பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.07.2022
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பெருமை
குறள் : 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
பொருள்:
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை
பழமொழி :
Young Men think old men fools,old men know young men to be so
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரித்ததாம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.
2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.
பொன்மொழி :
இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான் உண்டு.
- புத்தர்
பொது அறிவு :
1. எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை புரிந்த முதல் இந்திய பெண்மணி யார்?
பச்சேந்திரி பால்.
2. தமிழ்நாட்டில் சதுப்பு நில காடுகள் காணப்படும் இடம் எது?
பிச்சாவரம்.
English words & meanings :
paused - to stop talking for a short time before continuing. Verb. Past tense. பேச்சில் அல்லது செயலில் இடையே சிறிது நிறுத்து. வினைச் சொல். கடந்த காலம்
ஆரோக்ய வாழ்வு :
கல்லீரலில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பது ஆக்சிடேட்டிவ் அழுத்தம் என்பது தான். மஞ்சளில் இருக்கும் குர்குமின் இந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் போராடும் தன்மை கொண்டது; இது கல்லீரலில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பாதுகாத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
நீதிக்கதை
கவனம்
தன் சீடர்களில் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பதை ஒரு
ஜென் துறவி பார்த்து கொண்டிருந்தார். ஒரே வேலையை அவன் அதிக நேரமாக செய்தும்
சுத்தம் ஆகாமல் இருந்தது.
ஜென் துறவி அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறலானார். அது, ஒரு
முறை ஓர் சிறந்த ஓவியர் அவருடைய திறமையால் ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக
தோழனிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
தோழனும் இது நன்றாக இல்லை என்று கூறினார். மீண்டும் மீண்டும் அந்த
ஓவியர் வரைந்தவற்றை சரிசெய்ய, தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தார்.
அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம், நீ போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!
என்று தோழனை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி ஓவியத்தை
வரைய ஆரம்பித்தார். தண்ணீர் கொண்டு திரும்பிய தோழன், அந்த ஓவியத்தை கண்டு
ஆச்சரியத்துடன் ஓவியம் அழகாக இருக்கிறது என்று சொல்லிப் பாராட்டினான்.
ஆகவே எந்த ஒரு செயலையும் நாம் நம் முழு கவனத்துடன் செய்தால் வெற்றி
நிச்சயம் கிடைக்கும். அதைவிட்டு விட்டு செய்கின்ற செயலை பிறர் பார்கின்றனரே என்று
ஒரு பயத்துடன் செய்தால், அந்தச் செயல் ஒரு முழுமையை தராது என்று ஜென் துறவி அந்த
சீடனுக்கு கதையின் மூலம் உணர்த்தினார்.
இன்றைய செய்திகள்
05.07.22
★மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில்
நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க
சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
★வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கு
உத்தரவாதம் தரும் டி.காம். படிப்பு: பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறைந்த
கட்டணத்தில் பயில அழைப்பு.
★ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்
துறை சார்பில் நடைபெறும் அகழாய்வுப் பணியில் சுண்ணாம்பு மற்றும் செங்கலால்
கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
★சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடிகள்
பாதியாகக் குறைந்துள்ளன. 2020-21 நிதி ஆண்டில் வங்கிகளில் பதிவான மோசடித் தொகை
ரூ.1.05 லட்சம் கோடி யாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் பதிவான மோசடித் தொகை
ரூ.41,000 கோடி ஆகும்.
★இலங்கையில் நேற்று பள்ளிகள்
தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
★மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி
போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
★விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச்,
சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்.
★2-வது இன்னிங்சில் அரைசதம்- 69
ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்.
Today's Headlines
★ Madras High Court has
refused to stay the investigation conducted by CBCIT regarding the malpractice
in the admission of medical students.
★ D. Com guarantees
jobs and higher education. There is a call to study D. Com in Polytechnic
colleges with low fees.
★ A wall made of lime
and brick has been discovered in the excavation work being done by the Central
Archeology Department at Adhichanallur.
★Bank frauds have
halved in the last financial year. In the financial year 2020-21, the
amount of fraud reported in banks was Rs.1.05 lakh crore. The amount of
fraud reported in the financial year 2021-22 is Rs 41,000 crore.
★Sri Lanka has announced
another week of holiday due to fuel shortage while schools were about to start
yesterday.
★ India drew 1-1 with
England in their first Women's Hockey World Cup match.
★Wimbledon Tennis -
Djokovic advances to Sinner quarterfinals.
★Rishabh Pant broke the
69-year-old record of fifty in the 2nd innings.
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பெருமை
குறள் : 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லாமலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை
பழமொழி :
Young Men think old men fools,old men know young men to be so
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரித்ததாம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.
2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.
பொன்மொழி :
இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான் உண்டு.
- புத்தர்
பொது அறிவு :
1. எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை புரிந்த முதல் இந்திய பெண்மணி யார்?
பச்சேந்திரி பால்.
2. தமிழ்நாட்டில் சதுப்பு நில காடுகள் காணப்படும் இடம் எது?
பிச்சாவரம்.
paused - to stop talking for a short time before continuing. Verb. Past tense. பேச்சில் அல்லது செயலில் இடையே சிறிது நிறுத்து. வினைச் சொல். கடந்த காலம்
ஆரோக்ய வாழ்வு :
கல்லீரலில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பது ஆக்சிடேட்டிவ் அழுத்தம் என்பது தான். மஞ்சளில் இருக்கும் குர்குமின் இந்த ஆக்சிடேட்டிவ் அழுத்தத்துடன் போராடும் தன்மை கொண்டது; இது கல்லீரலில் எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பாதுகாத்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கவனம்
05.07.22
Covai ICT
No comments:
Post a Comment