நினைவு கொள்ளும் அறிவியல் அறிஞர்கள் & அறிவியல் நிகழ்வுகள்
11 ஜூலை 2021
----------------------------------------
1902- நெதர்லாந்தில் ஹேக் நகரில் சாம்யுல் ஆப்ரஹாம் கௌட்ஸ் மிட் என்ற இயற்பியலாளர் பிறந்தார். அமெரிக்காவில் குடியேறியவர். அணுக்கரு வட்டணையில் சுற்றி வரும் மின்னணுக்கள் தன்னைத் தானே சுழன்று கொள்கிறது என்பதைக் கண்டறிந்தவர். மன்ஹாட்டன் திட்டப்படி அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்.
****************************1811 இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் வில்லியம் இராபர்ட் குரோவ் பிறந்தார். மின்கலம் ஒன்றை உருவாக்கினார். பிளாட்டினம் மற்றும் துத்தநாகம் முதலிய மின்வாய்கள் கந்தக அமிலத்தில் வைக்கப்பட்டு அம்மின்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் எரிபொருள் மின்கலத்தையும் உருவாக்கினார்.
**************************
No comments:
Post a Comment