பனிக்கரடி
பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓர் உயிரினம் பனிக்கரடி. பெரும்பா லும் நிலத்தில் பிறந்தாலும் பனிக்கட்டிகள் தான் இதன் இருப்பிடம். பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடி இருப்பிடங்கள் காணாமல் போவது துயரம். இந்நிலையில் பனிக்கரடிகளுக்கே உரித்தான வினோத வழக்கம் ஒன்று உள்ளது.
பொதுவாக பனிக்கரடிகள் உறைபனி வருவதற்கு முந்தைய மாதங்களில், அளவுக்கு அதிகமாக இரைகளை உண்டு கொழுத்து விடுகின்றன. கடுமையாக பனி கொட்ட ஆரம்பித்ததும் தங்களின் குகைகளுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. இந்த நிகழ்வை ‘ஹைபர்னேஷன்’ என அழைக்கிறோம்.
குகைக்குள்ளேயே நீண்ட உறக்கம், அசைவில்லாமல் படுத்திருப்பது என்று நான்கு மாதங் களைக் கழித்து, இளைத்துப் போய் வெளியே வரும். அந்த நான்கு மாதங்களில், உயிர் வாழ அது, உடலில் உள்ள மிகையான கொழுப்பை பயன்படுத்திக் கொள்ளும்.
பனிக் கரடி தசைகளுக்கு வேலை கொடுக்காமல் பல மாதங்கள் இருந்தாலும், தசைகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாகவே இருக்கும். R.S.K. curie-yasity

No comments:
Post a Comment