⚛️ 7th Std: அணு அமைப்பு
பருப்பொருள்களின் அடிப்படை அலகு அணு (Atom) ஆகும்.
An Atom is the basic building block of all matter.
முதன்முதலில் அறிவியல் பூர்வமான அணுக் கொள்கையை வெளியிட்டவர் ஜான் டால்டன் (1808) ஆவார்.
The first scientific atomic theory was proposed by John Dalton in the year 1808.
அணு என்பது பிளக்க முடியாத மிகச்சிறிய துகள் என்று டால்டன் கூறினார்.
Dalton stated that an atom is an indivisible, ultimate small particle.
அணுவில் எதிர்மின்சுமை கொண்ட துகள்கள் (எலக்ட்ரான்கள்) இருப்பதை நிரூபித்தவர் ஜே.ஜே. தாம்சன்.
The presence of negatively charged particles in an atom was discovered by J.J. Thomson.
தாம்சனின் அணு மாதிரி தர்பூசணி பழ மாதிரி அல்லது பிளம் புட்டிங் மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
Thomson's atom model is famously compared to a watermelon or plum pudding.
அணுவின் மையத்தில் நேர்மின்சுமை கொண்ட 'உட்கரு' (Nucleus) இருப்பதை கண்டறிந்தவர் ரூதர்ஃபோர்டு.
The dense, positively charged center called Nucleus was discovered by Ernest Rutherford.
ரூதர்ஃபோர்டின் அணு மாதிரி சூரிய குடும்ப அமைப்போடு ஒப்பிடப்படுகிறது.
அணுவானது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் ஆகிய அணுக்கூறுகளால் (Subatomic Particles) ஆனது.
An atom consists of three main subatomic particles: Protons, Electrons, and Neutrons.
புரோட்டான் என்பது உட்கருவினuள் இருக்கும் நேர்மின்சுமை கொண்ட துகள் ஆகும்.
The Proton is the positively charged particle located inside the nucleus.
எலக்ட்ரான் என்பது உட்கருவைச் சுற்றி வட்டப்பாதையில் வலம் வரும் எதிர்மின்சுமை கொண்ட துகள் ஆகும்.
The Electron is the negatively charged particle that revolves around the nucleus in fixed orbits.
நியூட்ரான் என்பது எவ்வித மின்சுமையும் அற்ற நடுநிலையான துகள் ஆகும்.
The Neutron has no electrical charge; it is a neutral particle inside the nucleus.
நியூட்ரானைக் கண்டறிந்தவர் அறிவியல் அறிஞர் ஜேம்ஸ் சாட்விக் (1932) ஆவார்.
Neutrons were discovered by scientist James Chadwick in the year 1932.
உட்கருவினுள் உள்ள புரோட்டான்களும் நியூட்ரான்களும் இணைந்து நியூக்ளியான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Protons and Neutrons together inside the nucleus are called Nucleons.
ஒரு அணுவிலுள்ள புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் மொத்த எண்ணிக்கை அணு எண் (Atomic Number) எனப்படும்.
The total number of protons or electrons in an atom is called its Atomic Number.
அணு எண்ணைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலக் குறியீட்டு எழுத்து Z ஆகும்.
The atomic number of an element is represented by the letter Z.
உட்கருவில் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் நிறை எண் (Mass Number) எனப்படும்.
The total number of protons and neutrons combined is called its Mass Number.
நிறை எண்ணைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலக் குறியீட்டு எழுத்து A ஆகும்.
The mass number of an element is represented by the letter A.
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் (A) - அணு எண் (Z) ஆகும்.
Number of Neutrons can be calculated as Mass Number (A) minus Atomic Number (Z).
ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும்.
Atoms of the same element with same atomic number but different mass numbers are called Isotopes.
ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும்.
ஒரு தனிமம் மற்றொரு தனிமத்துடன் இணையக்கூடிய திறன் இணைதிறன் (Valency) எனப்படும்.
Valency is the combining capacity of an element with other atoms.
ஹைட்ரஜனின் இணைதிறன் எப்போதும் ஒன்றாக (1) நிலையாகக் கருதப்படுகிறது.
The valency of Hydrogen is taken as standard and its value is always 1.
வெளிவட்டப்பாதையில் ஒரே ஒரு எலக்ட்ரானைக் கொண்டுள்ள சோடியத்தின் இணைதிறன் 1 ஆகும்.
Sodium has one electron in its outermost shell, so its valency is 1.
வெளிவட்டப்பாதை முழுமையாக நிரப்பப்பட்ட மந்த வாயுக்களின் இணைதிறன் சுழி (0) ஆகும்.
Noble gases have completely filled outermost shells, hence their valency is Zero.
ஒன்றுக்கும் மேற்பட்ட இணைதிறன்களைக் கொண்டுள்ள இரும்பு, தாமிரம் போன்றவை மாறுபடும் இணைதிறன் கொண்டவை எனப்படும்.
Elements like Iron and Copper show Variable Valency by exhibiting more than one valency structure.
அணுக்கள் எலக்ட்ரான்களை இழப்பதால் அல்லது ஏற்பதால் மின்சுமை பெற்ற துகள்களாக மாறுவது அயனிகள் (Ions) எனப்படும்.
When an atom loses or gains electrons, it becomes a charged particle called an Ion.
| அணுக்கூறு | மின்சுமை | கண்டறிந்தவர் |
|---|---|---|
| புரோட்டான் (Proton) | நேர்மின்சுமை (+) | ரூதர்ஃபோர்டு |
| எலக்ட்ரான் (Electron) | எதிர்மின்சுமை (-) | ஜே.ஜே. தாம்சன் |
| நியூட்ரான் (Neutron) | மின்சுமை அற்றது (0) | ஜேம்ஸ் சாட்விக் |
No comments:
Post a Comment