Thursday, 27 August 2020


 அந்துவான் இலவாசியே..!


அந்துவான் இலவாசியே 

(Antoine-Laurent de Lavoisier)

  ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர்;


தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் இலவாசியே முக்கியமான ஒருவராவார்.


வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; கந்தகம் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்


ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வளிமங்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர். 


மனிதனும் விலங்குகளும் தாங்கள் மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியே கண்டறிந்து கூறினார். 


பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரான்சியப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.


லாவோசியர் பிறந்தநாள் இன்று

(26 ஆகஸ்ட், 1743)



No comments:

Post a Comment