச் சின்னத்தைப்
பற்றிய சில சிந்தனைகள்.
அசோகச் சக்கரம் (Ashoka Chakra) என்பது அசோகரின் பல
சிற்பங்களில் காணப்படும் இருபத்துநான்கு ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும்.
இது பௌத்தர்களின் எட்டு ஆரங்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி
வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று
அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்கத் தலைகள் பதித்த
அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை
நீல நிறத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்தியக்
குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அசோகச் சக்கரத்தைப்
போற்றும் விதமாக அசோகச் சக்கர விருது இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த
விருது இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லது அமைதிக்காலத்தில்
படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற
உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய
வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது
படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அசோகச் சக்கரத்தின் 24
ஆரங்கள் குறிக்கும் பொருள்கள்:
அசோகர் பரப்பிய தர்மங்கள் 24
(போதி சத்வ தர்மங்கள்)
1. அஹிம்சை - உயிர்களுக்கு இன்னா செய்யாமை.
2. அப்பந்தா - சிக்கனம்
3. அபிச்சதி - பயபக்தி(பெரியோர்&ஆசிரியர்)
4. அபசினவம் - மானமுடைமை
5. உத்சஹா - உற்சாகம்
6. கிருதக்ஞாதா - செய்நன்றி அறிதல்
7. சத்யம் - உள்ளத்தால் உண்மை
சொல்லால் உண்மை
செயலால் உண்மையை போற்றுதல்.
8. சமயப்பொறை - மாற்று
மதக்கருத்துக்களையும் மதித்தல்
9. சாதுதா - நல்லவனாயிருத்தல்
10. சாம்யமா - புலனடக்கம்
11. சாத்வம் - நன்மை தரும் செயல்களைச்
செய்தல்
12. சிரமசேவிதம் - கடின உழைப்பு
13. சுஷ்ருதா சரீர சஹாயம்,- உடல் நோய் தீர்த்தல்
14. சௌசம் - உடல் தூய்மை
15. தயை - இரக்ககுணம்
16. தானம் - வறியோர்க்கு வழங்கல்
17. தம்மதானம் - தர்மத்தைப் பரபபுதல்
18. தம்ம விஜயம் அறத்தின் வழிபெறும் வெற்றி
19. தர்மதாமதா - அறம் செய்வதில் ஆர்வம்
20. த்ருதபக்திதா - மாறாத அன்புள்ளம்
21. பயம் - பாவம் செயவதில் அச்சம்
22. பரிக்ஷா - தன்னம்பிககை
23. பாவசுத்தி - எண்ணத்தூய்மை
24. மார்த்தவம் - அருளுடைமை.
இந்தியாவின் தேசியச்
சின்னம் (Emblem
Of India) என்பது
அரசு முத்திரைகள், ரூபாய், நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அசோகத்தூணில்
உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக (இலச்சினை)
எடுத்துக் கொள்ளப்பட்டது.கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு
சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது.இதில் உள்ள சக்கரங்கள்
தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன .
தர்ம சக்கரத்தில் 24
ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை
ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன.முரசின் மேல் சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று
பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன.இந்தச் சிற்பத்தை படைத்தவர் அசோக பேரரசர் ஆவார்.
இதில் உள்ள தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் இடம் பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment