🍑 *ஆயிரத்தை ஏன் K என்கிறோம்?*
இணையதள பயன்பாட்டிலும் தற்போது பொதுவெளி பயன்பாட்டிலும் கூட 2000 என்பது 2K என எழுதும் பழக்கம் வந்துவிட்டது.
மில்லியனுக்கு M என்றும் பில்லியனுக்கு B என்றும் எழுதும் நாம்
ஆயிரத்துக்கு T (Thousand) என எழுதாமல் ஏன் K என எழுதுகிறோம் ?
ஆங்கில நியூமரல்ஸ் எனும் எண்ணியல் முறைகளில் கிரேக்க முறைகளை தான் சில இடங்களில் உபயோகிக்கின்றார்கள்
உதாரணமாக I, II ... IV, V,VI,....IX,X,XI.... இப்படி... அதே முறையை பின்பற்றி 'Chilioi' (Kilioi by Pronunciation) என்ற ஆயிரத்துக்கான சொல்லை உச்சரிப்பு நெறிப்படி கிலியோய் என உபயோகிக்கின்றனர்.
அதை தான் இரண்டாயிரம் என எழுதுவது விடவும் 2000 என எண்ணியில் விதிப்படி எழுதுவதை விடவும் 2k என சிம்பிளாக எழுதுகிறார்கள்.
T எழுத்தை உபயோகித்தால் அது பதின்மத்தை (Tens) குறிக்க தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் அந்த எழுத்து உபயோகிக்கவில்லை.
கிரேக்கத்தில் Kilometres, Kilogram என்ற அந்த கிலோ என்பது அளவைக்கு குறியிட உதவும் ஒரு Prefix (முன்னீடு/முன் ஒட்டு) ஆகும்.
No comments:
Post a Comment