“ உலக ஓசோன் தினம் “ – செப் -16
ஓசோன் மண்டலம் என்பது வளி மண்டலத்தில் உள்ள { ஓசோன் – (13) } ஒரு வகை –
காற்றுப் படலம்தான். சூரியனில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புற ஊதாக்கதிர்களை பூமியில்
விழாமல் தடுப்பது ஓசோன் அடுக்குதான்.
93-முதல் 99 % புற ஊதாக்கதிர்களை ஓசோன் படலம் கிரகித்து விடுவதால்தான் நம்மால் இங்கு நிம்மதியாக வாழ முடிகிறது. இந்தப் படலத்தில் துளை
விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசு படாமல் தடுப்பதின்
மூலம் ஓசோன் படலம் சேதமைடயாமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஒசோன் படலம் தரையில் இருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள காற்று மண்டலத்தில்
காணப்படுகிறது. பிரஞ்சு இயற்பியல் வல்லுனர்கள் சார்லஸ் பேப்ரி, ஹென்றி புய்சன் ஆகியோர்
(1913-இல்) ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்தனர். ‘சிட்னி சேப்மேன்’ என்ற இங்கிலாந்து விஞ்ஞானி
(1930-இல்)இரு அணுநிலை ஆக்சிஜனும், ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன்(03) என்று
கண்டுபிடித்தார். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் தாகுவதால் ஆக்சிஜன் அணுக்களில் ஏற்படும்
மாற்றமே ஓசோனை தோற்றுவிக்கிறது என்றார்.
மற்றொரு இங்கிலாந்து ஆய்வாளர் டோப்சன்,
ஒசோனின் அடர்த்தியை அளவிடும் ‘ஸ்பெக்ட்ரோபோட்டோ’ மீட்டரை ( டோப்சான் மீட்டர் )
உருவாக்கினார்.
ஓசோன் மூலகூறும் நிலையற்றதுதான். புற ஊதாக்கதிரின் தாக்குதலால் உருவாகும் –
ஒசோன் அணுக்கள் மீண்டும் அந்த கதிர்கள் தாக்கும்போது அணுநிலை ஆக்சிஜனாகவும்,
ஆக்சிஜனாகவும் பிரிக்கிறது. இது ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி எனப்படுகிறது. ஸ்ட்ரேடோஸ்பியர்
( 50கி.மீ.உயரத்திற்குள்) அடுக்கில் உருவாகும் ஓசோன் படலம் மட்டுமே இந்த சுழற்சிக்கு தப்பி நிலைக்கிறது.
அதற்கு மேலுள்ள ஒசோன் அணுக்கள் இந்த சுழற்சியால் சிதைந்து விடுவதும்,
மீண்டும் உருவாவதுமாக இருக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியா அடுக்கில் மட்டும் 90 % ஓசோன் படலம்
இருக்கிறது.
உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, ஏனெனில் செறிவு குறைந்த ஓசோன்
தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களை மிகுதியாக உட்கிரகிக்கிறது. புறஊதாக் கதிர்கள் ( U.V. )
அதன் அலை நீளத்தைச் சார்ந்த யு.வி. ஏ.பி.சி என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அலைநீளம்
கொண்டது UVA ( 400315 நா,மீ ) – UVB 9 315280 நா.மீ ) மற்றும் UVC ( 280 – 100 நா.மீ.) அலை நீளம் கொண்டது.
சி.புறஊதாக்கதிர்கள் ( UVC ) மனிதர்களுக்கு மிகவும் தீங்கிழைக்கக் கூடியது.
UVB கதிர்களால் தோல் புற்று நோய் ஏற்படலாம். UVA கதிர் பரபு சார்ந்த பாதிப்புகளை உருவாக்கும்
ஆற்றலுடையது.
அண்டார்டிக்கில் ஒசோன் ஒட்டை இருப்பது அமெரிக்காவில் 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்-
பட்டது. 1978-ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் குளோரோ –
புளோரோ கார்பன் உள்ள பல பொருட்களை பயன்படுத்த தடை விதித்தன. குளிர்பதனம் மற்றும்
தொழிலாகத் தூய்மை பணிகளில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. ‘ த மோண்ட் ரியல் புரோடோ
க்கால்’ என்ற சர்வதேச உடன்பாட்டின்படி 1987 முதல் CFC உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு
1996-ஆம் ஆண்டு பெருமளவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓசோன் ஒட்டை பெரிதாவது –
தடுக்கப்பட்டுள்ளது.
ஓசோன் படல ஓட்டை 97 லட்ச சதுர மைல் என்ற கனக்கிலிருந்து தற்போது ( சுமார் 6
ஆண்டுகட்கு முன்பு ) அது 5-வது ஓட்டையாக அண்டார்டிக் பகுதிக்கு மேல் 1 கோடியே 15 லட்ச
சதுர மைல்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
ஐ.நா.சபையில் உள்ள 24 நாடுகள் ஒன்ரு கூடி ( 1987-இல்) செப்டம்பர்-16-ஆம் நாளை
ஓசோன் பாதுகாப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை 1995-இல் வெளியிடப்
பட்டது. நம் பங்குக்கு இனி என்ன செய்யப்போகிறோம் ?.
No comments:
Post a Comment