Sunday, 7 June 2026

Class 8 - அளவீட்டியல் Worksheet

வகுப்பு 8 - அளவீட்டியல்

பயிற்சித்தாள் - முழு வினா-விடை தொகுப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மின்னோட்டத்தின் SI அலகு ------------------
அ. A
ஆ. a
இ. C
ஈ. c
விடை: அ. A
விளக்கம்: Ampere-ன் SI அலகு குறியீடு A - Capital Letter. மின்னோட்டத்தின் SI அலகு Ampere.
2. ராஜு ஒரு மின் சுற்றினை உருவாக்கினான். அந்த மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தினை அளக்க அவன் பயன்படுத்தும் கருவி எது?
அ. வோல்ட்மீட்டர்
ஆ. கால்வனோமீட்டர்
இ. வெப்பநிலைமானி
ஈ. அம்மீட்டர்
விடை: ஈ. அம்மீட்டர்
விளக்கம்: மின்னோட்டம் அளக்க Ammeter பயன்படும். Voltmeter- மின்னழுத்தம், Galvanometer- சிறிய மின்னோட்டம் கண்டறிய.
3. மீனா குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில பனிக்கட்டிகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வெளியே வைத்தாள். சில மணித்துளி நேரத்திற்கு பின்பு பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தது. இதிலிருந்து அவள் தெரிந்துகொள்வது என்ன?
அ. வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டி உருகியது
ஆ. வெப்பநிலை குறைந்ததால் பனிக்கட்டி உருகியது
இ. அழுத்த மாறுபாட்டினால் பனிக்கட்டி உருகியது
ஈ. காற்றிலுள்ள ஈரப்பதத்தால் பனிக்கட்டி உருகியது
விடை: அ. வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டி உருகியது
விளக்கம்: 0°C-க்கு மேல் வெப்பநிலை போனதால் பனிக்கட்டி உருகி நீராக மாறியது.
4. இவற்றுள் எது வெப்பநிலையின் அலகு அல்ல?
அ. °C
ஆ. °F
இ. K
ஈ. A
விடை: ஈ. A
விளக்கம்: °C, °F, K - வெப்பநிலை அலகுகள். A - Ampere மின்னோட்ட அலகு.
5. வேறுபட்ட இணையைக் கண்டுபிடி
அ. Ampere : A
ஆ. Kelvin : K
இ. Metre : M
ஈ. Candela : cd
விடை: இ. Metre : M
விளக்கம்: Metre-ன் SI குறியீடு 'm' சிறிய எழுத்து. மற்றவை சரி. Ampere-A, Kelvin-K, Candela-cd.
6. அருண் ஆய்வகத்தில் சோதனை செய்கிறான். அவனுக்கு பல்வேறு திரவங்களின் வெப்பநிலையை அளக்க வேண்டும். வெப்பநிலையை அளப்பதற்கான சரியான கருவியை தேர்வு செய்ய உதவுங்கள்.
அ. அம்மீட்டர்
ஆ. லாக்டோமீட்டர்
இ. அனிமோ மீட்டர்
ஈ. வெப்பநிலைமானி
விடை: ஈ. வெப்பநிலைமானி
விளக்கம்: Thermometer - வெப்பநிலை அளக்கும் கருவி.
7. அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கடிகாரம் எது?
அ. ஒப்புமை வகை கடிகாரங்கள்
ஆ. அணுக்கடிகாரங்கள்
இ. குவார்ட்ஸ் கடிகாரங்கள்
ஈ. எண்ணிலக்க வகை கடிகாரங்கள்
விடை: ஆ. அணுக்கடிகாரங்கள்
விளக்கம்: Atomic Clock - Cesium அணு அதிர்வை வைத்து மிக துல்லியமாக நேரம் காட்டும்.
8. GPS மற்றும் GLONASS-இல் பயன்படுத்தப்படும் கடிகாரங்கள் எவை?
அ. ஒப்புமை வகை கடிகாரங்கள்
ஆ. குவார்ட்ஸ் கடிகாரங்கள்
இ. எண்ணிலக்க வகை கடிகாரங்கள்
ஈ. அணுக்கடிகாரங்கள்
விடை: ஈ. அணுக்கடிகாரங்கள்
விளக்கம்: Satellite-ல் Atomic Clock வைத்தால் மட்டும் 1 நொடி பிழையும் இல்லாமல் இடம் கண்டுபிடிக்க முடியும்.

II. பொருத்துக.

9. அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பொருத்துக.
அளவுஅலகுவிடை
1.நீளம்i. Kiii
2.காலம்ii. Aiv
3.மின்னோட்டம்iii. mii
4.வெப்பநிலைiv. si
அ. 1-iv, 2-i, 3-ii, 4-iii
ஆ. 1-iii, 2-iv, 3-ii, 4-i
இ. 1-iii, 2-iv, 3-i, 4-ii
ஈ. 1-ii, 2-iv, 3-i, 4-iii
விடை: ஆ. 1-iii, 2-iv, 3-ii, 4-i
விளக்கம்: நீளம்-m, காலம்-s, மின்னோட்டம்-A, வெப்பநிலை-K. இது SI அடிப்படை அலகுகள்.
15. கருவியை அவற்றின் பயன்களோடு பொருத்துக.
கருவிபயன்விடை
1.ஒளிமானிi. பொருளின் வெப்பம் மற்றும் குளிர்சியினை அளவிடiii
2.அம்மீட்டர்ii. கால இடைவெளியை அளவிடiv
3.வெப்பநிலைமானிiii. ஒளிச் செறிவினை அளவிடi
4.கடிகாரம்iv. மின்னோட்டத்தினை அளவிடii
அ. 1-iv, 2-i, 3-ii, 4-iii
ஆ. 1-iii, 2-iv, 3-i, 4-ii
இ. 1-iii, 2-iv, 3-i, 4-ii
ஈ. 1-iv, 2-iii, 3-i, 4-ii
விடை: ஆ. 1-iii, 2-iv, 3-i, 4-ii
விளக்கம்: ஒளிமானி-Lux meter, அம்மீட்டர்-Ampere, வெப்பநிலைமானி-Temperature, கடிகாரம்-Time

III. சரியா தவறா என எழுதுக

11. எண்ணிலக்க வகை கடிகாரங்கள் நேரத்தை எண்களாக காட்டும்.
சரி
விளக்கம்: Digital Clock 12:30 என எண்களில் காட்டும். முள் இருக்காது. இது எண்ணிலக்க வகை.

No comments:

Post a Comment