Friday, 9 July 2021

அறிவியல் நிகழ்வுகள்

 நினைவு கொள்ளும் அறிவியல் அறிஞர்கள் @ அறிவியல் நிகழ்வுகள்

         09 ஜூலை 2021


1856- அமிடியோ அவோகாட்ரோ என்ற இத்தாலிய வேதியியலாளர் மறைந்தார். இலட்சிய வாயுவிற்கான விதியை உருவாக்கியவர். ஒரு மோல் வாயுவில் அடங்கியுள்ள மூலக்கூறு எண்ணிக்கையை  கணக்கிட்டு கூறியவர். இந்த எண் அவகோட்ரா எண் என அழைக்கப்படுகிறது.

**************************1911- அமெரிக்காவில் கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஜான் ஆர்க்கிபோல்ட் வீலெர் என்பவர் பிறந்தார். அணுக்கரு இயற்பியலிலும் ஒருங்கிணைந்த புலக்கோட்பாட்டிலும் அதிக அளவு பங்காற்றியவர். கருந்துளை என்ற பெயரை உருவாக்கியவரும் இவரே. பொது சார்பியல் கோட்பாட்டில் புவியீர்ப்பு தகர்வு குறித்து விவரித்தார்.

************************** 

1957- நோபெலியம் என்ற 102 வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் ஆல்பர்ட் ஜியார்சோ என்பவர். இதன் அரை ஆயுள் காலம் 8.5 மெகா எ.வோ ஆகும். ஆனால் ஆய்வுகள் செய்தபோது அதன் எந்த ஐசோடோப்பின் அரை ஆயுள் காலமும் 3 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை எனக் கண்டறியப்பட்டது.

**************************

No comments:

Post a Comment