#எரிமலை
எரிமலைகள் எப்படி உண்டாகின்றன?
மலை உச்சியில் ஒரு பெரிய துவாரம் வழியாக நெருப்பும் புகையும் சாம்பலும் தொடர்ந்து வெளி வந்தால் அதை எரிமலை என்கிறோம்.
பூமிக்கு அடியில் பொங்கி எழும் ஒரு வகை எழுச்சியினால் இது போன்ற எரிமலைகள் உண்டாகின்றன. எரிமலை ஒரு முறை நெருப்பைக் கக்கத் தொடங்கினால் அதிலிருந்து 'லாவா" எனப்படும் உருகிய தீக்குழம்பு தொடர்ந்து வெளிவரும். எரிமலைகள் எவ்வாறு உருகுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
நிலத்தின் அடியில் கீழே செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது. 30 கி.மீ.க்கு அடியில் உள்ள வெப்பம் பாறைகளைக் கூட உருக்கும் வல்லமை வாய்ந்தது. நிலத்தின் அடியில் உள்ள பாறைகள் உருகும் போது அவை விரிவடைகின்றன.
திரவ உருவமான இப்பாறைகளை 'மாக்னா" என்கிறார்கள். மாக்னாவிலிருந்து உண்டாகும் அளவிடுவதற்கு அரிய வெப்பம் நிலத்தைப் பீரிட்டு வெளிவருவதற்காக அலை மோதுகிறது.
பூமியில் எப்பகுதியாவது வலிமை குன்றியிருந்தால் அப்பகுதி பிளந்து அதிலிருந்து வெப்ப வாயுக்களும் திரவ வடிவான பாறைகளும் பாறைத் துண்டுகளும் வெளிக் கிளம்புகின்றன. இதைத் தான் எரிமலை வெடிக்கிறது என்கிறோம்.
உள்ளுக்குள்ளே உருகிய பொருட்கள் அனைத்தும் வெளிவரும் வரையில் தீயும் புகையும் தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கின்றன.
இந்த லாவா வெளிவருவது நின்று விட்டால் அதனை 'இறந்த எரிமலை" என்கிறார்கள். தற்போது உலகில் 450 எரிமலைகள் உள்ளன. மிக உயரமான எரிமலை அர்ஜென்டினா நாட்டில் உள்ளது.

No comments:
Post a Comment