Sunday, 7 June 2026

8thஅளவீட்டியல் முக்கிய குறிப்புகள் B

அளவீட்டியல் முக்கிய குறிப்புகள்

அளவீட்டியல் முக்கிய குறிப்புகள்

Physics Reading Practice Material

ஒளியாண்டு
  • ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்.
  • 1 ஒளியாண்டு = 9.46 × 10¹⁵ மீட்டர்.
  • ஒளியின் வேகம் = 3 × 10⁸ மீட்டர் / விநாடி.
  • 365 × 24 × 60 × 60 = 3.153 × 10⁷ விநாடி.
  • இந்தியாவின் நிலையான நேரம் IST = கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி.
  • இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் அருகே செல்லும் தீர்க்கக்கோட்டின் அடிப்படையில் இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது.
கனஅளவு
  • ஒரு பொருள் வெளியில் அடைத்துக் கொள்ளும் இடமே கனஅளவு ஆகும்.
  • கனஅளவின் SI அலகு = கன மீட்டர்.
  • கனஅளவை வாய்பாடுகள் கொண்டு கணக்கிடலாம்.
வடிவம் கனஅளவு
கனசதுரம்
கனசெவ்வகம் lbh
கோளம் 4/3 πr³
உருளை πr²h
அடர்த்தி
  • அடர்த்தி = நிறை / பருமன்.
  • அடர்த்தியின் SI அலகு = கி.கி / மீ³.
  • நீரின் அடர்த்தி = 1000 கி.கி / மீ³.
  • அலுமினியத்தின் அடர்த்தி = 2700 கி.கி / மீ³.
  • வெள்ளியின் அடர்த்தி = 10500 கி.கி / மீ³.
  • தங்கத்தின் அடர்த்தி = 19300 கி.கி / மீ³.
தளக்கோணம்
  • இரு நேர்கோடுகள் இரண்டு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் தளக்கோணம் ஆகும்.
  • தளக்கோணத்தின் SI அலகு = ரேடியன்.
  • π ரேடியன் = 180°.
  • 1 ரேடியன் = 180° / π.
அடிப்படை அலகுகள்
அளவு அலகு குறியீடு
நீளம் மீட்டர் m
நிறை கிலோகிராம் kg
காலம் விநாடி s
வெப்பநிலை கெல்வின் K
மின்னோட்டம் ஆம்பியர் A
பருப்பொருளின் அளவு மோல் mol
ஒளிச்செறிவு கேண்டலா cd
முக்கியக் குறிப்புகள்
  • தெரிந்த ஓர் அளவோடு தெரியாத ஓர் அளவை ஒப்பிட்டு பார்ப்பதே அளவீடு எனப்படும்.
  • தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவு அலகு எனப்படும்.
  • நீளம், நிறை, காலம், வெப்பநிலை, மின்னோட்டம், ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு ஆகியவை 7 அடிப்படை அளவுகள் ஆகும்.
  • உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மாதிரியான அலகுமுறை SI – International System of Units எனப்படும்.
  • SI என்பது Systeme International என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானது.
  • நிறையின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையே எடை ஆகும்.
  • நிறை, எடை, தொலைவு, வெப்பநிலை, கனஅளவு போன்ற அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படும்.
  • CGS, MKS, FPS ஆகியவை அளவுமுறைகள் ஆகும்.
முறை நீளம் நிறை காலம்
FPS அடி பவுண்ட் விநாடி
MKS மீட்டர் கிலோகிராம் விநாடி
CGS சென்டி மீட்டர் கிராம் விநாடி
வெப்பநிலை
  • பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பம் குறித்த இயற்பியல் அளவே வெப்பநிலை ஆகும்.
  • வெப்பநிலை என்பது துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் ஆகும்.
மின்னோட்டம்
  • ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதே மின்னோட்டம் ஆகும்.
  • மின்னோட்டம் = மின்னூட்டம் / காலம்.
  • I = Q / t
  • மின்னோட்டத்தை அம்மீட்டர் கொண்டு அளவிடலாம்.
  • ஒரு விநாடியில் ஒரு கூலூம் மின்னூட்டம் பாய்ந்தால் அது 1 ஆம்பியர் ஆகும்.
மின்னூட்டம்
  • மின்னூட்டம் = மின்னோட்டம் × காலம்.
  • Q = I × t
  • மின்னூட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
பொருளின் அளவு
  • ஒரு பொருளின் அளவு துகள்களின் எண்ணிக்கையால் குறிக்கப்படுகிறது.
  • பொருளின் அளவின் SI அலகு மோல் ஆகும்.
  • 6.023 × 10²³ துகள்கள் = 1 மோல்.
  • அவகாட்ரோ எண் = 6.023 × 10²³.

No comments:

Post a Comment