8-ஆம் வகுப்பு அறிவியல் (அலகு 16 - 20)
வினா - விடைத் தொகுப்பு | Q & A Collection
P.U.M.S காப்பரத்தாம்பட்டி
அலகு 16: நுண்ணுயிரிகள் | Unit 16: Microorganisms ▼
1. நுண்ணுயிரிகளின் வகைகள் யாவை? | Name the types of microorganisms.
நுண்ணுயிரிகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஆல்கா மற்றும் புரோட்டோசோவா என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
Microorganisms are classified into five categories: Bacteria, Virus, Fungi, Algae, and Protozoa.
2. உயிர் எதிர்பொருள்கள் என்றால் என்ன? | What are antibiotics?
மற்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்க அல்லது அழிக்க நுண்ணுயிரிகளிலிருந்தே பெறப்படும் வேதிப்பொருள்கள் உயிர் எதிர்பொருள்கள் எனப்படும். (எ.கா: பென்சிலின்).
Chemical substances derived from microorganisms that kill or inhibit the growth of other microorganisms are called antibiotics. (e.g., Penicillin).
அலகு 17: தாவர உலகம் | Unit 17: Plant Kingdom ▼
1. தாலோஃபைட்டா - குறிப்பு வரைக. | Write a note on Thallophyta.
இவற்றின் தாவர உடலம் வேர், தண்டு, இலை எனப் பிரிக்கப்படாமல் 'தாலஸ்' என்று அழைக்கப்படுகிறது. (எ.கா: ஆல்காக்கள்).
The plant body is not differentiated into root, stem, and leaves; it is called a thallus. (e.g., Algae).
2. ஜிம்னோஸ்பெர்ம்கள் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம்கள் வேறுபடுத்துக. | Differentiate Gymnosperms and Angiosperms.
ஜிம்னோஸ்பெர்ம்கள் திறந்த நிலை விதைகளைக் கொண்டவை. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மூடிய நிலை விதைகளைக் கொண்டவை (பூக்கும் தாவரங்கள்).
Gymnosperms have naked seeds (seeds not enclosed by fruit). Angiosperms have seeds enclosed within fruits (flowering plants).
அலகு 18: உயிரினங்களின் ஒருங்கமைவு | Unit 18: Organisation of Life ▼
1. உயிரணு (செல்) - வரையறு. | Define Cell.
உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல்பாட்டு அலகு உயிரணு (செல்) எனப்படும்.
The cell is the basic structural and functional unit of all living organisms.
2. திசுக்கள் என்றால் என்ன? | What are Tissues?
ஒரே மாதிரியான தோற்றத்தையும், செயல்பாட்டையும் கொண்ட செல்களின் தொகுப்பு திசுக்கள் எனப்படும்.
A group of cells similar in structure and function is called tissue.
அலகு 19: விலங்குகளின் இயக்கம் | Unit 19: Movements in Animals ▼
1. இயக்கம் மற்றும் இடப்பெயர்ச்சி வேறுபடுத்துக. | Differentiate movement and locomotion.
இயக்கம் என்பது உடலின் ஒரு பகுதியினை மட்டும் நகர்த்துதல். இடப்பெயர்ச்சி என்பது முழு உயிரினமும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்தல்.
Movement is the act of changing the position of a body part. Locomotion is the movement of an entire organism from one place to another.
2. மூட்டு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? | What is a joint? Name its types.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு எனப்படும். இவை அசையும் மூட்டுகள், அசையா மூட்டுகள் என இரு வகைப்படும்.
The point where two or more bones meet is called a joint. They are classified as movable and immovable joints.
அலகு 20: வளரிளம் பருவமடைதல் | Unit 20: Reaching the age of Adolescence ▼
1. வளரிளம் பருவம் - வரையறு. | Define Adolescence.
குழந்தைப் பருவத்திலிருந்து முதிர் பருவத்திற்கு மாறும் இடைப்பட்ட காலம் (13 முதல் 19 வயது வரை) வளரிளம் பருவம் எனப்படும்.
The period of life from childhood to adulthood (between 13 to 19 years) is called adolescence.
2. ஆடம்ஸ் ஆப்பிள் (Adam’s Apple) என்றால் என்ன? | What is Adam's Apple?
வளரிளம் பருவத்தில் ஆண்களுக்குக் குரல்வளை வளர்ந்து தொண்டையின் முன்பகுதியில் துருத்திக் கொண்டு காணப்படும். இது ஆடம்ஸ் ஆப்பிள் எனப்படும்.
The growth of the larynx (voice box) in adolescent boys which protrudes at the front of the throat is called Adam's Apple.
No comments:
Post a Comment