Friday, 16 September 2022

 Sep : 16





உலக ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்

International Day for Preservation of Ozone Layers 

சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம்.

அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது.


பூமியிலிருந்து 15 கி.மீ. முதல் 60 கி.மீ உயரம்வரை உள்ள வளிமண்டலப் பகுதி ஸ்டிராட்டோஸ்பியர் எனப்படுகிறது. இந்தப் பகுதியில்தான் ஓசோன் படலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் மீது சூரியனின் புறஊதா கதிர்வீச்சு வேதிவினை புரிவதால் ஆக்சிஜன் (O2) அணுக்கள் பிரிக்கப்பட்டு, அந்த அணுக்கள் புதிய ஆக்சிஜனுடன் சேர்ந்து ஓசோன் வாயுவாக (O3) மாறுகின்றன.

இது ஒரு படலம் போலப் பூமியைச் சூழ்ந்திருக்கிறது. இந்தப் படலம் இருப்பதால்தான் சூரியஒளி பூமிக்கு நேரடியாக வருவதில்லை.

ஓசோன் ஓட்டை

அண்டார்டிகா பனிக் கண்டத்தின் மேற்பகுதியில் ஓசோன் படலம் மெலிந்து காணப்படுகிறது. இந்தப் பரப்பளவு ஆஸ்திரேலியாவின் பரப்பைப் போல் மூன்று மடங்கு. இதை ‘ஓசோன் ஓட்டை' என்று சொல்வதைவிட ஓசோன் படல மெலிவு என்று சொல்லலாம். இதனால் புறஊதாக் கதிர்கள் எளிதில் உள்ளே நுழைகின்றன.


அதனால், பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வளி மண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஓசோனைச் சிதைக்கும் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியாக வேண்டும்

No comments:

Post a Comment