7-ஆம் வகுப்பு - புவியியல்: அலகு 1 🌍
புவியின் உள்ளமைப்பு
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
முக்கிய ஆய்வுப் பாடக்குறிப்புகள் 📖
புவியின் அடுக்குகள்: புவி மூன்று முக்கிய அடுக்குகளைக் கொண்டது: மேலோடு (Crust), கவசம் (Mantle) மற்றும் கருவம் (Core).
சியால் (SIAL): கண்ட மேலோடு சிலிக்கா மற்றும் அலுமினியத்தால் ஆனது. சிமா (SIMA) என்பது கடல் மேலோடு, இது சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தால் ஆனது.
கருவம்: புவியின் மைய அடுக்கு. இது இரும்பு (Fe) மற்றும் நிக்கல் (Ni) தாதுக்களால் ஆனது. எனவே இது நிஃபே (NiFe) எனப்படுகிறது.
நிலநடுக்கம்: புவி மேலோட்டில் ஏற்படும் திடீர் அதிர்வு. இது 'சீஸ்மோகிராஃப்' கொண்டு அளவிடப்படுகிறது. இதன் வலிமை ரிக்டர் அளவுகோல் மூலம் குறிக்கப்படுகிறது (0-9 வரை).
எரிமலைகள்: புவியின் உட்பகுதியிலிருந்து உருகிய பாறைக்குழம்பு (மேக்மா) வெளியேறும் துளை. வெளியே வரும்போது இது லாவா எனப்படுகிறது.
பாசிபிக் நெருப்பு வளையம்: உலகின் 80% நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் இப்பகுதியில்தான் நிகழ்கின்றன.
No comments:
Post a Comment