Thursday, 23 September 2021

இன்றைய தினம்


         23-09-1846

(கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன்)

 சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோளான நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தவர்களாக ஜோகன் காலே, ஊர்பெய்ன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

    இக்கோள் தொலைநோக்கி வழியாக இல்லாமல், கணித ரீதியான கணக்கீடுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 1781-ல் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனஸ் கோலின் சுற்றுப் பாதையில் இருந்த தடுமாற்றங்களுக்கு, அதனருகில் இருக்கும் ஒரு பெரிய வான் பொருளின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம், 1843-ல் தான் படிப்பை முடித்த ஆங்கிலேயரான ஜான் கூச் ஆடம்ஸ் கணித்து, 1845-46m காலகட்டத்தில் அப்பகுதியில் வேறொரு கோள் இருப்பதற்கான சாத்தியத்தைக் கண்டறிந்தார். ஆனால், அவர் அனுபவமில்லாத இளையவர் என்பதால், அவரது கணிப்புகளின்படித் தேட கேம்பிரிட்ஜ் வானியல் மையம் முக்கியத்துவம் தரவில்லை.

   இதே காலகட்டத்தில், இவருக்கு தொடர்புலாமல் ஊர்பெய்ன் லெ வெர்ரியர் என்ற பிரெஞ்சு வானியலாளர், இதையொத்த கணிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பெர்லின் ஆய்வு மையத்தில் ஜோகன் காலே என்ற ஜெர்மானியர் 1843- செப்டம்பர் 23 இரவு நெப்டியூன் கோலை கண்டுபிடித்தார். வேடிக்கை என்பது, கேம்பிரிட்ஜ் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெம்ஸ் சால்லிஸ், ஆடம்சின் கணிப்புகளின்படித் தேடியபோது, ​​ஆகஸ்ட் 4, 12 ஆகிய தேதிகளில் இருமுறை இக்கோலை காண நேர்ந்தாலும், இது புதிய கோல் என்ற அவரால் உணர முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் முன்னால், 1612 டிசம்பர் 28,1613 ஜனவரி 27 ஆகிய தேதிகளில் கலிலியோ இந்த இடத்தில் ஒரு பொருளைக் கண்டதைப் பதிவு செய்துள்ளார். ஆனால், அவரது சிறிய தொலைநோக்கியால், இது ஒரு கோல் என்று உணர முடியாததால், இதை ஒரு நட்சத்திரம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். நீல நிறக் கோளான இதற்கு நெப்ட்யூன் என்ற ரோமானிய கடற் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.

** "**************************

(மனதின் ஆழத்தை அளந்தவர்)

----------------------------------------- "பனிப்பாறை போன்றது மனம், ஏழில் ஒரு பங்கு மட்டுமே தண்ணீருக்கு மேலே மிதக்கும் "எனும் சுவராசியமான ஒப்புமையால் மனதின் ஆழத்தை விளக்கியவர் சிக்மண்ட் பிராய்ட். ஆஸ்திரியாவைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான இவர் தான் முதல்முதலில் மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம் மனம்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்தார்.

  இயல்பாக இருக்கும் ஒருவர் திடீரென விசித்திரமாக நடந்து கொள்ளக் காரணம் பேய், பிசாசு போன்ற அமானுஷ்யச் சக்திகள் அல்ல; ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகளே என விளக்கினார். "இட்", "ஈகோ", "சூப்பர் ஈகோ" எனும் மூன்று அடுக்குகள் உள்ளன. மற்ற உடல் உறுப்புகள் போல இவற்றுக்கு உருவம் இல்லை. ஆனால், இவைதான் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன என்றார்.

    விழிப்பு நிலை போலவே தூக்கத்திலும் மனம் மிக உற்சாகமாக செயல்படும். அப்போது ஆழ்மனதில் அடக்கி வைத்திருந்த விஷயங்களைக் கிளறி எடுக்கும். அப்படிப்பட்ட உள் மனதின் வெளிப்பாடுகளே கனவு என "கனவுகளின் விளக்கம் "என்ற புத்தகத்தில் எடுத்துரைத்தார். நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் தனது 83-வது வயதில் 1939 செப்டம்பர் 23-ல் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment