7-ஆம் வகுப்பு - வரலாறு: அலகு 2 ⚔️
வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
முக்கிய ஆய்வுப் பாடக்குறிப்புகள் 📖
இராஜபுத்திரர்கள்: 'இராஜபுத்ர' என்ற சொல்லின் பொருள் 'அரச குல வாரிசு'. ஹர்ஷரின் மறைவுக்குப் பின் இவர்கள் வட இந்தியாவில் செல்வாக்கு பெற்றனர். இவர்களில் 36 அரச குலங்கள் முக்கியமானவை.
பிரதிகாரர்கள்: முதலாம் நாகபட்டர் கூர்ஜர பிரதிகார வம்சத்தை நிறுவினார். இவர்கள் அரேபியர்களின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினர்.
பாலர்கள்: வங்காளத்தில் கோபாலர் என்பவரால் பால வம்சம் நிறுவப்பட்டது. தர்மபாலர் விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இவர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர்.
சௌகான்கள்: பிரதிவிராஜ சௌகான் இவர்களில் மிகச்சிறந்தவர். இவர் 1191-ல் முதல் தரையன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார்.
கலை மற்றும் கட்டடக்கலை: இராஜபுத்திரர்கள் கஜுராகோ, உதய்பூர் போன்ற இடங்களில் அற்புதமான கோயில்களைக் கட்டினர். அபு குன்றில் உள்ள தில்வாரா சமணக் கோயில் இவர்களின் கட்டடக்கலைக்குச் சான்று.
முகமது கஜினி: இவர் இந்தியாவின் செல்வத்தைச் சூறையாட 17 முறை படையெடுத்தார். கி.பி. 1025-ல் சோமநாதபுரம் கோயிலை தாக்கி அழித்தார்.
No comments:
Post a Comment