Monday, 11 July 2022

இன்றைய சிந்தனை

"இன்றைய சிந்தனை."

................................

'' மனதை ஒரு நிலைப்படுத்தினால்''..

.................................

நம் மனதை எப்பொழுதும் தூய்மையானதாகவும், தன்னம்பிக்கையுடனும் குழப்பங்களை நீக்கி தெளிவாகவும் வைத்திருக்க வேண்டும். 

எந்த செயலையும் நம்மால் செய்ய முடியும் என்கிற மனோதிடம் வேண்டும்..

தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருநிலைப்படுத்தி செயலில் ஈடுபடுகின்றாரோ அப்பொழுது அவரால் எளிதில் வெற்றி பெற முடியும்.

குழப்பமான நேரங்களில் எல்லாம் மனதை ஒரு நிலைப்படுத்தி சிந்திப்பதன் மூலம் குழப்பங்கள் நீங்கிப் புதிய வழி பிறக்கும்.

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம்வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார் 

ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கைக் கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். 

ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டு வரச் சொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.

பூதக்கண்ணாடியை பிடித்தத் தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார். 

ஒளியின் ஒரு முனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். 

அப்போது தாயார் கூறினார்,, 

''ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகப்படுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. 

அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகப்படுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் எனத் தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.

இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக் கொண்டார். 

அன்று முதல் மனஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்யத் தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றுவராகத் திகழ்ந்த 

சர் சி வி இராமன் அவரே ஆவார்.

ஆம்.,நண்பர்களே..

ஒவ்வொருவருக்கும் தங்கள் வேலையை செய்யும் போது சில குழப்பங்கள் ஏற்படும். 

இந்த நேரத்தில் அந்த வேலையில் உள்ள அனைத்து செயல்களையும் ஒருமுகப்படுத்தி சிந்தனை செய்து முடிவெடுக்கும் போது நல்ல தீர்வு கிடைக்கிறது.



No comments:

Post a Comment