இந்திய தேசிய கோடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா நினைவு தினம் - ஜூலை 4, 1963:
பிங்கலி வெங்கைய்யா இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார். வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.
1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்திய சுதந்திர இயக்கத்தின் உறுப்பினர்களால் பல்வேறு தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின்பொழுது, மகாத்மா காந்தி பிங்கலி வெங்கைய்யா விடம் தனிக்கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார்.
இவரது வடிவைமைப்பு முதலில் இந்திய தேசிய காங்கிரசுக்காக வடிவமைக்கப்பட்டது, பின்னர் 1947 இல் சில மாற்றங்களுடன் இந்திய தேசிய கோடியாக அங்கீகரிக்கப்பட்டது
புவியியலாலராகவும், விவசாயியாகவும் இருந்த பிங்கலி வெங்கய்யா, மச்சிலிபட்டணத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்த கல்வியாளர் ஆவார்.
தேசிய கொடியை உருவாக்கிய இவர் அந்த அளவு பிரபலமாகவில்லை. இவர் 1963 ஆம் ஆண்டு தனது 86 வயதில் மறைந்தார். இவர் மறைந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரை நினைவுகூரும் வகையில் 2009இல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

No comments:
Post a Comment