Saturday, 18 September 2021

இன்றைய தினம்

 உலக மூங்கில் தினம் - செப்டம்பர் 18:


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 18 தேதி கொண்டாடப்படுகிறது. 


உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான  $ 10 பில்லியன் தொகையில்  சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 


2020 ஆண்டுகளில் இதன் அளவு $26 பில்லியனாக உயரும் எனவும், தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடி எனவும் அது 2019 ஆண்டில் ரூ.36,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும்    இந்திய விவசாயத்துறை  அமைச்சகம் கூறுகிறது. 


மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வதாரம், மற்ற மரங்களைக் காட்டிலும் அதிக கரிமில வாயுவை எடுத்துக் கொண்டு அதிக பிராணவாயுவை வெளியேற்றும் என்கிறோம். 


ஆனால் மூங்கில் வளர்ப்பில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் ?


தமிழ் நாட்டில் சாதாரணமாக காணும் காட்சி.

 வருத்தம் தரும்  அளவிற்குத்தான் உள்ளது. உபயோகம் சுமார் 1500க்கு மேலிருந்தாலும் தமிழகத்தில் மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை. இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண நிலையிலேயே மூங்கில் உபயோகம் உள்ளது. 


மற்ற மாநிலங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது. நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள்  என முன்னேற்றம் உள்ளது.


வடகிழக்கு மாநிலங்களில் சுயுதவிகுழுக்கள் செய்யும் பொருட்கள்

 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி. 


வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட பள்ளிகள்

 உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பிற்கான ஒரு செய்தியாகும்.


ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான  ஸ்பெயின் நாட்டின் “மார்டிரிட்” நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர். 


இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை “மூங்கில்”. எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் ?? மத்திய அரசாங்கம் “தேசீய மூங்கில் இயக்கம்”  (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

No comments:

Post a Comment