இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
முக்கிய வரலாற்று ஆதாரங்கள் (முழு விவரங்கள்)
நிலக்கொடைகள் மற்றும் கல்வெட்டுகள்
- வேளாண்வகை: பிராமணர் அல்லாத உடமையாளர்களுக்குச் சொந்தமான நிலங்கள்.
- பிரம்மதேயம்: பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
- சாலபோகம்: கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்.
- தேவதானம்: கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
- பள்ளிச்சந்தம்: சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்.
நாணயங்கள் (Coins)
- முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் இலட்சுமி தேவியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
- டெல்லி சுல்தான்கள் காலத்தில் ஜிட்டல் எனப்படும் செப்பு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
- இல்துமிஷ் டாங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகப்படுத்தினார்.
- ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டது. 48 ஜிட்டல்கள் ஒரு வெள்ளி டாங்காவிற்குச் சமம்.
வெளிநாட்டுப் பயணிகள் (Foreign Travellers)
- மார்கோ போலோ: வெனிஸ் நாட்டைச் சேர்ந்த இவர் இருமுறை காயல் (தூத்துக்குடி) துறைமுகத்திற்கு வந்துள்ளார்.
- அல்-பருணி: கஜினி முகமதுவுடன் இந்தியா வந்த அறிஞர்.
- இபன் பதூதா: மொராக்கோ நாட்டுப் பயணி; தனது பயண நூலான 'ரிக்லா' என்பதில் டெல்லி மற்றும் தென் இந்தியா பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.
- அப்துர் ரசாக்: பாரசீகப் பயணி; 1443-ல் விஜயநகரப் பேரரசுக்கு வந்தவர்.
- நிக்கோலோ கோண்டி: 1420-ல் விஜயநகரம் வந்த இத்தாலி நாட்டுப் பயணி.
- டொமிங்கோ பயஸ்: 1522-ல் விஜயநகரம் வந்த போர்ச்சுகீசியப் பயணி.
முக்கிய இலக்கியங்கள்
- பிருதிவிராஜ ராசோ: சந்த் பர்தை எழுதிய நூல்.
- தபாகத்-இ-நசிரி: மின்ஹஜ்-உஸ்-சிராஜ் எழுதிய பாரசீக நூல்.
- தபாகத்-இ-அக்பரி: நிஜாமுதீன் அகமது எழுதிய நூல்.
- தாரிக்-இ-பதானி: அப்துல் காதிர் பதானி எழுதிய நூல் (1595).
- சுயசரிதைகள்: பாபர் நாமா (பாபர்), அக்பர் நாமா (அபுல் பாசல்).
மதிப்பெண்: 0 / 20
வெற்றிச் சான்றிதழ்
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் பயிற்சியில் சிறப்பாகப் பங்கேற்றமைக்காக வழங்கப்படுகிறது.
மாணவர் பெயர்
மதிப்பெண்: / 20
CURIEYASITY DIGITAL
No comments:
Post a Comment